ரெண்டு வருசம் முன்னாடி வரைக்கும் சன்னுக்கு எந்த குழப்பமும் கிடையாது....எப்ப கலைஞர் வந்ததோ அப்பொழுதில் இருந்து ஆரம்பித்தது சன்னுக்கு தலைவலி....இதயம் இனித்த பிறகும் இது தொடர்வதுதான் ஒரு உள்குத்து..
கலைஞர் டிவி வருவதற்கு முன்னாடி வரைக்கும் சன் டிவி வார இறுதி புரோகிராமுக்கு இந்த அளவுக்கு மண்டை காய்ந்தது கிடையாது..முதலில் விஜய் டிவி ஜோடி நம்பர் மற்றும் கலக்கப்போவது யாரு மூலமாக வார இறுதி நாட்களில் சன்னை பின்னுக்குத்தள்ள ஆரம்பித்தது.... இந்த சூழ்நிலையில் கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட சன் டிவியின் ஜெராக்ஸ் போல் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டது கலைஞரில்.....முதலில் சன்னுக்கு ஆப்பு வைத்த கலைஞர் டிவியின் மானாட மயிலாட....... சன்னும் அதற்கேற்றார்போல் மஸ்தானா மஸ்தானா வை போட்டிக்கு கொண்டு வந்தது............... ஆனால் மானாட மயிலாடவில் இருந்த சரக்கு மஸ்தானாவில் இல்லை..
தாமதித்து விழித்துக்கொண்ட சன் டிவி ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் மானாடவிற்கு சரியான போட்டியை கொடுத்தது.... ஆனால் மானாட மயிலாட நிகழ்ச்சி கிட்டத்தட்ட 3மணி நேரம் ஒளிபரப்பாகியது சன்னுக்கு கொஞ்சம் பின்னடைவு...ஹாலிவுட் படம்னாலே ஒன்றரை மணி நேரம்தான்......... மீதி உள்ள நேரத்திற்கு?????..................யோசித்து பார்த்து கடைசியில் அம்மாவே சன்னுக்கு கைகொடுக்க ஆரம்பித்துவிட்டாள்...
சன்னின் எல்லா நெடுந்தொடர்களுக்கும் கடும் போட்டியை கொடுத்த கலைஞர் டிவியின் ஒரு சில நெடுந்தொடர்கள் காணாமல் போய்விட்டன... மீண்டும் கலைஞர் டிவி டான்ஸே சரணம் என்ற வழியில் சனி இரவு ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஆரம்பித்து ஓட்டிக்கொண்டிருக்கிறது...சன் டிவியிலோ அதிரடி சிங்கர் முடிந்ததும் மீண்டும் அம்மாவே சரணம் என்கின்ற வழியில் சனி இரவு அம்மன் நெடுந்தொடரை ஆரம்பித்து விட்டார்கள்.
நெடுந்தொடர்கள் கலைஞர் டிவியில் எடுபடாத நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை இரவு அதிரடி திரைப்படங்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்....ஆனால் கலைஞர் டிவியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்கள் திரையரங்கில் நூறு நாட்கள் ஓடியதோ இல்லையோ நூறுதடவை தொலைக்காட்சியில் காண்பித்தாகிவிட்டது..........
எல்லாமே தமிழக மக்களுக்காகத்தான்......... நல்லா எஞ்சாய் பண்ணுங்க.......
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
15 comments:
இரண்டு சேனலும் ஒன்னுதான்!
சும்மா பிலீம் காட்டுவானுங்க...
நமக்கு கொண்டாட்டமா இருந்தா சரிதான்!!
இது வரை ஒத்தையா கொள்ளையடிச்சானுக சன் டி.வி. க்காரங்க.
இப்போ கலஞர் குடும்பம் முழிச்சுக்கிட்டு கொள்ளையிலே பங்குக்கு வந்துட்டாங்க.
அதுகேத்தா மாதிரி, தயாநிதியிடமிருந்து தகவல் / பொழுது போக்குத்துறையயும் புடுங்கியாச்சு.
கலஞர் டி.வி காஷ்மீர் வரைக்கும் பாயலேன்னா பாருங்க.
சரியான போட்டிதான்
இரண்டு சேனல்களும் இப்போது பேசி வைத்து கொண்டு படங்களை வாங்குகிறார்கள்.. இவர்களீன் சண்டையால் வாழ்ந்த திரைபட தயாரிப்பாளர்கள்.. இப்போது நொந்து போய் இருக்கிறார்கள். அத்திரி..
டி.வி.சேன்னல்களை நன்கு அல்சி இருக்கிறீர்கள்,அத்திரி.
//கலையரசன் said...
இரண்டு சேனலும் ஒன்னுதான்!
சும்மா பிலீம் காட்டுவானுங்க...//
நன்றி கலையரசன்
//ரங்குடு said...
//கலஞர் டி.வி காஷ்மீர் வரைக்கும் பாயலேன்னா பாருங்க.//
கலைஞர் டிவி ஐரோப்பா வரைக்கும் போயிடிச்சிங்கோ..நன்றி ரங்குடு
//நசரேயன் said...
சரியான போட்டிதான்//
வாங்க அண்ணாச்சி
//Cable Sankar said...
இரண்டு சேனல்களும் இப்போது பேசி வைத்து கொண்டு படங்களை வாங்குகிறார்கள்.. இவர்களீன் சண்டையால் வாழ்ந்த திரைபட தயாரிப்பாளர்கள்.. இப்போது நொந்து போய் இருக்கிறார்கள். அத்திரி..//
அண்ணே எல்லாமே மக்களின் சந்தோசத்துக்குதான்........நன்றி
//ஷண்முகப்ரியன் said...
டி.வி.சேன்னல்களை நன்கு அல்சி இருக்கிறீர்கள்,அத்திரி.//
நன்றி ஐயா..
இவங்க அடிக்கிற கூத்தால மக்களுக்கு நல்லா பொழுது போனா சரி நண்பா..
//"கலைஞரை காப்பாத்தும் டான்ஸ் -- சன்னை காப்பாத்தும்(அம்மா) ஆத்தா"//
மக்களை யாருண்ணே காப்பாத்தறது,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நம்ம மக்களுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை... நல்லாவே என்சாய் பண்ணுவாங்க!!! நானும்தான்... )))
//கார்த்திகைப் பாண்டியன் said...
இவங்க அடிக்கிற கூத்தால மக்களுக்கு நல்லா பொழுது போனா சரி நண்பா..//
சரிதான் நண்பா. நன்றி
//தராசு said...
//"கலைஞரை காப்பாத்தும் டான்ஸ் -- சன்னை காப்பாத்தும்(அம்மா) ஆத்தா"//மக்களை யாருண்ணே காப்பாத்தறது,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அண்ணே தமிழ்நட்டுல இருந்துட்டு இந்த கேள்வியக்கேக்கலாமா??
//ஊர்சுற்றி said...
நம்ம மக்களுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை... நல்லாவேஎன்சாய்பண்ணுவாங்க!!!//நானும்தான்... )))
நன்றி ஊர்சுற்றி
பொழுது போக்க வேறு எதுவும் கிடைக்காதவரையில் டிவியே துணை..
டிவி துணையாக இருக்கின்றவரையில் சேனல்காரர்கள் நன்கு கல்லா கட்டலாம்..!
நான் உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்..
Post a Comment