Wednesday, June 30, 2010

பர்ஸை காலி பண்ணும் மாந(ர)கரப்பேருந்துகள்

சென்னை மாநகரப்பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப சேவைகள் செய்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்ற பதில்.......... வேண்டுமானால் தினசரி மாநகரப்பேருந்தில் பயணம் செய்யும் மக்களிடம் கேட்டுப்பாருங்களேன்....... மக்களுக்காக இருந்த மாநகரப்பேருந்துகள் இன்று வெறும் வணிக நோக்குடன் மட்டுமே சாலையில் பயணிக்கின்றன என்றால் மிகையாகாது...


சென்னையில் பயணிகளின் தேவைக்கு கிட்டத்தட்ட 5000பேருந்துகள் தேவை ஆனால் இருப்பதோ 3000த்து சொச்சம் என போக்குவரத்து துறை அமைச்சரே விளக்கம் கொடுக்கிறார்.... இந்த 3000 பேருந்துகளில் இன்றைக்கு கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் சொகுசுப்பேருந்துகளே சென்னை சாலையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது............ காரணம் வணிக நோக்குதான்......... பயணிகளின் தேவை காற்றில் எப்போதோ விட்டுட்டாங்க..................


5ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணப்பேருந்து வழித்தடங்கள் தான் சென்னையில் அதிகம்....... அதுக்கப்புறம் வருசத்துக்கு நாலைஞ்சி வாட்டி பெட்ரோல் விலை ஏத்திட்டாங்க........ஆனால் பஸ் கட்டணம் ஏற்றப்படவில்லை...கட்டணத்தையும் ஏற்றக்கூடாது..ஆனால் வருமானம் வரவேண்டும் என்ற அதிகாரிகளின் ஐடியாப்படி ஒவ்வொரு வழித்தடத்திலும் படிப்படியாக சாதாரணப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சொகுசு விரைவு.குளிர்சாதனப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு விட்டது.......... இதை பற்றி யாரும் கேட்பதில்லை...அப்படியே கேட்டாலும் நடத்துனரிடம் சண்டை போடும் பயணிகள்தான் அதிகம்.


மக்களின் டவுசரை அவிழ்க்காத குறையாத்தான் இப்போது மாநகரப்பேருந்துகள் பகற்கொள்ளையடித்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து தி.நகருக்கு சாதாரணப்பேருந்தில் 5ரூபாய் விரைவுப்பேருந்தில் 7ரூபாய், சொகுசுப்பேருந்தில் 10 ரூபாய்............ஒரு மணி நேரத்தில் பத்து பேருந்துகள் தி.நகருக்கு செல்கிறதென்றால் அதில் 5 பேருந்துகள் சொகுசுப்பேருந்துகளாகவும் 3பேருந்துகள் விரைவுப்பேருந்துகளாகவும் 2பேருந்துகள் சாதாரணப்பேருந்துகளாகவும் செல்கின்றன...........சீசன் டிக்கெட்கள் சாதாரணப்பேருந்தில் மட்டுமே செல்லுபடியாகும்... சீசன் டிக்கெட் வைத்திருப்போர் நிலைமை சொல்லிமாளாது............ பேருந்து நிறுத்தத்தில்காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்......தினசரி சொகுசுப்பேருந்திலோ விரைவுப்பேருந்திலோ காசு கொடுத்துதான் பயணம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது............இதனாலே மாநகரப்பேருந்துகளுக்கு இரட்டிப்பு வருமானம்....


போன வருடம் மக்களவைத்தேர்தலின் போது இது ஒரு பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் கிளப்பிவிட பயந்து போன அரசு ஒரு மூன்று நாட்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட எல்லாப்பேருந்துகளையும் சாதாரண பேருந்துகளாக மாற்றியது....அதுக்கப்புறம் பழைய குருடி கதவ திறடி கதை தான்...... இப்ப கேட்டாக்கூட கலைஞரும் போக்குவரத்து துறை அமைச்சரும் தலையில் சத்தியம் பண்ணாத குறையாக சொல்வார்கள்.......”பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று.”........ ஏன் இந்த மறைமுக கட்டணம்..........


அதிகாலை 4மணியில் இருந்து இரவு 11மணி வரைக்கும் பயணிகள் கூட்டம் அதிகம்தான்.. ஆனால் அதுக்கேற்றார்போல் பேருந்து சேவை இருக்குதான்னா பாத்தா கண்டிப்பா கிடையாது.... இரவு 9மணி ஆச்சுன்னா எல்லா பேருந்துகளும் பணிமனையை நோக்கித்தான் செல்லும்... காலை 6மணி வரைக்கும் இதே நிலைமைதான்........


சரி இங்கதான் இதே நிலைமைனா மதுரையிலும் இதேதான்.....ஆரப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு எல்லாமே சொகுசு பேருந்துகள்தான்.. எனக்கே ஒரு நிமிடம் சந்தேகமாகிவிட்டது நாம நிக்கிறது மதுரையா இல்லை சென்னையா??...


இதுக்கெல்லாம் ஒரே காரணம்தான் சென்னையிலும் மதுரையிலும் நகருக்குள் தனியார் பேருந்து சேவைகள் கிடையாது..........அதனால நாங்க எந்த பேருந்தை விடுகிறோமோ அதுல தான் போக முடியும்... திருச்சி,நெல்லை ,சேலம்,கோவையில் இந்த பிரச்சினை குறைவாகதான் இருக்கும் ஏன்னா அங்க எல்லாம் தனியார் பேருந்துகளும் உண்டு........


சென்னை மாநகரப்பேருந்துகளில் மட்டும் இந்த மாற்றம் கிடையாது.... அரசு விரைவுப்பேருதுகளிலும் இதேதான் அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில்....அப்படியே அரசுப்பேருந்துகளில் வெறும் போர்டை மட்டும் மாற்றி கட்டணத்தை உயர்த்துவது எனத் தமிழகம் முழுவதும் இந்த பகற்கொள்ளை பரவிக்கிடக்கிறது...............


இந்த பகற்கொள்ளைக்கு முடிவு எப்போது?????????????? சொல்லுங்க மக்களே....பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் பஸ் கட்ட்ணம் உயர்த்தப்படாது என கலைஞர் அறிவித்திருக்கிறார்.....அது சரி இப்ப இருக்கிற மறைமுக கட்டண உயர்வு இன்னும் 10வருசத்துக்கு கூட தாக்கு பிடிக்கும்........................

Monday, June 28, 2010

ஆற்காட்டாரால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி

மின்வெட்டால் யாருக்கு லாபமோ இல்லையோ ரேசன் கடை ஊழியர்களுக்கு லாபம்தான்....சென்னை தவிர்த்து அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றவர்களுக்கு எப்படியோ ரேசன் கடை ஊழியர்கள் ஆற்காட்டாரை தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்...


குறைந்தபட்சம் ரெண்டாயிரம் பேருக்கு பில் போட்டு களைத்த ரேசன் கடை ஊழியர்களுக்கு கலைஞர் அரசு பில் போடும் இயந்திரம் வழங்கியது............. மின்சாரம் கட் ஆகாத வரைக்கும் இது நல்லாத்தான் போகும்.........மின்சாரம் கட் ஆகினாலே அடுத்து ரெண்டு பில் கூட போட்டிருக்க மாட்டாங்க...........சார்ஜ் தீர்ந்து விடும். இனிமே கரண்ட் வந்தாத்தான் பில் போட முடியும் என்பார் ரேசன் கடை ஊழியர்........ஏங்க சார்ஜ் எல்லாம் போட்டு வைக்க மாட்டீங்களா..ன்னு கேட்டா.... ரொம்ப நேரம் சார்ஜ் போடக்கூடாதுனு அதிகாரிங்க சொல்லியிருக்காங்க.. அதனால தான் அப்படினு சொல்லிட்டு எடுத்து வச்சிருவார்......இந்த மாதிரியான சூழ்நிலை மாசத்துக்கு எப்படியும் ஒரு ஐந்து நாளாவது வந்து விடும்.  இது நடப்பது பள்ளிக்கரணையில் நான் பொருட்கள் வாங்கும் ரேசன் கடையில தான்.............இங்கேயே இப்படினா....மற்ற இடத்துல........?????????????????????/


மின்சாரம் இல்லாத நேரத்தில் பழைய முறைப்படி பில் போடலாம் அதிகாரிங்க சொல்லலாமில்ல... .......................... என்னவோ போங்கப்பா........................... எது எப்படியோ ஆற்காட்டார் இவங்களையாவது சந்தோசப்பட வச்சிருக்காரே..........................????

Monday, June 14, 2010

யூத் பதிவரை கருப்பு வெள்ளையில் காட்டி பழி வாங்கிய சீரியல்

அந்த பிரபல பதிவர் தன்னை எப்போதும் யூத்- ஆக காட்டிக்கொள்வதிலே ரொம்ப முனைப்பாக இருப்பார்....அவர் பதிவுக்கு போனாலும் சரி அவர் எழுதிய புத்தகம் ஆனாலும் தன்னுடைய எழுத்தின் மூலம் யூத் ஆகவே காட்டியிருப்பார்......45+ஆக இருக்கும் அவர்........

போன வாரம் அவர் நடித்த சீரியல் ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியது......மிகவும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன்....... நம்ம யூத் பதிவர் அந்த சீரியலில் 20 நிமிடம் நடித்திருந்தார் அப்படினு சொல்ல முடியாது...... 50ரூபாய்க்கு நடிக்க சொன்னா அவரு 500ரூபாய்க்கு நடிச்சு கொடுத்திருந்தார்....அந்த அளவுக்கு ஒரு இது... மீசையே இல்லாத அவருக்கு கன கச்சிதமான ஒட்டு மீசை+முன் வழுக்கையை மறைக்கும் விக் என நம்மாளு களைக்கட்டியிருந்தார்...........

என்ன ஒரே கவலை அவர் வந்த காட்சி எல்லாம் கருப்பு வெள்ளையிலே காண்பிச்சிட்டாங்க.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................

அந்தப்பதிவர்



--
--
---
--
--
--
--
---
--
---
--
---
---
---
---
---
---
---
இவருதான்

இது அவர் போன வருடம் அம்மா டிவியில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

Sunday, June 13, 2010

இவ்ளோ நாள் புடுங்கவா போயிருந்தீங்க..................

போபால் விஷ வாயு விபத்து நடந்து 25 ஆண்டுகள் முடிந்த நிலையில் போனவாரம் தீர்ப்பு அளித்தாகிவிட்டது........வழக்கம்போல் தீர்ப்பு வெளியானவுடன் இன்னைக்குத்தான் தூக்கத்திலிருந்து எழுந்தவன் மாதிரி செய்தி ஊடகங்கள் கூப்பாடு போட ஆரம்பித்திருக்கின்றன... முக்கிய குற்றவாளியான ஆண்டர்செனை யார் தப்பிக்கவிட்டது என்பதிலிருந்து இப்ப அவர் எங்க இருக்கார் என்பது வரை சூட்டோடு சூடாக செய்திகளை அள்ளி தெளித்து தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முயற்சித்து கொண்டிருக்கின்றன.....

பிரபல் தமிழ் நாளிதளில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த வழக்கு தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது... அதில் போபால் விஷ வாயு வழக்கில் இந்த தண்டணை கொடுத்ததே அதிகபட்சம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. காரணம் வழக்கு போடப்பட்டதேஅந்த மாதிரியான செக்சன்களை தேடி போட்டிருக்கிறார்கள்......... அப்பொழுதில் இருந்தே அமெரிக்காவின் அடிவருடியாக இருந்துள்ளது மத்திய அரசு. இந்த லட்சணத்துல ஆண்டரசனை தப்பிக்க விட்டது யார் என்பது பற்றி காங்கிரசுக்குள்ளே ஒரு பெரிய பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

ஊடகங்களுக்கு தெரியாதா இந்த வழக்கில் ஆண்டர்சென் முதன்மை குற்ற வாளி என்று..என்னமோ இன்னைக்குத்தான் கண்டுபிடிச்ச மாதிரி கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன.......... அரசும் வாய்மூடி மவுனியாக இருக்கிறது.........போன உசுருகள் எல்லாம் என்ன  கோமான்களா என்ன நடவடிக்கை எடுக்க................ சாதாரண மக்கள் தானே....................

நடக்கிற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் இந்தியாவில் வசிக்க தகுதியற்றவர்களோ என எண்ணத்தோன்றுகிறது.........ஆம் இந்தியாவுல அரசியல்வியாதிகள்,பன்னாட்டுக்கோமான்கள்,அரசியல் புரோக்கர்கள்,
அம்பானி மாதிரியான தொழில் அதிபர்கள் தான் வாழனும் போல...அவங்களுக்குக்காகத்தான் மத்திய அரசு இருக்கு...............நமக்கெல்லாம் கிடையாது............

வாழுக மன்மோகன் சோனியா
வாழுக இந்திய சனநாயகம்...