Showing posts with label தங்கமணி. Show all posts
Showing posts with label தங்கமணி. Show all posts

Friday, February 26, 2010

மணத்தக்காளி கீரை பொரியல்---- பேச்சிலர் சமையல்

தினசரி கோதுமை தோசை,அரிசி மாவு தோசை, ஆம்லெட், சாம்பார்,அப்பளம் அப்படினு சப்பிட்டு ரொம்ப போரடிச்சிருச்சி......... வேற வழியில்லாம சாப்பிட வேண்டியதா போச்சு...... வித்தியாசமா ஏதாவது செய்து சாப்பிடனும்னு ஆசை...... சிக்கன் வைக்கலாம்னு பாத்தா சைவ சமையலில் ஏதாவது குறை என்றால் உப்போ காரமோ கொஞ்சம் அதிகம் சேர்த்து சமாளிச்சிடலாம்........ அசைவத்தில் குளறுபடி பண்ணிவிட்டால் கண்டிப்பா சாப்பிடமுடியாது...........இதனால கீரையை ஒரு கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்....... மணத்தக்காளி கீரை உடம்புக்கு நல்லதாமே........... ஒரு கட்டு கீரை வாங்கிட்டேன்.ஆனா எப்படி சமைப்பது என்று தெரியவில்லை.வழக்கம் போல் தங்கமணியிடம் வாங்கி கட்டிக்கொண்டு குறிப்பையும் கேட்டுக்கொண்டேன்.........

கீரையை நன்றாக உருவி அதை நறுக்கி கொள்ளவும்... கீரையை தண்ணியில் அலசிக்கொள்ளூங்கள்.சின்னவெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தேவைக்கேற்றார்போல் எடுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் ஒன்று போதும்....ஒரு துண்டு தேங்காயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்..... அடுப்பில் வானலி வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்....அதன் பிறகு அதனுடன் கீரையை சேர்த்து வதக்கவும்...குறைந்த பட்ச சூட்டில் வைத்து வதக்க வேண்டும்..அப்பதான் சட்டியின் அடியில் பிடிக்காது.. கொஞ்ச நேரம் மூடி வைத்து விட்டு மறுபடியும் கிளற வேண்டும்...... தோராயமாக பத்து நிமிடம் கழித்து தெவைக்கேற்றார் போல் உப்பும், அரைத்து வைத்த தேங்காயையும் சேர்த்து கிளறிவிடுங்கள்...மணத்தக்காளி கீரை பொறியல் ரெடி............. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அதன் ருசியே தனி........

டிஸ்கி:


கோதுமை தோசை நன்றக வர வேண்டுமா???..எவ்ளோதான் தண்ணியில் கோதுமையை நன்றாக கரைத்தாலும் தோசை வார்க்கும் பொழுது நன்றாக வராது....இதற்கு ஒரு முட்டையை உடைத்து கோதுமை கரைசலில் நன்றக கலக்கினால் கோதுமை தோசையும் நன்றாக வரும்..ருசியும் சூப்பரா இருக்கும்.... ஆறினாலும் சாப்பிடலாம்

Sunday, November 8, 2009

பதிவர் சந்திப்பு தள்ளிப்போக காரணம்............??????

நேற்று சென்னையில் நடபெறவிருந்த பதிவர் சந்திப்பு மழையை காரணம் காட்டி தள்ளி வைப்பதாக கேபிள் அண்ணனும், சகாவும் சொல்லியிருந்தார்கள். இதில் சகா பதிவை படித்தீர்களானால் மழை மட்டும் காரணமல்ல என்பது உங்களுக்கு புரியும். கேபிள் அண்ணே உங்க பேச்சு வீட்டுக்கு வெளிய மட்டும்தான் போல......ஹும்

வழக்கம் போல் தங்கமணி பதிவுகள் சூடாகியிருக்கின்றன.ஆதி அண்ணன் எழுதிய இந்த பதிவில் ஆணாதிக்கமே அதிகம் இருப்பதாக கூறி வேலன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்கார்..ஆனா இதுல பெண்ணாதிக்கம் கொஞ்சம் அதிகமா இருக்கு...கல்யாணம் செஞ்சுக்க போற யூத்துகளே ரெண்டு பதிவையும் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.என்னை கேட்டா நாணல் மாதிரி இருக்கனும். பிரச்சினை எனும் வெள்ளம் வரும்போது நாணல் எப்படி வளையுதோ அதே மாதிரி வளைஞ்சு கொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..

நேற்று அலுவலகத்தில் என் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அவன் அதிதீவிர விஜய் ரசிகன்..2012 எனும் ஆங்கில படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்...இன்னும் மூணு வருசத்துல உலகம் அழியப்போவுதாம்..நாசாவுல ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டிருந்தான்..... நான் அதற்கு டேய் உலகம் இன்னும் மூனு வருசத்துல அழிய போவுது..ஆனா தமிழ்நாடு அடுத்த மாசம் அழிஞ்சிடும் போல டிசெம்பர் 18ஆம் தேதி என்று சொன்னவுடன் பையன் அப்படியே டெரர் ஆகிட்டான்........(விஜய் கொடுத்த ஷாஜகான் அடி இன்னும் மறக்கலை.அவ்வ்வ்வ்வ்வ்வ்.)

Thursday, October 29, 2009

சமையல் குறிப்புகள்( கல்யாணம் ஆகியும் பேச்சிலராக இருப்பவர்களுக்கு மட்டும்)

பேச்சிலரா இருக்கும்போதே எனக்கும் ஓட்டல் சாப்பாடுக்கும் சுத்தமா ஆகாது..அதனால கஷ்டம் பாக்காம ருசி பாக்காம ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்கு சமைச்சே சப்பிட்டேன்..... என்ன வாரத்துல மூணு நாள் ரசம் அப்பளம்,மீதி நான்கு நாள் புளிசாதம்,லெமன் சாதம் அப்படியே போய்க்கிட்டு இருந்தது.........சைவ சமையலே அரைகுறை என்பதால் நோ அசைவம்.............



கல்யாணம் முடிந்த பிறகு சமையல் ரூமா? அது எங்க இருக்கு அப்படின்ற ரேஞ்சுக்கே போயாச்சு....... தங்கமணியின் சமையல் நல்லாயிருக்கோ இல்லையோ சாப்பிட்டுத்தான் ஆகனும்......... சாப்பாடு ருசி மறந்து போனதுமல்லாமல் சமையலும் மறந்து போயிடிச்சு எனக்கு....


தற்பொழுது மீண்டும் பேச்சிலராக இருப்பதால் நம்மளோட பழைய சமையல் அனுபவத்தை கொண்டுவருவதற்கே ஒரு வாரம் ஆகுது......ஓட்டலுக்கு போனா டாக்டர் கிட்ட போகவேண்டியிருக்கும் என்ற பயம் வேறு......சாம்பார் பொடி டப்பா எங்க இருக்குனு கேக்க ஆரம்பிச்சாலே காதுல ரத்தம் வந்துரும்.....அதனால குத்து மதிப்பா ஏதாவது பொடிய போட்டு கலக்க வேண்டியதுதான்.



மேட்டருக்கு வருவோம்...... என்னைப்போல் பல ரங்கமணிகளும் இந்த கஷ்டத்தை அனுபவிப்பதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்தே நிமிடத்தில் முடியக்கூடிய டிபன் வகைகளை தருகிறேன்...........முயற்சித்து பார்க்கவும்........

கோதுமை தோசை.

கோதுமைமாவில் பூரி சப்பாத்தி பண்ணுவதற்கு ரொம்ப நேரமாகும்.நம்ம எனர்ஜி வேஸ்ட்டாகும்... கோதுமைமாவைதேவையான அளவு தண்ணியில் கரைத்துகொள்ளவும்.தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும். முடிஞ்சா வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.....சுடச்சுட இந்த தோசையை சாப்பிட்டால் சைடிஷ் எதுவும் தேவையில்லை......ஆறிப்போச்சுன்னா...

சேமியா உப்புமா

கடலைபருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய்,கடுகு ஆகியவற்றை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்...தண்ணீர் ஊற்றி 5நிமிடங்கள் கொத்திக்க விடுங்கள்.பின் சேமியாவை போட்டு நன்றாக கிளறி விடுங்கள்..... இதற்கு சீனி நல்ல சைடிஷ்


ரவை உப்புமா


மேலே சொன்ன சேமியா உப்புமா செய்வது போல் சேமியாவுக்கு பதில் ரவையை சேர்த்து கிளறவும்..

எச்சரிக்கை


மேற்ச்சொன்னவைகளை உங்க தங்கமணிக்கு செஞ்சு கொடுத்து நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல..

Sunday, July 19, 2009

குடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சி

இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சிகள் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது...காலையில் 10மணிக்கு ஆரம்பிக்கும் நெடுந்தொடர்கள் இரவு 10மணி வரைக்கும் தொடர்ந்து பல குடும்பங்களில் கலகத்தை உண்டாக்க கூடியதாக மாறிவிட்டது... பெண்களின் சீரியல் ஆர்வத்தை பற்றி வரும் ஜோக்குகள் ஆரம்பத்தில் வெறும் நகைச்சுவையாக இருந்தாலும்....... கொஞ்ச நாளுக்கப்புறம் அதுதான் உண்மை என்ற நிலைமை..

நம்ம மேட்டருக்கு வருவோம்...சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி வழக்கம் போல் காலையில் இருந்து இரவு வரைக்கும் முண்ணனி சேனலுக்கு போட்டியாக தொடர்களை ஆரம்பித்தது... ஆரம்பத்தில் ஒரளவுக்கு போட்டியைக்கொடுத்த இந்த தொலைக்காட்சியின் தொடர்கள் ஒரு கட்டத்தில் போணியாகாமல் போக என்ன செய்வது என்று கையை பிசைந்த தொலைக்காட்சி நிறுவனம் ....தன்னுடைய நெடுந்தொடர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு அதற்கு பதில் நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது...தொடர்கள் எல்லாம் நிறுத்தப்பட்டதால் அந்த தொலைக்காட்சியை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்தது....மண்டையை பிய்த்த அந்த தொலைக்காட்சி பிரைம் டைம் என சொல்லப்படும் முக்கிய நேரத்தில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது...சென்ற ஆண்டு வெளி வந்த முக்கால் வாசி திரைப்படங்களின் உரிமையை பெற்றிருந்ததும் ஒரு காரணம்..........


இந்த புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டதும் நம்ம தமிழ்நாட்டு குடும்பங்களில் கலகம் உண்டாக காரணமாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அதுவரைக்கும் புகைச்சலாய் இருந்த தங்கமணி--ரங்கமணிகள் சண்டை பற்றி எறிய ஆரம்பித்துள்ளதாக தங்கமணி உளவுத்துறை தலைவர் ஆதி ரகசிய அறிக்கை அளித்துள்ளார்... அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று ரங்கமணிகள் சொல்ல வழக்கம் போல் தங்கமணிகள் சீரியல்தான் என்று சொல்லி முட்டி மோத அறிவிக்கப்படாத இந்திய-பாகிஸ்தான் போர் நடைபெற்றுவருவதாக ரகசிய தகவல்கள் கூறுகின்றன...

இதை அறியாத அந்த தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் புதிய மொக்கை திரைப்படங்களை அறிவித்து வருகிறது................. யாராவது இந்த மேட்டரை எடுத்து சொல்லுங்கப்பா......