அடுத்த தீபாவளி வருவதற்குள் இந்த தொடர் பதிவ எழுதிடுங்கப்பா என்று நம்ம புரொபசர் கேட்டுக்கொண்டதால் ஐயோ பாவம் எழுதிடுறேன்.......
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
என்னப்பா இது பரீட்சை கேள்வி மாதிரி இருக்கு???....... என்னத்த சொல்ல......பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நெல்லைவாசி. இப்ப சென்னைவாசி.
2)தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
ஊர் தூங்கும் நேரத்தில் பஸ்ஸே போகாத மெயின் ரோட்டில் நடு இரவு 12மணிக்கு ஆட்டம் பாம் போட்டு எல்லோரையும் எழுப்புவது ( தீபவளிக்கு முந்தின நாள்).....இதேலாம் சென்னை வருவதற்கு முன்னாடி...............இப்ப ஒன்னும் இல்லை சொல்வதற்கு...
3)2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
சென்னையில் தான்......
4)தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
என்னதான் விலைவாசி ஏறினாலும் இந்த கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவில்லை..... காலையில 7மணிக்கு கூட பத்தடிக்கு முன்னாடி போறவன் முகம் கூட தெரியல அந்த அளவுக்கு புகை மூட்டம்
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
ரெடிமேடும் உண்டு..தைத்து போடுவதும் உண்டு....... ஆனா தீபாவளி பர்சேஸ் எனக்கு ஆடிக்கழிவிலே முடிந்துவிடும்...( கிரேட் சரவணா ஸ்டோர்ஸில்)
6)உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?
இந்த வருடம் பேச்சிலராக இருந்து தனியாக தீபாவளி கொண்டாடியதால் பதில் கிடையாது.(ஓசியில் கிடைத்த B.L தான் இந்த வருச ஸ்பெசல் தீபாவளியா போச்சு)
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
முடிந்த அளவுக்கு அலைபேசியில்(பேலன்ஸை பொறுத்து).... இல்லைனா எஸ் எம் எஸ்.
8)தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?
தீபாவளிக்கு விடுமுறை கிடைப்பதே பெரிய விசயம்........ போன வருடம் கிடைத்தது........இந்த வருடம் என்னை ஆடாக்கிட்டாங்க......வழக்கம் போல் ஆபிஸில் முடிந்தது
9)இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ?
இதுவரைக்கும் அந்த பழக்கம் கிடையாது.வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு...
10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ?
எதுக்கு நான்கு பேர்..இருவர் போதும்.
1.கடையத்து இளவல் புதுமாப்பிள்ளை கடையம் ஆனந்த்--மனம்
2.புளியங்குடி அண்ணாச்சி நசரேயன்--என் கனவில் தென்பட்டது
யோகி இணைய ஒலி 24x7
15 years ago