Monday, February 15, 2010

புத்தக வெளியீடும், பச்சை சட்டை பதிவரும்(யூத்தாம்)

நம்ம பயபுள்ளங்கள பாத்து மாசக்கணக்காயிட்டதால இந்த வாட்டி புத்த்க வெளியீடு விழாவை தவறவிடவில்லை..... மாலை 5மணிக்கு நானும் டிவிஆர்கே ஐயாவும் சொன்ன இடத்துக்கு வந்தாச்சு. என்னடா யாரையும் காணோம் என்றிருதபோது....அரங்கினுள் இருந்து உண்மைத்தமிழன் அண்ணன் சில பதிவர் புடை சூழ வெளியில் வந்தார்..... அதற்குள் மணி 5:30 ஆகியிருந்தது....... விழா நாயகர்களே இன்னும் வரவில்லை......அவர்களெல்லாம் வந்து விழா ஆரம்பிப்பதற்கு மணி6:15ஆகியது..... பரிசலும் கேபிளும் குடும்ப சகிதமா வந்திருந்தார்கள்.


AKANALIKAI,PIRAMID,AJAYAN BALA, YOUTH
விழாவை அட்டகாசமான டயலாக்குடன் ஆரம்பித்து வைத்தான் கேபிள் சங்கரின் இளைய வாரிசு....அப்பா எப்பவும் காமேடி பீசு சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.கேபிளின் புத்தகத்தை பிரமிட் நடராஜனும், பரிசலின் புத்த்கத்தை அஜயன் பாலவும் வெளியிட்டனர். பிரமிட் நடராஜன் பேசும்போது கேபிளின் விட தன்னை யூத்தாக காட்டிக்கொண்டார்...... தமிழ்ப்படம் இயக்குனர் அமுதன் பதிவர்கள் எல்லோருக்கும் தன் நன்றியை தெரிந்து கொண்டார்.......அஜயன் பாலாவிடம் மைக்கை கொடுத்ததுதான் தாமதம் பேசினார் பேசினார் பேசினார் பேசிக்கொண்டேயிருந்தார்..... ஏதாவது சுவாரஸ்யமாக பேசுகிறாரா என்றால் அதுவும் இல்லை.எப்படா பேச்சை முடிப்பார் என்றிருந்தது.... கேபிளும் பரிசலும் இறுதி வரை ஒருவித நெகிழ்ச்சி கலந்த டென்சனுடன் காணப்பட்டார்கள்................ சரி நம்ம மேட்டருக்கு வருவோம்


GUGAN,AKANALIKAI,PIRAMID,AJAYAN BALA,PARISAL
பதிவ்ர்களை ஞாபகப்படுத்தி எழுதுகிறேன் யார் பெயராவது விடுப்பட்டிருந்தால் மன்னிக்கவும்........ டிவிஆர்கே,உண்மைத்தமிழன்,ஷங்கர் ரோமியோ,ஜெய மார்த்தாண்டன்,சர்புதீன் (வெள்ளி நிலா)அதி பிரதாபன்,சங்கர், கார்க்கி, நர்சிம்,ஆதி,ஜியோவ்ராம் சுந்தர்,பட்டர்பிளை சூர்யா, தண்டோரா,தராசு,லக்கி, அதிஷா,ஜெட்லி,வடகரை வேலன், சொல்லரசன், வெயிலான், சஞ்சய் காந்தி, டோண்டு,அப்துல்லா, புலவன் புலிகேசி இன்னும் பலர் வந்திருந்தனர்....விழா ஆரம்பிக்கும்போது இரண்டு பேர் போட்டிப்போடுக்கொண்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தானர்.... அதில் நம்ம யூத்து கொஞ்ச நேரத்தில் களைப்படைந்துவிட்டார்..அவர் ஆதிஆண்ணன்........... இன்னொருவர் கடைசி வரைக்கும் அதே சுறுசுறுப்புடன் படம் எடுத்துக்கொண்டிருந்தாள் அவள் பரிசலின் இளைய வாரிசு மேகா.......



SHANKAR, ME, TVRK, UNMAI TAMILAN, ROMEO
நேற்றுதான் காதலர் தினம் ஆயிற்றே யாரெல்லாம் பச்சை சட்டை போட்டிருந்தனர் எனப்பார்த்தால் இருவர் அந்த கலரில் வந்திருந்தனர். ஒருவர் கார்க்கி, இன்னொருவர் நம்ம ஆதி அண்ணன்...கார்க்கி பச்சை சட்டை போட்டதுல ஒரு அர்த்தம் இருக்கு..விட்டிடலாம்....ஆனால் ஆதி அண்ணன் ஏன் அந்த கலர்ல சட்டை போட்டார்......... ?????? கேடதற்கு அவர் யூத்தாம் அதானாம்........ அய்யய்யோ எப்ப அவர் இந்தச கேபிள், தண்டோரா, தராசோட சேர்ந்தார்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ அண்ணே நீங்க இன்னும் சின்னப்பையந்தாம்ணே........



அப்புறம் நம்ம பெஸ்கி ஆளே மாறிட்டாப்ல. என்னனு கேட்டா அவரும் ஆயுள் கைதியா ஆகப்போறாராம்....புலவன் புலிகேசி இந்த பெயரை பார்த்ததும் கேபில் மாதிரி யூத்தான் ஆளா இருப்பர்னு பார்த்தால்.........சத்தியமா இல்ல பச்சபுள்ளயா இருக்கார்.......ஜெட்லிக்கும் எங்க ஊர்தான் எங்க ஊர்க்காரங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க போல...............



நானும் புக் வாங்கியிருக்கேன். பஸ்ல வரும்போது பரிசல் புக்கில் ஒரே ஒரு கதை தான் படித்தேன்......... சிறுவயது பசங்களின் மனநிலையை அருமையா சொல்லியிருக்கார் இந்த கதையில்

மேலும் போட்டோக்களுக்கு மோகன் குமார்

22 comments:

cheena (சீனா) said...

அன்பின் அத்திரி

அருமையான நிகழ்ச்சியின் வர்ணனை அருமை

Kஇண்டல் கலந்த வர்ணனை - பதிவர்கள் ஒருவர் கூட வீட்டு விடாமல் குறிப்பிட்டது நன்று

நல்வாழ்த்துகள் அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வர்ணனை அருமை

Cable சங்கர் said...

அத்திரி.. ஒழுங்க கதையெல்லாம்படிச்சிட்டு ஒரு பதிவ போடு.. இல்லை இன்னும் இருவது புக்கு உங்க வீட்டுக்கு பார்சல் அனுப்பப்படும்..:)

வெள்ளிநிலா said...

இந்த ஒரு வாரத்துக்கு நட்சத்திர செய்தி இதுதான்னு நினைக்கிறேன். பதிவு சுருக்கம் மற்றும் சுவராசியம்!

RRSLM said...

போட்டோவில் இருப்பவர்களின் பெயரை போட்டால், படத்தில் இருப்பவர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள வசதியாக இருந்திருக்கும் (யார் யாரெல்லாம் யூத்து மாதிரி ஆக்ட் விடராங்கன்னு நாங்களும் தெரிஞ்சுக்கவோம் இல்ல) .......: -).

கார்க்கிபவா said...

என்னை டேமெஜ் செய்யாமல் விட்டதற்கு நன்றி..ஹிஹிஹி

CS. Mohan Kumar said...

நன்றி அத்திரி. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

எம்.எம்.அப்துல்லா said...

ரொம்ம்ம்ப நாளைக்கு அப்புறம் உங்களைப் பார்த்ததில் மீ தி ஹேப்பி :)

Ashok D said...

:)

சிநேகிதன் அக்பர் said...

வர்ணனை அருமை

துபாய் ராஜா said...

அருமையான கமெண்ட்ரி அத்திரி. :))

நிகழ்காலத்தில்... said...

நிகழ்ச்சி குறித்தான பதிவு இயலபாக இருந்தது

வாழ்த்துகள்

தினேஷ் ராம் said...

நானும் தான் பச்சை சட்டையில் வந்தேன். சொல்லவே இல்ல!!

புலவன் புலிகேசி said...

அன்றே படித்தேன்..பின்னூட்டமிட தாமதம்..நல்லா சுவரஸ்யமா விவரிச்சிருக்கீங்க தல. உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி..

ப்ரியமுடன் வசந்த் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தல...!

priyamudanprabu said...

நல்வாழ்த்துகள்

அத்திரி said...

// cheena (சீனா) said...
அன்பின் அத்திரி
அருமையான நிகழ்ச்சியின் வர்ணனை அருமைKஇண்டல் கலந்த வர்ணனை - பதிவர்கள் ஒருவர் கூட வீட்டு விடாமல் குறிப்பிட்டது நன்று
நல்வாழ்த்துகள் அத்திரி//

தொடர் வருகைக்கு நன்றி ஐயா

// T.V.ராதாகிருஷ்ணன் said...
வர்ணனை அருமை//

நன்றி ஐயா

//Cable Sankar said...
அத்திரி.. ஒழுங்க கதையெல்லாம்படிச்சிட்டு ஒரு பதிவ போடு.. இல்லை இன்னும் இருவது புக்கு உங்க வீட்டுக்கு பார்சல் அனுப்பப்படும்..:)//

ஏம்ணெ இந்த கொலைவெறி

அத்திரி said...

//வெள்ளிநிலா said...
இந்த ஒரு வாரத்துக்கு நட்சத்திர செய்தி இதுதான்னு நினைக்கிறேன். பதிவு சுருக்கம் மற்றும் சுவராசியம்!//

நன்றி வெள்ளிநிலா

// RR said...
போட்டோவில் இருப்பவர்களின் பெயரை போட்டால், படத்தில் இருப்பவர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள வசதியாக இருந்திருக்கும் (யார் யாரெல்லாம் யூத்து மாதிரி ஆக்ட் விடராங்கன்னு நாங்களும் தெரிஞ்சுக்கவோம் இல்ல) .......:
//

நன்றி ஆர் ஆர்

அத்திரி said...

//கார்க்கி said...
என்னை டேமெஜ் செய்யாமல் விட்டதற்கு நன்றி..ஹிஹிஹி
//
எல்லாம் ஒரு காரணமாத்தான்

.//மோகன் குமார் said...
நன்றி அத்திரி. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.//

நன்றி மோகன் குமார்

// D.R.Ashok said...
:)//

நன்றி

அத்திரி said...

//அக்பர் said...
வர்ணனை அருமை//

நன்றி அக்பர்

// துபாய் ராஜா said...
அருமையான கமெண்ட்ரி அத்திரி. :))//

நன்றி துபாய் ராஜா

// நிகழ்காலத்தில்... said...
நிகழ்ச்சி குறித்தான பதிவு இயலபாக இருந்தது///வாழ்த்துகள்

நன்றி நிகழ்காலத்தில்

அத்திரி said...

//சாம்ராஜ்ய ப்ரியன் said...
நானும் தான் பச்சை சட்டையில் வந்தேன். சொல்லவே இல்ல!!//

நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்

// புலவன் புலிகேசி said...
அன்றே படித்தேன்..பின்னூட்டமிட தாமதம்..நல்லா சுவரஸ்யமா விவரிச்சிருக்கீங்க தல. உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி
//

நன்றி புலவன் புலிகேசி

அத்திரி said...

//பிரியமுடன்...வசந்த் said...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தல...!//

நன்றி வசந்த்

//கடையம் ஆனந்த் said...
:)//

நன்றி ஆனந்த்


//பிரியமுடன் பிரபு said...
நல்வாழ்த்துகள்//

நன்றி பிரபு