Wednesday, February 18, 2009

(தென்) தமிழகத்திற்கு ஏமாற்றம் தரும் ரெயில்வே பட்ஜெட்

மத்திய அமைச்சர் லல்லு தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் வழக்கம் போல் தமிழகத்திற்கு ஒரு பட்டை நாமம் சாத்திவிட்டார். குறிப்பா தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு. தமிழகத்துக்கென இந்த ரெயில்வே பட்ஜெட்டில் 5 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலாஸ்பூர் - நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் (திருவனந்தபுரம் வழி)
செங்கோட்டை - ஈரோடு தினசரி பாசஞ்சர்.
திருச்சி - மதுரை தினசரி எக்ஸ்பிரஸ்.
மும்பை - நெல்லை சூப்பர்பாஸ்ட். திருவனந்தபுரம் வழி. (வாரம் இருமுறை)
கோவை - தூத்துக்குடி இணைப்பு ரயில் (தினசரி)

இதில் திருநெல்வேலியிலிருந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ரெயில்களும் திருவனந்தபுரம் வழியாக செல்லும். பேசாம இந்த இரண்டு ரெயில்களையும் திருவனந்தபுரத்திலிருந்தே இயக்கிவிடலாம். ஒரு மாநிலத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் அந்த மாநில மக்களுக்கே அதிகம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்.என்னகணக்கில்
இதைஅறிவிச்சாங்கன்னேதெரியலை.
மும்பையில்நெல்லை,கன்னியாகுமரி,விருதுநகர்,மதுரை மாவட்ட மக்களே அதிகம் உள்ளனர். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் மும்பை.நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிஞ்சிதான் ஓடிக்கிட்டு இருக்கு.. இதே வழித்தடத்தில் இன்னொருவழித்தடத்தைஅறிமுகப்படுத்தினால் மக்களுக்கு பயன் தரும் வகையில்இருக்கும்...


அதேபோல்சென்னையிலிருந்து ,நெல்லைக்கோ,கன்னியாகுமரிக்கோ ரெயிலை அறிமுகப்படுத்தியிருக்கலாம்... ஆனால் அதை பற்றி ஒன்னையும் கானோம்..இத்தனைக்கும் தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் ரெயில்களில் முன்பதிவு வேண்டும் என்றால் 3மாதத்திற்கு முன்னாலே முன்பதிவு செய்தால்தான் உண்டு... இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வரைக்கும் பண்டிகை காலங்களில் மட்டுமே முன்பதிவில் சிக்கல் இருக்கும். ஆனால் தற்போது எல்லா காலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.தென்மாவட்டங்களுக்கு பஸ்ஸில் செல்வதற்கு மனதளவில் மிகுந்த தைரியம் வேண்டும்... ஆம் இதைப்பற்றி உண்மைத்தமிழன் நேற்றுதான் பதிவில் எழுதியிருந்தார்.. சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப்பேருந்தில் செல்ல 13 மணி நேரம் ஆகியதாம்... கின்னஸில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்களோ என்னவோ?.என்னோட அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன். திருச்சிக்கே 13மணி நேரம் என்றால் இன்னும் மதுரை,தென்காசி,நெல்லை,கன்னியாகுமரிக்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுகொள்ளுங்கள். நேரம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தென் மாவட்ட ரெயிலகள் நிரம்பி வழிகின்றன....

மொத்தத்தில் மெஜாரிட்டியான அளுங்கட்சி எம்பிக்கள், ஒரு ரெயில்வே துறை இணை அமைச்சர் இருந்தும் தமிழகத்திற்கு பட்டை நாமம் போடாத குறைதான்..லல்லுவின் சொந்த மநிலமான பீகாருக்கு 12 புதிய ரெயில்களாம்..............

15 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//(தென்) தமிழகத்திற்கு ஏமாற்றம் தரும் ரெயில்வே பட்ஜெட் //

ஏன் கவலைபடுகிறீர்கள்?
நம்ம அஞ்சா நெஞ்சன் இருக்குறாரு, பாத்துப்பாரு!

அத்திரி said...

//ஜோதிபாரதி சொன்னது…
//(தென்) தமிழகத்திற்கு ஏமாற்றம் தரும் ரெயில்வே பட்ஜெட் //

ஏன் கவலைபடுகிறீர்கள்?
நம்ம அஞ்சா நெஞ்சன் இருக்குறாரு, பாத்துப்பாரு!//
அவருக்கெல்லாம் ஏகப்பட்ட வேலை இருக்குங்க..................... வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

நட்புடன் ஜமால் said...

லல்லு

லொள்ளு

நசரேயன் said...

நான் புளியங்குடி க்கு ரயில் விடுவாருன்னு பார்கிறேன், இன்னும் 1999 வருசத்துக்கு வராது போல தெரியுது

Anonymous said...

நசரேயன் கூறியது...
நான் புளியங்குடி க்கு ரயில் விடுவாருன்னு பார்கிறேன், இன்னும் 1999 வருசத்துக்கு வராது போல தெரியுது
//
அப்படியே உங்க வீட்டு பக்கம் ஒரு ஸ்டாப்பும் போட்டுருவோம். அப்ப தானே உங்க வீட்டுக்கு நாங்கெல்லாம் வர முடியும். ஹி...ஹி...ஹி.

கார்க்கிபவா said...

யோவ்.. ஃபாண்ட் கலர மாத்துய்யா.. கண்ணு பீஸி போயிடும் போல.. :)))

narsim said...

101க்கு வாழ்த்துக்கள் சகா..

கடைசி வரிகள்..ஹும்..பிகார்.. லல்லு.. என்னத்த சொல்ல??

RAMYA said...

நல்ல புள்ளி விவரம் எல்லாம் கொடுத்து இருக்கீங்க.

சம்மந்தப் பட்டவர்கள்
பார்த்து மாற்றங்கள்
நிகழ்ந்தால் நமக்கு லாபமே !!

RAMYA said...

நிறைய விஷயங்கள்

சன் டிவி ஆரம்பிச்சு
கலைஞர் டிவி குள்ளே புகுந்து
அப்புறமா அரசியல்
அசத்திட்டீங்க அத்த்திரி !!!

அத்திரி said...

//நட்புடன் ஜமால் கூறியது...
லல்லுலொள்ளு//

நன்றி ஜமால்

//நசரேயன் கூறியது...
நான் புளியங்குடி க்கு ரயில் விடுவாருன்னு பார்கிறேன், இன்னும் 1999 வருசத்துக்கு வராது போல தெரியுது//

ஏதோ உங்க ஊர் மதுரை--தென்காசி மெயின் ரோட்டுல இருக்கதுனால தப்பிச்சிருச்சி.. இல்லனா புளியங்குடிய தேடனும்........ இதுல வேற உங்க ஊருக்கு டிரெயின் வேணுமா? அமேரிக்காவுல இருந்து டிரெயின் வுடுங்க... நன்றி

அத்திரி said...

//கடையம் ஆனந்த் கூறியது...
நசரேயன் கூறியது...
நான் புளியங்குடி க்கு ரயில் விடுவாருன்னு பார்கிறேன், இன்னும் 1999 வருசத்துக்கு வராது போல தெரியுது
//அப்படியே உங்க வீட்டு பக்கம் ஒரு ஸ்டாப்பும் போட்டுருவோம். அப்ப தானே உங்க வீட்டுக்கு நாங்கெல்லாம் வர முடியும். ஹி...ஹி...ஹி.//

நண்பா கரெக்டா சொன்ன.. நன்றி

//யோவ்.. ஃபாண்ட் கலர மாத்துய்யா.. கண்ணு பீஸி போயிடும் போல.. :)))//

சகா ரொம்ப நாளா முயற்சிக்கிறேன் முடியல....... கம்பியூட்டர் மேட்டர்ல நான் கொஞ்சம் வீக்....... நன்றி சகா


//101க்கு வாழ்த்துக்கள் சகா..
கடைசி வரிகள்..ஹும்..பிகார்.. லல்லு.. என்னத்த சொல்ல??//

ஒன்னும் சொல்ல முடியல நன்றி சகா

அத்திரி said...

//RAMYA கூறியது...
நல்ல புள்ளி விவரம் எல்லாம் கொடுத்து இருக்கீங்க.
சம்மந்தப் பட்டவர்கள்
பார்த்து மாற்றங்கள்
நிகழ்ந்தால் நமக்கு லாபமே !!//

என்னத்த பாத்து என்ன செய்யப்போறாங்க..ம்ஹும்

//நிறைய விஷயங்கள்
சன் டிவி ஆரம்பிச்சு
கலைஞர் டிவி குள்ளே புகுந்து
அப்புறமா அரசியல்
அசத்திட்டீங்க அத்த்திரி !!!//

இப்படியெல்லாம் புகழாதிங்க....... நன்றி ரம்யா

Thamira said...

பதிவில் தென்தமிழக மக்களின் வேதனையை சரியாக சொல்லியுள்ளீர்கள் அத்திரி.

Thamira said...

கார்க்கி சொன்னது…
யோவ்.. ஃபாண்ட் கலர மாத்துய்யா.. கண்ணு பீஸி போயிடும் போல.. :)))
//

நான் சொல்லணூம்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். கார்க்கி முந்திக்கொண்டார்.

அத்திரி said...

//தாமிரா கூறியது...
பதிவில் தென்தமிழக மக்களின் வேதனையை சரியாக சொல்லியுள்ளீர்கள் அத்திரி//


நன்றி அண்ணே


//தாமிரா கூறியது...
கார்க்கி சொன்னது…
யோவ்.. ஃபாண்ட் கலர மாத்துய்யா.. கண்ணு பீஸி போயிடும் போல.. :)))
//

நான் சொல்லணூம்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். கார்க்கி முந்திக்கொண்டார்.//

கலரை மாத்திட்டேன்