Wednesday, May 6, 2009

வரும்ம்ம்ம்ம்ம்..........ஆனா வராது.........

தமிழகத்தேர்தல் களம் இந்த மாதம் ஆரம்பித்த அக்னி வெயிலைவிடவும் ரொம்ப சூடா போய்க்கிட்டு இருக்கு...நமது முதல்வர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் திமுகவில் பிரச்சாரத்தில் தொய்வு காணப்பட்டாலும் அதை அமைச்சர் அன்பழகனும்,தளபதி ஸ்டாலினும் அதை ஈடுக்கட்டும் வகையில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக தலைவி இந்த முறை ரொம்பவும் சுறுசுறுப்பா ஆரம்பிச்சி முடிக்கும் தருவாயில் உள்ளார்..... தேமுதிக தலைவர் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.


முன்பிருந்த மாதிரி சுவர் விளம்பரங்களை காண முடிவதில்லை... அதை ஈடுகட்டும் வகையில் டிஜிட்டல் போர்டுகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. தொலைக்காட்சியின் மூலம் தேர்தல் விளம்பரங்கள் தான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிறது.. ஆளுங்கட்சி தன்னுடைய சாதனைகளை சொல்லியும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டியும் வரும் விளம்பரங்கள் செம சூடு..... இப்போது அப்படி வந்த விளம்பரங்கள் சில


முதலில்ஆளும்கூட்டணியின்விளம்பரங்கள்...காங்கிரசுக்கட்சியின்வலிமையான பாரதம் விளம்பரம்... இதுல சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை.



ஆளும் திமுக தனது ஆட்சியின் சாதனைகளாக இலவச கேஸ் அடுப்பு, இலவச தொலைக்காட்சி,மருத்துவ காப்பீடு திட்டம், சத்துணவில் முட்டை போன்றவைகள் விளம்பரங்களாக வருகின்றன..இதில் மருத்துவ காப்பீடு விளம்பரத்தை முதலில் பார்க்கும் போது நகைக்கடை விளம்பரமோ என்று தோன்றியது..நல்லாவே செலவு செஞ்சிருக்காங்க இந்த விளம்பரங்களுக்காக...... இந்த விளம்பரங்கள் எந்த அளவுக்கு எடுபடும்?? பாக்கலாம்.


எதிர்க்கட்சியான அதிமுகவின் விளம்பரங்கள் திமுக ஆட்சியின் குறைபாடுகளை நக்கல் நையாண்டியோடு வருகிறது..... இலவச நிலம், மின்வெட்டு,ஒகேனெக்கல் திட்டம், விலைவாசி உயர்வு........ இவற்றில் இலவச நிலம் தொடர்பான விளம்பரம் கொஞ்சம் ஓவரா தெரியுது..... இதில் நக்கல் நையாண்டியில் டாப்பாக இருப்பது ஒகேனெக்கல் விளம்பரம்தான்....... இந்த விளம்பரத்துக்கு அவ்வளவு செலவெல்லாம் கிடையாது... ஒன்லி கட்டிங் மற்றும் ஒட்டிங் தான்........ முதலில் நம் முதல்வர் எப்பாடுபட்டாவது இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் எனக்கூறியது முதல் காட்சியாகவும், கர்நாடக தேர்தலுக்கப்புறம் ஒரு நல்ல முடிவெடுக்கப்படும் எனக்கூறியது இரண்டாவது காட்சியாகவும் வ்ருகிறது....... இதற்கு அடுத்த காட்சியாக திரையில் பாதி கலைஞர் கூறியதும்,அடுத்த பாதி தொட்டால் பூ மலரும் படத்தில் வடிவேலுவும்,என்னத்த கண்ணையாவும் பேசும் காமெடிக்காட்சியான வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா வராது என்ற வசனமும் சேர்ந்து கிண்டலும் நக்கலுமா..சிரிச்சி வயிறுதான் வலிக்குது.. யாராவது சொல்லுங்கப்பா..ஒகேனெக்கல் திட்டம் எந்த லெவலில் இருக்குதுன்னு.


அன்னை சோனியாவின் பிரச்சாரக்கூட்டம் முதல்வரின் உடல்நிலையை காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது... பிரச்சார தேதியை அறிவிக்கும் போது முதல் மருத்துவமனையில் தான் இருந்தார்..... இடையில் என்ன நடந்ததோ....


நம்ம புரச்சி தலைவி அம்மா கலைஞரின் உடல்நிலையை கிண்டலடித்து பேசியிருக்கிறார். மக்களை சந்திக்க பயந்து மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டதாக சொல்கிறார்.........நாளைக்கு தனக்கும் வயதாகும் இப்படி ஒரு நிலைமை வருமே யோசித்திருப்பாரா அம்மையார்.......

21 comments:

அ.மு.செய்யது said...

கலைஞர் டிவில தேர்தல் விளம்பரம் போட்ற அதே நேரத்துல,ஜெயா டிவில டீக்கடை பெஞ்சு போட்டு தாக்கறாங்க பாத்தீங்களா ?

முரளிகண்ணன் said...

அசத்தல் அத்திரி

நசரேயன் said...

கலக்கிடீங்க

ஆதவா said...

கலைஞர் டிவியில் ஒரு விளம்பரம்... எல்லோரும் சைக்கிளில் வந்து பாடுவார்களே!! நான் கூட வீட்டில் சொன்னேன்... என்ன, பெயிண்ட் விளம்பரமா? (பின்புற சுவரெல்லாம் புது பெயிண்ட் அடித்ததைப் போன்று இருந்தது) என்றேன். பிறகுதான் தெரிந்தது அது ஒரு தேர்தல் விளம்பரம்.

இன்னொன்று கல்யாண வீட்டில் பாடுவதாக இருக்கும்... இசை, வார்த்தையமைப்பு எல்லாமே பழைய தேர்தல் பாடல்களிலிருந்து முன்னுக்கு நிற்கிறது!! ஃபைன்... எவ்வளவு தூரம் ஒர்கவுட் ஆகும்னு சொல்ல முடியாது.

அம்மாவின் கிண்டல் கொஞ்சம் ஓவர்தான்.... எனக்கு என்னவோ, இவங்கதான் வருவாங்கன்னு தோணுது!!! எங்க ஊர் (திருப்பூர்) அம்மாவுக்குத்தான்... அது கன்ஃபர்ம்.. ஆப்போஸிட் ரொம்ப வீக்'காக இருக்காங்க..

Anonymous said...

தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க. அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆங்கில பத்திரிக்கை கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ்-4, தி.மு.க.-7, அ.தி.மு.க..-27, பாரதீய ஜனதா-1(கன்னியாகுமரி அல்லது ராமநாதபுரம்).
நண்பா இதில கேப்டனுக்கு இடமில்லையே?


எனக்கு என்னமோ தி.மு.க.விக்கு 4 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும், விடுதலைச்சிறுத்தைகள் 1 இடமும் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். மீதி இருக்கிற 32 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். பாரதீய ஜனதாவுக்கு ஒரு இடம் உறுதி.

Cable சங்கர் said...

அருமையான பதிவு.. அத்திரி.. அப்புறம் ஒண்ணு ஜெயலலிதா கலைஞரை கிண்டல் பண்ணினதை பத்தி.. என்னதான் ஆதிமுக மறைமுக ஆதரவாளராய் இருந்தாலும்.. தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்ங்கறாப்புல மனசுல இருக்கிறது வந்திருச்சு.. :)

கார்க்கிபவா said...

அரசியல்ல விட்டு வெளில வர மாட்டீங்களா சகா?

தங்கமீன் said...

//
இதில் மருத்துவ காப்பீடு விளம்பரத்தை முதலில் பார்க்கும் போது நகைக்கடை விளம்பரமோ என்று தோன்றியது..நல்லாவே செலவு செஞ்சிருக்காங்க இந்த விளம்பரங்களுக்காக...... இந்த விளம்பரங்கள் எந்த அளவுக்கு எடுபடும்?? பாக்கலாம்
//

எனக்கே தெரியாமே விளம்பரமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

இங்க டிவி பார்க்க முடியாம இருக்கேன்.. இதுல யாரு யாரு என்ன விளம்பரம் பண்றாங்கன்னு ஒரு பதிவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

அத்திரி said...

// அ.மு.செய்யது said...
கலைஞர் டிவில தேர்தல் விளம்பரம் போட்ற அதே நேரத்துல,ஜெயா டிவில டீக்கடை பெஞ்சு போட்டு தாக்கறாங்க பாத்தீங்களா ?//


பார்த்தேன் செய்யது.... காமெடிதான் போங்க..... நன்றி

அத்திரி said...

//முரளிகண்ணன் said...
அசத்தல் அத்திரி//

வாங்க தல......


//நசரேயன் said...
கலக்கிடீங்க//

வாங்க அண்ணாச்சி

அத்திரி said...

//ஆதவா said...
எவ்வளவு தூரம் ஒர்கவுட் ஆகும்னு சொல்ல முடியாது.//

பார்க்கலாம்

//அம்மாவின் கிண்டல் கொஞ்சம் ஓவர்தான்.... //

ரொம்பவே ஓவர் ஆதவா நன்றி

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க. அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆங்கில பத்திரிக்கை கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ்-4, தி.மு.க.-7, அ.தி.மு.க..-27, பாரதீய ஜனதா-1(கன்னியாகுமரி அல்லது ராமநாதபுரம்).
நண்பா இதில கேப்டனுக்கு இடமில்லையே? //

கேப்டன் ஜெயிக்கிறதுக்கா நிக்கிறார்........ ஓட்டுக்களை பிரிக்கத்தானே........

நன்றி மாப்ளே

அத்திரி said...

//Cable Sankar said...
அப்புறம் ஒண்ணு ஜெயலலிதா கலைஞரை கிண்டல் பண்ணினதை பத்தி.. என்னதான் ஆதிமுக மறைமுக ஆதரவாளராய் இருந்தாலும்.. //

அண்ணே அடங்கவே மாட்டீங்களா?

நன்றி

அத்திரி said...

// கார்க்கி said...
அரசியல்ல விட்டு வெளில வர மாட்டீங்களா சகா?//

கூடிய விரைவில் வெளியே வந்துவிடுகிறேன்..... சகா நன்றி

அத்திரி said...

//நகைக்கடை நைனா said...
//
இதில் மருத்துவ காப்பீடு விளம்பரத்தை முதலில் பார்க்கும் போது நகைக்கடை விளம்பரமோ என்று தோன்றியது..நல்லாவே செலவு செஞ்சிருக்காங்க இந்த விளம்பரங்களுக்காக...... இந்த விளம்பரங்கள் எந்த அளவுக்கு எடுபடும்?? பாக்கலாம்
//எனக்கே தெரியாமே விளம்பரமா?//

நீங்க பாக்கலையா? நன்றி நைனா

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இங்க டிவி பார்க்க முடியாம இருக்கேன்.. இதுல யாரு யாரு என்ன விளம்பரம் பண்றாங்கன்னு ஒரு பதிவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

இன்னும் ஊருக்கு வரவில்லையா?........ நன்றி நண்பா

Thamira said...

வரவர ஓவரா சிந்திக்கிறோம்னு தோணுது.. இதே கமெண்டைப் போடலாம்னுதான் நானும் வந்தேன் கார்க்கி..

தராசு said...

//நாளைக்கு தனக்கும் வயதாகும் இப்படி ஒரு நிலைமை வருமே யோசித்திருப்பாரா அம்மையார்....... //

எதுக்கு, இப்ப எதுக்கு இந்த நடுநிலை வேடம்

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
வரவர ஓவரா சிந்திக்கிறோம்னு தோணுது.. இதே கமெண்டைப் போடலாம்னுதான் நானும் வந்தேன் கார்க்கி..//

வாங்க அண்ணே

அத்திரி said...

//தராசு said...
எதுக்கு, இப்ப எதுக்கு இந்த நடுநிலை வேடம்//

உண்மயச்சொன்னா நடுநிலை வேடமா?? நன்றி அண்ணே