Monday, May 18, 2009

தமிழகத்தில் தவிர்க்க இயலாத கட்சியா தேமுதிக?-- ஒரு பார்வை

தேமுதிக தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியா??.. இந்த மக்களவை தேர்தல் முடிவை வைத்து ஒரு கணக்கு போட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி கணக்கெல்லாம் இனி எடுபடாது என மக்களே தீர்ப்பு சொல்லிட்டாங்க ( பாமகவுக்கு மக்கள் கொடுத்த அல்வா).... இந்த தேர்தலுக்கும் முன் கூட்டணி குறித்து தேமுதிகவில் ஒரு குழப்ப நிலையே நீடித்தது.... ஒரு புறம் அதிமுகவுடனும், மறுபுறம் காங்கிரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.கடைசியில் தேமுதிக தலைவர் மக்களுடனும்,தெய்வத்துடனும் தான் கூட்டணி என்று சொல்லி தப்பித்துவிட்டார்.. (காங்கிரசு யோசனைப்ப்டி தனித்து நிற்க பொட்டி கைமாறியதாக கேள்வி).....



இன்றைக்கு திமுக அரசாங்கம் மைனாரிட்டி ஆக இருப்பதற்கும் தேமுதிகவே காரணம்...கடந்த சட்டமன்றதேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி. தமிழ்நாட்டு தொகுதிகளில் கிட்டத்தட்ட 25ல் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக உள்ளது.... 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெஇத்த தொகுதிகளை கணக்கில் எடுக்கவில்லை...1லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகளில் தேமுதிகவாலேயே தோற்றுள்ளன கட்சிகள்.

தேமுதிகவால் அதிமுக கூட்டணி தோற்ற தொகுதிகள்

1. மத்திய சென்னை       8.சிவகங்கை

 திமுக -- 285783                   காங்கிரசு--334348
அதிமுக -- 252329               அதிமுக --330994
 தேமுதிக -- 38959               தேமுதிக --60084  


2.காஞ்சிபுரம்                     9.தேனி                                        
 காங்கிரசு -- 330237           காங்கிரசு--340575
 அதிமுக -- 317134             அதிமுக--334273
 தேமுதிக-- 103580             தேமுதிக--70908

3.கிருஷ்ணகிரி           10.நெல்லை 
திமுக -- 335977        காங்கிரசு  --274932                       
அதிமுக -- 259379    அதிமுக -- 253629
 தேமுதிக -- 97546     தேமுதிக-- 94562

4.திண்டுக்கல்                  11.திருப்பெரும்புதூர்
 காங்கிரசு -- 361545             திமுக -- 352641

அதிமுக --  307198               பாமக -- 327605
தேமுதிக-- 100788                தேமுதிக-- 110442

5.கடலூர்                             12.   கள்ளக்குறிச்சி                         

   காங்கிரசு-- 319881                திமுக -- 363601
 அதிமுக -- 296745                   பாமக -- 254993

 தேமுதிக -- 93161                  தேமுதிக--132223

6.வட சென்னை                     13.நாகை
  திமுக -- 281055                      திமுக--369915
 கம்யூனிஸ்ட் -- 261902         கம்யூனிஸ்ட்--321953
 தேமுதிக -- 66375                   தேமுதிக -- 51376

7.விருதுநகர்
  காங்கிரசு -- 307187
  மதிமுக -- 291423
 தேமுதிக -- 125229


தேமுதிகவால் திமுக கூட்டணி தோற்ற தொகுதிகள்

1.திருவள்ளூர்                5.தென்சென்னை
 அதிமுக -- 368294            அதிமுக-- 308567
 திமுக -- 336621                 திமுக -- 275632

 தேமுதிக -- 110442           தேமுதிக -- 67291

2.கரூர்                                  6. திருச்சி
 அதிமுக -- 380461          அதிமுக -- 298710
 திமுக ---  331312              காங்கிரசு -- 294375

தேமுதிக -- 51163              தேமுதிக -- 61742


3.தென்காசி                          7. மயிலாடுதுறை
 கம்யூனிஸ்ட் -- 281174       அதிமுக-- 364089
 காங்கிரசு -- 246497                காங்கிரசு-- 327235
 பு.த             -- 116685                  தேமுதிக --44754
தேமுதிக -- 75741

4.சேலம்                                     8.விழுப்புரம்      
 அதிமுக -- 380460                  அதிமுக  --306826      
 காங்கிரசு -- 333969                வி.சி --  304029
 தேமுதிக -- 120325               தேமுதிக--127476

தமிழகத்தின் மேற்கு மண்டல தொகுதிகளான ஈரோடு,திருப்பூர்,கோவை, பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்ற பேரவை கணிசமான வாக்குகள் பெற்று ஆளும் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேமுதிக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க இயலாத சக்தியாக இருக்கும் என்பதையே காட்டுகிறது....

Sunday, May 17, 2009

மே 16ல் அசத்திய கிழட்டு (இளம்) சிறுத்தைகள்

நேற்று மே 16 இரன்டு பேர் அசத்திக்காட்டிடாங்க... என்ன ரெண்டு பேர்ல ஒருத்தர் ரிட்டயர் ஆகி ரொம்ப நாளானாளும் இன்னும் அசத்திக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் சமீபத்தில் தான் ரிட்டயர்டு ஆனார்.... இருவரும் வெவேறு துறைகள் என்றாலும் இன்னும் கலக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸின் மேத்யூஹைடன்...



இதுவரைக்கும் 12 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியுள்ளது. 7 போட்டிகளில் ஜெயித்துள்ளது. இந்த அணி ஜெயிப்பதற்கு முதற்காரணம் ஹைடன் தான்... தன்னுடைய அசாதரணமான பேட்டிங் மூலம் பல மேட்ச்கள் வெற்றி பெற்றுள்ளது.. நேற்றும் அப்படித்தான். முதலில் ஆடிய மும்பை இந்தியன் அணி 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி ,,, முதல் பந்திலேயே பார்த்திவ் படேல் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்ட கடைசி வரைக்கும் களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதும் பெற்றார் மேத்யூஹைடன்.....


இரண்டாமவர் நம்ம முதல்வர் கலைஞர்தான்.... அவரின் அரசியல் வாழ்க்கையில் பிரச்சாரம் பண்ணாத ஒரே தேர்தல் இதுதான்..... திருச்சி, சென்னையில் மட்டுமே பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்...அவர் பிரச்சாரம் பண்ணாதது அம்மாவுக்கு கொஞ்சம் வசதியா போச்சி.... கலைஞரின் உடல்நிலையை சுட்டிக்காட்டி பிரச்சாரத்தின் போது எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசினார் அம்மா..... ஆனாலும் இந்த 85 வயது சிறுத்தை தளரவில்லை..... முக்கியமா இலங்கைப்பிரச்சினையை வைத்து எதிரணியினர் போட்ட கணக்கை மக்கள் தீர்ப்பின் மூலம் பதில் சொல்லிவிட்டார் இந்த85 வயது இளைஞன்...... 1ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச தொலைக்காட்சி பெட்டி போன்ற திட்டங்கள் தான் இவரை கரையேற்றியது என்றால் மிகையாகாது......... மொத்தத்தில் இந்த வயதிலும் அசத்தி காட்டிவிட்டார் கலைஞர்....... போன மக்களவைத்தேர்தலைவிட வெற்றி பெற்ற வாக்குகள் வித்தியாசத்தை மனதில் வைத்து ஆட்சி செய்தால் நலமாக இருக்கும்.
 

டிஸ்கி: அசத்திய சிங்கம் என்றுதான் போடலாம் என்றிருந்தேன்... ஆனால் சிங்கம் சோம்பேறி மிருகமாம்,... அதனாலதான் இந்த தலைப்பு
 
 

Saturday, May 16, 2009

மாப்பு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.....

இந்தப்பதிவின் தலைப்பு யாருக்கு சரியா இருக்கோ இல்லையோ நம்ம டாக்டர் ஐயா கட்சிக்கும், தமிழக காங்கிரசு முண்ணனி தலைவர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் நம்ம டாக்டர் ஐயா பிலிம் காட்ட ஆரம்பிப்பார்... நாடாளுமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி, சட்டமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி அப்படி இப்படினு அரசியல் வியாபார கணக்கு போட்டு திராவிடக்கட்சிகளுக்கு அல்வா கொடுப்பதுதான் இவர் வேலை.



ஒவ்வொரு தடவையும் இவர் போடும் கணக்கு சரியாக இருந்ததால் நாங்கள் எப்பவும் வெற்றி கூட்டணிதான்... பாமக ஒரு தவிர்க்க இயலாத கட்சி அப்படினு ஒரு இறுமாப்பு. இதையே சாக்காக வைத்து கூட்டணி வைக்கும் கட்சிகளிடம் பேரம் பேசி தலைவலியை ஏற்படுத்துவதே டாக்டர் ஐயாவின் பொழுது போக்கு... இநத நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த பாமக வழக்கம் போல் அவரின் அரசியல் வியாபார கணக்கின் படி எல்லோரும் எதிர்பார்த்தது போல் அதிமுகவில் ஐக்கியமானார்...


இன்றைக்கு வந்த முடிவின் படி பாமக வை மக்கள் அது போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் புறந்தள்ளிவிட்டனர்.... டாக்டர் ஐயாவின் நிலையை நினைச்சா..........ஹிஹிஹி....பாமகவின் வருங்கால அரசியல் நிலை..இனிமேல் இந்த பேரம் பேசுவது உட்பட எல்லாமே.......ஊஊஊஊஊஊ இருந்தா ஒரே கூட்டணியில் இருங்கடா... இல்லைனா பாமகவின் நிலைதான் உங்களுக்கு என்று மக்கள் தெளிவா சொல்லிட்டாங்க.........

முத்துக்குமாரா யாரு அதுன்னு கேள்விகேட்ட அமைச்சர் இளங்கோவனை ஈரோட்டில் மக்கள் குப்ப்ற படுக்க வச்சிட்டாங்க.... இவரின் தோல்விக்கு கொங்குநாடு அமைப்பும் ஒரு காரணம்.. அந்த அமைப்பு கிட்டத்தட்ட 1லட்சம் வாக்குகளைப்பெற்றுள்ளது..மதிமுக 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது.



நம்ம தொங்கபாலு தினசரி அறிக்கையின் மூலம் பிரபலமானவர்.... இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதில்லை என்று சத்தியம் பண்ணாத குறையா அறிக்கைவிட்டவர். லோக்கல் பிரச்சினையான கள் இறக்குவதை கண்மூடித்தனமா எதிர்த்தவர்.... இவருக்கும் ஆப்பு வச்சிட்டாங்க என்னா பேச்சு பேசினார் தொங்கபாலு... 46491 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணை கவ்விட்டார்.


மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் 36000வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டார். விலைவாசி ஏற்றதுக்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் அப்படினு புதுசா ஒரு ஐடியாவை சொன்ன முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் நிலைமை திரிசங்கு நிலைதான்...கடேசில ஒருவழியா ஜெயிச்சிட்டார்... இந்த வெற்றி அவருக்கு ஒரு பாடமாக அமையட்டும்...


விருது நகர்ல இன்னும் கண்ணைகட்டிக்கிட்டு இருக்கு.... காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்தாலும் அங்கே பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஒரு தகவல்............ புயல் கரையை கடக்குமா??


அப்புறம் ஈழம் ஈழம் அப்படினு சொன்னாங்க...அது என்னவாகப்போவுதோ........அய்யோ...

Wednesday, May 13, 2009

யாருக்கும் மெஜாரிட்டி கிடையாது....

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு

டைம்ஸ் நொவ் சேனல் கருத்துக்கணிப்பின் படி

காங்கிரசு கூட்டணி --- 199 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 183 இடங்கள்
கம்யூனிஸ்ட் --- 38 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 123 இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 24 இடங்கள்
திமுக கூட்டணி --- 16 இடங்கள்


ஹெட்லைன்ஸ் டுடே கருத்துகணிப்பு

காங்கிரசு கூட்டணி --- 191 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 180இடங்கள்
கம்யூனிஸ்ட் --- 38 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 134 இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 29இடங்கள்
திமுக கூட்டணி --- 11 இடங்கள்
 
 
9x நியூஸ் சேனல் கருத்துக்கணிப்பு


காங்கிரசு கூட்டணி --- 202 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 193இடங்கள்
கம்யூனிஸ்ட் கூட்டணி --- 101 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 43இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 14இடங்கள்
திமுக கூட்டணி --- 26இடங்கள்

கடைசி கட்டத்தில் அதிரடியான ஓட்டு வியாபாரங்கள்

வடிவேலு ஒரு படத்துல சொல்லுவார்'நல்லாத்தான போய்க்கிட்டு இருந்தது'.. அது மாதிரிதான் பிரச்சாரம் முடிந்தும் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது.நேற்று மாலைஇலங்கை சிடி விவகாரத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை, அதை வெளியிடலாம்,பொது மக்களுக்கு போட்டுக்காட்டலாம் என்ற தீர்ப்பு வந்தவுடன் சூட்டோடு சூடாக மக்கள் டிவி செய்திகள் என்ற பெயரில் மாலை ஆறு மணியில் இருந்து ஒளிபரப்ப ஆரம்பித்தது...

கிரிகெட்டில் கடைசிக்கட்ட ஓவரில் அடித்து ஆடுவது போல் மக்கள் டிவி சரியான நேரத்தில் ஒளிபரப்பிக்கொன்டிருந்தது... சரியா நேற்று 7 மணியிலிருந்து சென்னை முக்கிய ஏரியாக்களில் மின்சாரம் தடைப்பட்டது.. 8 மணியளவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டது.... என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல,.. அப்புறமா ஆரம்பிச்சது நம்ம தமிழ் தொலைக்காட்சிகளின் ப்ளாஸ் நியூஸ் திருவிளையாடல். முதலில் கலைஞர் டிவியில்" ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த மின்சாரத்தை துண்டித்து சதி வேலைகள் நடப்பதாக" ப்ளாஸ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது....


அப்ப்டியே அம்மா டிவிய பாத்தா " மின்தடையை ஏற்படுத்தி திமுகவினர் வாகாளர்களுக்கு பணம் பட்டுவாடா பண்ணுவதாக ப்ளாஸ் நியூஸ் ஓடுது.... மக்கள் டிவில பாத்தா " மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல், போலிஸ் கமிஷன்ர், தலைமைத்தேர்தல் ஆணையருக்கு மக்கள் டிவி சார்பா பாதுகாப்பு கேட்டு மனு. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கேபிள் டிவியில் மக்கள் டிவி தெரியக்கூடாது என ஆளும் கட்சி மிரட்டுவதாக ப்ளாஸ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. அதே வேளையில் அந்த இலங்கை சிடி காட்சிகள் திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து நள்ளிரவு ஒரு மணிவரைக்கும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.....

கடைசி நேரத்தில் மின் வெட்டும்,ஈழ விசயமும் ஓட்டு வியாபாரமாகி போனதுதான் வேதனை.... ஏதாவது ஒரு விசயம் பிடிபடாதா..அதை வச்சி என்னென்ன பண்ணலாம் எனக்காத்து கிடக்கும் அரசியல் கட்சிகளை என்ன சொலவது.?.... தனி ஈழம் என்ற மகத்தான ஒன்றை கூவி விக்கும் அரசியல்வாதிகளே..... உங்க வியாபாரம் எப்படினு 16ஆம் தேதி தெரியும்....

மின் தடையை ஏற்படுத்திய புண்ணியவான்களே..நீங்க செத்தா கண்டிப்பா உங்களுக்கு நரகம்தான்........உங்களையெல்லாம்.................


முக்கிய செய்தி


தமிழகத்தில் சுமார் 60 முதல் 65 சதவீத வாகுகள் பதிவாகியிருக்கிறதாம்.... பாண்டிச்சேரியில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்குதாம்.....

Monday, May 11, 2009

பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமி

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் முடிந்துவிட்டது.. கலைஞர் டிவியும் ஜெயாடிவியும் போட்டிப்போட்டு முட்டிக்கொண்டன..... இன்று பிற்பக பாண்டிச்சேரியில் சீறிப்பாய்ந்த சுனாமியாய் இருந்தது இயக்குனர் சீமானின் பேச்சு.அலுவலகத்தில் இருந்ததால் குறிப்பு எடுக்கமுடியவில்லை அவரின் பேச்சை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் தன்னுடைய கனல் தெரித்த பேச்சால் காங்கிரசை பின்னி பெடல் எடுத்துவிட்டார்.... அவர் பேச்சின் சில பகுதிகளை தருகிறேன்....

 விடுதலைப்புலிகளிடம் இருந்து கிளிநொச்சி வீழ்ந்து இவ்வளவு நாளாகியும் ஏன் மக்களை அங்கு வாழ விடவில்லை?


தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தி ஈழதமிழ் மக்கள் தன்னுடைய உள்ளத்தில் இருப்பதாக சொல்லியுள்ளார்..உங்கள் இதயத்தில் இருந்து தூக்கி எறியுங்கள்....அந்த பாவப்பட்ட இடம் வேண்டாம்...


எம் தமிழ் இனம் இலங்கையில் தினம் படும் துயரம் கண்டு இழவு வீட்டில் இருப்பது போல் இருக்கிறோம் எப்படி ஐயா உங்களால் இப்படி சிரித்துக்கொண்டே ஓட்டு கேட்க வருகிறீர்கள்?


இப்போது எதற்கெடுத்தாலும் இறையாண்மை என்று பேசுகிறீர்களே..ராஜீவ் காந்தி அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பும் போது அவரிடம் சொல்லியிருக்கலாமே அது அடுத்த நாடு.. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தமிழ் தேசிய ராணுவத்துக்கு கட்டமைப்புக்கு உதவி செய்தாரே?.. அப்போது யாராவது இந்திரா காந்தியிடம் அடுத்த நாட்டின் போராளி குழுக்களுக்கு எப்படி அனுமதியளிக்கலாம் என்று சொல்லியிருக்கலாமே? இல்லையே..ஏன்...


இந்திய ராணுவத்தில் தமிழன்,மலையாளி,கன்னடன் பஞ்சாபி என அனைத்து இன மக்களும் இருக்கிறார்கள்.. ஆனால் இலங்கை ராணுவத்தில் எம் இன மக்கள் இருந்திருந்தால் இந்த கஷ்டங்கள் எம் மக்களுக்கு ஏற்பட்டிருக்குமா?..... மத பயங்கரவாத நாடு இலங்கை அரசு...


இலங்கை பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழ் மக்கள் தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் மகன்,மகள் ஒரு பக்கம் என சிங்களத்தினர் பிரித்துவைக்கின்றனரே?? ஏன்...


எதற்கெடுத்தாலும் இந்தியா சனநாயகநாடு சனநாயகநாடுன்னு சொல்றாங்க.... எது சனநாயகம்... ஈழத்தமிழனுக்காக மாணவர் போராட்டம் என்ற உடனே கல்லூரிகள், கல்லூரி விடுதிகள் கால வரையின்றி மூடப்படுகிறது ... இதுவா சனநாயகம்..வக்கீல்கள் போராட்டம் என்ற உடனே.... போலிஸ் மூலம் கலவரம் மூட்டப்படுகிறது...இதுவா சனநாயகம்


இப்போது நடக்க இருக்கும் தேர்தல் பணத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்... இதில் தமிழ் இனம்தான் வெற்றி பெறவேண்டும்....

காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு ஒகேனெக்கல் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி எப்படி இலங்கையில் அதிகாரப்பகிர்வையும், போர் நிறுத்தத்தையும் ஏற்படுத்துவார்கள்?


இதுவரைக்கும் காவிரி பிரச்சினை, பெரியாறு பிரச்சினை, தன் சாதி, தன் மதம் என் பார்த்து ஓட்டுப் போட்ட தமிழன் இந்த ஒருமுறை மட்டும் தன் இனத்திற்காக, தன் மானத்திற்காக, தன் சொந்தங்களுக்காக ஓட்டுப்போடுங்கள்.. காங்கிரசை விரட்டி அடியுங்கள்....

பசங்க----விமர்சனம்--கலக்கிட்டீங்கடே

பெரிய ஹீரோ, ஹீரோயின்
ஹீரோவின் பஞ்ச் டயலாக்
குத்துப்பாட்டு, குத்து டான்ஸ்


மேற்சொன்ன எதுவுமே இப்படத்தில் கிடையாது.. ஆனாலும் புதுமுக இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய நேர்த்தியான, இயல்பான திரைக்கதை மூலம் இரண்டரை மணிநேரம் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறார். தமிழில் குழந்தைகளுக்கான படம் என்றால் விரல் விட்டு எண்னிவிடலாம்...அஞ்சலி, மழலைப்பட்டாளம்..... இந்தப்படத்தில் எல்லாம் குழந்தைகளின் செயல் இயல்புக்கு மீறியதாக இருக்கும்.... இந்தப்படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் எதுவும் கிடையாது.
 
  சிறிய டவுனில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு ஆண்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை..அந்த பள்ளியில் 6வது படிகும் ஜீவாவுக்கும், அதே வகுப்புக்கு புது மாணவனாக வரும் அன்புக்கும் இடையே நடக்கும் மோதல்.... இல்லை குறும்புத்தனமான சேட்டைகள் தான் கடைசிவரைக்கும்.. இருவரும் நண்பர்கள்  ஆனார்களா என்பதுதான் கதை...இந்த கதைக்கிடையே அன்புவின் சித்தப்பாவுக்கும், ஜீவாவின் அக்காவுக்கும் இடையே மலரும் காதல்.


''ஜீவாவுக்கு இப்ப கோபம் வரும், இப்ப பாரேன் கைய முறுக்குவான், நெஞ்சு வெடைக்கும் பாருனு'' பக்கடாவும் குள்ள மணியும் ஏத்திவிடும் காட்சிகள் அருமை...படம் முழுக்க காட்சிக்கு காட்சி மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது... சின்ன வயது குறும்புத்தனமான காட்சிகள்  அதிகம்... குறிப்பா சாக்பீஸை ஒளித்துவைப்பது, பென்சிலை கூர்மயாக சீவி குத்துவது, கருநாக்கு வாயன் சொன்னால் நடக்கும் என்று நம்புவது,அதிகாலையில் எழுந்து போட்டி போட்டு படிப்பது.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. அதிலும் புஜ்ஜியாக வரும் சிறுவனின் லூட்டிகள் சிரித்தே வயிறு புண்ணாகிவிட்டது.ஜீவாவின் அத்தை மகளிடம் அன்பு பேசும் போது ஜீவா கோப்படும் இடம் அருமை.


இந்த சின்னப்புள்ளைங்க கதைக்கிடையே வரும் மீனாட்சி ஸோப்பிக்கண்ணுவின் காதல் காட்சிகள் கலகல... அதுவும் செல்போனை வைத்து விளையாடும் காட்சிகள் புதுசு. சோப்பிக்கண்ணுவிடம் பாலிசி போட்டுக்கோ ..''உங்கிட்ட பழகுனதுல அது ஒன்னு மிச்சம் நினைச்சிக்கிறேன்னு'' மீனாட்சி சொல்லுமிடம்... தியேட்டரே சிரித்தது. இவர்களின் காதல் காட்சிகளில் பிண்ணனியில் ஒலிக்கும் பாடல் கலக்கல்.பெற்றோர்களுக்கிடையே நடக்கும் சண்டையால் பிள்ளைகள் பாதிக்கப்படுவது போன்ற காட்சிகள் நல்ல படிப்பினை... பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை... ஆனால் பாடல்களில் வரும் காட்சிகள் அருமை.....குடும்ப வாழ்க்கையில் ஆண்கள்தான் விட்டுக்கொடுக்கனுமாம் அப்படினு படத்துல சொல்றாங்க.... எவ்ளோதான் விட்டுக் கொடுக்க முடியும்,... ஆதி அண்ணே நீங்களே சொல்லுங்க அவ்வ்வ்வ்வ்வ்


படம் ஆரம்பித்து பத்து நிமிசத்துக்கு அப்புறம் நான் தியேட்டரில் இல்லை சிவசைலம் அத்திரி கலா நிலைய பள்ளிக்கூடத்திற்கே சென்றுவிட்டேன்.....


பசங்க-- பள்ளிக்காலநினைவுகள்


மொத்தத்தில் பசங்க கலக்கிட்டாங்க

Wednesday, May 6, 2009

வரும்ம்ம்ம்ம்ம்..........ஆனா வராது.........

தமிழகத்தேர்தல் களம் இந்த மாதம் ஆரம்பித்த அக்னி வெயிலைவிடவும் ரொம்ப சூடா போய்க்கிட்டு இருக்கு...நமது முதல்வர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் திமுகவில் பிரச்சாரத்தில் தொய்வு காணப்பட்டாலும் அதை அமைச்சர் அன்பழகனும்,தளபதி ஸ்டாலினும் அதை ஈடுக்கட்டும் வகையில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக தலைவி இந்த முறை ரொம்பவும் சுறுசுறுப்பா ஆரம்பிச்சி முடிக்கும் தருவாயில் உள்ளார்..... தேமுதிக தலைவர் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.


முன்பிருந்த மாதிரி சுவர் விளம்பரங்களை காண முடிவதில்லை... அதை ஈடுகட்டும் வகையில் டிஜிட்டல் போர்டுகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. தொலைக்காட்சியின் மூலம் தேர்தல் விளம்பரங்கள் தான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிறது.. ஆளுங்கட்சி தன்னுடைய சாதனைகளை சொல்லியும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டியும் வரும் விளம்பரங்கள் செம சூடு..... இப்போது அப்படி வந்த விளம்பரங்கள் சில


முதலில்ஆளும்கூட்டணியின்விளம்பரங்கள்...காங்கிரசுக்கட்சியின்வலிமையான பாரதம் விளம்பரம்... இதுல சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை.



ஆளும் திமுக தனது ஆட்சியின் சாதனைகளாக இலவச கேஸ் அடுப்பு, இலவச தொலைக்காட்சி,மருத்துவ காப்பீடு திட்டம், சத்துணவில் முட்டை போன்றவைகள் விளம்பரங்களாக வருகின்றன..இதில் மருத்துவ காப்பீடு விளம்பரத்தை முதலில் பார்க்கும் போது நகைக்கடை விளம்பரமோ என்று தோன்றியது..நல்லாவே செலவு செஞ்சிருக்காங்க இந்த விளம்பரங்களுக்காக...... இந்த விளம்பரங்கள் எந்த அளவுக்கு எடுபடும்?? பாக்கலாம்.


எதிர்க்கட்சியான அதிமுகவின் விளம்பரங்கள் திமுக ஆட்சியின் குறைபாடுகளை நக்கல் நையாண்டியோடு வருகிறது..... இலவச நிலம், மின்வெட்டு,ஒகேனெக்கல் திட்டம், விலைவாசி உயர்வு........ இவற்றில் இலவச நிலம் தொடர்பான விளம்பரம் கொஞ்சம் ஓவரா தெரியுது..... இதில் நக்கல் நையாண்டியில் டாப்பாக இருப்பது ஒகேனெக்கல் விளம்பரம்தான்....... இந்த விளம்பரத்துக்கு அவ்வளவு செலவெல்லாம் கிடையாது... ஒன்லி கட்டிங் மற்றும் ஒட்டிங் தான்........ முதலில் நம் முதல்வர் எப்பாடுபட்டாவது இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் எனக்கூறியது முதல் காட்சியாகவும், கர்நாடக தேர்தலுக்கப்புறம் ஒரு நல்ல முடிவெடுக்கப்படும் எனக்கூறியது இரண்டாவது காட்சியாகவும் வ்ருகிறது....... இதற்கு அடுத்த காட்சியாக திரையில் பாதி கலைஞர் கூறியதும்,அடுத்த பாதி தொட்டால் பூ மலரும் படத்தில் வடிவேலுவும்,என்னத்த கண்ணையாவும் பேசும் காமெடிக்காட்சியான வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா வராது என்ற வசனமும் சேர்ந்து கிண்டலும் நக்கலுமா..சிரிச்சி வயிறுதான் வலிக்குது.. யாராவது சொல்லுங்கப்பா..ஒகேனெக்கல் திட்டம் எந்த லெவலில் இருக்குதுன்னு.


அன்னை சோனியாவின் பிரச்சாரக்கூட்டம் முதல்வரின் உடல்நிலையை காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது... பிரச்சார தேதியை அறிவிக்கும் போது முதல் மருத்துவமனையில் தான் இருந்தார்..... இடையில் என்ன நடந்ததோ....


நம்ம புரச்சி தலைவி அம்மா கலைஞரின் உடல்நிலையை கிண்டலடித்து பேசியிருக்கிறார். மக்களை சந்திக்க பயந்து மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டதாக சொல்கிறார்.........நாளைக்கு தனக்கும் வயதாகும் இப்படி ஒரு நிலைமை வருமே யோசித்திருப்பாரா அம்மையார்.......

Saturday, May 2, 2009

முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் அமைச்சர் நேருவின் அறிக்கை

பஸ் கட்டண குறைப்பு குறைப்பு பற்றி நம்ம அமைச்சர் நேரு கொடுத்த அறிக்கையை படிச்சா சிரிக்கவா அழவான்னு தெரியல... வழக்கம் போல் அம்மா ஆட்சியில இருந்த மாதிரிதான் இப்ப இருக்குறதாவும் திமுக ஆட்சியில் பஸ் கட்டண உயர்வே இல்லைனு அடிச்சி சொல்லியிருக்கார்...
.
அவரின் அறிக்கையும் எனது பதிலும்.

அமைச்சரின் அறிக்கை::திமுக ஆட்சி 2006ல் அமைந்த பிறகு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப் படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.

கலர் கலரா பேருந்துகளின் நிறத்தை மாற்றி சாதாரண பேருந்துகளில் M போர்டு போட்டு 2ரூபாய் டிக்கெட்டை 3 ரூபாயா உசத்துனது இந்த ஆட்சியில் தானே... இது கட்டண குறைவா இல்லை உயர்வா//

அமைச்சரின் அறிக்கை:1.5.2006  திமுக பொறுப்புக்கு வந்தபோது சென்னை மாநகரத்தில் மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் சாதாரணப் பேருந்துகள் 1095ம், எல்எஸ்எஸ் பேருந்துகள் 1043ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 169ம், டீலக்ஸ் பேருந்துகள் 11ம், எம் சர்வீஸ் பேருந்துகள் 235ம் ஓடிக் கொண்டிருந்தன. இதில் ஒவ்வொரு விதமான பேருந்துகளுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் அதிமுக ஆட்சியிலே விதிக்கப்பட்ட கட்டணங்கள் அப்படியே நடைமுறையில் இருந்து வந்தன.

அம்மையார் ஆட்சியில் மணிக்கொரு முறை வந்து கொண்டிருந்த M சர்வீஸை நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றியது எந்த அரசுங்கோ?..... அதே மாதிரி எல்.எஸ்.எஸ் சர்வீசை குறைத்து விரைவுப்பேருந்துகளையும், டீலக்ஸ் பேருந்துகளையும் அதிகமாக்கியது எந்த ஆட்சியில்... குறிப்பா நெரிசல் நேரங்களில் விரைவுப்பேருந்துகளையும், டீலக்ஸ் பேருதுகளின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களின் டவுசரை உருவியது எந்த ஆட்சி?

அம்மையார் போட்ட கோடுல நீங்க ரோடே போட்டுட்டீங்க,.


 அமைச்சரின் அறிக்கை:அவ்வப்போது எழுகின்ற கோரிக்கை களின் அடிப்படையில் பேருந்து களின் தரம்மாற்றப்படுவது உண்டே தவிர கட்டணங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்டது தான் இப்÷õதும் தொடருகிறதே தவிர, தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டண உயர்வோ, கட்டணக் குறைப்போ எதுவும் செய்யப்பட வில்லை என்பதுதான் உண்மை.

அம்மையார் ஆட்சியில் சாதாரணப்பேருந்துகளில் மினிமம் டிக்கெட் இரண்டு ரூபாய்... விரைவுப்பேருந்தில் மினிமம் டிக்கெட் மூன்று ரூபாய்.... எல்லாம் சரி ஆனா இப்ப விரைவுப்பேருந்திலயும் மினிமம் டிக்கெட் இரண்டு ரூபாயாக மாற்றியதற்கு என்ன அர்த்தம்......
.
மொத்தத்தில் மக்களின் விருப்பம் என்பது தேர்தல் வந்த பிறகுதான் நம்ம அமைச்சருக்கு ஞாபகம் வந்திருக்கு... இதை ஒரு ஆறு மாதம் முன்னாடி செஞ்சிருந்தீங்கன்னா சரியா இருந்திருக்கும்.... இன்னைக்கு மக்கள் நமட்டு சிரிப்புடன் டிக்கெட் வாங்குவதை பார்த்தால் ஒரு முடிவோடத்தான் இருக்காங்க.

  இந்த விசயத்தில் மூன்று ஆண்டுகளாக மக்களின் டவுசரை உருவிட்டு இப்ப போட சொல்றிங்க.......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போட்டுக்குறோம்

 மேலும் இதை பற்றி தேதல் ஆணையம் மவுனமாக இருப்பது ஏனோ??

Thursday, April 30, 2009

2011தேர்தல் வருது-தமிழக அரசு அதிரடி சலுகை--மக்களுக்கு

இப்படி நடக்குமா என்றால் நடக்கும்.... ஆட்சியில் இருப்பவர்கள் மனது வைத்தால்....யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்துவிட்டது... இது தேர்தல் கால சலுகையா?? தெரியவில்லை... மக்களுக்கு நல்லது நடந்தா சரி..... ஆனால் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் மக்கள் பிரச்சினை ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டும் மர்மம் என்னவோ?.. மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சினையா??.அப்படினா என்ன என்ற கேள்விதான் கிலோ கணக்கில் கேட்கப்படும்.


கடந்த மூன்று வருடங்களாக மக்களின் முக்கிய பிரச்சினையாக இருந்தது மறைமுக பஸ் கட்டண உயர்வு...ஆட்சியாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பேருந்துகளின் வர்ணத்தை மட்டும் மாறி விட்டு தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு கட்டணத்தை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களை பிழிந்தெடுத்துவிட்டார்கள்... நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த பிரச்சினையை தற்போது இந்த அரசு தேர்தலை மனதில்வைத்துக்கொண்டு கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள். மாநகரப்பேருந்துகளில் சாதாரண பேருந்துகளில் M என்று எழுதிவிட்டு மினிமம் கட்டணமாக 3ரூபாய் என்பது இன்றிலிருந்து 2ரூபாயாக குறைத்திருக்கிறது
தமிழகஅரசு.விரைவுப்பேருந்துகளுக்கும் இதே மினிமம் கட்டணம் தான்.... சொகுசுப்பேருந்துகளில் எப்படி என்று தெரியவில்லை.....

தொலைதூரப்பேருந்துகளில் கட்டணத்தை குறைத்தார்களா? என்பது தெரியவில்லை//// தெரிஞ்சா யாராவது சொல்லுங்கப்பா..... கட்டணத்தை குறைத்ததுபோல் சொகுசுப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்தால் மக்கள் இன்னும் சந்தோசப்படுவார்கள்...... தேர்தல் வரும்போதாவது அரசுக்கு மக்களின் ஞாபகம் வருகிறதே....... கலைஞர் ஐயா.. இதேபோல் இன்னும் ஏகப்பட்ட அன்றாட மக்கள் பிரச்சினையெல்லாம் இருக்குது...........

ஆனாலும் ஒருவிசயம் புரியவில்லை... கடந்த மூன்று வருடங்களாக கட்டணக்கொள்ளை அடித்துவிட்டு இப்போது வரும் தேர்தலுக்கு மட்டும் அல்லாமல் 2011 சட்டமன்றத்தேர்தலையும் மனதில் வைத்துக்கொண்டு கட்டணத்தை குறைத்த கலைஞர் அரசின் ராஜதந்திரம்......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......பெட்ரோல் டீசல் விலை குறையும்போதும் கலைஞருக்கு இந்த பிரச்சினை பெரிதாக தெரியல... இப்பதான் தெரிஞ்சிருக்கு

இதுக்காகவே தேர்தல் அடிக்கடி வரவேண்டும்..மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீரவேண்டும் கடவுளே...

Monday, April 27, 2009

கலைஞரை காப்பாற்றிய இலங்கை அரசுக்கு நன்றி

ஒரு வழியாக உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தமிழின தலைவர் கலைஞரின் உண்ணாவிரதம் முடிந்துவிட்டது... போன ஜூனியர் விகடன் இதழில் கலைஞர் தனது கடேசி ஆயுதமாக இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லியிருந்தார்கள்... அதே போல் நடந்துமுடிந்துவிட்டது. எல்லாத்துக்கும் அந்த அம்மாவும் கலைஞரும் தான் காரணம்.. இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை எடுபடாது என்ற கருத்தை தன் முதல் நாள் பிரச்சாரத்திலேயே முறியடித்து கலைஞருக்கு செக் வைக்க ஆரம்பித்தார்....இது கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் எல்லா பிரச்சாரக்கூட்டத்திலும் கலைஞரை காய்ச்சி எடுக்க ஆரம்பித்தார் அம்மா.... மத்திய அரசு சிங்கள ராணுவத்துக்கு அளித்து வரும் ராணுவ உதவிகள் குறித்து கலைஞர் முதல் காங்கிரசு பெருந்தலைகள் மவுனம் சாதித்தது எல்லாமே தமிழகத்தில் திமுக கூட்டணியை கொஞ்சம் அசைச்சு பார்க்க ஆரம்பித்தது.முதல் ஆயுதத்தை கையில் எடுத்தார் கலைஞர்.. வேலை நிறுத்தம்..ஆனால் கலைஞர் எதிர்பார்த்த அளவுக்கு வேலை நிறுத்தம் வேலை செய்யவில்லை மாறாக எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது...முக்கியமா அன்னைக்கு எல்லா அத்தியாவசியக்கடைகளும் மூடியிருக்க டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்து வியாபாரத்தில் சக்கை போடு போட்டது தமிழக வேலை நிறுத்த வரலாற்றில் ஒரு மைல் கல்.

பந்திற்கு பிறகு மத்திய அரசின் சார்பாக சிறப்பு தூதுவர்களாக அனுப்பப்பட்ட மேனனும்,நாராயணனும் இலங்கை போய் என்னத்த பேசினாங்க என்ற விவரம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை... மத்திய அமைச்சர் சிதம்பரமும் கலைஞரை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து பேசும்போது இன்னும் சில நாட்களில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று கூறினார்.அந்த நாள் வரைக்கும் காத்திருந்த கலைஞர் இன்று காலை யாரு எதிர்பாராத வகையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.... அனைத்து தமிழ் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தது.. யாரும் உண்ணவிரதம் இருக்கவேண்டாம் என்ற கலைஞரின் அன்பான வேண்டுகோளை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும் கழக முண்ணனியினர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தனர்... ஒரு வழியாக இலைங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்து விட்டதாக கூறி உண்ணாவிரதமும் முடித்து வைக்கப்பட்டது....போர் பகுதிகளில் குண்டு போட்டால் புல் பூண்டுகளுக்கு இனிமேல் சேதாரம் வந்துவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இலங்கை அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்குமோ???

யாருக்காக இந்த உண்ணாவிரதம்....எல்லாத்துக்கும் மத்தியில் ஆளும் காங்கிரசு அரசுதான் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும் ஒரு பக்கம் இலங்கைக்கு ராணுவ உதவி அளித்துவிட்டு மறுபுறம் இலங்கை தமிழருக்கு ஆதரவாக என்ற காங்கிரசின் நிலைமையால்தான் இன்று தமிழினத்தலைவர் இந்த முடிவுக்கு வந்தார்...காங்கிரசு அரசு நினைத்திருந்தால் போரை எப்போதோ முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்... அதையும் செய்யலை.... மதியம் போர் நிறுத்தம் என்ற செய்தி வந்த பிறகு மாலை இலங்கை அரசின் ராணுவத்தளபதி போர் நிறுத்தம் குறித்து எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று சொல்கிறார் ........... எது உண்மை....

"கனரக ஆயுதங்களையும், பேரழிவு தரும் ஆயுதங்களையும், விமானப்படையையும் பயன்படுத்தமாட்டோம்....தற்காப்புக்காக சிறு தாக்குதல் தொடுப்போம்". இதுதான் இலங்கை அரசின் போர் குறித்த உறுதி மொழி..... இதுக்கு பெயர்தான் போர் நிறுத்தமா???........... இன்று நடந்த எல்லா நிகழ்வுகளும் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் தானோ? என்ற சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.....எது எப்படியோ கலைஞரை உண்ணாவிரதத்திலிருந்து காப்பாற்றிய இலங்கை அரசு வாழ்க.....

ஹிஹிஹி தேர்தல் வந்திருச்சி வேற ஒன்னும் இல்லை.......



குழப்பத்தில் அப்பாவித்தமிழன்.........

Thursday, April 23, 2009

திருடா திருடி-வெள்ளித்திரை-டாஸ்மாக்-- ஷேர் ஆட்டோ--தொங்க பாலு-தமிழக பந்த் அபார வெற்றி

இன்னும் சற்று நேரத்தில் தமிழினத்தலைவர் அவருடைய தொலைக்காட்சியில் கீழ்க்கண்டவாறு பேட்டியளிப்பார் " தமிழக மக்களின் ஒத்துழைப்போடு பந்த் அபார வெற்றி என்று"... நாமளும் அத கேட்டுக்கினு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.. நேற்று நம்ம தலைமை செயலாளர் விட்ட அறிக்கை இவ்வளவு காமெடியா போவும்னு நினைக்கலை....

காலையில் சன் டிவியில் திருடா திருடி, மதியம் சரவணா .... கேடிவியில் காலையில் ஆயுதம்,மதியம் ஆனந்தம், கலைஞர் டிவியில் காலையில் முரட்டுக்காளை, மதியம் வெள்ளித்திரை... வழக்கம் போல் தமிழ் மியூசிக் சேனல்களில் தன் காதலிக்கோ பிரண்டுக்கோ பாட்டுக்கேட்கும் கூட்டம்.....எதையும் கண்டுகொள்ளாத எதிரணியிணரின் தொலைக்காட்சிகள்...... பணிமணைகளில் அழகாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்துகள்... அதற்கு காவலாக காவல் துறையினர்....முக்கிய சாலைகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தும்... தமிழ்நாட்டு மக்களின் குடிதாகத்தை மட்டும் எப்பவும் தீர்த்து வைக்கும் டாஸ்மாக் திறந்திருந்த காட்சிகள்....பிராய்லர் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையைவிட இன்று அதிக கூட்டம்.... அபார வசூல் செய்த ஷேர் ஆட்டோக்கள் மற்றும்ஆட்டோக்கள்...தொட்டுக்கொள்ள ஊறுகாயாக ஐபிஎல் போட்டிகள்இப்படி பொது மக்களின் ஒத்துழைப்போடு இந்த பந்த் அபார வெற்றி பெற்று விட்டது....

மொத்தத்தில் பந்த் என்ற பெயரில் தமிழ்நட்டு மக்களை ஒரு நாள் ஓய்வு எடுக்க வைத்த கலைஞரின் அன்புக்கு நான் அடிமை..........



கடைசியா ஒரு கேள்வி இன்னைக்கு எதுக்கு பந்த் நடத்தினாங்க.........யாருக்காவது தெரியுமா ........... சொல்லுங்கப்பா



தொங்க பாலு அளித்த பேட்டி இன்னும் டென்சனை கிளப்பியது.... இலங்கை பிரச்சினையில் மத்திய அரசும் மாநில அரசும் தலையிட்டு இருப்பதால்தான் அங்குள்ள நிகழ்வுகள் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கிறதாம்.... மேலும் இலங்கைக்கு உதவும் இஸ்ரேல் சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை நிறுத்த பன்னாட்டு அமைப்பிடம் மத்திய அரசு பேசுமாம்......... முடியல................ பேட்டி அளிக்கும் போது அந்த முகத்தை பாக்கனுமே... திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி..

Wednesday, April 22, 2009

நாளைக்கு கலைஞர் டிவியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமா??

தன்மானத்தமிழினத் தலைவர் கலைஞர் மீண்டும் தனது அரதப்பழசான முறையை ஈழப்பிரச்சினையில் கையில் எடுத்துள்ளார்... பொது வேலை நிறுத்தம்... கொஞ்ச மாசம் முன்னாடி இதேமாதிரி ஈழப்பிரச்சினையில் எதிரணியினர் பொது வேலை நிறுத்தம் என்றவுடன் தன்மானத்தமிழர் இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அப்ப்டினு சொன்னாரு... அப்ப நாளைக்கு நடக்கும் பொது வேலை நிறுத்தம்.???ஹிஹிஹி


நாளைக்கு பஸ் போக்குவரத்து இருக்குமா???.... இல்ல சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்கும்போது பஸ் போக்குவரத்து இருந்ததே அதே மாதிரிதானா....... ஒன்னுமே புரியலைப்பா........ இது எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம். இதுவரைக்கும் அவங்க பிரச்சாரம் செஞ்ச எல்லா தொகுதிலயும் ஈழபிரச்சினையையும், தமிழின தலைவரையும் போட்டு தாக்கிடிச்சி.... தமிழ்நாட்டில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் தனது பெயர்தான் வரவேண்டும் எனத்துடிக்கும் தமிழினத்தலைவர்க்கு வேற வழி தெரியல...... அதனால டெக்னால்ஜி எவ்வளவோ வளர்ந்திடிச்சி ஆனாலும் தலைவர் பழசை மறக்காமல் தந்தி போட சொல்லுறார்.....


எல்லாம் இருக்கட்டும்.... நாளை பொதுவேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி ஈடுபடுமா??எல்லோருக்கும் வேண்டுகொள் விடுக்கும் நம் தமிழினத்தலைவர் அவரது நிறுவனத்தை மட்டும் விட்டுவிடுவாரா என்ன??? அதனால நாளைய வேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி ஈடுபட இருப்பதால் பகல் முழுவதும் ஒளிபரப்பு இருக்காது என நம்புவோம்....


போன மாசம் தமிழினத்தலைவர் நாற்பதும் நமக்கே அப்படினார்... இப்ப என்னடான்னா 30ல் வெற்றி பெறுவோம் அப்படின்றார்... என்ன ஆச்சு நம்மவருக்கு<<<<<


அடப்போங்கப்பா நீங்களும் ஒங்க அரசியலும்

தற்போது வந்த செய்தி

யப்பா நாளைக்கு பஸ் வழக்கம்போல் ஓடுமாம்


அரசு அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் இயங்குமாம்
இந்த வேலை வேலை நிறுத்தத்துக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லையாம்

தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு.......

Sunday, April 19, 2009

கருணநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா?... தூத்துக்குடியில் அம்மா ஆவேசம் + ஈழப்பிரச்சினையில் விசயகாந்தின் காமெடி..

அம்மா நேற்று நாகர்கோவிலில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து நெல்லை,சங்கரன் கோவிலில் பிரச்சரத்தை முடித்து தற்போது தூத்துக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்... இந்த நான்கு இடங்களிலும் தன்னுடைய மேடை பேச்சில் ஒரே மாதிரியான விசயங்களை மட்டுமே பேசினார்... அந்தந்த தொகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை பற்றி அம்மா பேசவில்லை... மிகப்பெரிய ஆச்சரியம் ஈழப்பிரச்சினை பற்றி பேசியதுதான்...... தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை அவ்வளவாக எடுபடாது என்ற கலைஞர் மற்றும் காங்கிரஸின் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் நோக்கத்தில் அம்மா ஈழ பிரச்சினையை கையில் எடுத்திருப்பாரோ?....



நேற்று சென்னையில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய கலைஞர் அந்த மேடையில் உதய சூரியன் சின்னம் மட்டும் இருந்ததாகவும், கைச்சின்னத்தையும் அதில் வைக்குமாறு மாவட்ட செயளாலரிடம் சொன்னதாகவும் கூறினார்.. கடைசி வரைக்கும் கைச்சின்னம் மேடையில் வைக்கப்படவில்லை.... இன்று இதுகுறித்து தூத்துக்குடியில் பேசிய அம்மா "தன்னுடைய கட்சியின் மாவட்ட செயளாலரை கட்டுப்படுத்த முடியாத கருணாநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா."....என ஆவேசமாக கேட்டார்.....தன்னுடைய பேச்சில் எல்லா இடங்களிலும் ஆளும் கட்சி தோற்ற மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல் வழக்கம் போல் மைனாரிட்டி திமுக அரசு, குடும்ப ஆட்சி போன்றவைகள்தான் அதிகம் இருந்தது...... ஏற்கனவே திருமங்கலத்தில் குடும்ப ஆட்சி பற்றி பேசி தேர்தலில் தோற்றதை மறந்து விட்டாரோ...... யாராவது சொல்லுங்கப்பா கருணாநிதியை திட்டுவதைவிட மக்கள் பிரச்சினையை பற்றி கொஞ்சம் அதிகம் பேச சொல்லுங்கப்பா...


அப்புறம் நம்ம கேப்டன் ஈழப்பிரச்சினை பற்றி நேற்று நீலகிரியில் பிரச்சாரம் பண்ணும் போது திருவாய் மலர்ந்திருக்கிறார் அது என்னவென்றால்"ஈழ மக்களை காப்பாற்ற இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டும்" கூறுகிறார்..... ஆமா நம்ம கேப்டன் இவ்ளோ நாள் எங்க இருந்தார்.........? இலங்கையில் இன்று வரைக்கும் தமிழ் இனத்தை அழிக்கும் பணியில் சிங்கள ராணுவத்தின் மூளையாக செயல்படுவது அவருக்கு தெரியாதோ?,.......... அவருக்கு எப்படித்தெரியும் அதிமுகவின் ஓட்டு வங்கியை தகர்க்கனும் அப்படின்றதுக்காகவே காங்கிரசுக்கிட்ட பொட்டி வாங்கியதும் மறந்து போச்சு போல......... யப்பா யாரவது அவருக்கு சொல்லுங்கப்பா... இந்திய ராணுவம் அங்கதான் இருக்கு ராஜபக்ஷேவின் அடிப்பொடியா வேலை செஞ்சிட்டு இருக்குன்னு .............

Saturday, April 18, 2009

கேள்வியும் நானே-- பதிலும் நானே ---- தொடர்பதிவு

இந்த தொடர்பதிவுக்கு என்னை மாட்டி விட்ட மாப்பிள்ளை கடையம் ஆனந்த நல்லா இருடே.. படிக்கும்போது எக்ஸாமுல மொத்தமா ஒரு 15 கேள்விக்கு பதில் எழுதுறதுக்குள்ளே தாவு தீந்துரும்... இங்க என்னடான்னா 30 கேள்வியாம்.... இதுக்கு பதில் எழுத தினசரி மிரட்டல் வேறு மாப்ளே நீ எங்கிருந்தாலும் வாழ்க....

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அத்திரி இது நான் படித்த பள்ளியின் பெயர்( ஒன்னாப்புல இருந்து எட்டாப்பு வரைக்கும் படிச்ச பள்ளி).. எனக்கு இந்த பெயர் பிடிச்சிருக்கு

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இதையெல்லாம் சொல்லவா முடியும்?. தினசரி அடி வாங்கிட்டு இருக்கேன்....( என் பையனிடம்)அதனால தினசரி அழுற மாதிரி நடிக்க வேண்டியிருக்கு..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையெழுத்து பிடிக்கும்.... ஆனால என் கையெழுத்தைவிட என் தம்பியின் கையெழுத்து மிக அழகாக இருக்கும்........ அதனால என் தம்பியின் கையெழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்

4).பிடித்த மதிய உணவு என்ன?

தக்காளி ரசம் தொட்டுக்க பருப்பு குழம்பு  + அப்பளம்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

யாரிடமும் மிக எளிதில் பழகுவது கிடையாது.... கொஞ்சம் டைம் எடுத்துக்கிறது என் ஸ்டைல்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

எங்க ஊர் கடனா அணைக்கு மேல் தோணியாறு அணையில் வந்து கலக்குமிடம் மிக அழகாக இருக்கும்... அங்கு குளிப்பதுனாலே செம குஷிதான்....... அருவின்னா குற்றால அருவியவிட அகஸ்தியர் அருவிதான் பெஸ்ட்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முதலில் முகத்தைதான் பார்ப்பேன்... அதுதான் என் பழக்கம்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என்கிட்ட உள்ள எல்லா விசயமும் எனக்கு பிடிக்கும்...

பிடிக்காதது என்னுடைய முன் கோபம்... அதையும் முடிந்த அளவுக்கு தவிர்க்க முயல்கிறேன். காரணம் என் பையன்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விசயம்: என் வரவுக்குள் செலவு செய்கிற பெரும் குணம்


பிடிக்காத விசயம்: தொன தொனன்னு கேள்வி கேக்குறது

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

சொந்த ஊரை விட்டு வெளியூரில் இருப்பதுதான் என்ன பண்றது???

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

மரூன் கலர் சட்டை,சிமெண்ட் கலர் பேண்ட்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

டென் ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஆஸ்திரேலியா 196/3... 33வது ஓவர்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மெல்லிய ரோஸ் கலர்

14.பிடித்த மணம்?

நெல் அறுவடை நேரங்களில் வயலில் உள்ள மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1. தாமிரா: தங்கமணி நையாண்டி பதிவானாலும், காதல் ரசம் சொட்டும் கவிதையானாலும் கலந்து கட்டி அடிப்பவர்


2. கேபிள் சங்கர்: நானும் இவரும் ஒரே துறையில் பணியாற்றுபவர்கள் என்றாலும் அண்ணனின் கதைகள் பட்டய கிளப்பும்.... சிறந்த உழைப்பாளர்

3.கார்த்திகை பாண்டியன்: புதுவரவு என்றாலும் மதுரைக்கே உரிய குசும்புடன் கலக்கி வருபவர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

கடையம் ஆனந்த் எந்த பதிவு எழுதினாலும் மென்மையான் போக்கிலேயே எழ்துவாரு.... ஆனாலும் மாப்பிள்ளைக்கு கவிதையும் வரும் என்பதற்கு இந்த பதிவுதான் சூப்பர்ப்...http://manam-anandrey.blogspot.com/2009/03/blog-post_13.html

17. பிடித்த விளையாட்டு?

படிக்கும் வயதில் செல்லாங்குச்சி(கில்லி), கபடி விளையாட பிடிக்கும்... இப்போது கிரிக்கெட்டும் கால்பந்தும் பார்ப்பதற்கு பிடிக்கும்

18.கண்ணாடி அணிபவரா?

அப்படின்னா...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கதை எப்படியோ ஆனால் திரையில் கதை சொல்லும் விதம் அழகாக சும்மா விருவிருனு போகக்கூடிய படங்கள் பிடிக்கும்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

சன் டிவியில் பொல்லாதவன்...... படம் நல்லா இருந்தது.

21.பிடித்த பருவ காலம் எது?

இளவேனிற்காலம்

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புத்தகம் படிச்சி ரொம்ப நாளாவுது....

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது மாற்றுவேன்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: மெல்லிய காற்றில் அசையும் மரங்களின் சத்தம்
பிடிக்காத சத்தம்: நகர வாழ்வின் எல்லா சத்தங்களும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சிவசைலம் டூ மும்பை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.

ஒரு வேலையும் தெரியாமல் ,செய்யாமல் மற்றவர்களை போட்டுக்கொடுத்து முன்னேறும் ஜென்மங்கள்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வேற என்ன மனசுதான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இயற்கை அழகுள்ள எல்லா இடங்களும் எனக்கு சுற்றுலாஸ்தலம் தான்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

தானுண்டு தன் வேலையுண்டு --- இப்படித்தான் இருக்கனும் அப்படின்றது என் ஆசை... இதுலயும் ஏகப்பட்ட சிரமங்கள்.... சமாளிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பெரும்பான்மையான ரங்கமணிகள் என்ன செய்வாங்களோ அதைத்தான் நானும் செய்வேன்...... யப்பா எஸ்கேப்..

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

1. தாமிரா
2. கேபிள் சங்கர்
3.கார்த்திகை பாண்டியன்

Thursday, April 16, 2009

அதிமுகவுக்குத்தான் எங்க ஓட்டு --- ஜெயா டிவியின் ....???/

இன்று மாலை 6 மணியிலிருந்து அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சாரத்தை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது.பிரச்சாரக்கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ரபி பெர்னாட் ஒரு மைக்கை வச்சிக்கிட்டு அந்த பிரச்சாரக்கூட்டத்துல எல்லார்க்கிட்டயும் கேள்வி கேட்டுக்கிட்டே வந்தார்... கூட்டத்துல இருந்த எல்லோருமே அம்மாதான் எல்லாம்,,,எங்க பகுதில அதிமுகவுக்குத்தான் ஓட்டு.... அப்படினு சொன்னாங்க..இதுல ஆச்சரியபடுறதுக்கு ஒன்னுமில்ல. ஏன்னா நடக்கிறதுக்கு அதிமுக கூட்டம்.......அதனால் பதில் வந்தது. அதிமுக கூட்டம் நடக்குதுன்னா அதுல இருக்குறவன் எல்லாம் அதிமுகக்காரவுக என்பது எல்லோருக்கும் தெரியும்... இருந்தாலும் இந்த காமெடிய ஜெயா டிவி நேரலை செஞ்சி தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டார்கள்.


இந்த கூட்டத்தில் நான் இருந்தாலும் அதிமுகவுக்குத்தான் அப்படினு சொல்லியிருப்பேன்... ஏன்னா சும்மாவா காசும், பிரியாணியும்.... இன்னைக்கு இந்த நிகழ்ச்சில தொண்டர்கள் கிட்ட கேள்விய மக்கள் கிட்ட கேப்பாங்களா???.... ஜெயா டிவி நேரலை செய்வது இப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சி... இன்னும் கலைஞர் டிவி இன்னும் ஆரம்பிக்கலை..... ஏப்ரல் 18ஆம் தேதி ஆரம்பிச்சிடுவாங்க...... இன்னும் ஒருமாசத்துக்கு நல்ல காமெடி காட்சிகள் காணும் வாய்ப்பு நம்ம தமிழ் மக்களுக்கு..........

Friday, April 10, 2009

தயாநிதி மாறனின் வெற்றியை சுலபமாக்கிய அதிமுக

அதிமுகவில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய சென்னை வேட்பாளரின் பெயரை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தேன்... காரணம் கடந்த முறை மத்திய சென்னையில் அதிமுக சார்பில் திரு. பாலகங்கா நிறுத்தப்பட்டார்.... போட்டி கடுமையாக இருந்தது.. ஆளும்கட்சிக்கு எதிரான அலையால் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திரு.தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். கடந்த முறை போலவே இம்முறையும் அதிமுக சார்பில் பலமான வேட்பாளர் போட்டி யிடுவார் என்று எதிர்பார்த்தால் அம்மாவுக்கு என்ன ஆச்சு? எஸ்.எஸ். சந்திரனை நிறுத்தி தயாநிதி மாறனின் வெற்றியை சுலபமாக்கிவிட்டார்.



2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கோட்டையான தலைநகர் சென்னையிலுள்ள 14தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.அப்படி இருந்தும் அம்மா மத்திய சென்னையில் ஏன் எஸ்.எஸ். சந்திரனை நிறுத்தினார்/// ஒருவேளை கண்கள் பணித்து இதயம் இனிக்கும் முன் ஆளும் கட்சிக்கு எதிராக கிட்டத்தட்ட அதிமுகவுக்கு ஆதரவாக சன் குழுமம் செயல்பட்டதாலும், தேனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செஞ்சதாலும் அம்மா ஏதாவது செய்யனும்னு நினைச்சு இதை செஞ்சாரோ???



எது எப்படியோ மதுரையும், மத்திய சென்னையும் திமுகவுக்கு இரண்டு தொகுதிகள் உறுதி......

Tuesday, April 7, 2009

இம்சை அரசனும் கலைஞர் டிவியும் -- வைகோவும் அம்மாவும்

பொதுவாக தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்கள் போட்டால் படம் இரண்டரை மணி நேரம் என்றால் விளம்பரத்தோடு 4 மணி நேரம் போட்டுத்தாக்கும் பழக்கம் உண்டு. இந்தியன் திரைப்படம் ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்பிய போது 5 மணிநேரத்திற்கும் மேலாக போட்டு ஒரு சாதனையை உண்டு பண்ணினாங்க... இந்த மாதிரி புதுப்படங்கள் விசயத்தில் சன் டிவி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். படம் இரண்டரை மணி நேரம் என்றால் விளம்பரத்தோடு சேர்த்து மூன்றரை மணி நேரம் தான் அவர்கள் கணக்கு.... ஆனால் இந்த விசயத்தில் சன் டிவியை மிஞ்சி விட்டது நமது கலைஞர் தொலைக்காட்சி.கலைஞர் டிவியில் ஒளிபரப்பபட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை இம்சை அரசன் படத்தையே சாரும்... அதனாலதான் என்னவோ இந்த ஒன்றரை வருடங்களுக்குள் இப்படத்தை அஞ்சாறுவாட்டி காண்பிச்சிட்டாங்க... அதுவும் விளம்பரங்களே இல்லாமல்....இந்த மாதிரி ஹிட் படங்கள் சன்னுக்கு கிடைத்தால் வருசத்துக்கு ரெண்டு வாட்டி காண்பித்து நல்லா அறுவடை பண்ணுவாங்க... கலைஞர் டிவிக்கு அனுபவம் போதலை... மக்களை சந்தோசப்படுத்துவதற்காக இந்த நஷ்டத்தை தாங்கிக்கிறாங்க போல............

தமிழ்நாட்டில உள்ள எந்த அரசியல் வாதிக்கும் இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது... நேத்து ஆரம்பிச்ச கட்சியெல்லாம் கூட்டணி, சீட்டு, என்று பிசியா இருக்கும் இந்நேரத்தில் வைகோவின் நிலைமை அவரே அப்படி இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். நேற்று தொலைக்காட்சியில் பேட்டி கோடுக்கும் போது கண்ணில் தண்ணி வராத குறையாக தனக்கு இப்போதைக்கு தேர்தல் குறித்தோ,கூட்டணி குறித்தோ எண்ணம் வரவில்லை என்கிறார். அம்மா நெஞ்சில் குத்துகிறார் என்றால் அவரது கட்சிக்காரர்கள் முதுகில் குத்துகிறார்கள்.. தினசரி அவரது கட்சியில் இருந்து யாராவது ஒருவர் எதிர் அணிக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அம்மாவும் கலைஞரும் இந்த விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து கொண்டு வைகோவை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். இப்போதைக்கு கூட்டணிய விட்டு வெளியவும் வர முடியாது..... திரிசங்கு நிலையில் தவிக்கிறார் வைகோ.... டாக்டர் மருத்துவர் ராமதாசு அளவுக்கு இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியவில்லை...பாவம்.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..............

Monday, April 6, 2009

மீண்டும் சிவசைலம்--கடனா நதி அணைப் புகைப்படங்கள்

கடனா நதி அணை விரிவாக்கத்தின் மறு பகுதி
கடனா நதி அணை
கடனா நதி அணை மீன் பண்ணையின் தோற்றம்
எங்க ஊர் மெயின் ரோடு, பேருந்து நிறுத்தம்
தூரத்தில் தெரிவது சிவசைல நாதர் திருக்கோயில்
எங்க ஊர் தெரு...............

டிஸ்கி: புகைப்படங்கள் தந்து உதவிய தம்பி மீரான் அன்வர்க்கு நன்றி

Sunday, April 5, 2009

திருநெல்வேலி ---- தென்காசி பாராளுமன்றத்தொகுதி --- ஒரு அலசல்...

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு எம்பி தொகுதிகள் உள்ளது... ஒன்னு திருநெல்வேலி ரெண்டு தென்காசி ( தனி)


பொதுவாக தென்மாவட்டங்கள் என்றாலே அதிமுகவின் கோட்டை என்று சொல்வார்கள்.. அது உண்மைதான் என்பதற்கேற்ப பல தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது.... எதாவது ஒரு அலைஅடிச்சாத்தான் எங்க மாவட்டத்து மக்கள் திமுகவை ஜெயிக்க வைப்பாங்க........கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜெயித்த கட்சிகளின் விவரங்கள்


1.அம்பாசமுத்திரம்      2.சங்கரன்கோயில்  3.வாசுதேவநல்லூர்
1991 -- அதிமுக               1991 -- அதிமுக           1991 -- காங்கிரஸ்
1996 -- திமுக                   1996 -- அதிமுக            1996 -- தமாக
2001 -- அதிமுக               2001 -- அதிமுக            2001 -- அதிமுக
2006 -- திமுக                    2006 -- அதிமுக            2006 -- மதிமுக


4.கடையநல்லூர்          5.தென்காசி                6.ஆலங்குளம்
1991 -- அதிமுக             1991 -- காங்கிரஸ்     1991 -- காங்கிரஸ்
1996 -- திமுக                 1996 -- தமாக               1996 -- திமுக
2001 -- அதிமுக            2001 -- அதிமுக           2001 -- அதிமுக
2006 -- காங்கிரஸ்      2006 -- திமுக                2001 -- திமுக


7.திருநெல்வேலி    8.பாளையம்கோட்டை   9.சேரன்மகாதேவி
1991 -- அதிமுக         1991 -- அதிமுக                   1991 -- அதிமுக
1996 -- திமுக           1996 -- திமுக                          1996 -- தமாக
2001 --அதிமுக        2001 -- திமுக                         2001 -- அதிமுக
2006 -- திமுக          2006 -- திமுக                          2006 -- காங்கிரஸ்


10.ராதாபுரம்              11.நாங்குநேரி
1991 -- காங்கிரஸ்   1991 -- அதிமுக
1996 -- தமாக             1996 -- சிபிஐ
2001 -- சுயேட்சை    2001 -- அதிமுக
2006 -- திமுக            2006 -- காங்கிரஸ்


கடந்த மூன்று மக்களவைத்தேர்தலில் ஜெயித்தக் கட்சிகளின் விவரம்
1.திருநெல்வேலி  2.தென்காசி


1998 -- அதிமுக       1998 -- அதிமுக
1999 -- அதிமுக       1999 -- அதிமுக
2004 -- காங்கிரஸ் 2004 -- சிபிஐ


மேற்ச்சொன்ன தேர்தல்களில் 1991,1996 சட்டமன்றத்தேர்தலிலும்,2004 மக்களவைத்தேர்தலிலும் ஆண்டுகளில் ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை கண்கூடாக தெரிந்தது... இதனால் 2004 மக்களவைத்தேர்தலில் திமுக சுலமாக வெற்றிகனி பறித்தது.


2006 சட்டமன்றத்தேர்தலை எடுத்துக்கொண்டால் திமுக கூட்டணி 9 இடங்களிலும் அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும் வென்றது. இதில் திருநெல்வேலியில் 606 ஓட்டு வித்தியாசத்தில்தான் திமுக ஜெயிக்க முடிந்தது.சேரன்மகாதேவியில் 6032 ஓட்டு வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் ஜெயித்தது. அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக ஜெயித்ததுக்கு ஒரு காரணம் எர்ணாவூர் நாராயணன் சுமார் 15 ஆயிரம் ஓட்டுவாங்கியதுதான்..
..
  1998 மற்றும் 1999 மக்கள்வைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிளையும் அதிமுக கைப்பற்றியது.இதில் 1999 மக்களவைத்தேர்தலில் தென்காசி தொகுதியில் சுமார் 887 ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தது.எந்த அலையும் இல்லாத தேர்தல்களில் எங்க மாவட்டத்துக்காரங்க அதிமுகவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 1998 தேர்தலில் இரட்டை இலை மாயத்தால் சரத் குமாரை கவிழ்த்திய பெருமை திருநெல்வேலிக்கு உண்டு( ஆனால் இதில் தூத்துக்குடி திமுக மாவட்ட செயளாலரின் பங்கும் சரத் தோற்க ஒரு காரணம்).. இப்போது தொகுதி மறு சீரமைப்பின் படி தென்காசி தொகுதியில் இருந்த அம்பாசமுத்திரம் மற்றும் திருச்செந்தூர் தொகுதியில் இருந்த ஆலங்குளம் தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது... அதேபோல் தென்காசி தொகுதியில் ராஜபாளையம் சேர்க்கப்பட்டுள்ளது...


இதன் மூலம் தெரிவது கடந்த கால தேர்தலை மனதில் வைத்து திமுக லாவகமாக இந்த இரு தொகுதிகளையும் காங்கிரஸிடம் கொடுத்துவிட்டது. திருநெல்வேலி தொகுதிக்காவது தனுஷ்கோடி ஆதித்தன், வசந்த்குமார் மற்றும் வாசன் ஆதரவாளர் சார்லஸ் என்பவரும் டிக்கெட் கேட்கிறார்கள். ஆனால் தென்காசி தொகுதியில்தான் காங்கிரஸ் சார்பா யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய சஸ்பென்ஸ்.. எனக்கு தெரிந்தவரைக்கும் காங்கிரஸில் இந்த தொகுதிக்கு போட்டி இடுவதற்கு ஆளை தேடுவதாக ஒரு கேள்வி.


எப்பவுமே கலைஞர் சொல்வார் "நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை" என்று.. இதை தகர்க்கவேண்டும் என்ற எண்ணத்துடந்தான் இப்பொது குமரியில் திமுக போயிடுகிறதோ என்னவோ... தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ் ஆர் ஜெயதுரை புதுமுகமாம் தூத்துக்குடி தொகுதி திமுகவினருக்கு இவரை தெரியுமா........ சந்தேகம்தான்..


தேமுகதிகவெல்லாம் என்ன தைரியத்தில் எங்க மாவட்டத்துல போட்டி இடுறாங்கன்னே தெரியல... .2006 சட்டமன்றத்தேர்தலில் தேமுதிக குறைவான வாக்குகள் வாங்கியது இங்கதான் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 2000 ஓட்டு தான் வாங்கியது...இந்த தேர்தலில் எந்த அலையும் தென்படாததால் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக தான் ஜெயிக்கும் என்று நினைக்கிறேன்... ஏன்னா எங்க மாவட்டத்து மக்கள் ரெட்டை இலையை பாத்தாலே அதுல கண்ண மூடி குத்திடுவாங்க........... பொறுத்திருந்து பாக்கலாம்...

 குறிப்பு :தமிழ்நாடு உளவுத்துறை எடுத்த சர்வேயின்படி 14 தொகுதிகள்தான் திமுகவுக்கு ஆதரவா இருக்காம்..........