Sunday, February 22, 2009

பூவே உனக்காக--- காதல் கோட்டை--- சென்னை பதிவர் சந்திப்பு???

கடந்த வெள்ளியன்று கே டிவியில் பூவே உனக்காக படம் போட்டிருந்தார்கள்... ம்ம்ம் படம் நல்லாவே இருந்தது.... பூவே உனக்காக படம் பார்க்கும் போதெல்லாம் காதல் கோட்டை படமும் ஞாபகத்திற்கு வரும்... காரணம் இரண்டு படங்களும் கிட்டதட்ட ஒரே நேரத்தில் வெளியாகி சளைக்காமல் சக்கை போடு போட்ட படம்.... என்னுடைய டிப்ளமா படிப்பின் கடைசி செமஸ்டரின் போது இரு படங்களும் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களிலும் டாக்டரும், தலயும் இயல்பான நடிப்பை வெளிக்கொண்டுவந்திருப்பார்கள்.


இரண்டு படங்களின் மையக்கரு காதல் என்றாலும் டாக்டரின் படம் காதல் தோல்வியையும், தலயின் படம்  காதலுக்கு புது வழியையும் ஏற்படுத்தியது... டாகடர் செந்தூரப்பாண்டி, ரசிகன்,தேவா அப்படின்னு கில்மா படங்களில் நடித்தாலும், அனைத்து ரசிகர்களை கவர்கிற மாதிரி படங்கள் அவருக்கு அதுவரை அமையவில்லை.. அதே போல தலயும் ஒரு பிரேக் கிடைக்காமல் தடுமாறி வந்தார்...இந்தக் கட்டத்தில்தான் இருவருக்குமே இந்தப்படங்கள் இவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது....மொத்தத்தில் இந்தபடங்களை இருவருமே அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.. இதுக்கப்புறமா இவர்களின் படங்கள் ஒரே நேத்தில் வெளியாகினாலும் ஏதாவது ஒரு படம் தான் வெற்றியை தொட்டது


குஷி -- உன்னைக்கொடு என்னைத்தருவேன்
பகவதி -- வில்லன்
திருமலை -- ஆஞ்சனேயா
ப்ரெண்ட்ஸ் -- தீனா
போக்கிரி -- ஆழ்வார்

வேற ஏதாவது படங்கள் இப்படி வெளியாகி இருந்தால் சொல்லுங்கப்பு ( டாக்டரும், தலயும்) சரி இப்ப இருவரும் எந்த அளவில் படங்களை தேந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வேறச் சொல்லனுமா... அதிரடி ஓப்பனிங் பாடல், பஞ்ச் டயலாக், அயிட்டம் பாடல், ஒரே மாதிரியான நடிப்பு கேட்டா எங்க ரசிகனுங்க இப்படித்தான் எதிர் பாக்குறாங்க அப்படினு ஒரு டயலாக்.... அப்படியா கார்க்கி.... தலயாவது பரவயில்லை ஒரு சில படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்கிறார்... ஆனால் டாக்டர்???!!!!!!!!!!!!!!!!..

சென்னை பதிவர் சந்திப்பு இந்த மாதம் ஆரம்பத்தில் நடந்தது... அதுக்கப்புறம் அதுபற்றி பேச்சேயில்லை... நேற்று சகா நர்சிம்மிடம் பேசினேன் மும்பையில் இருந்து அனுஜன்யா வந்திருப்பதாக சொன்னார்... அதனால சென்னை பதிவர்களே உங்க முகமெல்லாம் மறந்துகொண்டு வருகிறது... அதுக்காகவாது ஒரு சந்திப்பை வைங்கப்பா.நர்சிம்,அதிஷா,முரளி கண்ணன் கவனிக்க..... தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை பிரச்சினையில் பதிவுலகமே சூடாக இருந்தது.. இப்பதான் ரெண்டு நாளா பத்து கேள்விகள் அப்படின்னு கொஞ்சம் ரிலாக்ஸா ஆகியிருக்கு........ அதனால சந்திப்பை வைங்கப்பா..........

ஒரு எச்சரிக்கை


ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா?. அக்பர்பாய் கறிக்கடையில் முஸ்லிம்கள் மட்டும் தான் கறி வாங்குவாங்களா?? என்ற அதி நவீன வசனங்களுடன் அடுத்தவாரம் ரிலீஸ் ஆவுது..................தீ திரைப்படம்

22 comments:

Cable சங்கர் said...

இப்ப என்னங்கீறீங்க.. பதிவர் சந்திப்பு வைச்சு கும்மியடிக்கணும் அவ்வளவுதானே.. சரி வச்சிக்கங்கப்பா வர்ற 28ஆம் தேதி.. என்ன நான் சொல்றது..? என்ன வறியளா..?

அத்திரி said...

//Cable Sankar கூறியது...
இப்ப என்னங்கீறீங்க.. பதிவர் சந்திப்பு வைச்சு கும்மியடிக்கணும் அவ்வளவுதானே.. சரி வச்சிக்கங்கப்பா வர்ற 28ஆம் தேதி.. என்ன நான் சொல்றது..? என்ன வறியளா..?//

வச்சிக்கலாமே............ நன்றி கேபிள் அண்ணே

Anonymous said...

friends = dheena
pokkiri =alwar

அத்திரி said...

// prakash கூறியது...
friends = dheena
pokkiri =alwar//


முதல் வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி பிரகாஷ்

Thamira said...

தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??//

பாத்தாச்சு.. பாத்தாச்சு.!

அத்திரி said...

//தாமிரா கூறியது...
தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??//

பாத்தாச்சு.. பாத்தாச்சு//

90 அடிச்சீங்களா?? நன்றி அண்ணே

நட்புடன் ஜமால் said...

என்னமோ போங்க ...

தல-யை நம்பி ஏமாந்தும்

டொக்டரை நம்பி ஜுரமும் தான் மிச்சம்

Anonymous said...

அழகிய தமிழ் மகன்-பில்லா (அழகிய தமிழ் மகன் வெளியாகி அடுத்த ஒரு மாதத்தில் வெளியாகியது பில்லா)


அப்புறம் அத்திரி உங்க எழுத்து நடை விறுவிறு சுறுசுறு. தொடர்ந்து எழுதுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சீக்கிரம் பதிவர் சந்திப்பை வைங்கப்பா..போன முறையே அத்திரியை பார்க்க நினைச்சு பார்க்க முடியல..

கார்த்திகைப் பாண்டியன் said...

கொடுத்து வச்ச மக்கள்.. சென்னைல பதிவர் சந்திப்பெல்லாம் நடத்துறீங்க.. வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

// தலயாவது பரவயில்லை ஒரு சில படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்கிறார்... ஆனால் டாக்டர்???!!!!!!!!!!!!!!!!.. //

வித்தியாசம் வேணுங்கறவங்க ஏன் டாக்டர் படத்துக்கு வர்றீங்க? இதுல அஜித் வேற வித்தியாசம் காட்றாராம்? கடவுளே.... ஒன்னு சொல்றேங்க.. இதுக்கு பதில் சொலுங்க.. விஜய் இதுதான் ரூட்டுனு பொறாரே? அதுல நடிக்காத ஹீரோவே கிடையாது.. ஆனா விஜய் தன்க்கு இன்னும் சிறப்பாக நடிக்க வரலைன்னு தனக்கு ஏத்த படங்களில் மட்டும்தானே நடிகிராரு?விஜய் நடிக்கும் மசலா படங்களின் மீது அஜித்துக்கும் சூர்யாவிற்கும் விக்ரமிற்கும் அதீத ஆசை உண்டு. சூர்யாவே சொல்லியிருக்கார்.. என்ன பண்ரதுன்னு தெரியாமத்தான் இந்த ரூட்டுக்கு வந்தேனு.. தன்னையறிந்தவன் புத்திசாலி.விஜய் புத்திசாலி

நீங்க சொன்னதுல நாலு தடவ விஜய் தான் ஜெயிச்சிருக்கார். இது மட்டுமில்லாம கில்லி ஜனா(ஒரு வார இடைவெளி) அதிலும் டாக்டருக்கே வெற்றி.. அப்புறம் பரமசிவன் ஆதி என்று இருவரும் தோற்றதும் நடந்து இருக்கிறது...

வினோத் கெளதம் said...

இருவரும் சேர்ந்து நடிச்சு ஒரு படம் ஒரே டைம்ல ரிலீஸ் ஆச்சு "ராஜாவின் பார்வையிலே"..

நசரேயன் said...

நான் இன்னும் வில்லு பார்க்கலை

அத்திரி said...

//நட்புடன் ஜமால் கூறியது...
என்னமோ போங்க ...
தல-யை நம்பி ஏமாந்தும்
டொக்டரை நம்பி ஜுரமும் தான் மிச்சம்//

நன்றி ஜமால்

//கடையம் ஆனந்த் கூறியது...
அழகிய தமிழ் மகன்-பில்லா (அழகிய தமிழ் மகன் வெளியாகி அடுத்த ஒரு மாதத்தில் வெளியாகியது பில்லா)
அப்புறம் அத்திரி உங்க எழுத்து நடை விறுவிறு சுறுசுறு. தொடர்ந்து எழுதுங்க.//

நன்றி நண்பா

அத்திரி said...

//T.V.Radhakrishnan கூறியது...
சீக்கிரம் பதிவர் சந்திப்பை வைங்கப்பா..போன முறையே அத்திரியை பார்க்க நினைச்சு பார்க்க முடியல..//

ஐயா சென்னையிலா இருக்கீங்க.......நன்றி

கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
கொடுத்து வச்ச மக்கள்.. சென்னைல பதிவர் சந்திப்பெல்லாம் நடத்துறீங்க.. வாழ்த்துக்கள்.

நன்றி பாண்டியன்...

அத்திரி said...

//கார்க்கி கூறியது...
வித்தியாசம் வேணுங்கறவங்க ஏன் டாக்டர் படத்துக்கு வர்றீங்க? இதுல அஜித் வேற வித்தியாசம் காட்றாராம்? கடவுளே.... ஒன்னு சொல்றேங்க.. இதுக்கு பதில் சொலுங்க.. விஜய் இதுதான் ரூட்டுனு பொறாரே? அதுல நடிக்காத ஹீரோவே கிடையாது.. ஆனா விஜய் தன்க்கு இன்னும் சிறப்பாக நடிக்க வரலைன்னு தனக்கு ஏத்த படங்களில் மட்டும்தானே நடிகிராரு?விஜய் நடிக்கும் மசலா படங்களின் மீது அஜித்துக்கும் சூர்யாவிற்கும் விக்ரமிற்கும் அதீத ஆசை உண்டு. சூர்யாவே சொல்லியிருக்கார்.. என்ன பண்ரதுன்னு தெரியாமத்தான் இந்த ரூட்டுக்கு வந்தேனு.. தன்னையறிந்தவன் புத்திசாலி.விஜய் புத்திசாலிநீங்க சொன்னதுல நாலு தடவ விஜய் தான் ஜெயிச்சிருக்கார். இது மட்டுமில்லாம கில்லி ஜனா(ஒரு வார இடைவெளி) அதிலும் டாக்டருக்கே வெற்றி.. அப்புறம் பரமசிவன் ஆதி என்று இருவரும் தோற்றதும் நடந்து //

சகா நானும் விஜய் ரசிகன் தான்.. ஆனால் எல்லோரும் தங்களுடைய கேரியரில் வித்தியாசத்தை காட்டி வரும்போது, இவர் மட்டும் ஏன் ஒரே மாதிரி நடிக்கிறார்....அப்படின்ற ஆதங்கம்........ சூப்பர் ஸ்டார் அவருடைய கேரியரில் பீக்கில் இருக்கும்போது கொஞ்சம் வித்தியாசமான வேடங்களையும் தேர்ந்தெடுத்தார்..... நன்றி சகா

அத்திரி said...

// vinoth gowtham கூறியது...
இருவரும் சேர்ந்து நடிச்சு ஒரு படம் ஒரே டைம்ல ரிலீஸ் ஆச்சு "ராஜாவின் பார்வையிலே"..//

கொடுமையான படம் வினோத். நன்றி


//நசரேயன் கூறியது...
நான் இன்னும் வில்லு பார்க்கலை//


தப்பிச்சிங்க அண்ணாச்சி.... நன்றி

தமிழ் மதுரம் said...

ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா?. அக்பர்பாய் கறிக்கடையில் முஸ்லிம்கள் மட்டும் தான் கறி வாங்குவாங்களா?? என்ற அதி நவீன வசனங்களுடன் அடுத்தவாரம் ரிலீஸ் ஆவுது..................தீ திரைப்படம் //

என்ன குசும்பு இது?? படத்தை இயக்குவது நீங்களா???

தமிழ் மதுரம் said...

தலையும் விஜயும் போட்டி போடுறாங்களே தவிர ஏதாவது உருப்படியாச் செய்யிற மாதிரித் தெரியேல்லை???

பாபு said...

அஜித் & விஜய் கம்பர் பண்ணவே முடியாதுன்னு நினைக்கிறேன்
விஜய் தன்னுடைய் ஸ்டைல் எது என்று முடிவு செய்து கொண்டு அந்த ரூட்-இல் போகிறார்.அவருடய் நிறைய படங்கள் மிகபெரிய வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால் அஜித் அப்படியில்லை.எந்த ரூட்-இல் போவது என்று தெரியாமலேயே ஓட்டுகிறார். ஓரிரு படங்கள மட்டுமே பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.அதுவும் வாலிக்கு பிறகு அவருடைய மிகபெரிய வெற்றி என்று சொல்ல கூடிய படங்கள் ஏதாவது இருக்கிறதா?
கொஞ்சம் அதிகமாகவே அஜித்-க்கு மரியாதை கிடைத்திருக்கிறது என்பது என் எண்ணம்

அத்திரி said...

// கமல் கூறியது...
ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா?. அக்பர்பாய் கறிக்கடையில் முஸ்லிம்கள் மட்டும் தான் கறி வாங்குவாங்களா?? என்ற அதி நவீன வசனங்களுடன் அடுத்தவாரம் ரிலீஸ் ஆவுது..................தீ திரைப்படம் //என்ன குசும்பு இது?? படத்தை இயக்குவது நீங்களா???//

இந்த குசும்பு தான வேண்டாங்கிறது..........

// கமல் கூறியது...
தலையும் விஜயும் போட்டி போடுறாங்களே தவிர ஏதாவது உருப்படியாச் செய்யிற மாதிரித் தெரியேல்லை???//

சரியாச்சொன்னீங்க கமல்.. நன்றி

அத்திரி said...

// பாபு கூறியது...
அஜித் & விஜய் கம்பர் பண்ணவே முடியாதுன்னு நினைக்கிறேன்
விஜய் தன்னுடைய் ஸ்டைல் எது என்று முடிவு செய்து கொண்டு அந்த ரூட்-இல் போகிறார்.அவருடய் நிறைய படங்கள் மிகபெரிய வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால் அஜித் அப்படியில்லை.எந்த ரூட்-இல் போவது என்று தெரியாமலேயே ஓட்டுகிறார். ஓரிரு படங்கள மட்டுமே பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.அதுவும் வாலிக்கு பிறகு அவருடைய மிகபெரிய வெற்றி என்று சொல்ல கூடிய படங்கள் ஏதாவது இருக்கிறதா?
கொஞ்சம் அதிகமாகவே அஜித்-க்கு மரியாதை கிடைத்திருக்கிறது என்பது என் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாபு