Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, May 19, 2009

விடை தெரியாத மர்மங்கள்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் உறுதிப்படுத்தபட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவிப்பு செய்து அதற்கு ஆதாரமாக வீடியோ படத்தையும் வெளியிட்டுள்ளது.... பின்தலை முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதுதான் பிரபாகரன் உடல் என அடித்து சொல்கிறது இலங்கை அரசு..... இலங்கை அரசு செய்தி வெளியிட்டதில் ஒரு சில சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன


1.நேற்று அவர் இலங்கை ராணுவத்துடன் போரிட்டு இறந்ததாக இலங்கை ராணுவ செய்திக்குறிப்பு சொல்கிறது. ஆனால் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொன்றுவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறது..... ஏன் இந்த முரண்பாடு?


2.25ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தால் நெருங்க முடியாத பிரபாகரனை இப்போது சரியாக குறி வைத்து கொல்ல முடிந்தது?


3.இலங்கை அரசின் கூற்றுப்படி புலிகள் தலைவர் தப்பி சென்றிருந்தால் சீருடை அணிந்தா சென்றிருப்பார்?


4.இலங்கை அரசு காண்பித்த உடல் பிரபாகனைப்போலே வேறொரு உருவமாக இருக்கலாமே...?


5.டி என் ஏ டெஸ்ட் முடிவு எப்படி உடனடியாக கிடைத்தது?


6.தப்பி செல்லும் ஒருவர் எப்படி அவருடைய அடையாள அட்டையையுமா எடுத்து செல்வார்?

Monday, May 18, 2009

சொன்னதை செய்த மத்திய மாநில அரசுகள்

ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன..இந்த போராட்டங்களை அடக்குவதில் மத்திய மாநில அரசுகள் பெரும் முனைப்பு காட்டின..... தூண்டிவிட்ட அகல் விளக்கு ஒளிர்வது போல் போராட்டத்தின் தீவிரம் அதிகமாகியது.... அம்மா ஒரு படி மேலே போய் தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்றார்.. கலைஞரும் சாகும் வரும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.


இந்த நிகழ்வுகளுக்கு அடுத்து நம்ம மத்திய அரசும் மாநில அரசும் தேர்தலுக்கு பிறகு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தீவிரமாக பாடுபடுவோம் என்றார்கள். இன்று அவர்கள் சொன்னதை செய்துவிட்டார்கள்.... நேற்று முதல் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது...... பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியும் வருகிறது.


இந்த விசயத்தில் தான் நம்ம அரசுகள் சொன்னதை செய்துவிட்டது...இனி ஈழ மக்களின் நிலை எப்படி இருக்கும்............???????????????