Wednesday, June 30, 2010

பர்ஸை காலி பண்ணும் மாந(ர)கரப்பேருந்துகள்

சென்னை மாநகரப்பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப சேவைகள் செய்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்ற பதில்.......... வேண்டுமானால் தினசரி மாநகரப்பேருந்தில் பயணம் செய்யும் மக்களிடம் கேட்டுப்பாருங்களேன்....... மக்களுக்காக இருந்த மாநகரப்பேருந்துகள் இன்று வெறும் வணிக நோக்குடன் மட்டுமே சாலையில் பயணிக்கின்றன என்றால் மிகையாகாது...


சென்னையில் பயணிகளின் தேவைக்கு கிட்டத்தட்ட 5000பேருந்துகள் தேவை ஆனால் இருப்பதோ 3000த்து சொச்சம் என போக்குவரத்து துறை அமைச்சரே விளக்கம் கொடுக்கிறார்.... இந்த 3000 பேருந்துகளில் இன்றைக்கு கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் சொகுசுப்பேருந்துகளே சென்னை சாலையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது............ காரணம் வணிக நோக்குதான்......... பயணிகளின் தேவை காற்றில் எப்போதோ விட்டுட்டாங்க..................


5ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணப்பேருந்து வழித்தடங்கள் தான் சென்னையில் அதிகம்....... அதுக்கப்புறம் வருசத்துக்கு நாலைஞ்சி வாட்டி பெட்ரோல் விலை ஏத்திட்டாங்க........ஆனால் பஸ் கட்டணம் ஏற்றப்படவில்லை...கட்டணத்தையும் ஏற்றக்கூடாது..ஆனால் வருமானம் வரவேண்டும் என்ற அதிகாரிகளின் ஐடியாப்படி ஒவ்வொரு வழித்தடத்திலும் படிப்படியாக சாதாரணப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சொகுசு விரைவு.குளிர்சாதனப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு விட்டது.......... இதை பற்றி யாரும் கேட்பதில்லை...அப்படியே கேட்டாலும் நடத்துனரிடம் சண்டை போடும் பயணிகள்தான் அதிகம்.


மக்களின் டவுசரை அவிழ்க்காத குறையாத்தான் இப்போது மாநகரப்பேருந்துகள் பகற்கொள்ளையடித்துகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து தி.நகருக்கு சாதாரணப்பேருந்தில் 5ரூபாய் விரைவுப்பேருந்தில் 7ரூபாய், சொகுசுப்பேருந்தில் 10 ரூபாய்............ஒரு மணி நேரத்தில் பத்து பேருந்துகள் தி.நகருக்கு செல்கிறதென்றால் அதில் 5 பேருந்துகள் சொகுசுப்பேருந்துகளாகவும் 3பேருந்துகள் விரைவுப்பேருந்துகளாகவும் 2பேருந்துகள் சாதாரணப்பேருந்துகளாகவும் செல்கின்றன...........சீசன் டிக்கெட்கள் சாதாரணப்பேருந்தில் மட்டுமே செல்லுபடியாகும்... சீசன் டிக்கெட் வைத்திருப்போர் நிலைமை சொல்லிமாளாது............ பேருந்து நிறுத்தத்தில்காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்......தினசரி சொகுசுப்பேருந்திலோ விரைவுப்பேருந்திலோ காசு கொடுத்துதான் பயணம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது............இதனாலே மாநகரப்பேருந்துகளுக்கு இரட்டிப்பு வருமானம்....


போன வருடம் மக்களவைத்தேர்தலின் போது இது ஒரு பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் கிளப்பிவிட பயந்து போன அரசு ஒரு மூன்று நாட்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட எல்லாப்பேருந்துகளையும் சாதாரண பேருந்துகளாக மாற்றியது....அதுக்கப்புறம் பழைய குருடி கதவ திறடி கதை தான்...... இப்ப கேட்டாக்கூட கலைஞரும் போக்குவரத்து துறை அமைச்சரும் தலையில் சத்தியம் பண்ணாத குறையாக சொல்வார்கள்.......”பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று.”........ ஏன் இந்த மறைமுக கட்டணம்..........


அதிகாலை 4மணியில் இருந்து இரவு 11மணி வரைக்கும் பயணிகள் கூட்டம் அதிகம்தான்.. ஆனால் அதுக்கேற்றார்போல் பேருந்து சேவை இருக்குதான்னா பாத்தா கண்டிப்பா கிடையாது.... இரவு 9மணி ஆச்சுன்னா எல்லா பேருந்துகளும் பணிமனையை நோக்கித்தான் செல்லும்... காலை 6மணி வரைக்கும் இதே நிலைமைதான்........


சரி இங்கதான் இதே நிலைமைனா மதுரையிலும் இதேதான்.....ஆரப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு எல்லாமே சொகுசு பேருந்துகள்தான்.. எனக்கே ஒரு நிமிடம் சந்தேகமாகிவிட்டது நாம நிக்கிறது மதுரையா இல்லை சென்னையா??...


இதுக்கெல்லாம் ஒரே காரணம்தான் சென்னையிலும் மதுரையிலும் நகருக்குள் தனியார் பேருந்து சேவைகள் கிடையாது..........அதனால நாங்க எந்த பேருந்தை விடுகிறோமோ அதுல தான் போக முடியும்... திருச்சி,நெல்லை ,சேலம்,கோவையில் இந்த பிரச்சினை குறைவாகதான் இருக்கும் ஏன்னா அங்க எல்லாம் தனியார் பேருந்துகளும் உண்டு........


சென்னை மாநகரப்பேருந்துகளில் மட்டும் இந்த மாற்றம் கிடையாது.... அரசு விரைவுப்பேருதுகளிலும் இதேதான் அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில்....அப்படியே அரசுப்பேருந்துகளில் வெறும் போர்டை மட்டும் மாற்றி கட்டணத்தை உயர்த்துவது எனத் தமிழகம் முழுவதும் இந்த பகற்கொள்ளை பரவிக்கிடக்கிறது...............


இந்த பகற்கொள்ளைக்கு முடிவு எப்போது?????????????? சொல்லுங்க மக்களே....பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் பஸ் கட்ட்ணம் உயர்த்தப்படாது என கலைஞர் அறிவித்திருக்கிறார்.....அது சரி இப்ப இருக்கிற மறைமுக கட்டண உயர்வு இன்னும் 10வருசத்துக்கு கூட தாக்கு பிடிக்கும்........................