தேமுதிக தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியா??.. இந்த மக்களவை தேர்தல் முடிவை வைத்து ஒரு கணக்கு போட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி கணக்கெல்லாம் இனி எடுபடாது என மக்களே தீர்ப்பு சொல்லிட்டாங்க ( பாமகவுக்கு மக்கள் கொடுத்த அல்வா).... இந்த தேர்தலுக்கும் முன் கூட்டணி குறித்து தேமுதிகவில் ஒரு குழப்ப நிலையே நீடித்தது.... ஒரு புறம் அதிமுகவுடனும், மறுபுறம் காங்கிரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.கடைசியில் தேமுதிக தலைவர் மக்களுடனும்,தெய்வத்துடனும் தான் கூட்டணி என்று சொல்லி தப்பித்துவிட்டார்.. (காங்கிரசு யோசனைப்ப்டி தனித்து நிற்க பொட்டி கைமாறியதாக கேள்வி).....
இன்றைக்கு திமுக அரசாங்கம் மைனாரிட்டி ஆக இருப்பதற்கும் தேமுதிகவே காரணம்...கடந்த சட்டமன்றதேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி. தமிழ்நாட்டு தொகுதிகளில் கிட்டத்தட்ட 25ல் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக உள்ளது.... 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெஇத்த தொகுதிகளை கணக்கில் எடுக்கவில்லை...1லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகளில் தேமுதிகவாலேயே தோற்றுள்ளன கட்சிகள்.
தேமுதிகவால் அதிமுக கூட்டணி தோற்ற தொகுதிகள்
1. மத்திய சென்னை 8.சிவகங்கை
திமுக -- 285783 காங்கிரசு--334348
அதிமுக -- 252329 அதிமுக --330994
தேமுதிக -- 38959 தேமுதிக --60084
2.காஞ்சிபுரம் 9.தேனி
காங்கிரசு -- 330237 காங்கிரசு--340575
அதிமுக -- 317134 அதிமுக--334273
தேமுதிக-- 103580 தேமுதிக--70908
3.கிருஷ்ணகிரி 10.நெல்லை
திமுக -- 335977 காங்கிரசு --274932
அதிமுக -- 259379 அதிமுக -- 253629
தேமுதிக -- 97546 தேமுதிக-- 94562
4.திண்டுக்கல் 11.திருப்பெரும்புதூர்
காங்கிரசு -- 361545 திமுக -- 352641
அதிமுக -- 307198 பாமக -- 327605
தேமுதிக-- 100788 தேமுதிக-- 110442
5.கடலூர் 12. கள்ளக்குறிச்சி
காங்கிரசு-- 319881 திமுக -- 363601
அதிமுக -- 296745 பாமக -- 254993
தேமுதிக -- 93161 தேமுதிக--132223
6.வட சென்னை 13.நாகை
திமுக -- 281055 திமுக--369915
கம்யூனிஸ்ட் -- 261902 கம்யூனிஸ்ட்--321953
தேமுதிக -- 66375 தேமுதிக -- 51376
7.விருதுநகர்
காங்கிரசு -- 307187
மதிமுக -- 291423
தேமுதிக -- 125229
தேமுதிகவால் திமுக கூட்டணி தோற்ற தொகுதிகள்
1.திருவள்ளூர் 5.தென்சென்னை
அதிமுக -- 368294 அதிமுக-- 308567
திமுக -- 336621 திமுக -- 275632
தேமுதிக -- 110442 தேமுதிக -- 67291
2.கரூர் 6. திருச்சி
அதிமுக -- 380461 அதிமுக -- 298710
திமுக --- 331312 காங்கிரசு -- 294375
தேமுதிக -- 51163 தேமுதிக -- 61742
3.தென்காசி 7. மயிலாடுதுறை
கம்யூனிஸ்ட் -- 281174 அதிமுக-- 364089
காங்கிரசு -- 246497 காங்கிரசு-- 327235
பு.த -- 116685 தேமுதிக --44754
தேமுதிக -- 75741
4.சேலம் 8.விழுப்புரம்
அதிமுக -- 380460 அதிமுக --306826
காங்கிரசு -- 333969 வி.சி -- 304029
தேமுதிக -- 120325 தேமுதிக--127476
தமிழகத்தின் மேற்கு மண்டல தொகுதிகளான ஈரோடு,திருப்பூர்,கோவை, பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்ற பேரவை கணிசமான வாக்குகள் பெற்று ஆளும் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேமுதிக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க இயலாத சக்தியாக இருக்கும் என்பதையே காட்டுகிறது....
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
17 comments:
\\தேமுதிக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க இயலாத சக்தியாக இருக்கும் என்பதையே காட்டுகிறது.... \\
இது மற்ற கட்சிகளுக்கு கஷ்டம் தான்.
நம்ம நிலை என்ன அண்ணேன் ...
இவரும் ஒரு 'கழக' ஆட்சியாளர்தானா ...
கொங்கு ஏரியாவைப் பொருத்த வரை கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை சக்கை போடு போட்டு இருக்கிறது நண்பா.. இது ஆபத்தின் அறிகுறி.. ஏற்கனவே பா. ம.க என்னும் ஜாதிக்கட்சி பண்ணும் அலும்புகள் நமக்குத் தெரியும்.. அதே போல சட்டசபை தேர்தலில் தே.மு,தி,க கட்சியும் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
கடந்த சட்டசபை தேர்தலில் 8சதம் ஓட்டுக்களைப் பெற்ற தே.மு.தி.க இம்முறை 10 சதம் பெற்றிருக்கிறது. இதுவே அவர்களுக்கொரு சாதனைதான்... கிட்டத்தட்ட ஒருலட்சம் ஓட்டுகள் பெற்ற வேட்பாளர்கள் உண்டு என்பது உங்களுக்கே தெரிந்த விஷயம்
கொங்கு பேரவை இங்கே இளைஞர்கள் முன்னணியில் முன்னேறி வருகிறது. எங்கு பார்த்தாலும் அவர்களின் கட்சிக் கொடிகள்தாம்... நீங்கள் சொன்ன நான்கு தொகுதிகளிலும் தே.மு.தி.கவை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாருங்க அத்திரி.. தேர்தல் முடிவு என்பது அதிக மக்கள் விரும்பாத ஒருவரே வெற்றிபெறுவதாக அர்த்தம்... உதாரணத்திற்கு நம்ம விஜயகாந்த் தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்,அங்கே
திமுக -- 363601
பாமக -- 254993
தேமுதிக--132223
மூன்றரை லட்சம் மக்களின் ஆதரவோடு ஜெயித்தது தி.மு.கதான். . ஆனால், 3.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தி.மு.கவை ஆதரிக்கவில்லை!!!!
ஆக, நம்ம இந்திய அரசியல் தேர்தலெல்லாம் ஒரு தேர்தலே அல்ல!!! மக்கள் விரும்பாத ஆட்சிதான் மக்களாட்சியாக நடைபெற்றூ வருகிறது!!
kandippaga thavirkka mudiatha sakthithaan
anaal athuvarai katchiyai thaakupidikka vendum :)
//திமுக -- 363601
பாமக -- 254993
தேமுதிக--132223
மூன்றரை லட்சம் மக்களின் ஆதரவோடு ஜெயித்தது தி.மு.கதான். . ஆனால், 3.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தி.மு.கவை ஆதரிக்கவில்லை!!!!
ஆக, நம்ம இந்திய அரசியல் தேர்தலெல்லாம் ஒரு தேர்தலே அல்ல!!! மக்கள் விரும்பாத ஆட்சிதான் மக்களாட்சியாக நடைபெற்றூ வருகிறது!!
//
100% சரியானது
காலை நாளிதழ் செய்தியைப் பார்த்து எங்கள் வீட்டிலும் இதேதான் பேசிக்கொண்டிருந்தோம். நல்ல அலசல். ஆதவா சொன்ன மாதிரி மைனாரிட்டி வின்ஸ். Strange.
definitely in future KONGUNADU MUNNETRA PERAVAI places a major role in politics
by
Kongu Anandhan
www.konguperavai.com
www.kongumedia.blogsot.com
விஜயகாந்துக்கு விழும் ஓட்டுக்கள் , தி.மு.க.,மற்றும் அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் மட்டுமே. அதாவது, மாற்றம் விரும்புபவர்கள். வி.காந்த், ஏதாவது கூட்டணியில் சேர்ந்தால் அவரின் ஓட்டு வங்கி அம்பேல்.
நிச்சயமாய் தேமுதிக..2016ல் ஆட்சியமைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை அத்திரி.. என்ன உங்க கட்சிதான் தோத்துருச்சு.. :(
Kongu Peravai sure to get more vote next assembly election
தேமுதிக இன்னோரு ம.தி.மு.க.
இதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். அன்றே சொன்னான் அப்துல்லா என ஒருநாள் நீங்கள் சொல்ல உதவும்.
பி.கு :
ஏற்கனவே திமுக 29 இடத்தில் ஜெயிக்கும்னு சொல்லிட்டு
வாங்கிக்கட்டிக்கிட்ட வசவே நிறைய ஸ்டாக் இருப்பதால் இதைப் படிக்கும் விஜயகாந்த் அபிமானிகள் மற்றும் அனானிகள் என்னை தயவு செய்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிக்க வேண்டாம். உங்கள் கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு.
:) yes
//நட்புடன் ஜமால் said...
இது மற்ற கட்சிகளுக்கு கஷ்டம் தான்.
நம்ம நிலை என்ன அண்ணேன் ...
இவரும் ஒரு 'கழக' ஆட்சியாளர்தானா ...
//
நம்ம நிலை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... ஆட்சியை அவருக்கு கொடுத்து பாத்தா தெரிஞ்சிடும் கழகமா இல்ல வேறயா? நன்றி ஜமால்
// கார்த்திகைப் பாண்டியன் said...
கொங்கு ஏரியாவைப் பொருத்த வரை கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை சக்கை போடு போட்டு இருக்கிறது நண்பா.. இது ஆபத்தின் அறிகுறி.. ஏற்கனவே பா. ம.க என்னும் ஜாதிக்கட்சி பண்ணும் அலும்புகள் நமக்குத் தெரியும்.. அதே போல சட்டசபை தேர்தலில் தே.மு,தி,க கட்சியும் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை//
சரியாச் சொன்ன நண்பா...
//ஆதவா said...
//மூன்றரை லட்சம் மக்களின் ஆதரவோடு ஜெயித்தது தி.மு.கதான். . ஆனால், 3.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தி.மு.கவை ஆதரிக்கவில்லை!!!! //
இதுதான் இந்திய ஜனநாயகம்.........வாழுக.......... நன்றி ஆதவா
//DHANS said...
kandippaga thavirkka mudiatha sakthithaananaal athuvarai katchiyai thaakupidikka vendum :)//
நன்றி தன்ஸ்
// SUBBU said
100% சரியானது//
நன்றி சுப்பு
//வித்யா said...
காலை நாளிதழ் செய்தியைப் பார்த்து எங்கள் வீட்டிலும் இதேதான் பேசிக்கொண்டிருந்தோம். நல்ல அலசல். ஆதவா சொன்ன மாதிரி மைனாரிட்டி வின்ஸ். Strange.//
. நன்றி வித்யா
//Anonymous said...
definitely in future KONGUNADU MUNNETRA PERAVAI places a major role in politics
by
Kongu Anandhan//
பாக்கலாம்..ஆனந்தன் நன்றி
// தேனீ - சுந்தர் said...
விஜயகாந்துக்கு விழும் ஓட்டுக்கள் , தி.மு.க.,மற்றும் அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் மட்டுமே. அதாவது, மாற்றம் விரும்புபவர்கள். வி.காந்த், ஏதாவது கூட்டணியில் சேர்ந்தால் அவரின் ஓட்டு வங்கி அம்பேல்.//
கருத்துக்கு நன்றி சுந்தர்
//Cable Sankar said...
நிச்சயமாய் தேமுதிக..2016ல் ஆட்சியமைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை அத்திரி.. என்ன உங்க கட்சிதான் தோத்துருச்சு.. :(//
எங்க கட்சி மூனு இடத்துல தோத்துருச்சு அண்ணே
//sankar said...
Kongu Peravai sure to get more vote next assembly election//
இவர்கள் ஓட்டை பிரிக்கும் சக்தியாகத்தான் இருக்கிறார்கள் நன்றி சங்கர்
// எம்.எம்.அப்துல்லா said...
தேமுதிக இன்னோரு ம.தி.மு.க.
இதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். அன்றே சொன்னான் அப்துல்லா என ஒருநாள் நீங்கள் சொல்ல உதவும்.//
அண்ணே உங்க அரசியல் அறிவுக்கடலுக்கு முன் நான் ரொம்ப சின்ன பையன்... நன்றி அண்ணே
தம்பி..
முன்னாடியே பார்த்திருந்தன்னா இதுல இருந்தே சுட்டிருப்பனே..!
Post a Comment