லக்கிலுக்
லக்கிலுக் நேற்று ஊனமுற்றோர் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் ஊனமுற்றோர்க்கு அரசு அதிகாரிகள் இன்முகத்துடன் உதவுவதாக எழுதியிருந்தார். இரு வருடங்களுக்கு முன்னால் சுய தொழில் தொடங்குவதற்காக கிண்டியில் உள்ள ஊனமுற்றோர் நல அமைப்பை அணுகினேன். அங்குள்ள அறிவிப்பு பலகையில் வங்கி கடன் வாங்கி தர உதவப்படும் என்பதை நம்பி அங்குள்ள அதிகாரியை அணுகினேன். நான் கேட்ட உதவிக்கு அவருடைய பார்வையிலே பதில் தந்துவிட்டார். ஏதோ ஜந்துவை பார்ப்பது போல் வங்கி கடன் நீங்கள்தான் உங்கள் சுய முயற்சியில் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று கறாரக கூறி வெளியே அனுப்பிவிட்டார். மிஞ்சி போனால் இரு நிமிடம்தான் என்னிடம் பேசினார்.அதற்கு மேல் அவருக்கு நேரமில்லை போலும்.இந்த மாதிரியான அரசு அதிகாரிகள் இருந்தால் ஊனமுற்றோர் நல அமைப்புகள் மிக நன்றாகவேம் செயல்படும்!!!!!!!!. அரசே பல கோடி ரூபாய் செலவழித்தாலும் அதன் பயன் சிறு அளவே. லக்கிலுக் சொன்னது போல் உள்ள அரசு அதிகாரிகள் மிகவும் அபூர்வம்.
உண்மைத்தமிழன்
உண்மைத்தமிழனின் ராமன் தேடிய சீதை விமர்சனம் கல்யாண விருந்தை ரசித்து ருசித்து சாப்பிடுவதுபோல் அருமையாக இருந்தது. படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்---- ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்பது தமிழ்நாட்டுக்கட்சிகளுக்கு அல்வா சாப்பிடுவதுபோல். வேண்டும் என்றால் சாப்பிடுவார்கள் இல்லையென்றால் தூக்கி எறிவார்கள்.
திமுகவின் நிலை
தற்போது காங்கிரசுடன் கூட்டணி என்பதால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு. இது என்ன விந்தை???????????????. தன் வாரிசுக்கு மந்திரி பதவி வேண்டும் என்றால் நேரடியாக டெல்லிக்கு காவடி தூக்கும் இவர்கள், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றால் வெறும் கடிதத்தோடு நின்று விடுவார்கள்.
அதிமுகவின் நிலை
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு. விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள்? தமிழ்நாட்டில் குண்டு வைத்தார்களா? இல்லை நாச வேலைகளில் ஈடுபட்டார்களா?.அவர்கள் செய்த ஒரே தவறு ராஜீவ் காந்தி விசயம் மட்டும் தான்.
அதையும் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மன்னித்துவிட்டனர்!!!!.
விடுதலைப்புலிகள் விசயத்தில் தெளிவாக முடிவெடுத்து தங்கள் நிலையில் மாறாமல் இருப்பவர்கள் நெடுமாறன் அவர்களும், வைகோ அவர்களும் மட்டுமே. மற்றவர்கள் இவ்விசயத்தில் காட்டுவது தங்களுடைய போலி முகத்தை மட்டும்தான்.
யோகி இணைய ஒலி 24x7
15 years ago