Saturday, August 30, 2008

தி.மு.க ஆட்சியின் மக்கள் விரோதப்போக்கு

மின் வெட்டு,விலைவாசி உயர்வு,பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு போன்றவைகளால் தமிழக மக்கள் அவதி. ஆனால் இதைப்பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.பெட்ரோல்,டீசல் தட்டுப்பாட்டுக்கு எண்ணை நிறுவனங்கள் காரணம் என ஒப்புக்கு ஒரு அறிக்கை.விலைவாசி உயர்வைப்பற்றி மூச்சு விடுவதில்லை. அதைப்பற்றி எதிர்க்கட்சிகள் கேட்டால் தன்னுடைய கவிதையின் மூலம் அலட்சியமான பதில்.நம்முடைய முதல்வருக்கு கவிதை எழுதவே நேரமில்லை,இதில் மக்கள் பிரச்சினைகளை பற்றிக்கவலைப்பட நேரம் ஏது?. மின் வெட்டு என்று அறிவிக்க ஒரு அமைச்சர்.மின் துறை அமைச்சருக்கு மின்சாரப்பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது என்ற கவலையைவிட கலைஞர் தொலைக்காட்சியை எப்படி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேற்றுவது,சன் நெட்வொர்க்கு எப்ப்டியெல்லாம்குடைச்சல் கொடுப்பது என்ற கவலைகள்தான் அதிகம். இல்லையென்றால் மின்சாரப்பற்றாக்குறைக்கு அ.தி.மு.க ஆட்சிதான் காரணம் என அரதப்பழசான பதில் வருகிறது.நீங்கள் இந்த 2 வருடமாக என்ன செய்தீர்கள்? எனக் கேட்டால் பதிலை காணோம்.
நம்முடைய முதல்வருக்கு கவலையெல்லாம் வாரிகளை எப்படி திருப்திப்படுத்துவது என்பதிலேயே.சன் நெட்வொர்க்கு எப்ப்டியெல்லாம் நெருக்கடி கொடுப்பது,சுமங்கலி கேபிள் விஷனை எப்ப்டி தொழில் செய்ய விடாமல் தடுப்பது,போன்ற மக்கள் நலனில்தான் அதிக அக்கறை.பாவம் தமிழக மக்கள்.
மொத்தத்தில் மக்கள் நலனில் அக்கறையில்லாத தம்மக்களின் நலனில் அக்கறையுள்ள ஆட்சியாக உள்ளது.நாளிதழ்கள் இப்பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை ( தினகரன்,தினமணி தவிர) அதிலும் தினமலர் முரசொலியின் மனசாட்சியாக மாறிவிட்டது.எதனால் என்று தெரியவில்லை. தொலைக்காட்சியிலும் மக்கள் பிரச்சினைகள் மேம்போக்காக சொல்லப்படுகின்றன.( சன்,மக்கள்,ஜெயா,விண் தொலைக்காட்சி தவிர).நாளிதழ்களையும்,மீடியாவையும் விலைக்கு வாங்கிவிட்டால் மக்களுக்கு ஆட்சியாளர்களின் விரோதப்போக்கு தெரியவராமல் இருக்கும் என்பது ஆட்சியாளர்களின் மனநிலை.

0 comments: