Monday, May 17, 2010

என்டர் கவிதைகள் 2--- கோடை கூட சுகம்தான்

ஒரு மாத தற்காலிக பேச்சிலர்கள்

எப்போதாவது எட்டிப்பார்க்கும் மழை
பூத்துக்குலுங்கும் வேப்ப மரம்
காய்த்துக் குலுங்கும் மாமரம்
இளந்தளிரான அரசமரம்
அதிசயமாக தெருவில் விளையாடும் குழந்தைகள்
கூட்டம் இல்லா மாநகரப்பேருந்துகள்
வெறிச்சோடும் வார நாட்கள்
அடிக்கடி கோபித்துக்கொள்ளும் மின்சாரம்
எப்போதோ தீண்டும் தென்றல்


ம்ம்ம்ம்..கோடை கூட சுகம்தான்

T20உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

கிட்டத்தட்ட 30 ஆண்டுகால கனவை நிறைவேற்றியிருக்கிறது கோலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி.....இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சுலபமாக மண்ணை கவ்வ வைத்து முதல் முதலாக ஐசிசி உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.

டாசில் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பேட் செய்யும் படி பணித்து சிறப்பான பந்து வீச்சின் மூலம் 147 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது...எளிதான இலக்கை இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்து கோப்பையை கைப்பற்றியது


சுருக்கமான ஸ்கோர்



ஆஸ்திரேலியா 147/6 20வது ஓவர்களில் டேவிட் ஹசி 59ரன்கள்
இங்கிலாந்து 148/3 17 ஓவர்களில் கிரெக் கிஸ்வெட்டர் 69ரன்கள் 49பந்துகளில்

Saturday, May 15, 2010

தளபதி ரசிகராக மாறப்போகும் பிரபல பதிவர்

பதிவு எழுதி பலமாசமாகுது.... பல பேர் "யப்பா தொல்லை விட்டதுனு நிம்மதியா இருந்திருப்பீங்க"..ஆனாலும் ஒரு சிலரின் அன்புத்தொல்லையால் மீண்டும் எழுதுகிறேன்( யாருடா அதுன்னு கேட்கக்கூடாது)....



குறுகிய காலத்தில் தன்னுடைய எழுத்தால் பிரபலமான அந்த தென் தமிழக பதிவர் ஒரு தீவிர தல ரசிகர்... தளபதி படம் எப்படி இருந்தாலும் வாரு வாருன்னு வாருவதில் அவருக்கு அலாதி பிரியம்.சில வாரங்களுக்கு முன் அவரிடம் பேசும் போது தான் விரைவில் தளபதி ரசிகராக மாறப்போகும் சூழ்நிலை இருப்பதாக கூறினார். நம்ம மர மண்டைக்கு ஒன்னும் புரியல..அப்புறம்தான் தெரிஞ்சிது அவர் கூடிய விரைவில் குடும்ப இஸ்திரியாக மாறப்போறாராம்.ஆனாலும் அவரின் தளபதி பற்றிய பதிவுகளை பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன்... அவருக்கு கல்யாண பரிசா கொடுக்கிறதுக்கு......


சுறாவை வழக்கம் போல் வறுத்தெடுத்துட்டாங்க நம்ம ஆளுங்க.... அடுத்த படத்திலாவது நம்ம தளபதி அடக்கி வாசிப்பாருனு எதிர்பார்க்கலாமா???????


இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவராக இருந்த கேசன் தேசாயின் ஊழல் அரசியல்வாதிகளை மிஞ்சி விட்டது... 1800 கோடி ரூபாய் பணமாக கைப்பற்றப்பட்டதாம்... அந்த அளவுக்கா பணத்தாசை பிடிக்கும்...வாழ்க இந்திய சனநாயகம்....


ராவணன் படப்பாடல்களில் உசிரே போகுது பாடல் இந்த வருட சூப்பர் ஹிட் பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது...வைரமுத்து ரொம்ப நாள் கழித்து வரிகளில் கலக்குகிறார்....இந்த பாட்டை கேட்டாலே உசிரு எங்கியோ போவுது............