Wednesday, November 5, 2008

திருந்துவார்களா?" தென் தமிழக தொண்டர்கள்.!!????

உத்தப்புரத்தில் புதிய தமிழக கட்சித்தலைவரின் கார் தாக்கப்பட்ட சம்பவத்தின் விளைவாக தென் மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிப்பு.கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து கிடையாது .

திருந்தவே மாட்டார்களா? தொண்டர்கள் என சொல்லிக்கொள்ளும் மக்கள்.பொருளாதார ரீதியாகவும் சரி, வளர்ச்சியிலும் சரி வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள் பின் தங்கி உள்ளது.காரணம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களால் தொடங்கப்படும் புதிய தொழில் வளர்ச்சிகள் சென்னையை சுற்றியுள்ள 100 கிலோமீட்டருக்குள்முடிந்துவிடும். அதை தாண்டி அவர்கள் வரவே மாட்டார்கள்.

எந்த தலைவர் தாக்கப்பட்டாலும் முதலில் அவர்கள் கை வைப்பது பேருந்துகளைத்தான். கடந்த இரு நாட்களாக தென்காசி,சங்கரன்கோயில்,சிவகிரி,ராஜபாளையம்,மதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு போக்குவரத்தே கிடையாது. கலவரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு அதப்பற்றி என்ன கவலை?. அதன் தலைவரும் இந்த சம்பவங்களை பற்றி மூச்சு விட மாட்டார். ஏனென்றால் இதன் மூலம் அவர்களின் திறமை ??? ஆளுங்கட்சிக்கு தெரியவேண்டுமாம்.

இப்படி ஒன்னுமில்லாத காரணத்திற்கெல்லாம் மக்களின் சாதி உணர்வை தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் அரசியல் வாதிகளால் இன்னும் தென் மாவட்டங்கள் 10 வருடம் பின்னோக்கிதான் இருக்கின்றன.

7 comments:

பாபு said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்

பாபு said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்

அத்திரி said...

நன்றி பாபு. சிக்கல்ல மாட்டிவிட்டுட்டீங்களே. முயற்சி செய்கிறேன்.

சுரேஷ் ஜீவானந்தம் said...

// பொருளாதார ரீதியாகவும் சரி, வளர்ச்சியிலும் சரி வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள் பின் தங்கி உள்ளது.காரணம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களால் தொடங்கப்படும் புதிய தொழில் வளர்ச்சிகள் சென்னையை சுற்றியுள்ள 100 கிலோமீட்டருக்குள்முடிந்துவிடும். அதை தாண்டி அவர்கள் வரவே மாட்டார்கள்.//
உண்மை. இதை நினைத்து நானும் எரிச்சலடைந்ததுண்டு. இது பற்றி பெரிய அரசியல் கட்சிகள் ஏதும் திட்டம் வைத்திருப்பதாகத் தெரியவில்லை.

அத்திரி said...

நன்றி சுரேஸ். இன்றைக்கு சென்னையில் இருப்பவர்களில் பாதிப்பேர் தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்தான். இந்த மேட்டரை பற்றி பதிவர்கள் யாராவது இன்னும் அழுத்தமாக எழுதுவார்களா?.

அரசியல்வாதிகளுக்கு தென் மாவட்ட மக்களின் ஓட்டு மட்டுமே தேவை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புதிய தொழில் வளர்ச்சிகள் சென்னையை சுற்றியுள்ள 100 கிலோமீட்டருக்குள்முடிந்துவிடும். அதை தாண்டி அவர்கள் வரவே மாட்டார்கள்.//
UNMAI..arumaiyaana padhivu

அத்திரி said...

தொழில் வளர்ச்சி மட்டும் அல்ல போக்குவரத்து அது ரெயில்வேயாக இருந்தாலும், சாலை போக்குவரத்தா இருந்தாலும் வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது

நன்றி ஐயா