அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இன்றைக்கு எனக்கு வேலை நாள் என்பதால் ஒரு சபதம் எடுத்தேன்.... பள்ளிக்கரணையில் இருந்து தரமணிக்கு சாதாரணப்பேருந்தில்தான் போக வேண்டும் என்பது.. முதல் ஷிப்ட் என்பதால் காலை 6மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்...05:15மணியிலிருந்து காத்திருந்தேன் சாதாரண பேருந்துக்காக...இன்னைக்கு ஒரு நாளாவது எக்ஸ்ட்ரா காசு கோடுக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.05:30மணிக்குள் 4 பேருந்துகள் வந்தன. ஒன்று கூட சாதாரண பேருந்துகள் இல்லை..05:40க்குதான் வந்தது.05:50க்கு விஜய நகரில் இறங்கினேன்.காத்திருந்தேன் இங்கேயும் அதே கதைதான்..... 10நிமிடம் காத்திருந்து வேற வழியில்லாமல் சொகுசுப்பேருந்தில் ஏறினேன்.. என் சபதத்தை முறியடித்த கலைஞர் அரசு வாழ்க....
போன வருடத்தில் கிட்டத்தட்ட 120படங்கள் வெளியாகியிருக்கின்றன..இதில் நான் பார்த்த படங்கள்... அயன்,வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்,மாயாண்டி குடும்பத்தார்,பேராண்மை,உன்னைப்போல் ஒருவன் இதில் அயன் இந்த வருட பிளாக்பஸ்டர் படம்.......அதிவேகமான திரைக்கதை, பாடல்கள் என கலக்கியது.
அடுத்ததாக வெண்ணிலா கபடிக்குழு,பசங்க,நாடோடிகள்........ இந்த மூனு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை.....இயல்பான திரைக்கதை......கதைதான் இந்த படங்களில் நாயகன். கடேசியா இந்த மூனு படங்களிலும் சைட் அடிக்கிற விசயங்கள் அருமையா இருக்கும்.இப்பவெல்லாம் யாரும் பொண்ணுங்க பின்னாடி சைட் அடித்து சுற்றுவதில்லை..ஏன்னா இன்டர்நெட்,ஈமெயில் செல்போன்,மெசேஜ் அப்படினு பசங்களும் பொண்ணுங்களும் ரொம்ப ஸ்பீடா இருக்காங்க.............
உன்னைப்போல் ஒருவன் -- பதிவுலகில் இந்த வருடம் அதிகம் விமர்சிக்கப்பட்ட படம்...இந்துயிசம், அந்த இசம் ஆயாயிசம்னு துவைச்சி காயப்போட்டாலும்......ஒன்றரை மணிநேரத்துக்குள் படம் ஜெட்டாகபறக்கிறது.......பேராண்மை முதல் பாதி மண்டை காய வைத்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையும், சண்டைக்காட்சிகளாக படம் பறக்கிறது........
-------------------------------------------------------------------------------------------------------------
அந்தப்பிரபல பதிவரிடம் பேசும்போது என்ன அண்ணே இந்த வருடக்கடைசில (2009)பதிவர் சந்திப்பே வைக்கலியே அப்படினு கேட்டேன்."யோவ் நாங்க எல்லாம் இப்ப ரொம்ப பிசி தினசரி புத்தக வெளியீட்டு விழா, எலக்கிய கூட்டம் அப்படினு போய்க்கிட்டே இருக்கு..நீ என்ன சின்ன புள்ளத்தனாமா இப்படி கேக்குற" அப்படினு ஏறிட்டார்..நானும் இப்ப ரவுடிதான் அப்படின்ற ரேஞ்சில நானெல்லாம் இப்ப எலக்கியவியாதி ஆயிட்டேன் தேரியுமா என ஷாக் கொடுத்தார்..........அல்லாரும் பெரிய ஆளாயிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
அப்படியே நம்ம மதுரை பதிவருக்கு போன் போட்டேன்.. என்னப்பா சென்னை புத்தக கண்காட்சிக்கு போகலியா..நீங்கதான் ஒரு ஊர் விடாம போவிங்களே அப்படினேன்... "நான் அங்க வாங்கின புக்கே இன்னும் தூங்கிட்டு இருக்கும் அதுக்குள்ளயா?? "அப்படினார்..நீங்க தான் இப்ப எலக்கியவியாதி ஆகிட்டீங்களே.....ஆப்படினு சொன்னதுதான் தாமதம் "தலைவரே இதுல ஏதோ சதி நடக்குது.எனக்கும் அதுக்கும் சம்பந்த்மே கிடையாது" அப்படின்ற ரேஞ்சில ஸ்டேட்மென்ட் குடுத்துட்டார்........பாவம் பொழைச்சி போகட்டும்
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த வருடம் பதிவுலகில் நான் எதிர்பார்ப்பது
1. எதிர் கவுஜை இல்லாமல் நைனா அண்ணாச்சி பதிவு போட வேண்டும்
2.மீண்டும் தங்கமணி பதிவுகளை ஆதி அண்ணன் போட வேண்டும் பழைய உத்வேகத்துடன்.
3.உண்மைத்தமிழன் அண்ணன் கவிதை எழுத வேண்டும்( எப்படினாலும் ஒரு பக்க்கத்துக்குள்ள முடிஞ்சிருமில்ல)
4.சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்
5.சினிமாக்காரனை வம்புக்கு இழுக்காமல் அரவிந்த் ஒரு பதிவு போடவேண்டும்
6.அல்லாருக்கும் புரியிற மாதிரி அனுஜன்யா அண்ணாச்சி கவித எழுதனும்
7.கார்க்கியும் , வசந்தும் டாக்டர் இளைய தளபதிய பேஜார் பண்ணி ஒரு பதிவு போடனும்.
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
26 comments:
:-)))
ஆண்டின் ஆரம்பத்திலேயே
அண்ணன் அனுஜன்யாவை
கத்திரித்து வெட்டிவிட்ட
அத்திரியின் அத்துமீறலுக்கு
அடிபணியான் ஆசுகவி
அஞ்சாநெஞ்சன் அனுஜன்யா
இப்படியெல்லாம் எழுதுவேன் பரவாயில்லையா :)))
புத்தாண்டு நல்வாழ்த்துகள் அத்திரி.
vambukku ilukkaamal pottu vitten
முதல்ல என்னோட பதிவுகளை ஒழுங்கு மரியாதையா தொடர்ந்து படி.. சினிமா இல்லாம கொத்து பரோட்டா, சிறுகதைகள், கட்டுரைகள்னு எவ்வளவு எழுதியிருக்கேன். அட சமீபத்தில கவிதை வேற எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. போய் ய்யா.. படிச்சுட்டு வந்து பதிவு எழுது.. :))) ஹேப்பி நியூ இயர்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
புத்தாண்டு வாழ்த்துகள் பிரதர்.
//கிட்டத்தட்ட 120படங்கள் வெளியாகியிருக்கின்றன.../
டப்பிங் படங்கள் சேர்க்காமல் 129. அவதார், தெலுங்குல இருந்து வர்றது மாதிரியான டப்பிங் படங்கள் மட்டும் 35.
சும்மா, பொதுஅறிவை வளர்த்துக்கறதுக்குதான்.
தம்பீ..
உனது கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது..
வலையுலகம் போகிற போக்கைப் பார்த்தால் நான் கவிதை எழுதினால்தான் தற்போதைய கவிஞர்கள் பாதிப் பேர் கவிதை எழுதுவதை நிறுத்துவார்கள் போலிருக்கிறது..!
செஞ்சிருவோம்..!
தம்பீ..
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்..!
//சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்//
அவரு கவிஞராகி ரொம்ப நாளாகுதுப்பா... இதனால கவிஞர்கள் எல்லாம் பேஜாராகி சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. இது தெரியாதா அத்திரி
புத்தாண்டு வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆசைகள் ஏழு நிறைவேறவும் (??!!!) வாழ்த்துக்கள். :))
மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அத்திரி.
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
நான் ஏற்கனவே டேமேஜ் செய்து பதிவு போட்டிருக்கேன்
ஹே ஹே ஹே.. அதுல இருக்கிற ஒண்ணு கூட நடக்கக் கூடாது.... அப்பத்தான்யா எங்களுக்கு பொழுது போகும்..:-)))
sure shot :))))
happy new year boss...!
புத்தாண்டு வாழ்த்துகள் அத்திரி
T.V.Radhakrishnan said...
:-)))
நன்றி ஐயா
//அனுஜன்யா said...
ஆண்டின் ஆரம்பத்திலேயே
அண்ணன் அனுஜன்யாவை
கத்திரித்து வெட்டிவிட்ட
அத்திரியின் அத்துமீறலுக்கு
அடிபணியான் ஆசுகவி
அஞ்சாநெஞ்சன் அனுஜன்யா
இப்படியெல்லாம் எழுதுவேன் பரவாயில்லையா :)))
புத்தாண்டு நல்வாழ்த்துகள் அத்திரி.//
எழுதுங்க அண்ணாச்சி.......படிக்கப்போறது நாங்கதானே...... நன்றி யூத் கவிஞரே
//இரும்புத்திரை said...
vambukku ilukkaamal pottu vitten//
நன்றி அரவிந்து
// Cable Sankar said...
முதல்ல என்னோட பதிவுகளை ஒழுங்கு மரியாதையா தொடர்ந்து படி.. சினிமா இல்லாம கொத்து பரோட்டா, சிறுகதைகள், கட்டுரைகள்னு எவ்வளவு எழுதியிருக்கேன். அட சமீபத்தில கவிதை வேற எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. போய் ய்யா.. படிச்சுட்டு வந்து பதிவு எழுது.. :))) ஹேப்பி நியூ இயர்..//
கவித அப்படின்ற பேர்ல கொலைவெறி ஆக்குறீங்க ஜாக்குரதை......நன்றி யூத் அண்ணே
கடையம் ஆனந்த் said...
//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
நன்றி மாப்ளே//
ஆடுமாடு said...
புத்தாண்டு வாழ்த்துகள் பிரதர்.
//கிட்டத்தட்ட 120படங்கள் வெளியாகியிருக்கின்றன.../
டப்பிங் படங்கள் சேர்க்காமல் 129. அவதார், தெலுங்குல இருந்து வர்றது மாதிரியான டப்பிங் படங்கள் மட்டும் 35.சும்மா, பொதுஅறிவை வளர்த்துக்கறதுக்குதான்.//
நன்றி அண்ணாச்சி
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பீ..உனது கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது..வலையுலகம் போகிற போக்கைப் பார்த்தால் நான் கவிதை எழுதினால்தான் தற்போதைய கவிஞர்கள் பாதிப் பேர் கவிதை எழுதுவதை நிறுத்துவார்கள் போலிருக்கிறது..!செஞ்சிருவோம்..!//
நீங்க ஒரு பத்து பக்கத்துக்கு கவித எழுதி கின்னஸ் சாதனை புரியனும்.....இதுதான் என் ஆசை.....நன்றி அண்ணே
// D.R.Ashok said...
//சினிமா பற்றி எதுவும் இல்லாமல் கேபிள் அண்ணன் ஒரு பதிவு போடவேண்டும்//
அவரு கவிஞராகி ரொம்ப நாளாகுதுப்பா... இதனால கவிஞர்கள் எல்லாம் பேஜாராகி சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. இது தெரியாதா அத்திரி//
அண்ணே அதுக்கு பேர் கவிதையா ஐயோ......... நன்றி அண்ணே
// ஸ்ரீ said...
புத்தாண்டு வாழ்த்துகள்//
நன்றி ஸ்ரீ
// துபாய் ராஜா said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆசைகள் ஏழு நிறைவேறவும் (??!!!) வாழ்த்துக்கள். :))//
நன்றி ராஜா
//ஹேமா said...
மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அத்திரி.//
நன்றி ஹேமா
//- இரவீ - said...
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..//
நன்றி ரவீ
//கார்க்கி said...
நான் ஏற்கனவே டேமேஜ் செய்து பதிவு போட்டிருக்கேன்//
ஓகே சகா
// கார்த்திகைப் பாண்டியன் said...
ஹே ஹே ஹே.. அதுல இருக்கிற ஒண்ணு கூட நடக்கக் கூடாது.... அப்பத்தான்யா எங்களுக்கு பொழுது போகும்..:-)))//
நல்ல எண்ணம்......ரைட்டு புரொபசர்
// பிரியமுடன்...வசந்த் said...
sure shot :))))
happy new year boss...!//
நன்றி வசந்த்
//அக்பர் said...
புத்தாண்டு வாழ்த்துகள் அத்திரி//
நன்றி அக்பர்
வருகை தந்த மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Post a Comment