Friday, August 29, 2008

நடுத்தர மக்களை ஏமாற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம்

5 ஆண்டுகள் முன்பு வரை சென்னையில் மாநகர பேருந்துகளில் பெரும்பலானவை சாதாரணபேருந்துகளாக வலம் வந்தன. அ.தி.மு.க ஆட்சியில் M போர்டு பேருந்துகள் என்பதுஅறிமுகப்படுத்தப்பட்டு மினிமம் டிக்கெட் விலை ரூ 3 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வகை பேருந்துபேருந்துகளில் மாதாந்திர பயணச்சீட்டு செல்லாது என அறிவிப்பு வேறு.இவ்வகை பேருந்துகள் மிகக்குறைவாகவே அ.தி.மு.க ஆட்சியில் இயக்கப்பட்டது.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட M சர்வீஸ் பேருந்துகளை அதிகமாக்கியது.மாதாந்திர பயணச்சீட்டு செல்லும் என அறிவிப்பு செய்யப்பட்டது.இந்த அறிவிப்பு என்னை போன்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் சாதாரண பேருந்து + M சர்வீஸ் பேருந்து என இயக்கப்ப்டுவதால் சிரமமின்றி போய் வரலாம் + நெரிசல் குறைவாகும் என்கிற எண்ணம். ஆனால் போகப்போக தான் புரிந்தது ஆட்சியாள்ர்களின் எண்ணம். சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு M சர்வீஸ்களும்,எக்ஸ்பிரெஸ் சர்வீஸ்கள்அதிகரிக்கப்பட்டு கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டது.ஆனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாரண பேருந்துகள் & M சர்வீஸ் குறைவாக இயக்கப்பட்டு எக்ஸ்பிரெஸ் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறது.இக்காரணத்தால் சாதாரண பேருந்துகள் & M சர்வீஸ் பேருந்துகளில் நெரிசல் நேரங்களில் ஏற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் நமது மாநகர போக்குவரத்து கழகம் டீலக்ஸ் பஸ்களை அறிமுகப்படுத்தியது.முதலில் எண்ணிக்கை குறைவாகவும்,திருவள்ளூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளாக இயக்கப்பட்டது.பின்பு இதன் சர்வீஸ்கள் மாநகருக்குள் அதிகரிக்கப்பட்டு நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிகமாக இயக்கப்ப்டுகிறது.இவ்வகை பேருந்துகளில் சாதாரண பேருந்தை விட இரட்டிப்பு கட்டணம் வேறு.இக்காரணங்களினால் சீசன் டிக்கெட் பெரும் அவதிக்குள்ளானார்கள். நெரிசல் நேரங்களில் சாதாரண பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் சீசன் டிக்கெட் வைத்திருப்போர் நிலைமை பரிதாபம்தான்.அந்த நேரங்களில் டீலக்ஸ் பேருந்துதான் அதிகமாக இயக்கப்படுகிறது. முதலில் இவ்விசயத்தை எதிர்க்கட்சிகள்கடுமையாக கண்டனம் தெரிவித்து பின் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.ஆட்சியில் இருப்பவர்க்ளுக்கு இதை பற்றி என்ன கவலை.தெருவுக்கு தெரு மதுபான கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை இதில் காண்பிப்பார்களா?

0 comments: