
கடந்த ஒரு மாதமாக சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் நீரில் மூழ்கியும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு்ம் இருக்கின்றன. கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்டோர் மழைக்கு பலியாகி உள்ளனர்.இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி நாளேடுகளும் ஒரு மேம்போக்கான செய்தியாக சொல்லி வருகின்றது........ஆனால் கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை பெய்யும் செய்தியை அரைமணிக்கு ஒரு தடவை சொல்லி கூப்பாடு போடுகின்றன........ அங்க தண்ணீர் நிக்கு இங்க தண்ணீர் நிக்கு வேளச்சேரி வெள்ளமாயிடிச்சி, வியாசர்பாடி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளம்...மக்கள் வெளிய வரவேயில்லை இயல்பு வாழ்க்கை பாதிப்பு அப்படினு இன்னும் முழங்கிக்கொண்டிருக்கின்றன.................என்னமோ இவை அனைத்தும் இந்த வருசம்தான் நடக்கிற மாதிரி..............

