பொதுவாக தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்கள் போட்டால் படம் இரண்டரை மணி நேரம் என்றால் விளம்பரத்தோடு 4 மணி நேரம் போட்டுத்தாக்கும் பழக்கம் உண்டு. இந்தியன் திரைப்படம் ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்பிய போது 5 மணிநேரத்திற்கும் மேலாக போட்டு ஒரு சாதனையை உண்டு பண்ணினாங்க... இந்த மாதிரி புதுப்படங்கள் விசயத்தில் சன் டிவி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். படம் இரண்டரை மணி நேரம் என்றால் விளம்பரத்தோடு சேர்த்து மூன்றரை மணி நேரம் தான் அவர்கள் கணக்கு.... ஆனால் இந்த விசயத்தில் சன் டிவியை மிஞ்சி விட்டது நமது கலைஞர் தொலைக்காட்சி.கலைஞர் டிவியில் ஒளிபரப்பபட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை இம்சை அரசன் படத்தையே சாரும்... அதனாலதான் என்னவோ இந்த ஒன்றரை வருடங்களுக்குள் இப்படத்தை அஞ்சாறுவாட்டி காண்பிச்சிட்டாங்க... அதுவும் விளம்பரங்களே இல்லாமல்....இந்த மாதிரி ஹிட் படங்கள் சன்னுக்கு கிடைத்தால் வருசத்துக்கு ரெண்டு வாட்டி காண்பித்து நல்லா அறுவடை பண்ணுவாங்க... கலைஞர் டிவிக்கு அனுபவம் போதலை... மக்களை சந்தோசப்படுத்துவதற்காக இந்த நஷ்டத்தை தாங்கிக்கிறாங்க போல............
தமிழ்நாட்டில உள்ள எந்த அரசியல் வாதிக்கும் இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது... நேத்து ஆரம்பிச்ச கட்சியெல்லாம் கூட்டணி, சீட்டு, என்று பிசியா இருக்கும் இந்நேரத்தில் வைகோவின் நிலைமை அவரே அப்படி இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். நேற்று தொலைக்காட்சியில் பேட்டி கோடுக்கும் போது கண்ணில் தண்ணி வராத குறையாக தனக்கு இப்போதைக்கு தேர்தல் குறித்தோ,கூட்டணி குறித்தோ எண்ணம் வரவில்லை என்கிறார். அம்மா நெஞ்சில் குத்துகிறார் என்றால் அவரது கட்சிக்காரர்கள் முதுகில் குத்துகிறார்கள்.. தினசரி அவரது கட்சியில் இருந்து யாராவது ஒருவர் எதிர் அணிக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அம்மாவும் கலைஞரும் இந்த விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து கொண்டு வைகோவை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். இப்போதைக்கு கூட்டணிய விட்டு வெளியவும் வர முடியாது..... திரிசங்கு நிலையில் தவிக்கிறார் வைகோ.... டாக்டர் மருத்துவர் ராமதாசு அளவுக்கு இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியவில்லை...பாவம்.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..............
யோகி இணைய ஒலி 24x7
15 years ago