நேற்று மே 16 இரன்டு பேர் அசத்திக்காட்டிடாங்க... என்ன ரெண்டு பேர்ல ஒருத்தர் ரிட்டயர் ஆகி ரொம்ப நாளானாளும் இன்னும் அசத்திக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் சமீபத்தில் தான் ரிட்டயர்டு ஆனார்.... இருவரும் வெவேறு துறைகள் என்றாலும் இன்னும் கலக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸின் மேத்யூஹைடன்...
இதுவரைக்கும் 12 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியுள்ளது. 7 போட்டிகளில் ஜெயித்துள்ளது. இந்த அணி ஜெயிப்பதற்கு முதற்காரணம் ஹைடன் தான்... தன்னுடைய அசாதரணமான பேட்டிங் மூலம் பல மேட்ச்கள் வெற்றி பெற்றுள்ளது.. நேற்றும் அப்படித்தான். முதலில் ஆடிய மும்பை இந்தியன் அணி 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி ,,, முதல் பந்திலேயே பார்த்திவ் படேல் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்ட கடைசி வரைக்கும் களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதும் பெற்றார் மேத்யூஹைடன்.....
இரண்டாமவர் நம்ம முதல்வர் கலைஞர்தான்.... அவரின் அரசியல் வாழ்க்கையில் பிரச்சாரம் பண்ணாத ஒரே தேர்தல் இதுதான்..... திருச்சி, சென்னையில் மட்டுமே பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்...அவர் பிரச்சாரம் பண்ணாதது அம்மாவுக்கு கொஞ்சம் வசதியா போச்சி.... கலைஞரின் உடல்நிலையை சுட்டிக்காட்டி பிரச்சாரத்தின் போது எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசினார் அம்மா..... ஆனாலும் இந்த 85 வயது சிறுத்தை தளரவில்லை..... முக்கியமா இலங்கைப்பிரச்சினையை வைத்து எதிரணியினர் போட்ட கணக்கை மக்கள் தீர்ப்பின் மூலம் பதில் சொல்லிவிட்டார் இந்த85 வயது இளைஞன்...... 1ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச தொலைக்காட்சி பெட்டி போன்ற திட்டங்கள் தான் இவரை கரையேற்றியது என்றால் மிகையாகாது......... மொத்தத்தில் இந்த வயதிலும் அசத்தி காட்டிவிட்டார் கலைஞர்....... போன மக்களவைத்தேர்தலைவிட வெற்றி பெற்ற வாக்குகள் வித்தியாசத்தை மனதில் வைத்து ஆட்சி செய்தால் நலமாக இருக்கும்.
டிஸ்கி: அசத்திய சிங்கம் என்றுதான் போடலாம் என்றிருந்தேன்... ஆனால் சிங்கம் சோம்பேறி மிருகமாம்,... அதனாலதான் இந்த தலைப்பு
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
10 comments:
நல்ல டிஸ்கி... :)))
:-))
எல்லா ஊர் மக்களுக்கும் அடிப்படைத்தேவை உணவு,உடை,உறைவிடம்,சுதந்திரம். கலைஞருக்கு வாக்களித்தால் மட்டுமே இங்குள்ள தமிழர்களுக்கு இவை கிடைக்கும்.இங்குள்ள தமிழர்கள் சுதந்திரமாக இருந்தால் மட்டுமே ஈழ தமிழனின் மானம் காக்க முடியும். உணர்ச்சி வசப் பட்டு சொதப்புபவர்களை மக்கள் புறக்கணித்து விட்டனர். தமிழன் தெளிவாகத்தான் இருக்கிறான். ஈழப் பிரச்சனைக்கு நல்ல தீர்வினை கலைஞர் கொடுப்பார். ஸ்டண்ட் அடித்தவர்களுக்காக அவரும் ஸ்டண்ட் அடித்தார். ஆனால் அவரால் மட்டுமே தீர்வு சாத்தியம்
மேத்யூ ஹைடனையும் முதல்வரையும் எப்படிங்க முடிச்சு போட்டீங்க..
உக்காந்து யோசிப்பீங்களோ !!!!
நைஸ்.. அலசல்...
ஹேடனை வச்சுத்தான் இந்த வருஷம் சென்னை அணி பொழப்பே ஓடிக்கிட்டு இருக்கு நண்பா.. அப்புறம் கலைஞர்.. இனியாவது அவர் நிம்மதியா வழி விட்டு ஒதுங்கலாம்.. ஸ்டாலினை முன்னிறுத்த இதுதான் சரியான நேரம்
சுறுசுறுவில் கலைஞர் எறும்புதான்.. ஆகவே சிங்கமென்பதை விடவும் சிறுத்தை பொருத்தம்.
// ஊர்சுற்றி said...
நல்ல டிஸ்கி... :)))//
நன்றி ஊர்சுற்றி
//Anonymous said...
ஈழப் பிரச்சனைக்கு நல்ல தீர்வினை கலைஞர் கொடுப்பார். ஸ்டண்ட் அடித்தவர்களுக்காக அவரும் ஸ்டண்ட் அடித்தார். ஆனால் அவரால் மட்டுமே தீர்வு சாத்தியம்//
பார்க்கலாம் பெயரில்லாதவரே
// அ.மு.செய்யது said...
மேத்யூ ஹைடனையும் முதல்வரையும் எப்படிங்க முடிச்சு போட்டீங்க..
உக்காந்து யோசிப்பீங்களோ !!!!//
ஹிஹிஹிஹி-------- நன்றி செய்யது
// Cable Sankar said...
நைஸ்.. அலசல்...//
வாங்க அண்ணே
//கார்த்திகைப் பாண்டியன் said...
ஹேடனை வச்சுத்தான் இந்த வருஷம் சென்னை அணி பொழப்பே ஓடிக்கிட்டு இருக்கு நண்பா.. அப்புறம் கலைஞர்.. இனியாவது அவர் நிம்மதியா வழி விட்டு ஒதுங்கலாம்.. ஸ்டாலினை முன்னிறுத்த இதுதான் சரியான நேரம்//
கண்டிப்பா ஸ்டாலினுக்கு வழி விடலாம்.......... ஆனா............ம்ஹும்.. நன்றி நண்பா
//ஆதிமூலகிருஷ்ணன் said...
சுறுசுறுவில் கலைஞர் எறும்புதான்.. ஆகவே சிங்கமென்பதை விடவும் சிறுத்தை பொருத்தம்.//
வாங்க அண்ணே நன்றி
Post a Comment