கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் முடிந்துவிட்டது.. கலைஞர் டிவியும் ஜெயாடிவியும் போட்டிப்போட்டு முட்டிக்கொண்டன..... இன்று பிற்பக பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமியாய் இருந்தது இயக்குனர் சீமானின் பேச்சு.அலுவலகத்தில் இருந்ததால் குறிப்பு எடுக்கமுடியவில்லை அவரின் பேச்சை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் தன்னுடைய கனல் தெரித்த பேச்சால் காங்கிரசை பின்னி பெடல் எடுத்துவிட்டார்.... அவர் பேச்சின் சில பகுதிகளை தருகிறேன்....
விடுதலைப்புலிகளிடம் இருந்து கிளிநொச்சி வீழ்ந்து இவ்வளவு நாளாகியும் ஏன் மக்களை அங்கு வாழ விடவில்லை?
தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தி ஈழதமிழ் மக்கள் தன்னுடைய உள்ளத்தில் இருப்பதாக சொல்லியுள்ளார்..உங்கள் இதயத்தில் இருந்து தூக்கி எறியுங்கள்....அந்த பாவப்பட்ட இடம் வேண்டாம்...
எம் தமிழ் இனம் இலங்கையில் தினம் படும் துயரம் கண்டு இழவு வீட்டில் இருப்பது போல் இருக்கிறோம் எப்படி ஐயா உங்களால் இப்படி சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்க வருகிறீர்கள்?
இப்போது எதற்கெடுத்தாலும் இறையாண்மை என்று பேசுகிறீர்களே..ராஜீவ் காந்தி அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பும் போது அவரிடம் சொல்லியிருக்கலாமே அது அடுத்த நாடு.. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தமிழ் தேசிய ராணுவத்துக்கு கட்டமைப்புக்கு உதவி செய்தாரே?.. அப்போது யாராவது இந்திரா காந்தியிடம் அடுத்த நாட்டின் போராளி குழுக்களுக்கு எப்படி அனுமதியளிக்கலாம் என்று சொல்லியிருக்கலாமே? இல்லையே..ஏன்...
இந்திய ராணுவத்தில் தமிழன்,மலையாளி,கன்னடன் பஞ்சாபி என அனைத்து இன மக்களும் இருக்கிறார்கள்.. ஆனால் இலங்கை ராணுவத்தில் எம் இன மக்கள் இருந்திருந்தால் இந்த கஷ்டங்கள் எம் மக்களுக்கு ஏற்பட்டிருக்குமா?..... மத பயங்கரவாத நாடு இலங்கை அரசு...
இலங்கை பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழ் மக்கள் தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் மகன்,மகள் ஒரு பக்கம் என சிங்களத்தினர் பிரித்துவைக்கின்றனரே?? ஏன்...
எதற்கெடுத்தாலும் இந்தியா சனநாயகநாடு சனநாயகநாடுன்னு சொல்றாங்க.... எது சனநாயகம்... ஈழத்தமிழனுக்காக மாணவர் போராட்டம் என்ற உடனே கல்லூரிகள், கல்லூரி விடுதிகள் கால வரையின்றி மூடப்படுகிறது ... இதுவா சனநாயகம்..வக்கீல்கள் போராட்டம் என்ற உடனே.... போலிஸ் மூலம் கலவரம் மூட்டப்படுகிறது...இதுவா சனநாயகம்
இப்போது நடக்க இருக்கும் தேர்தல் பணத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்... இதில் தமிழ் இனம்தான் வெற்றி பெறவேண்டும்....
காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு ஒகேனெக்கல் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி எப்படி இலங்கையில் அதிகாரப்பகிர்வையும், போர் நிறுத்தத்தையும் ஏற்படுத்துவார்கள்?
இதுவரைக்கும் காவிரி பிரச்சினை, பெரியாறு பிரச்சினை, தன் சாதி, தன் மதம் என் பார்த்து ஓட்டுப் போட்ட தமிழன் இந்த ஒருமுறை மட்டும் தன் இனத்திற்காக, தன் மானத்திற்காக, தன் சொந்தங்களுக்காக ஓட்டுப்போடுங்கள்.. காங்கிரசை விரட்டி அடியுங்கள்....
யோகி இணைய ஒலி 24x7
15 years ago