"என்னங்க நான் ஊர்ல இல்லன்னு சொல்லிட்டு வெளியில சாப்பிடாதிங்க சமைச்சே சாப்பிடுங்க. அப்புறம் வீடை சுத்தமா வச்சிருங்க... ரொம்ப செலவு பண்ணிடாதிங்க"
"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."
"உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."
"செலவுக்கே காசு கம்மியா இருக்கும்போது நான் எங்க போக முடியும்.....வீட்டை விட்டா ஆபிஸ் ....வேற வழியில்ல.."
"என்னங்க ஊருக்கு போனதுக்கப்புறம் போன்ல கூட பேச நேரமில்லையோ."
"அதான் காலையில பேசினேனே... நைட் கால் பண்ணலாம்னு இருந்தேன்."
'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'
"அதுக்காக பொழுதன்னைக்கும் உன் கூட பேசிக்கிட்டேவா இருக்க முடியும் .. ஏம்பா இப்படி இருக்க....'
"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".
"ஏம்மா சாம்பார் பொடி, கடலை பருப்பு டப்பா எங்கப்பா வச்சிருக்க... எல்லாமே ஒரே மாதிரி தெரியுது"
"சிவப்பு டப்பா மூடி சாம்பார் பொடி கடலைபருப்பு மஞ்ச கலர் டப்பாவுல இருக்கு..சரி இனிமே போன் பண்ணாதிங்க எங்க அக்க வீட்டுக்கு போறேன்.. "
"செல்லை எடுத்திட்டு போக வேண்டியதுதான.. எதுக்கு அத வாங்கி கொடுத்திருக்கேன்.மிளகாய் பொடி டப்பா எங்க இருக்கு"
"இத கேக்குறதுக்குத்தான் போன் வாங்கி கொடுத்தீங்களா?"
"மச்சி இன்னைக்கு சனிக்கிழமைடா...!!!!!!
"என்ன மாமா வீட்ல ஆள் இல்லையா?", ஆமாடா..
"என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.."
"சமையல் பண்ண போறேம்பா" ( கையில் சரக்குடன்)
"அப்படியா தொசை சுடுறதுக்கே 10 வாட்டி போன் பண்ணுவீங்க எல்லாத்தையும் கேட்டிருங்க"!!!.....
'இல்லமா எல்லாத்தையும் பாத்து வச்சிடேன்'........
இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........
டிஸ்கி : நாளைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்......ஆங்
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
47 comments:
//"என்னங்க ஊருக்கு போனதுக்கப்புறம் போன்ல கூட பேச நேரமில்லையோ."
"அதான் காலையில பேசினேனே... நைட் கால் பண்ணலாம்னு இருந்தேன்."
'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'
"அதுக்காக பொழுதன்னைக்கும் உன் கூட பேசிக்கிட்டேவா இருக்க முடியும் .. ஏம்பா இப்படி இருக்க....'//
எல்லார் வீட்டிலேயும் இதே தானா..?
//"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".//
தலைவரே.. தங்கமணி நேர்ல இல்லேன்னதும், என்ன ஒரு எகத்தாளம், கொக்கரிப்பு..? நக்கலு..?
//"என்னங்க நான் ஊர்ல இல்லன்னு சொல்லிட்டு வெளியில சாப்பிடாதிங்க சமைச்சே சாப்பிடுங்க. அப்புறம் வீடை சுத்தமா வச்சிருங்க... ரொம்ப செலவு பண்ணிடாதிங்க"
"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."
//
ஹா..ஹா..ஹா..... வர வர நகைச்சுவை உண்ர்ச்சி ஜாஸ்தியாயிருச்சு அத்திரி..
//இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........//
என்கூட ஒரு ஆப் அடிக்கலாம் தலைவலி போயிரும்.
யோவ்.. நீரும் இப்பிடித்தானா? எப்படா ஊட்டுக்காரி ஊருக்குப்போவா? பாட்டில கையில எடுக்கலாம்னு அலையுற கேஸ்தானா?
Cable Sankar கூறியது
//எல்லார் வீட்டிலேயும் இதே தானா..?//
அண்ணே வீட்டுக்கு வீடு வாசப்படி.........
//தலைவரே.. தங்கமணி நேர்ல இல்லேன்னதும், என்ன ஒரு எகத்தாளம், கொக்கரிப்பு..? நக்கலு..?//
))))))))))))))))
//Cable Sankar கூறியது...
//இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........//
என்கூட ஒரு ஆப் அடிக்கலாம் தலைவலி //
ஹிஹிஹிஹி.......... ரொம்ப நன்றி அண்ணே
// தாமிரா கூறியது...
யோவ்.. நீரும் இப்பிடித்தானா? எப்படா ஊட்டுக்காரி ஊருக்குப்போவா? பாட்டில கையில எடுக்கலாம்னு அலையுற கேஸ்தானா?//
அண்ணன் தாமிரா எவ்வழியோ தம்பி அத்திரியும் அவ்வழி......... கட பக்கம் வந்ததுக்கு நன்றி அண்ணே
"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".
:)))))))))
"உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."//
என்ன நடக்குது??
நல்ல ஐடியா தான் சொல்லுறீங்கள்??
'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'
"அதுக்காக பொழுதன்னைக்கும் உன் கூட பேசிக்கிட்டேவா இருக்க முடியும் .. ஏம்பா இப்படி இருக்க....'//
போகப் போகப் புளிக்குமாம்???
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".//
அப்போ வீட்டிலை நீங்கல் உங்காளுக்குப் பயமோ???
//ஸ்ரீதர்கண்ணன் கூறியது...
"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".
:)))))))))//
சிரிப்புக்கு நன்றி ஸ்ரீதர்கண்ணன்
இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........//
பேசாமல் தலையைச் சுத்தி வாற நரக நினைவுகளை விரட்டிடுங்க:)))
கவனம்..போற பாதையிலை போன் வரும் ஜாக்கிரதை....
// கமல் கூறியது...
"உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."//
என்ன நடக்குது??
நல்ல ஐடியா தான் சொல்லுறீங்கள்//
ஐடியா நல்லாத்தான் இருக்கும் ....மாட்டினாத்தான் தெரியும்...........
// கமல் கூறியது...
'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'
"அதுக்காக பொழுதன்னைக்கும் உன் கூட பேசிக்கிட்டேவா இருக்க முடியும் .. ஏம்பா இப்படி இருக்க....'//
போகப் போகப் புளிக்குமாம்???//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....(((((((
//கமல் கூறியது...
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".//
அப்போ வீட்டிலை நீங்கல் உங்காளுக்குப் பயமோ???//
பயமா........ச்ச்சீ பயம் கலந்த மரியாதை.... கண்ணாலம் ஆயிடிச்சா......
//கமல் கூறியது...
இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........//
பேசாமல் தலையைச் சுத்தி வாற நரக நினைவுகளை விரட்டிடுங்க:)))
கவனம்..போற பாதையிலை போன் வரும் ஜாக்கிரதை....//
ஏன் தம்பி இப்படி பயமுறுத்துர .... நன்றி கமல்
haa...haa...haa
//தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா...........//
கலையில் எழுந்தவுடன் ஒரு நைன்டி அடிச்சால்தலை வலி மாயமாய் மறைந்து விடும் !!!!
தங்கமணியையும்
தலைவலியையும் சேர்த்து
இது நுண்ணரிசியலோ
உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."\\
இது வேறயா!
'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'\\
அது அப்போ!
இது இப்போ!
\\"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".\\
ஹா ஹா ஹா
அண்ணா!
என்னாச்சு
அண்ணி ஃபோன் நம்பர் என்னங்க
"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."
நல்லாத்தான் நக்கல் அடிக்கிறீர்கள்.
சுவையாக இருக்கு பதிவு
அத்திரி,வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போங்க.பாவம் கமலைப் பாருங்க நொந்து நூலாய்ப் போய்.....
இதுக்கெல்லாம் தலை வலின்னா எப்பிடி...!கொஞ்ச நேரம் தலையைக் கழற்றி வையுங்க.எல்லாம் OK யாயிடும்.
தங்கமணியும் தலைவலியும்னா - தலப்புலே என்ன சொல்ல வரீங்க - தங்கமணின்னாலே தலைவலிதான்றீங்களா .....
வூட்ல ஒருத்தர் தான் அடங்குவாங்க - இது நியாயம் - பாவம் பயல உட்டுடலாம் - நீங்களே வழக்கம் போல அடங்குங்க
அங்கிள்....
single ஆ இருக்கும் போது அடிச்ச லூட்டிக்கு எல்லாம் ஊர் ல அப்பு இருக்கு
"இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா.........."
sorry....... நீங்க யூத் இல்லாட்டி single யாக இருந்திருந்தால் நான் வழி சொல்லி இருப்பேன்
// T.V.Radhakrishnan கூறியது...
haa...haa...haa//
நன்றி டிவி.ஆர்.கே ஐயா
//அருப்புக்கோட்டை பாஸ்கர் கூறியது...
//தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா...........//
கலையில் எழுந்தவுடன் ஒரு நைன்டி அடிச்சால்தலை வலி மாயமாய் மறைந்து விடும் !!!!//
வாங்க பாஸ்கர்.... என்ன பதிவு பக்கம் ஆளைக் காணோம்.. நன்றி
//நட்புடன் ஜமால் கூறியது...
தங்கமணியையும்
தலைவலியையும் சேர்த்து
இது நுண்ணரிசியலோ//
நுண்ணரசியலா ...? அப்படினா என்ன ஜமால்
//நட்புடன் ஜமால் கூறியது...
உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."\\
இது வேறயா!//
ம்ம்ம்....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// நட்புடன் ஜமால் கூறியது...
'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'\\
அது அப்போ!
இது இப்போ!//
குடும்ப அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா
//நட்புடன் ஜமால் கூறியது...
\\"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".\\
ஹா ஹா ஹா
அண்ணா!
என்னாச்சு//
ஹிஹிஹி உங்க வீட்டுல எப்படி ஜமால் நன்றி.......
//கார்க்கி கூறியது...
அண்ணி ஃபோன் நம்பர் என்னங்க//
சகா அடங்கவே மாட்டியா?.. நீயும் ஒரு நாள் இதையெல்லாம் அனுபவிப்ப அப்ப தெரியும்....
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."
நல்லாத்தான் நக்கல் அடிக்கிறீர்கள்.
சுவையாக இருக்கு பதிவு//
நன்றி டாக்டர்..
//ஹேமா கூறியது...
அத்திரி,வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போங்க.பாவம் கமலைப் பாருங்க நொந்து நூலாய்ப் போய்.....
இதுக்கெல்லாம் தலை வலின்னா எப்பிடி...!கொஞ்ச நேரம் தலையைக் கழற்றி வையுங்க.எல்லாம் OK யாயிடும்.//
தலைவலிக்கு ஒரு வழி சொல்லுங்கன்னா இப்படி ஐடியா சொல்றது... நன்றி ஹேமா
// cheena (சீனா) கூறியது...
தங்கமணியும் தலைவலியும்னா - தலப்புலே என்ன சொல்ல வரீங்க - தங்கமணின்னாலே தலைவலிதான்றீங்களா .....//
இதையெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியுமா ஐயா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
//cheena (சீனா) கூறியது...
வூட்ல ஒருத்தர் தான் அடங்குவாங்க - இது நியாயம் - பாவம் பயல உட்டுடலாம் - நீங்களே வழக்கம் போல அடங்குங்க//
என்ன பண்றது நான் தான் அடங்கிப்போகனும்..... வேற வழி... நன்றி ஐயா
// MayVee கூறியது...
அங்கிள்....
single ஆ இருக்கும் போது அடிச்ச லூட்டிக்கு எல்லாம் ஊர் ல அப்பு இருக்கு//
அங்கிளா??????????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ தப்பு செஞ்சா அந்த தடயமே இருக்காதே.........
// MayVee கூறியது...
"இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா.........."
sorry....... நீங்க யூத் இல்லாட்டி single யாக இருந்திருந்தால் நான் வழி சொல்லி இருப்பேன்//
சின்ன பையன் உனக்கெப்படி தெரியும்............ நன்றி MayVee
தாமிரா மாதிரி ஆயிட்டு வரீங்க
//"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."//
உங்களுக்காவது பரவாயில்லை ஊருக்கு போனாத்தான், எனக்கு வீட்டுல இருக்கும் போதே ஓட்டை ஆண்டி தான்
//"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".//
நாம் ஊருக்காரங்க எல்லோரோட வீட்டிலேயும் அப்படித்தானா?
//"என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.."
"சமையல் பண்ண போறேம்பா" ( கையில் சரக்குடன்)//
இதுக்கும் இங்க வழியில்லை
//பாபு கூறியது...
தாமிரா மாதிரி ஆயிட்டு வரீங்க//
அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே....... நன்றி பாபு
//நசரேயன் கூறியது...
//"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."//
உங்களுக்காவது பரவாயில்லை ஊருக்கு போனாத்தான், எனக்கு வீட்டுல இருக்கும் போதே ஓட்டை ஆண்டி தான்//
ஒரு பீருக்கே நீங்க ஆயிரக்கணக்கான டாலர் செலவு செஞ்ச உங்க நிலைமையே இப்படித்தானா
//நசரேயன் கூறியது...
//"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".//
நாம் ஊருக்காரங்க எல்லோரோட வீட்டிலேயும் அப்படித்தானா//
ஹிஹிஹிஹி.......(((((((((((
// நசரேயன் கூறியது...
//"என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.."
"சமையல் பண்ண போறேம்பா" ( கையில் சரக்குடன்)//
இதுக்கும் இங்க வழியில்லை//
பொய் சொல்லக்கூடாது அண்ணாச்சி. ஊருக்குப்போகிறேன் வர்றீங்களா????
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.
/
"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".
/
ROTFL
:))))))))))
நான் புது ஆளு.... அதனால ஒரு கேள்வி..
இங்க எழுதியிருக்கிறதெல்லாம் உங்க சொந்த அனுபவமா...
புரியாமல் கேட்கும்
ஆதவா...
"ஏம்மா சாம்பார் பொடி, கடலை பருப்பு டப்பா எங்கப்பா வச்சிருக்க... எல்லாமே ஒரே மாதிரி தெரியுது"
அதுக்குத்தான் அடிக்கடி சமைக்கணும்ங்கறது!!!! கேட்கிறீனஙகளா...
//Suresh கூறியது...
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.//
நன்றி சுரேஷ்..
//மங்களூர் சிவா கூறியது...
/
"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'
"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".
/ROTFL
:))))))))))//
வாங்க மங்களூர் சிவா நன்றி
//ஆதவா கூறியது...
"ஏம்மா சாம்பார் பொடி, கடலை பருப்பு டப்பா எங்கப்பா வச்சிருக்க... எல்லாமே ஒரே மாதிரி தெரியுது"
அதுக்குத்தான் அடிக்கடி சமைக்கணும்ங்கறது!!!! கேட்கிறீனஙகளா...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//ஆதவா கூறியது...
நான் புது ஆளு.... அதனால ஒரு கேள்வி..
இங்க எழுதியிருக்கிறதெல்லாம் உங்க சொந்த அனுபவமா...புரியாமல் கேட்கும்
ஆதவா...//]
உங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தா உங்களோட அனுபவமா இருக்கும் நன்றி ஆதவா
Post a Comment