Saturday, May 16, 2009

மாப்பு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.....

இந்தப்பதிவின் தலைப்பு யாருக்கு சரியா இருக்கோ இல்லையோ நம்ம டாக்டர் ஐயா கட்சிக்கும், தமிழக காங்கிரசு முண்ணனி தலைவர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் நம்ம டாக்டர் ஐயா பிலிம் காட்ட ஆரம்பிப்பார்... நாடாளுமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி, சட்டமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி அப்படி இப்படினு அரசியல் வியாபார கணக்கு போட்டு திராவிடக்கட்சிகளுக்கு அல்வா கொடுப்பதுதான் இவர் வேலை.



ஒவ்வொரு தடவையும் இவர் போடும் கணக்கு சரியாக இருந்ததால் நாங்கள் எப்பவும் வெற்றி கூட்டணிதான்... பாமக ஒரு தவிர்க்க இயலாத கட்சி அப்படினு ஒரு இறுமாப்பு. இதையே சாக்காக வைத்து கூட்டணி வைக்கும் கட்சிகளிடம் பேரம் பேசி தலைவலியை ஏற்படுத்துவதே டாக்டர் ஐயாவின் பொழுது போக்கு... இநத நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த பாமக வழக்கம் போல் அவரின் அரசியல் வியாபார கணக்கின் படி எல்லோரும் எதிர்பார்த்தது போல் அதிமுகவில் ஐக்கியமானார்...


இன்றைக்கு வந்த முடிவின் படி பாமக வை மக்கள் அது போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் புறந்தள்ளிவிட்டனர்.... டாக்டர் ஐயாவின் நிலையை நினைச்சா..........ஹிஹிஹி....பாமகவின் வருங்கால அரசியல் நிலை..இனிமேல் இந்த பேரம் பேசுவது உட்பட எல்லாமே.......ஊஊஊஊஊஊ இருந்தா ஒரே கூட்டணியில் இருங்கடா... இல்லைனா பாமகவின் நிலைதான் உங்களுக்கு என்று மக்கள் தெளிவா சொல்லிட்டாங்க.........

முத்துக்குமாரா யாரு அதுன்னு கேள்விகேட்ட அமைச்சர் இளங்கோவனை ஈரோட்டில் மக்கள் குப்ப்ற படுக்க வச்சிட்டாங்க.... இவரின் தோல்விக்கு கொங்குநாடு அமைப்பும் ஒரு காரணம்.. அந்த அமைப்பு கிட்டத்தட்ட 1லட்சம் வாக்குகளைப்பெற்றுள்ளது..மதிமுக 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது.



நம்ம தொங்கபாலு தினசரி அறிக்கையின் மூலம் பிரபலமானவர்.... இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதில்லை என்று சத்தியம் பண்ணாத குறையா அறிக்கைவிட்டவர். லோக்கல் பிரச்சினையான கள் இறக்குவதை கண்மூடித்தனமா எதிர்த்தவர்.... இவருக்கும் ஆப்பு வச்சிட்டாங்க என்னா பேச்சு பேசினார் தொங்கபாலு... 46491 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணை கவ்விட்டார்.


மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் 36000வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டார். விலைவாசி ஏற்றதுக்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் அப்படினு புதுசா ஒரு ஐடியாவை சொன்ன முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் நிலைமை திரிசங்கு நிலைதான்...கடேசில ஒருவழியா ஜெயிச்சிட்டார்... இந்த வெற்றி அவருக்கு ஒரு பாடமாக அமையட்டும்...


விருது நகர்ல இன்னும் கண்ணைகட்டிக்கிட்டு இருக்கு.... காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்தாலும் அங்கே பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஒரு தகவல்............ புயல் கரையை கடக்குமா??


அப்புறம் ஈழம் ஈழம் அப்படினு சொன்னாங்க...அது என்னவாகப்போவுதோ........அய்யோ...