Thursday, April 30, 2009

2011தேர்தல் வருது-தமிழக அரசு அதிரடி சலுகை--மக்களுக்கு

இப்படி நடக்குமா என்றால் நடக்கும்.... ஆட்சியில் இருப்பவர்கள் மனது வைத்தால்....யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்துவிட்டது... இது தேர்தல் கால சலுகையா?? தெரியவில்லை... மக்களுக்கு நல்லது நடந்தா சரி..... ஆனால் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் மக்கள் பிரச்சினை ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டும் மர்மம் என்னவோ?.. மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சினையா??.அப்படினா என்ன என்ற கேள்விதான் கிலோ கணக்கில் கேட்கப்படும்.


கடந்த மூன்று வருடங்களாக மக்களின் முக்கிய பிரச்சினையாக இருந்தது மறைமுக பஸ் கட்டண உயர்வு...ஆட்சியாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பேருந்துகளின் வர்ணத்தை மட்டும் மாறி விட்டு தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு கட்டணத்தை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களை பிழிந்தெடுத்துவிட்டார்கள்... நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த பிரச்சினையை தற்போது இந்த அரசு தேர்தலை மனதில்வைத்துக்கொண்டு கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள். மாநகரப்பேருந்துகளில் சாதாரண பேருந்துகளில் M என்று எழுதிவிட்டு மினிமம் கட்டணமாக 3ரூபாய் என்பது இன்றிலிருந்து 2ரூபாயாக குறைத்திருக்கிறது
தமிழகஅரசு.விரைவுப்பேருந்துகளுக்கும் இதே மினிமம் கட்டணம் தான்.... சொகுசுப்பேருந்துகளில் எப்படி என்று தெரியவில்லை.....

தொலைதூரப்பேருந்துகளில் கட்டணத்தை குறைத்தார்களா? என்பது தெரியவில்லை//// தெரிஞ்சா யாராவது சொல்லுங்கப்பா..... கட்டணத்தை குறைத்ததுபோல் சொகுசுப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்தால் மக்கள் இன்னும் சந்தோசப்படுவார்கள்...... தேர்தல் வரும்போதாவது அரசுக்கு மக்களின் ஞாபகம் வருகிறதே....... கலைஞர் ஐயா.. இதேபோல் இன்னும் ஏகப்பட்ட அன்றாட மக்கள் பிரச்சினையெல்லாம் இருக்குது...........

ஆனாலும் ஒருவிசயம் புரியவில்லை... கடந்த மூன்று வருடங்களாக கட்டணக்கொள்ளை அடித்துவிட்டு இப்போது வரும் தேர்தலுக்கு மட்டும் அல்லாமல் 2011 சட்டமன்றத்தேர்தலையும் மனதில் வைத்துக்கொண்டு கட்டணத்தை குறைத்த கலைஞர் அரசின் ராஜதந்திரம்......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......பெட்ரோல் டீசல் விலை குறையும்போதும் கலைஞருக்கு இந்த பிரச்சினை பெரிதாக தெரியல... இப்பதான் தெரிஞ்சிருக்கு

இதுக்காகவே தேர்தல் அடிக்கடி வரவேண்டும்..மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீரவேண்டும் கடவுளே...

19 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

தேர்தல் நாடகத்தின் அடுத்த காட்சி ஆரம்பமா? எப்படியோ மக்களுக்கு நன்மை நடந்தா சரி.. ஆனா தேர்தலுக்கு பிறகு ரெண்டு மடங்கு வெலை எத்துவாங்களே.. அப்போ என்ன பண்றதாம்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//இதுக்காகவே தேர்தல் அடிக்கடி வரவேண்டும்..மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீரவேண்டும் கடவுளே...//

அப்படியே எல்லா இடத்துலையும் அண்ணன் தான்த்தலாபதி ஜெ.கே.ஆர் நிக்கனும்னு வேண்டிக்கோங்க

சொல்லரசன் said...

//இதுக்காகவே தேர்தல் அடிக்கடி வரவேண்டும்..மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீரவேண்டும் கடவுளே...//

அப்படியே அடிக்கடி இடைத்தேர்தல் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிகொள்ளவும்

Anonymous said...

வண்ண வண்ண ரீல்கள் வர தான் செய்யும். காண்போம். ரசிப்போம். மே 16 வரை.


இதெல்லாம் மக்கள் கிட்ட இந்த தடவ எடுபடாது.


அம்மாவுக்கு கூடுகிற கூட்டத்தை பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். அம்மாவின் முயற்சி இந்த முறை பலன் அளிக்கும் என்று தான் தெரிகிறது. அ.தி.மு.க. குறைந்த பட்சம் 30 தொகுதிகளையாவது கைப்பற்றும் தி.மு.க. வுக்கு 9 இடங்கள் கிடைக்கலாம்.


தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விரைவில் தமிழகத்தில் சோனிகாந்தி பிரசாரம் செய்ய இருக்கிறhர். இதை வைத்து பார்க்கும் போது தி.மு.க.வுக்கு இடங்கள் கூடுமா? குறையுமா என்பது மக்களுக்கு தான் தெரியும்.

நசரேயன் said...

ஆட்சியை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்

Cable சங்கர் said...

நாங்களே எத்த தின்னா பித்தம் தெளீயும்னு எதையாவது சொல்லிட்டிருக்கோம்.. இதுல இந்த ஜெயலலிதா ஆதரவாளர் அத்திரி வேற...

தராசு said...

// @Cable Sankar said...
நாங்களே எத்த தின்னா பித்தம் தெளீயும்னு எதையாவது சொல்லிட்டிருக்கோம்.. இதுல இந்த ஜெயலலிதா ஆதரவாளர் அத்திரி வேற...//


பயங்கரமா, கன்னா பின்னானு மறுபடியும் மறுபடியும் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Cable Sankar said...
நாங்களே எத்த தின்னா பித்தம் தெளீயும்னு எதையாவது சொல்லிட்டிருக்கோம்.. //

:-))))

ஊர்சுற்றி said...

//நாங்களே எத்த தின்னா பித்தம் தெளீயும்னு எதையாவது சொல்லிட்டிருக்கோம்.. இதுல இந்த ஜெயலலிதா ஆதரவாளர் அத்திரி வேற...//


:))))))

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
தேர்தல் நாடகத்தின் அடுத்த காட்சி ஆரம்பமா? எப்படியோ மக்களுக்கு நன்மை நடந்தா சரி.. ஆனா தேர்தலுக்கு பிறகு ரெண்டு மடங்கு வெலை எத்துவாங்களே.. அப்போ என்ன பண்றதாம்?//

அப்ப என்ன பண்ண முடியும் வழக்கம் போல் புலம்பவேண்டியதுதான்.....நன்றி நண்பா

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
//இதுக்காகவே தேர்தல் அடிக்கடி வரவேண்டும்..மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீரவேண்டும் கடவுளே...//
அப்படியே எல்லா இடத்துலையும் அண்ணன் தான்த்தலாபதி ஜெ.கே.ஆர் நிக்கனும்னு வேண்டிக்கோங்க//

ஆனாலும் நண்பா உனக்கு ரொம்ப ஆசைதான்.......

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
:-))//

என்னண்ணே வெறும் சிரிப்பு மட்டும்தானா????

அத்திரி said...

//சொல்லரசன் said...
//இதுக்காகவே தேர்தல் அடிக்கடி வரவேண்டும்..மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீரவேண்டும் கடவுளே...//
அப்படியே அடிக்கடி இடைத்தேர்தல் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிகொள்ளவும்//

கருத்துக்கு நன்றி சொல்லரசன்

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
அம்மாவுக்கு கூடுகிற கூட்டத்தை பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். அம்மாவின் முயற்சி இந்த முறை பலன் அளிக்கும் என்று தான் தெரிகிறது.//

இப்படி வேறயா?............

//தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விரைவில் தமிழகத்தில் சோனிகாந்தி பிரசாரம் செய்ய இருக்கிறhர்//

திமுக.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

// நசரேயன் said...
ஆட்சியை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்//

ஏன் அண்ணாச்சி இந்த கொலை வெறி......

அத்திரி said...

//Cable Sankar said...
நாங்களே எத்த தின்னா பித்தம் தெளீயும்னு எதையாவது சொல்லிட்டிருக்கோம்//

))))))))))))


.. //இதுல இந்த ஜெயலலிதா ஆதரவாளர் அத்திரி வேற...//

மக்கள் பிரச்சினையை சொன்னா அதிமுக ஆளா?? நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

//தராசு said...
// @Cable Sankar said...
நாங்களே எத்த தின்னா பித்தம் தெளீயும்னு எதையாவது சொல்லிட்டிருக்கோம்.. இதுல இந்த ஜெயலலிதா ஆதரவாளர் அத்திரி வேற...//
பயங்கரமா, கன்னா பின்னானு மறுபடியும் மறுபடியும் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்//

முடியல அண்ணே அவ்வ்வ்வ்வ்வ்வ்......

அத்திரி said...

//T.V.Radhakrishnan said...
//Cable Sankar said...
நாங்களே எத்த தின்னா பித்தம் தெளீயும்னு எதையாவது சொல்லிட்டிருக்கோம்.. //

:-))))//

வருகைக்கு நன்றி ஐயா.

அத்திரி said...

//ஊர் சுற்றி said...
//நாங்களே எத்த தின்னா பித்தம் தெளீயும்னு எதையாவது சொல்லிட்டிருக்கோம்.. இதுல இந்த ஜெயலலிதா ஆதரவாளர் அத்திரி வேற...//
:))))))
//

வெரும் சிரிப்பு மட்டும் தானா???நன்றி ஊர் சுற்றி