Thursday, February 25, 2010

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தென் தமிழகம்

எல்லா விசயங்களிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல..அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சில தொழில் வளர்ச்சி தவிர...... போன வருடம் ரெயிவே பட்ஜெட்டிலெயே தென் தமிழகத்துக்கு ஒன்னும் இல்லை.இந்த வருடமும் அதே நிலைமைதான்......இது குறித்து போன வருடம் நான் எழுதிய பதிவு.



இந்த வருடமும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு புதிதாக ரயிலகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.......ஏற்கனவே தினசரி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலகள் அனைத்தும் வருடம் முழுவதும் பயனிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது...முன்ன எல்லாம் திருநெல்வேலி செல்லனும் என்றால் 15 நாட்களுக்கு முன்னதாக முன் பதிவு செய்தால் டிக்கெட் கிடைக்கும்..இப்ப ரெண்டு மாதத்திற்கு முன்னதாக முன் பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை.....இது பற்றி ரெயிவே அதிகாரிகளிடம் கேட்டால்..சென்னை-திருச்சி மார்க்கத்தில் இதற்கு மேல் ரயில்கள் விட முடியாது ஏன்னா தண்டவாளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு தேவை என்கிறார்கள்......... தாம்பரம் முதல் திருச்சி வரை இன்னொரு வழித்தடம் அமைக்கும் திட்டம் என்னவாயிற்று?????????? இது மில்லியன் டாலர் கேள்வி.....
அடுத்ததா திருநெல்வேலி- தென்காசி அகலரயில் பாதை திட்டம் ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாகியும் வேலை எதுவும் நடைபெற்ற மாதிரி தெரியலை........ அது பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை....... இதுல இன்னொரு காமெடி என்னன்னா ஏற்கனவே மீட்டர் கேஜில் ஓடிய திருநெல்வெலி- திருச்செந்தூர் பயனிகள் வண்டியை புதிய வழித்தடமாக அறிவித்திருப்பதுதான்.இதையும் நம்ம செய்கதி சேனல்கள் சொல்வது கொடுமைடா சாமி.......



எனக்கு ஒரே ஆசைதான் நம்ம மத்திய ரெயில்வே மந்திரியையும், மாநில போக்குவரத்து அமைச்சரையும் ஒரு நாள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அல்லது தென்காசிக்கோ.. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் அதுவும் ஊதா நிற, ரோஸ் நிற மஞ்சள் நிற பேருந்தில் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்............ அப்பதான் தெரியும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

12 comments:

ஜெட்லி... said...

அண்ணே...தெற்கு தேயுதுன்னு சும்மாவா
சொன்னாங்க.....

குறும்பன் said...

இடுகையை பற்றி ஒன்னும் சொல்லவில்லை.
I am not mamta or congress fan, mere citizen.
some concessions http://www.indianrailways.gov.in/DEPTTS/Budget/BUDGET-1011/RlyBudget_Eng_10-11.pdf found in http://www.indianrailways.gov.in/


51. Outpatient Departments (OPD) and diagnostic centres - Tirunelveli Jn.,

Gauge Conversion 113.
xiv. Quilon – Punalur of Quilon – Tiruchchendur and Tenkasi –
Virudunagar

114. Madam, target of 800 km has been fixed for Gauge Conversion in 2010- 11 including the following sections:
111. Tirunelveli – Tenkasi of Quilon - Tiruchendur and Tenkasi –
Virudunagar

140. xi. Bhopal-Tirupati-Kanchipuram-Rameshwaram-Madurai-Kanyakumari-Trivandrum- Cochin-Bhopal

143.xvii. Nagercoil-Bangalore Express (Weekly) via Madurai-Hosur
xxxii. Madurai-Tirupati Express (Bi-weekly)

Passenger trains
145. xi. Tiruchendur-Tirunelveli Passenger


102-
64. Madurai-Kottayam
65. Madurai-Tuticorin

140. Bharat Tirth
ii. Howrah-Chennai- Puducherry- Madurai – Rameshwaram-Kanyakumari-
Bangalore – Mysore – Chennai-Howrah
vi. Mumbai- Pune- Tirupati- Kancheepuram- Rameshwaram- Madurai-
Kanyakumari-Pune- Mumbai
xi. Bhopal-Tirupati-Kanchipuram-Rameshwaram-Madurai-Kanyakumari-
Trivandrum-Cochin-Bhopal
xii. Madurai-Chennai-Kopargaon-Mantralayam-Chennai-Madurai
xiii. Madurai-Erode-Pune-Ujjain-Veraval-Nasik-Hyderabad-Chennai-Madurai
xiv. Madurai-Chennai-Jaipur-Delhi-Mathura -Vrindavan -Allahabad-
Varanasi-Gaya-Chennai-Madurai
xv. Madurai-Varanasi-Gaya-Patna Sahib-Allahabad-Haridwar-Chandigarh-
Kurukshetra-Amritsar-Delhi-Madurai
xvi. Madurai-Mysore-Goa-Mumbai-Aurangabad-Hyderabad-Madurai

பனித்துளி சங்கர் said...

அப்படியா விசயம் . பகிர்வுக்கு நன்றி !

நசரேயன் said...

எக்காலத்துக்கும் பொருந்தும் இடுகை

நட்புடன் ஜமால் said...

அதுவும் ஊதா நிற, ரோஸ் நிற மஞ்சள் நிற பேருந்தில் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்]]


இத விட மட்டமாவும் பயணம் செஞ்சவங்க தான் அவங்க எல்லாம் - இதையெல்லாம் தவிர்ப்பதற்காககவே அரசியில்வியாதியானாங்க ... ;)

புலவன் புலிகேசி said...

//எனக்கு ஒரே ஆசைதான் நம்ம மத்திய ரெயில்வே மந்திரியையும், மாநில போக்குவரத்து அமைச்சரையும் ஒரு நாள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அல்லது தென்காசிக்கோ.. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் அதுவும் ஊதா நிற, ரோஸ் நிற மஞ்சள் நிற பேருந்தில் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்.//

haa haa haa

shortfilmindia.com said...

அடுத்த முறை எனக்கு ஓட்டு போட்டு ரயில்வே மந்திரு ஆக்கிருங்க்

தராசு said...

ரொம்பக் கொடூரமான ஆசைண்ணே உங்களுக்கு.........

Thamira said...

நெல்லை எக்ஸ்பிரஸை நினைத்தாலே கடுப்பாகுது. இப்பிடி கூட்டம் சீரழியுதே.. இன்னொரு வண்டி விட்டுத் தொலையுறானுகளா? நாசமாப் போறவனுக..

சங்கர் said...

//மத்திய ரெயில்வே மந்திரியையும், மாநில போக்குவரத்து அமைச்சரையும் ஒரு நாள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அல்லது தென்காசிக்கோ.. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் அதுவும் ஊதா நிற, ரோஸ் நிற மஞ்சள் நிற பேருந்தில் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்//

நெல்லை எக்ஸ்ப்ரஸில் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்யச் சொன்னாலே போதும்

சங்கர் said...

//shortfilmindia.com said...
அடுத்த முறை எனக்கு ஓட்டு போட்டு ரயில்வே மந்திரு ஆக்கிருங்க்//

அப்புறம் லண்டன் மெட்ரோ மாதிரி ரயில்களில் என்டர் கவிதை படிக்கச் சொல்லலாம் :))

சிநேகிதன் அக்பர் said...

//இத விட மட்டமாவும் பயணம் செஞ்சவங்க தான் அவங்க எல்லாம் - இதையெல்லாம் தவிர்ப்பதற்காககவே அரசியில்வியாதியானாங்க ... ;)//

அப்ப இனிமே நாமளும் அரசியல்வாதியாகணுமா ஜமால் அண்ணே.

வருத்தம் நியாயமானதுதான் அத்திரி. அதற்காக தென் தமிழ்நாடுன்னு தனிமாநிலமா கேட்க முடியும்.