Showing posts with label சினிமா செய்திகள். Show all posts
Showing posts with label சினிமா செய்திகள். Show all posts

Friday, October 28, 2011

காட்டு காட்டுனு காட்டிய வேலாயுதம் வயித்தெரிச்சலில் பிரபல பதிவர்

அனைத்து பதிவர்களின் எண்ணத்தில் மண் அள்ளி போட்டுவிட்டார் இளைய தளபதி......ஆம் வேலாயுதம் வரும் வழக்கம் போல் கும்மலாம் என்ற எண்ணத்தில்......... படம் நல்லாயிருக்கு அப்படினு சொல்றதுக்கு பதிலா அரைச்ச மாவையே அரைத்திருக்கிறார் அப்படினு சொல்றாங்க வேற வழியே இல்லாம.................................. ஒரு பிரபல பதிவர் தன்னுடைய
கூகுள் பஸ்ஸில் “ஏழாம் அறிவு நல்லால்லைங்கிறது கூட கஷ்டமாயில்ல. அதுனால வேலாயுதம் பரவாயில்லைன்னு ஓட வச்சிடுவாங்கன்னு நினைக்கும் போது வருத்தமாயிருக்கு” அப்படினு தன்னுடைய வயித்தெரிச்சலை கொட்டியிருக்கிறார்................ இதை என்னனு சொல்ல..........இதே படத்தில் விஜய் தவிர்த்து வேறு யாரவது நடித்திருந்தால் படம் செம மாஸ் என்றிருப்பார்..................... இதுதான் அநேக பதிவர்களின் எண்ணமும் கூட.........................................

வேலாயுதம் படத்தை பற்றி பதிவர்களின் விமர்சன தொகுப்பு

1.http://cablesankar.blogspot.com/2011/10/blog-post_27.html
2.http://shayan2613.blogspot.com/2011/10/blog-post_27.html
3.http://www.arvloshan.com/2011/10/blog-post_26.html
4.இணைய தளபதியின் விமர்சனம்
5.http://nellainanban.blogspot.com/2011/10/blog-post.html
6.http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post_26.html
7.http://pavithulikal.blogspot.com/2011/10/blog-post_28.html
8.http://cricketnanparkal.blogspot.com/2011/10/blog-post_26.html
9.http://tamilraja-thotil.blogspot.com/2011/10/blog-post_28.html
10.http://www.luckylookonline.com/2011/10/blog-post_2100.html

Wednesday, October 5, 2011

காட்டு காட்டுனு காட்டுமா வேலாயுதம்???



வேலாயுதத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட் அடித்துள்ளது.........மாயம் செய்தாயோ மற்றும் முளைச்சி மூனு இலைய விடல.........................பட ட்ரெயிலரும் பட்டய கெளப்புவதால்..................................................... மீண்டும் இமாலய நம்பிக்கையுடன்......................................................... தளபதிக்கு மீண்டும் ஒரு கில்லியாக வாழ்த்துக்கள்..............

Monday, January 17, 2011

தளபதி தேடிக்கொள்ளும் ஆப்பு???????????????

என் ரசிகர்களின் விருப்பத்திற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார் இளைய தளபதி விஜய்......ஆனால் என்னைப்போன்ற சாதாரண ரசிகனுக்கு அவர் வெற்றிப்படங்களை கொடுத்தாலே போதும்.........அரசியல் எல்லாம் வேணாம் என்பதுதான்....................காவலன் பட வெளியீட்டில் என்ன உள்குத்தோ வெளிக்குத்தோ........... அதெல்லாம் தெரியாது...................ஆனால் நேற்று 16.01.11 மாலைமலரில் இந்த விளம்பரத்தை பார்த்ததும்............................................................................ என்னத்த சொல்ல......................  


அரசியல் வேணாம்
தளபதி..........................................................

வருத்ததுடன்
வெள்ளந்தியான விஜய் ரசிகன்.............

Saturday, February 13, 2010

இதுக்கு என்ன சொல்லப்போறீங்க கேபிள் & கார்க்கி????

தமிழில் எதிர்பார்த்த வெற்றியை தராத ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது..........வெளியாகி நான்கு நாட்களில் ரூ.2கோடி வசூல் செய்துள்ளது....ஆனால் படம் 2மணிநேரமாக குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கார்த்தியின் பருத்தி வீரன் படம் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறது.



தமிழ் ரசிகர்கள் தராத வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.... நம்ம ஆளுங்களுக்கு புரியாத கதை அவங்களுக்கு புரிஞ்சிது போல..............

Saturday, October 31, 2009

வேட்டைக்காரனை டரியலாக்கும் குறுஞ்செய்திகள்

விஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்...... அப்படி என்னதான் சந்தோசமோ வேட்டைக்காரனை பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு... இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். என்பதும் அவர்களுக்கு தெரியும்............... இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........

விஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்


2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்


5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
-
-
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)


6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா?


7.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்


8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.


9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.


10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......


11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.

Friday, August 28, 2009

வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இணையதளம்

நம்ம ஆளுக எழுதும் சினிமா பதிவுகளுக்கு எப்பவும் கிராக்கி இருக்கும்.கதை,கவிதை,நேர்த்தியான அரசியல் அலசல்கள் என யோசிச்சு எழுதும் பதிவுகளை விட ரெண்டு வரி சினிமா பதிவுகளுக்கு ஹிஸும் அதிகம் பின்னூட்டமும் அதிகம்...

நான் சொல்ல வருவது சினிமா விமர்சனம் பற்றி... முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்றால் ஆ.வி.தான்.அவர்கள் போடும் மார்க்கை வைத்தே படத்தின் தலைவிதியை தெரிந்து கொள்ளலாம்...ஆனால் தற்போது எந்த பத்திரிக்கையும் நடுநிலையான விமர்சனம் செய்வதில்லை......ஆனால் நம்ம வலைப்பதிவுகளில் சினிமாவிமர்சனம்னாலே எந்த படம் என்றாலும் பிடி கொடுக்காமல் விளாசித்தள்ளுகிறார்கள்.......இந்த விசயத்தை பற்றி தமிழ்சினிமா.காம் வேண்டுகொளை விடுத்துள்ளது....... கீழே படிக்கவும்.....

//பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்? அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...////

கொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே

Sunday, August 2, 2009

எனக்கு பிடித்த பாடல்

சினிமா பாடல்களில் தமிழ் தவிர்த்து மற்ற மொழி பாடல்கள் என்றால் ஹிந்தி பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும்( அர்த்தம் புரியுமானு கேட்கக்கூடாது).......சென்னை வந்ததற்கு அப்புறம் இந்த லிஸ்டில் தெலுங்கு பாடல்களும் சேர்ந்து கொண்டன............ஊரில் இருக்கும் போது எப்போதாவது மலையாளப்பாடல்கள் கேட்டதுண்டு.... ஆனால் கன்ன்டம்.........தமிழ்நாட்டுக்கும் அதுக்கும் ஒத்தே வராதே....பெங்களூரில் கன்னடப்படங்களை விட தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் தான் அதிகம் ஓடுகின்றன...............

சமீபத்தில்தான் இந்த கன்னடப்பாடலை கேட்டேன்..............நல்ல லொக்கேசன், அருமையான ஒளிப்பதிவு.....பாட்டின் வேகத்துக்கேற்ற கேமரா மூவ்மென்ட் அருமையா இருக்கு.........பார்த்து ரசியுங்கள். முதல்ல பாக்கும் போது இது கன்னட பாடல்தானா? அப்படினு ஒரு சந்தேகம்......ஏன்னா நமக்கும் கன்னடத்துக்கும் ரொம்ப தூரமாச்சே.....

படம் : சினேக லோகா ( கண்ணெதிரே தோன்றினாள் ரீமேக்)
இசை : ஹம்சலேகா
பாடகர்கள் : ராஜேஷ்,சித்ரா

 
 
    

Monday, June 8, 2009

கலைஞரை காப்பாத்தும் டான்ஸ் -- சன்னை காப்பாத்தும்(அம்மா) ஆத்தா

ரெண்டு வருசம் முன்னாடி வரைக்கும் சன்னுக்கு எந்த குழப்பமும் கிடையாது....எப்ப கலைஞர் வந்ததோ அப்பொழுதில் இருந்து ஆரம்பித்தது சன்னுக்கு தலைவலி....இதயம் இனித்த பிறகும் இது தொடர்வதுதான் ஒரு உள்குத்து..

கலைஞர் டிவி வருவதற்கு முன்னாடி வரைக்கும் சன் டிவி வார இறுதி புரோகிராமுக்கு இந்த அளவுக்கு மண்டை காய்ந்தது கிடையாது..முதலில் விஜய் டிவி ஜோடி நம்பர் மற்றும் கலக்கப்போவது யாரு மூலமாக வார இறுதி நாட்களில் சன்னை பின்னுக்குத்தள்ள ஆரம்பித்தது.... இந்த சூழ்நிலையில் கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட சன் டிவியின் ஜெராக்ஸ் போல் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டது கலைஞரில்.....முதலில் சன்னுக்கு ஆப்பு வைத்த கலைஞர் டிவியின் மானாட மயிலாட....... சன்னும் அதற்கேற்றார்போல் மஸ்தானா மஸ்தானா வை போட்டிக்கு கொண்டு வந்தது............... ஆனால் மானாட மயிலாடவில் இருந்த சரக்கு மஸ்தானாவில் இல்லை..

தாமதித்து விழித்துக்கொண்ட சன் டிவி ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் மானாடவிற்கு சரியான போட்டியை கொடுத்தது.... ஆனால் மானாட மயிலாட நிகழ்ச்சி கிட்டத்தட்ட 3மணி நேரம் ஒளிபரப்பாகியது சன்னுக்கு கொஞ்சம் பின்னடைவு...ஹாலிவுட் படம்னாலே ஒன்றரை மணி நேரம்தான்......... மீதி உள்ள நேரத்திற்கு?????..................யோசித்து பார்த்து கடைசியில் அம்மாவே சன்னுக்கு கைகொடுக்க ஆரம்பித்துவிட்டாள்...

சன்னின் எல்லா நெடுந்தொடர்களுக்கும் கடும் போட்டியை கொடுத்த கலைஞர் டிவியின் ஒரு சில நெடுந்தொடர்கள் காணாமல் போய்விட்டன... மீண்டும் கலைஞர் டிவி டான்ஸே சரணம் என்ற வழியில் சனி இரவு ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஆரம்பித்து ஓட்டிக்கொண்டிருக்கிறது...சன் டிவியிலோ அதிரடி சிங்கர் முடிந்ததும் மீண்டும் அம்மாவே சரணம் என்கின்ற வழியில் சனி இரவு அம்மன் நெடுந்தொடரை ஆரம்பித்து விட்டார்கள்.

நெடுந்தொடர்கள் கலைஞர் டிவியில் எடுபடாத நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை இரவு அதிரடி திரைப்படங்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்....ஆனால் கலைஞர் டிவியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்கள் திரையரங்கில் நூறு நாட்கள் ஓடியதோ இல்லையோ நூறுதடவை தொலைக்காட்சியில் காண்பித்தாகிவிட்டது..........

எல்லாமே தமிழக மக்களுக்காகத்தான்......... நல்லா எஞ்சாய் பண்ணுங்க.......