சன் தொலைக்காட்சியும்,கலைஞர் தொலைக்காட்சியும் பாடல் ஒளிபரப்புவதில் இருந்து சேனல் துவங்குவது வரை எல்லா நிலையிலும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன்.. மேலோட்டமாகப் பார்த்தல் சபாஷ் சரியான போட்டி என்றே தோன்றும். கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும். கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்பு வரை சன் கொஞ்சமாக போட்டிப்போட்டுகொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை பரவவிட்டது... முதலிடத்தை தக்கவைத்துகொண்டது... கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பித்ததற்கு அப்புறம் தொய்வு கொஞ்சம் அதிகமாகியது. எல்லா நிலையில் இருந்தும் கடும் போட்டி உருவானது.நம்ம பதிவர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு சன்னை முந்துகிறது கலைஞர் பயங்கரமா எழுத ஆரம்பிச்சாங்க....
ஆனால் மக்கள் பார்வையில் இருந்து எப்படியாவது சன்னை முந்தி முதலிடத்துக்கு வர கலைஞர் தொலைக்காட்சி ரொம்பவே பகீரத முயற்சி எடுத்தது..அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்கள். குடும்ப சண்டைக்கு பிறகு சன் நடுநிலைமை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு எந்த அளவுக்கு ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளிக்கொணர முடியுமோ அந்த அளவுக்கு திறமையா செயல்பட்டது. சன்னின் நடுநிலைமையால் ஜெயாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டது... முக்கியமா மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினைகளில் எந்த அளவுக்கு விளையாமுடியுமோ அந்த அளவுக்கு புகுந்து விளையாடுனாங்கோ..இதுக்கு விளக்கம் சொல்லி முடியல கலைஞர் தொலைக்காட்சிக்கு. இந்த கூத்தெல்லாம் கண்கள் பணித்தது இதயம் இனிக்கும் வரைக்கும்தான் இருந்தது...
இதுக்கு அப்புறம் மின்வெட்டு கிலோ எவ்ளோ? ஸ்பெக்ட்ரம் எந்த ஊர்ல இருக்கு அப்படின்ற ரேஞ்சில தான் சன்னின் நடுநிலைமை இருந்திச்சி... கலைஞர் தொலைக்காட்சியை தன் வழிக்கு கொண்டு வரவே சன் தொலைக்காட்சி நடுநிலைமை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருந்தது... இப்போதைக்கு தமிழக மக்கள் சன் தொலைக்காட்சி இல்லைனா கலைஞர் தொலைக்காட்சிதான் பாக்கனும் என்பதில் மிக முனைப்போடு போட்டிப்போடுக்கொண்டு சேனல்களை ஆரம்பித்து வருகிறார்கள். தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களில் பெரும்பான்மையோர் திமுக அனுதாபிகள் மற்றும் திமுக பிரமுகர்களாக இருப்பது இரு நிறுவங்களுக்கும் ஆதாயமே.
இப்படி எல்லா நிலையிலும் போட்டி போடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுதான் வேதனைக்குறிய விசயம். அது என்னன்னு உங்களுக்கே தெரியும். ஈழப்பிரச்சினை சன்னாவது பரவாயில்லை மேம்போக்கா ஏதோ சொல்றாங்க.. ஆனா கலைஞர் தொலைக்காட்சி இந்த விசயத்தில் மவுனமாக இருப்பது வேதனைக்குறிய வெட்கப்படவேண்டிய விசயம். இதுக்கு உதாரணம் இலங்கை சுதந்திர தினத்தன்று ராஜபக்ஷே பேசியதை தலைப்பு செய்தியிலும் முதலாவதா சொல்லி காங்கிரசு கட்சியின் மானத்தை காப்பாற்றி விட்டது கலைஞர் தொலைக்காட்சி. இன்று நக்கீரன் குழுமத்திற்கு இலங்கை தூதுவர் கொடுத்த மிரட்டல்,மக்கள்,தமிழன் தொலைக்காட்சிகள் இலங்கையில் ஒளிபரப்ப தடை போன்ற விசயத்திலும் மவுனத்தை சாதிப்பது கொடுமையிலும் கொடுமை......
இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?
யோகி இணைய ஒலி 24x7
15 years ago