Wednesday, May 6, 2009

வரும்ம்ம்ம்ம்ம்..........ஆனா வராது.........

தமிழகத்தேர்தல் களம் இந்த மாதம் ஆரம்பித்த அக்னி வெயிலைவிடவும் ரொம்ப சூடா போய்க்கிட்டு இருக்கு...நமது முதல்வர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் திமுகவில் பிரச்சாரத்தில் தொய்வு காணப்பட்டாலும் அதை அமைச்சர் அன்பழகனும்,தளபதி ஸ்டாலினும் அதை ஈடுக்கட்டும் வகையில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக தலைவி இந்த முறை ரொம்பவும் சுறுசுறுப்பா ஆரம்பிச்சி முடிக்கும் தருவாயில் உள்ளார்..... தேமுதிக தலைவர் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.


முன்பிருந்த மாதிரி சுவர் விளம்பரங்களை காண முடிவதில்லை... அதை ஈடுகட்டும் வகையில் டிஜிட்டல் போர்டுகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. தொலைக்காட்சியின் மூலம் தேர்தல் விளம்பரங்கள் தான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிறது.. ஆளுங்கட்சி தன்னுடைய சாதனைகளை சொல்லியும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டியும் வரும் விளம்பரங்கள் செம சூடு..... இப்போது அப்படி வந்த விளம்பரங்கள் சில


முதலில்ஆளும்கூட்டணியின்விளம்பரங்கள்...காங்கிரசுக்கட்சியின்வலிமையான பாரதம் விளம்பரம்... இதுல சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை.



ஆளும் திமுக தனது ஆட்சியின் சாதனைகளாக இலவச கேஸ் அடுப்பு, இலவச தொலைக்காட்சி,மருத்துவ காப்பீடு திட்டம், சத்துணவில் முட்டை போன்றவைகள் விளம்பரங்களாக வருகின்றன..இதில் மருத்துவ காப்பீடு விளம்பரத்தை முதலில் பார்க்கும் போது நகைக்கடை விளம்பரமோ என்று தோன்றியது..நல்லாவே செலவு செஞ்சிருக்காங்க இந்த விளம்பரங்களுக்காக...... இந்த விளம்பரங்கள் எந்த அளவுக்கு எடுபடும்?? பாக்கலாம்.


எதிர்க்கட்சியான அதிமுகவின் விளம்பரங்கள் திமுக ஆட்சியின் குறைபாடுகளை நக்கல் நையாண்டியோடு வருகிறது..... இலவச நிலம், மின்வெட்டு,ஒகேனெக்கல் திட்டம், விலைவாசி உயர்வு........ இவற்றில் இலவச நிலம் தொடர்பான விளம்பரம் கொஞ்சம் ஓவரா தெரியுது..... இதில் நக்கல் நையாண்டியில் டாப்பாக இருப்பது ஒகேனெக்கல் விளம்பரம்தான்....... இந்த விளம்பரத்துக்கு அவ்வளவு செலவெல்லாம் கிடையாது... ஒன்லி கட்டிங் மற்றும் ஒட்டிங் தான்........ முதலில் நம் முதல்வர் எப்பாடுபட்டாவது இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் எனக்கூறியது முதல் காட்சியாகவும், கர்நாடக தேர்தலுக்கப்புறம் ஒரு நல்ல முடிவெடுக்கப்படும் எனக்கூறியது இரண்டாவது காட்சியாகவும் வ்ருகிறது....... இதற்கு அடுத்த காட்சியாக திரையில் பாதி கலைஞர் கூறியதும்,அடுத்த பாதி தொட்டால் பூ மலரும் படத்தில் வடிவேலுவும்,என்னத்த கண்ணையாவும் பேசும் காமெடிக்காட்சியான வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா வராது என்ற வசனமும் சேர்ந்து கிண்டலும் நக்கலுமா..சிரிச்சி வயிறுதான் வலிக்குது.. யாராவது சொல்லுங்கப்பா..ஒகேனெக்கல் திட்டம் எந்த லெவலில் இருக்குதுன்னு.


அன்னை சோனியாவின் பிரச்சாரக்கூட்டம் முதல்வரின் உடல்நிலையை காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது... பிரச்சார தேதியை அறிவிக்கும் போது முதல் மருத்துவமனையில் தான் இருந்தார்..... இடையில் என்ன நடந்ததோ....


நம்ம புரச்சி தலைவி அம்மா கலைஞரின் உடல்நிலையை கிண்டலடித்து பேசியிருக்கிறார். மக்களை சந்திக்க பயந்து மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டதாக சொல்கிறார்.........நாளைக்கு தனக்கும் வயதாகும் இப்படி ஒரு நிலைமை வருமே யோசித்திருப்பாரா அம்மையார்.......