பஸ் கட்டண குறைப்பு குறைப்பு பற்றி நம்ம அமைச்சர் நேரு கொடுத்த அறிக்கையை படிச்சா சிரிக்கவா அழவான்னு தெரியல... வழக்கம் போல் அம்மா ஆட்சியில இருந்த மாதிரிதான் இப்ப இருக்குறதாவும் திமுக ஆட்சியில் பஸ் கட்டண உயர்வே இல்லைனு அடிச்சி சொல்லியிருக்கார்...
.
அவரின் அறிக்கையும் எனது பதிலும்.
அமைச்சரின் அறிக்கை::திமுக ஆட்சி 2006ல் அமைந்த பிறகு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப் படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.
கலர் கலரா பேருந்துகளின் நிறத்தை மாற்றி சாதாரண பேருந்துகளில் M போர்டு போட்டு 2ரூபாய் டிக்கெட்டை 3 ரூபாயா உசத்துனது இந்த ஆட்சியில் தானே... இது கட்டண குறைவா இல்லை உயர்வா//
அமைச்சரின் அறிக்கை:1.5.2006 திமுக பொறுப்புக்கு வந்தபோது சென்னை மாநகரத்தில் மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் சாதாரணப் பேருந்துகள் 1095ம், எல்எஸ்எஸ் பேருந்துகள் 1043ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 169ம், டீலக்ஸ் பேருந்துகள் 11ம், எம் சர்வீஸ் பேருந்துகள் 235ம் ஓடிக் கொண்டிருந்தன. இதில் ஒவ்வொரு விதமான பேருந்துகளுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் அதிமுக ஆட்சியிலே விதிக்கப்பட்ட கட்டணங்கள் அப்படியே நடைமுறையில் இருந்து வந்தன.
அம்மையார் ஆட்சியில் மணிக்கொரு முறை வந்து கொண்டிருந்த M சர்வீஸை நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றியது எந்த அரசுங்கோ?..... அதே மாதிரி எல்.எஸ்.எஸ் சர்வீசை குறைத்து விரைவுப்பேருந்துகளையும், டீலக்ஸ் பேருந்துகளையும் அதிகமாக்கியது எந்த ஆட்சியில்... குறிப்பா நெரிசல் நேரங்களில் விரைவுப்பேருந்துகளையும், டீலக்ஸ் பேருதுகளின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களின் டவுசரை உருவியது எந்த ஆட்சி?
அம்மையார் போட்ட கோடுல நீங்க ரோடே போட்டுட்டீங்க,.
அமைச்சரின் அறிக்கை:அவ்வப்போது எழுகின்ற கோரிக்கை களின் அடிப்படையில் பேருந்து களின் தரம்மாற்றப்படுவது உண்டே தவிர கட்டணங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்டது தான் இப்÷õதும் தொடருகிறதே தவிர, தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டண உயர்வோ, கட்டணக் குறைப்போ எதுவும் செய்யப்பட வில்லை என்பதுதான் உண்மை.
அம்மையார் ஆட்சியில் சாதாரணப்பேருந்துகளில் மினிமம் டிக்கெட் இரண்டு ரூபாய்... விரைவுப்பேருந்தில் மினிமம் டிக்கெட் மூன்று ரூபாய்.... எல்லாம் சரி ஆனா இப்ப விரைவுப்பேருந்திலயும் மினிமம் டிக்கெட் இரண்டு ரூபாயாக மாற்றியதற்கு என்ன அர்த்தம்......
.
மொத்தத்தில் மக்களின் விருப்பம் என்பது தேர்தல் வந்த பிறகுதான் நம்ம அமைச்சருக்கு ஞாபகம் வந்திருக்கு... இதை ஒரு ஆறு மாதம் முன்னாடி செஞ்சிருந்தீங்கன்னா சரியா இருந்திருக்கும்.... இன்னைக்கு மக்கள் நமட்டு சிரிப்புடன் டிக்கெட் வாங்குவதை பார்த்தால் ஒரு முடிவோடத்தான் இருக்காங்க.
இந்த விசயத்தில் மூன்று ஆண்டுகளாக மக்களின் டவுசரை உருவிட்டு இப்ப போட சொல்றிங்க.......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போட்டுக்குறோம்
மேலும் இதை பற்றி தேதல் ஆணையம் மவுனமாக இருப்பது ஏனோ??
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
25 comments:
பேருந்து கட்டணம் 2006 க்கு பின் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது என்பது கண்கூடு.
தமிழக மக்களை இந்த அளவுக்கு முட்டாளாகவும்,மறதியாளர்களாகவும் நினைத்து விட்டார்களே !!!
கடையம் ஆனந்த் said...
கலர் கலராக ரீல் விடுகிறhர்கள். கேட்க தான் ஜனங்க இருக்காங்களே... அவங்க கிட்ட எந்த சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தானே அவர்கள் நினைக்கிறhர்கள். இவர்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றhல் கட்டணம் உயர்ந்தப்படமாமலே, நம்முடைய பாக்கெட்டுக்குள் கை விட்டு காசுக்களை திருட்டு தனமாக எடுத்து இருக்கிறhர்கள் கலர் கலர் போர்டுகள் மாற்றி இல்லீயா??
சாதரண பஸ்சில் எழும்பூரில் இருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றhல் 3.50 காசு. கலர் வண்ண பஸ்சில் சென்றhல் 7.50? இதுக்கு பெயர் என்ன? 13-ந் தேதிக்குள் இன்னும் என்னன்ன கூத்து நடக்க போகிறதோ? தெரியவில்லை.
பதிவர் அத்திரி மீண்டும் தான் ஒரு அதிமுக ஆதரவாளர் என்று நிருபித்துள்ளார்..:).. இல்லைன்னா திமுக காரன்னு சொல்லிக்கிற இவரு நேரு சொன்னதை நம்பணுமில்ல..
அரசாங்கத்த கொன்னு கொலைய அக்குரதுன்னு முடிவு பண்ணி இறங்கி இருக்காரு நண்பரு.. நடத்துங்க
என்ன சொல்லுங்க இலவசம்னு சொன்னாப்போதுமே நம்மக்கள் கண்ண மூடிக்கிட்டு ஓட்டுப் போட்டுருவாங்க....
இம்...கலைஞர் சொத்து நேரு சொத்து ஏறிகிட்டே பூகுது. எவன் வீட்டுல அடுப்பு எரிந்தா எவனுகென்ன..
இம்...கலைஞர் சொத்து நேரு சொத்து ஏறிகிட்டே பூகுது. எவன் வீட்டுல அடுப்பு எரிந்தா எவனுகென்ன..
என்னது? அம்மையார் ஆட்சியில் சென்னையில் பஸ் ஓடுச்சா? நீங்க போனீங்களா? நிஜமாவா?
கட்டணத்தை குறைத்த அமைச்சர் நேரு நீடுழி வாழ்க. இதன்மூலம் பேருந்துகளில் இருந்த 'சாதி' களை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டிய அவருக்கு 'சமத்துவ வாகனத்தான்' என்ற பட்டத்தை சூட்டுகிறோம். :)))
உங்கள் பதிவு தலைப்பில் ஒரு பிழை ..... முழு பூசணி எனபதிற்கு பதில் முழு பேருந்து என்று போட்டு இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்
நறுக்குனு பதில் சொல்லியிருக்கீங்க..
இப்ப என்ன சொல்ல வர்றீங்க, பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு கலைஞர் ஆட்சியில சோறு கிடைக்குதுன்னு சொல்றீங்களா
//அ.மு.செய்யது said...
பேருந்து கட்டணம் 2006 க்கு பின் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது என்பது கண்கூடு.தமிழக மக்களை இந்த அளவுக்கு முட்டாளாகவும்,மறதியாளர்களாகவும் நினைத்து விட்டார்களே !!!//
சரியா சொன்னீங்க செய்யது....நன்றி
//கடையம் ஆனந்த் said...
நம்முடைய பாக்கெட்டுக்குள் கை விட்டு காசுக்களை திருட்டு தனமாக எடுத்து இருக்கிறhர்கள் கலர் கலர் போர்டுகள் மாற்றி இல்லீயா??//
நம்ம காசைத்தான் மூனு வருசமா கொள்ளையடிச்சிட்டு, இப்ப விலை குறைப்பு...... நன்றி மாப்ளே
//Cable Sankar said...
பதிவர் அத்திரி மீண்டும் தான் ஒரு அதிமுக ஆதரவாளர் என்று நிருபித்துள்ளார்..:).. இல்லைன்னா திமுக காரன்னு சொல்லிக்கிற இவரு நேரு சொன்னதை நம்பணுமில்ல..//
உண்மைய சொல்ல விடமாட்டீங்களா அண்ணே..... நன்றி
//கார்த்திகைப் பாண்டியன் said...
அரசாங்கத்த கொன்னு கொலைய அக்குரதுன்னு முடிவு பண்ணி இறங்கி இருக்காரு நண்பரு.. நடத்துங்க
//
அப்படியெல்லாம் இல்லை நண்பா.... தேர்தலை மனசுல வச்சிக்கிட்டு இவங்க அடிக்கிற கூத்தை நினைச்சா.........
//முனைவர்.இரா.குணசீலன் said...
என்ன சொல்லுங்க இலவசம்னு சொன்னாப்போதுமே நம்மக்கள் கண்ண மூடிக்கிட்டு ஓட்டுப் போட்டுருவாங்க....//
சரியாச்சொன்னீங்க...பல்பொடில ஆரம்பிச்ச இலவசம் இன்னைக்கு தொலைக்காட்சியில் வந்து நிற்கிறது... இதுக்கு நாமளும் ஒரு காரணம்..........
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர்.இரா.குணசீலன்
//Senthilkumar said...
இம்...கலைஞர் சொத்து நேரு சொத்து ஏறிகிட்டே பூகுது. எவன் வீட்டுல அடுப்பு எரிந்தா எவனுகென்ன..
//
கருத்துக்கு நன்றி செந்தில் குமார்
//கார்க்கி said...
என்னது? அம்மையார் ஆட்சியில் சென்னையில் பஸ் ஓடுச்சா? நீங்க போனீங்களா? நிஜமாவா?//
என்ன சகா நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கலையா?
//ஊர் சுற்றி said...
கட்டணத்தை குறைத்த அமைச்சர் நேரு நீடுழி வாழ்க. இதன்மூலம் பேருந்துகளில் இருந்த 'சாதி' களை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டிய அவருக்கு 'சமத்துவ வாகனத்தான்' என்ற பட்டத்தை சூட்டுகிறோம். :)))//
வாங்க ஊர்சுற்றி...... நன்றி
//Indian said...
உங்கள் பதிவு தலைப்பில் ஒரு பிழை ..... முழு பூசணி எனபதிற்கு பதில் முழு பேருந்து என்று போட்டு இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்//
நன்றி இந்தியன்
//தீப்பெட்டி said...
நறுக்குனு பதில் சொல்லியிருக்கீங்க
நன்றி தீப்பெட்டி
//தராசு said...
இப்ப என்ன சொல்ல வர்றீங்க, பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு கலைஞர் ஆட்சியில சோறு கிடைக்குதுன்னு சொல்றீங்களா//
கலைஞர் ஆட்சியில் சோத்துக்கு பஞ்சம் எப்படி வரும், அவர்தான் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறாரே........நன்றி அண்ணே
இலவச பேருந்து வந்தாலும் வரும் விரைவில்
வாங்க அண்ணாச்சி நல்லா இருக்கியளா?
Post a Comment