Saturday, August 30, 2008

பாக்ஸ் ஆஃபிஸ் : தசாவதாரத்தை முந்தியது நாயகன்!

செ‌ன்னை பா‌க்‌‌‌ஸ் ஆஃ‌பி‌‌ஸி‌ல் தசாவதாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரித்தீஷின் நாயகன் முந்தியுள்ளது.வசூலில் தொட‌ர்‌ந்து முத‌லிட‌த்‌தி‌ல் விஷாலின் 'ச‌த்ய‌ம்', இ‌ர‌‌ண்டா‌‌மிட‌த்தில் 'குலேசன்' ஆகியவை நீடித்து வருகின்றன.கமலஹாசனின் தசாவதார‌த்தை நா‌ன்காவது இட‌த்‌தி‌ற்கு ‌த‌ள்‌ளி, மூ‌ன்றா‌மிட‌த்தை ‌பிடி‌த்து‌‌ள்ளது ஜே.கே.‌ரி‌த்‌தீ‌ஷி‌ன் 'நாயக‌ன்'.செ‌ன்ற வார இறு‌தி வசூ‌லி‌ல் ரூ.24 ல‌ட்ச‌ங்க‌ள் வசூ‌லி‌த்து, தொட‌ர்‌ந்து ச‌த்ய‌ம் முத‌லி‌ட‌த்தை த‌க்க வை‌த்து‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. செ‌ன்னை‌யி‌ல் இத‌ன் மொ‌த்த வசூ‌ல் ரூ.1.06 கோடி!
குசேல‌னி‌ன் வார இறு‌தி வசூ‌ல் ஏ‌ற‌க்குறையை ரூ.20.5 ல‌ட்ச‌ங்க‌ள்.இதுவரையான மொ‌த்த வசூ‌ல் ரூ.3.62 கோடி.ர‌ஜி‌னி பட‌ங்க‌ளி‌ல் இது ‌மிக‌மிக குறைவான வசூ‌ல் என்பது கவனத்துக்குரியது.
நாயக‌ன் எ‌ட்டு ல‌ட்ச‌த்து இருப‌த்த‌ி ஏழா‌யிர‌ம் ரூபாயு‌ட‌‌ன் மூ‌ன்றா‌மிட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளது. இது பட‌த்‌தி‌ன் மூ‌ன்று நா‌ள் வசூ‌ல் எ‌ன்பது ஆ‌ச்ச‌ரிய‌ம்.
செ‌ன்னை‌யி‌ல் மொ‌த்த வசூ‌ல் ரூ.10.68 கோடியுட‌ன் நா‌ன்கா‌மிட‌த்‌தி‌ல் உ‌ள்ளது 'தசாவதார‌ம்'.
(மூலம் - வெப்துனியா

0 comments: