skip to main |
skip to sidebar
சென்னை நகரில் மிக முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று மாநகரப்பேருந்துகள் தான். அப்படிப்பட்ட மாநகரப்போக்குவரத்துக்கழகம் இன்றைக்கு அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்களை சுலபமாக காலியாக்கும் கழகமாக மாறிவிட்டதுதான் வேதனை... இதற்கு அச்சாரம் போட்டவர் அம்மையார்... அதிலேயே ரோடு போட்டுக்கொண்டிருப்பவர் கலைஞர் அய்யா.... ஆறு வகை வழித்தடப்பேருந்துகள் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது...
1. சாதாரண பேருந்துகள்( வெள்ளை போர்டு)-- மினிமம் டிக்கெட் 2ரூபாய்
2."M" வகைப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
3. விரைவுபேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
4.சொகுசுப்பேருந்துகள் --- மினிமம் டிக்கெட் 5ரூபாய்
5.குளிர்சாதனப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 10ரூபாய்.
6.எல் எஸ் எஸ் பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 2.50ரூபாய்.
சென்னையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்கு ஒரு வாரம் எம்டிசிலதான் பயணித்தேன்..அசோக் பில்லர்ல இருந்து லிபர்டிக்கு பஸ் ஏறுவது சவாலான விசயம் என்பதால் மின்சார ரயிலில் பயணிக்க ஆரம்பித்தேன்...ஈக்காட்டுத்தாங்கல் டூ கிண்டி 20 நிமிட நடை அப்புறம் 10 நிமிடத்தில் கோடம்பாக்கம் ... நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது ராமாபுரத்திற்கு ரூமை மாற்றும் வரையில்.... இதுவரைக்கும் கண்ணில் எப்போதாவதுதான் விரைவு பேருந்து கண்ணில் தென்படும்.. இந்த நேரத்துல தான் மாதாந்திரப்பயணச்சீட்டு--மாநகரப்பேருந்து-- மின்சார ரயில்...பிரச்சினை இல்லாம நல்லா இருந்திச்சி.
2002ன்னு நினைக்கிறேன்..அப்போ முதல்வரா இருந்த நம்ம அம்மையார் ."M" வகைப்பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்... இந்த வகை பேருந்துகளில் மினிமம் கட்டணம் 3ரூபாய்..மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லாது...அந்த நேரத்தில் M49 இந்த வண்டிய பாத்தாலே கடுப்பா இருக்கும்..பீக் அவர்ல இந்த வண்டிதான் அதிகமா இருக்கும்... ராமச்சந்திரா டூ திருவான்மியூர் வழித்தடம்.........இருந்தாலும் அம்மையார் ஆட்சிக்காலத்தில் இந்த வகைப்பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தன,,
2006ல் நம்ம கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஜூன் மாதத்தில் இருந்து ."M" வகைப்பேருந்துகளில் மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இங்கேயிருந்துதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சு.. வழைப்பழத்தில ஊசிய குத்துற மாதிரி சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகளின் வழித்தடம் குறைக்கப்பட்டு அதே வழித்தடத்தில்"M" வகைப்பேருந்துகள் ஓட ஆரம்பித்தன..அம்மா ஆட்சியில் எப்போதாவது கண்ணில் தென்பட்ட விரைவுப்பேருந்துகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிமாக தென்பட ஆரம்பித்தது.இதனால் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்போருக்கு செலவு கொஞ்சம் அதிகமாகியது.இந்த நேரத்தில்தான் சொகுசுப்பேருந்துகள் அறிமுகமாகியது..முதலில் புறநகர்களுக்கு இயக்கப்பட்ட இவ்வகைப்பேருந்துகள் கொஞ்ச நாள் கழிச்சி நகருக்குள்ளும் இயங்க ஆரம்பித்தன...நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாணப்பேருதுகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டு அதே நேரத்தில் விரைவுப்பேருந்துகளும்,சொகுசுப்பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு மாதாந்திரப்பயனச்சீட்டு வைத்திருப்போரின் பாக்கெட்டுகளை இரு மடங்காக காலி செய்யும் பணியை இன்று வரை செவ்வனே செய்கின்றன...
சொகுசுப்பேருந்துகள் மற்றும் விரைவுப்பேருதுகள் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்துதான் இயக்கப்படுகின்றன. இங்கதான் பிரச்சினை ஆரம்பமாகுது. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து நீங்க வேளச்சேரிக்கு மாநகரப்பேருந்தில் போகனும்னா காலையில் 7:25மணிக்கு முன்னால் பஸ் ஸ்டாப்புக்கு வந்தீங்கன்னா சுலபமா பஸ் ஏறிவிடலாம்.. ஆனால் 7:30 மணிக்கு வந்தீங்கன்னா நீங்க பஸ் ஏறுவதற்கு மினிமம் அரைமணி நேரமாகும்..7:30மணியில் இருந்து 8:00மணி வரை 11 மாநகரப்பேருந்துகள் வரும்ம்ம்ம்ம்ம்.......ஆனா ஏறமுடியாது..
வருகிற 11 பேருந்துகளில் 4 சொகுசுப்பேருந்துகள்,4 விரைவுப்பேருந்துகள்,2சாதாரணப்பேருந்துகள், 1 குளிர்சாதனப்பேருந்துகள்.
குளிர்சாதன பேருந்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.தினசரி சொகுசுப்பேருந்துகளில் போவது இயலாத காரியம்... விரைவுப்பேருந்துகளில் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தும் அழமுடியாது.. அவசரம்னா ஓகே. அந்த ரெண்டு சாதாரணப்பேருந்துகளுக்கும் அந்த நேரத்துல பஸ் நிறுத்தமே மறந்து போகும்....
மேலும் நெரிசல் மிகுந்த நேரம் என்பதை இன்னும் பழைய நேரத்தையே மாநகரப்பேருந்து நிர்வாகம் பயன்படுத்துகிறது... இப்பவெல்லாம் காலை 7 மணிக்கே நெரிசல் நேரம் ஆரம்பமாவுது... ஆனா இந்த நேரங்களில் இயக்கப்படும் வழித்தடங்கள் மிகக்குறைவு. மாநகரப்பேருந்து நிர்வாகம் இதை கவனிக்குமா?..இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??
ஏஹே அபி ஜெயிச்சாச்சுப்பா.. எத்தனை வருசமா போரடிக்கிட்டு இருக்கா தெரியுமா?.. எங்க போனாலும், எந்த வேலை ஆரம்பிச்சாலும் அபிக்குத்தான் எத்தனை கஷ்டம்?. அந்த அளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில ஏகப்பட்ட வில்லனுங்க... முதல் முறையா நேத்துதான் அவ வாழ்க்கையில ஒரு விடிவு காலமே பொறந்திருக்கு.... தேர்தல்ல ஜெயிச்சுட்டாப்பா... தேர்தல்ல அவளோட எதிரிய மண்ண கவ்வ வச்சிட்டாள்ல... அது சரி எத்தனை நாளைக்குத்தான் அபி தோக்குற மாதிரியே காட்ட முடியும் டைரக்டருக்கு.... அதனாலதான் நேற்று ஒரு மாற்றத்துக்கு அபிய ரொம்பக்கஷ்டப்பட்டு ஜெயிக்கவச்சிட்டாரு... அபியோட தொல்லை எப்ப முடியும்?????
கலைஞருக்கு ஏன் இந்த திடீர் பயம் வந்துச்சின்னெ தெரியல... இலங்கை பிரச்சினையை திசை திருப்பி திமுக ஆட்சியை கவிழ்க்க சதி அப்படின்னு அறிக்கை மூலமா அழுகிறார்... ஏன அழுகிறது இந்த கிழச்சிங்கம்... ஈழப்பிரச்சினையில் கலைஞர்தான் சரியான் முடிவு எடுப்பார் என்று உலத்தமிழர்களெல்லாம் நம்புனாங்க... ஆனா அவரு இன்னா பண்ணினார்... அறிக்கை வுட்டாரு... கூட்ட்டத்த கூட்டினார், டில்லிக்கு காவடி தூக்கினார்... ஒன்னும் முடியல... ஆட்சியா? ஈழப்பிரச்சினையா?? அப்படினா ஆட்சிதான் அப்படின்னு சொல்லாம சொல்லிட்டார் கலைஞர்... திருமா உண்ணவிரதம்-- ராமதாசு-திருமா சந்திப்பு--- அதிமுக காங்கிரசு இதுல ஏதாவது ஒன்னுதான் அவர் இப்படி அறிக்கை விட வச்சிருச்சி....
யப்பா கலைஞருக்கு இன்னும் ஏகப்பட்ட குடும்ப கடமைகள் இருக்கு... அதுவரைக்கும் அவர் ஆட்சியை ஒன்னும் கவுத்திடாதிங்க....ஒரு தொகுதிக்கு 60,70 கோடி செலவு செய்யலாம்.. 234தொகுதிக்கும் செலவு செய்ய முடியுமா?
நம்ம தொங்கபாலுவோட நியூஸ் தலைப்புல வரணும்னு ரொம்ப யோசிச்சு நேத்து ஒரு உண்ணவிரத போராட்டம் நடத்துனாரு மது விலக்கை அமல்படுத்தக்கோரி..அவருக்குத் தெரியல இப்போதைக்கு ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுத்தத்தான் தலைப்புல வரும்னு...இந்த போராட்டத்துல எத்தனை காங்கிரசு கோஷ்டிகள் கலந்துகிச்சின்னு யாருக்காவது தெரியுமா?? அய்யா தொங்க பாலு முதல்ல தமிழனுக்காக போராடுறதுக்கு யோசிங்க... பேசாம உங்க போரட்டத்தை பாண்டிச்சேரில வச்சிருக்கலாம்...... அங்கதான் அளவில்லாம கரை புரண்டு ஓடிக்கிட்டு இருக்கு....உங்களுக்கு நீங்களே ஒரு ஆப்பு வச்சிக்கிட்டீங்களே அதப்பத்தி யாராவது சொன்னாங்களா??... தென் மாவட்டத்துல உங்க கட்சிக்கு கொஞ்சம் அதிகமா செல்வாக்கு உண்டு நேற்றைய உங்களோட போராட்டத்தால அதுலயும் மண்ண அள்ளி நீங்களே போட்டுட்டீங்க..உருப்படியா ஏதாவது யோசிங்க..தொங்கபாலுக்கிட்ட ஒரு கேள்வி: நீங்க திமுக காங்கிரசா? இல்ல அதிமுக காங்கிரசா?/
நேற்று என்னுடைய ரேஷன் அட்டை முகவரி மற்றத்திற்காக தி.நகர் அரசு அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.. எங்க ஆட்சியில எல்லாத்தையும் கணிணி மயமாக்கிட்டோம் எனகூவும் அரசுக்கு இந்த துறை மட்டும் எப்படி கண்ணுல படாம போச்சின்னு தெரியல... இன்னும் அதே பழைய மெத்தடுதான்.... கொஞ்சம் கவனிங்க கலைஞரே... எப்பதான் மாறுமோ??
வில்லு-- லொள்ளு
கண்ணு கேட்ட பிறகு நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்
"குருவி" செத்த பிறகு "வில்லு" விட்டு என்ன பிரயோஜனம்...
படிக்கிற பயபுள்ளைங்க ஓட்டு போடுங்கப்பா
மாட்டு பொங்கல் அன்று உங்கள் சன் டிவியில் கில்லி படம் போட்டிருந்தாங்க... ம்ம்ம் நம்ம டாக்டர் விசய் இயல்பான நடிப்பு,அளவான வசனம்,நல்ல காமெடின்னு சும்மா கில்லி மாதிரி விர்ருன்னு நடிச்சிருந்தார்.... இந்த மாதிரி படம் இனிமே அவருக்கு கிடைக்குமா?. ஷாஜகான் படம் கொடுத்த படிப்பினைக்கு அப்புறம் விசய் படத்த முதல் நாள் பார்க்கும் பழக்கத்தை மறந்தேன்.. வில்லு படத்துல பல இடத்துல போக்கிரி படத்துல வசனம் பேசுர மாதிரியே இதுலயும் தாங்க முடியல சாமீஈஈஈஇ.........
இலங்கை பிரச்சினை பற்றி பேச பிரணாப் முகர்ஜி இந்தியா சார்பில் இலங்கை செல்வதாக இருந்தது. இடையில என்ன உள்குத்து நடந்துதோ என்னவோ சிவசங்கர் மேனன் இலங்கை சென்றிருக்கிறார்.சிவசங்கர் மேனனின் திறமைய பற்றி நான் ஒன்றும் சொலவதற்கில்லை....அவர் இலங்கைக்கு சென்றிருப்பது போரில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குவது, சார்க் மாநாடு குறித்து பேசுவதற்காகவேன்னு ஒரு பேச்சு அடிபடுகிறது.போர்நிறுத்தம் பற்றி பேசுவது என்பது சந்தேகமே.. ஒருவேளை நம்ம கலைஞரின் தொல்லை தாங்காமல் வேற வழியில்லாம இவர அனுப்பியிருப்பாங்களோ என்னவோ. அப்ப பிரணாப்புக்கு விசா கிடைக்கலையா இல்ல விமான டிக்கெட் கிடைக்கலையா? பாவம் அவர் என்ன செய்வார் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓப்ப்டைக்கவேண்டும் என்ற ஒரு விசயத்துல எப்படி பேசனுமுனு அவருக்கு தெரியல....
நேற்று நம்ம கலைஞர் 1956ல் இருந்தே உன்னிப்பா கவனிச்சு தீர்மானம் போட்டதாக கூறியுள்ளார். மேலும் இலங்கைப்பிரச்சினைக்காக இன்னும் சில நாட்களாவது ( இல்ல இன்னும் சில காலமா)பொறுத்திருக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்..திருமா தன்னிச்சையாக உண்ணாவிரதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.இதுல இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது.ஈழப்பிரச்சினையில் யார் யாரையும் முந்திவிடக்கூடாது என்ற ராசதந்திரம் நல்லாவே தெரியுது. கலைஞருக்கு ஊதுகுழலாக ராமதாசு "கலைஞரின் சொல்படி திருமா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறார்....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
நாளைக்கு பொங்கல் பண்டிகை. சென்னை போன்ற பெரிய நகரங்களில் பொங்கல் பண்டிகை ஒரு குக்கர் விசில் சத்தத்தில் ஆரம்பித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முடிந்துவிடும். எனக்கும் அப்படித்தான் சென்னை வந்த பிறகு.
" ஏங்க பொங்கல் வரப்போவுது ஒரு கரும்பு கூட இன்னும் வாங்கலையே". எங்க வீட்ல இருக்கும்போது என் அண்ணன் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வாங்கி கொடுத்திடுவார்"
"எனக்கு கூடத்தான் சின்ன வயசுல எங்க வீட்டில எல்லாம் வாங்கி கொடுப்பாங்க"..
"நேத்து வரைக்கும் பள்ளிக்கரணையில ஒரு கடையில கூட கரும்பு இல்லப்பா..லாரி ஸ்ட்ரைக் முடிஞ்சிருச்சி.. இன்னைக்கு வாங்கிட்டு வாரேன்"..இப்படியேத்தான் போவுது.
பொதுவாக கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் அதாவது சுண்ணாம்பு அடித்தல், வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துதல் என பல வேலைகளில் மக்கள் அனைவரும் 15நாட்களுக்கு முன்னரே ரொம்ப பிசி ஆகிடுவாங்க. சென்னையில் இந்த மாதிரி வேலைகளை பொங்கலுக்கு பார்ப்பது மிகவும் அரிது.பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு வீடு முழுவதும் அம்மா சுண்ணாம்பினால் கோலமிடுவதை அருகில் உட்கார்ந்து பார்க்கும் அழகே தனி...பொங்கல் அன்றைக்கு அதிகாலை 5 மணிக்கு எழுந்து ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பாவிடம் திட்டு வாங்கிகொண்டே ஆற்றில் குளிப்பது தனி சுகம்.
பொங்கல் வைப்பதற்கு வயலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்மணிகளை கொஞ்சம் எடுத்து வருவோம்.. புது அரிசிதான் பொங்கலுக்கு.. ஆனா இப்போது அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு காத்திருக்கிறோம்.. பொங்கல் வைப்பதற்கு பனைமர ஓலை அல்லது தென்னை மர ஓலை தான் எரிக்க பயன் படுத்துவோம்.. அந்த காலை குளிருக்கு இந்த சூடு நல்ல இருக்கும்.
காலையில் வெறும் சக்கரைப்பொங்கலையும், கரும்பையும் முடித்து விட்டு எப்படா சாப்பாடு ரெடியாகும் என்று ஆகிவிடும்.. எல்லா வகை காய்கறியையும் போட்டு வைக்கும் சாம்பார் வாசம் தெரு முனை வரைக்கும் மூக்கை துளைக்கும். மாட்டுப்பொங்கல் அன்றைக்கு விளையாட்டுப்போட்டிகள்தான் ஹைலைட் கபடி போட்டியில் ஜெயித்தது... ஒட்டப்பந்தயத்தில் இரண்டாவதா வந்தது.( மொத்தம் 5 பேர் ஓட ஆரம்பித்தோம் நான் கடைசிக்கு முன்னதாக இருந்தேன். ஆனால் 3பேர் எல்லைக்கோட்டை தொடாமல் திரும்ப வந்ததால் அப்பீட்டு)...
ஆங்.... நேத்து நம்ம குடுகுடுப்பையார் வில்லு விமரசனம் நல்ல எழுதியிருந்தார்...என்னுடைய நண்பன் அஜித்,விசய் படம் ரெண்டையும் முதல் நாள்லயே பாத்திடுவான்.. கடைசியா ஏகன் பாத்திட்டு மறுநாள் பேயறைஞ்ச மாதிரி வந்தான். அந்த அளவுக்கு படம் தாக்கிரிச்சி போல. குடுகுடுப்பையார் விமசர்சனத்தை படிச்சும் சொல் பேச்சுக் கேக்காம நேத்து போய் பாத்துட்டான்.
" என்ன மாமா படம் எப்படிடா இருக்கு"
" டேய் தியேட்டர் பக்கமே போயிடாத... குருவி படமே பரவாயில்லடா...நயந்தாரா மட்டும் ஓகே... தாங்கலடா சாமீ" வில்லு தாக்குதல் ஒரு வாரம் இருக்கும் போல... அதனால மக்களே......பத்து சூதானமா நடந்துக்குங்க..
SMS ல் வந்த கவிதை
அழகு சிலைகள் அனைத்தும்
அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்
"அவள்" கோவிலை சுற்றி வரும் போது
டிஸ்கி: என்னோட சிறந்த மொக்கை படங்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்த நாயகன் படம் கலைஞர் தொலைக்காட்சியிலும், இரண்டாம் இடத்தை பிடித்த பழனி சன் தொலைக்காட்சியிலும் பார்த்து மகிழ்ந்து பொங்கலை கொண்டாடுங்கள்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் கொண்டாடும் ஒரு வயதுக் குழந்தைக்கு பரிசு வாங்குவதற்காக நேற்று புரசைவாக்கத்தில் ஒரு பொம்மைக் கடைக்குச் சென்றிருந்தேன். என் குழந்தைப் பருவத்தில் இந்த பொம்மைகளில் கால் பங்கு கூட பார்த்ததில்லை. அத்தனை வகைவகையான பொம்மைகள். குறிப்பாக வகைவகையான மிருக பொம்மைகள். பஞ்சும், வெல்வெட்டும் பிளாஸ்டிக்குமாக வெவ்வேறு அளவுகளில் இருந்த அவற்றை எல்லாமே வாங்கிக் கொண்டு போய் வைத்துக் கொண்டு குழந்தைகளும் நானுமாக விளையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நான் தேடிய உடலைச் சுற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய பெரிய அளவு குரங்கு பொம்மை மட்டும் கிடைக்கவில்லை.கடையில் ஓர் இஸ்லாமியரும் பொம்மை வாங்கிக் கொண்டிருந்தார். அவருடன் சுமார் நான்கு வயது மதிக்கக்கூடிய இரு சிறுவர்கள் இருந்தனர். இருவருக்கும் ஒலி எழுப்பக்கூடிய துப்பாக்கி பொம்மைகளை அவர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
`துப்பாக்கி பொம்மைகளை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டா'மென்று அவரிடம் சொன்னேன். `வன்முறை உணர்ச்சியைக் குழந்தைகளிடம் தூண்டிவிடவேண்டாம் என்று விளக்கினேன்.அவருடைய பதில் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருந்தது. `துப்பாக்கி பொம்மையினால் வன்முறை உணர்ச்சி பரவிவிடாது' என்றார். `அதைப் பரப்பியிருப்பது புஷ்' என்றார். புஷ்ஷை எதிர்ப்பது வேறு. நம் குழந்தைகளுக்கு வன்முறை உணர்வைத் தூண்டும் பொம்மைகளை நாம் வாங்கித்தரவேண்டாம் என்று கருத்து சொல்வது சக மனிதனாக என் கடமை என்று அவரிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடர்ந்து விவாதிக்காமல் நான் புறப்பட்டேன்.
கடைக்காரர் தாமாகவே என்னுடன் பேசினார். அவரும் ஓர் இஸ்லாமியர். (இந்துக் கடைகளிலேயே வாங்குங்கள் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை நான் எப்போதும் ஞாபகமாகப் புறக்கணிப்பது வழக்கம்) `துப்பாக்கி பொம்மைகள்தான் அதிகம் விற்கின்றன' என்று கடைக்காரர் சொன்னார். குறிப்பாக, ஒரு பிரபல சர்வதேச பொம்மை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆயிரம் ரூபாய் விலையுள்ள துப்பாக்கி பொம்மைக்கு பெரும் கிராக்கி இருப்பதாகவும் தன்னால் போதுமான அளவு வரவழைத்து விற்க முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். துப்பாக்கி பொம்மையை பலரும் விரும்பி வாங்குவது பற்றிய வருத்தம் அவர் பேச்சில் இருந்தது.
உலக அளவிலும் இந்திய அளவிலும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் அமைப்புகள் பல இருந்த போதும், விளையாட்டு பொம்மைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றைத் தயாரிப்பவர்களை முறையாகக் கட்டுப்படுத்த போதுமான சட்டங்களும் வழிமுறைகளும் இன்னமும் இல்லை. துப்பாக்கி பொம்மைகள் மட்டுமல்ல, `டாம் அண்ட் ஜெர்ரி' காமிக்சின் வன்முறை பற்றியெல்லாம் நம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கொள்கைப் பார்வையும் கிடையாது. புதிய அரசியல்வாதிகள் கூட இவற்றில் அக்கறை காட்டுவது இல்லை.
புஷ், அமெரிக்கா ஆகியோர் உலகில் வன்முறையைப் பரப்புவது, நான் என் வீட்டுக் குழந்தைகளிடம் வன்முறையைப் பரப்புவதற்கான நியாயமாக ஒருபோதும் ஆக முடியாது. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவோ இஸ்ரேலோ வன்முறையை அவிழ்த்துவிட்டாலும், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் வெறியர்கள் யுத்தம் சீக்கிரமே வந்துவிடும் என்ற பீதியைக் கிளப்பும்போதும், இப்படிப்பட்ட வன்முறைகளை ஏற்க மறுக்கும் மன வலிமையை நம் குழந்தைகளுக்கு ஊட்டுவது எப்படி என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
கல்வி, அத்துடன் சார்ந்த சந்தோஷமான விளையாட்டுகள் இவைதான் நம் குழந்தைகளை ஆரோக்கியமான மன நிலை உடையவர்களாக வளர்த்தெடுக்கக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை. நிறைய வாசிக்க வாசிக்க, நம் குழந்தைகள் படிப்பின் மகிழ்ச்சியில் திளைக்க முடியும். சுவையான கதைகளைத் தொடர்ந்து படிக்கும் மனம், மனித உறவுகளை ஆரோக்கியமானதாக ஆக்குவதற்கு ஏற்ற பக்குவத்தை அடையும்.
போர்களிலும் வன்முறையிலும் படிப்பறிவற்றவர்களை அதிகம் ஈடுபடுத்தி பலி கொடுக்கும் மூளைகள் மெத்தப் படித்த மூளைகள்தான். அதே சமயம் தேசபக்தி பொங்க, உயிர்த்தியாகம் செய்த ஜவான்களுக்காக மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் வரும் படித்த வர்க்கத்தினரிடம் ஊர்வல முடிவில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை ராணுவத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்ப பாரங்களை நீட்டினால் போதும்; ஊர்வலம் எந்த லத்தி சார்ஜும் இல்லாமல் கலைந்துவிடும். படிப்பின் ருசியை அறிய அறிய, அமைதியான வாழ்க்கைக்கான ஆவல் அதிகரிக்கும். படித்தவர்களை கடும் மூளைச்சலவை செய்யாமல் வன்முறையில் பயன்படுத்த முடியாது. எனவே மேலும் மேலும் சமூகத்தில் படிப்பை, வாசிப்பு ரசனையைத் தூண்டும் அத்தனையும் நம்மால் ஆதரிக்கப்பட வேண்டும்.
இந்த மாதம் 8 முதல் 18 வரை சென்னையில் நடக்க இருக்கும் 32வது புத்தகக் கண்காட்சி அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதுவரையிலும் ஒரு வருடம் கூடத் தவறாமல் அதில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு வருடம் என்னுடைய அனல் பறக்கும் வசனங்கள் நிறைந்த நாடக நூலைக் கண்காட்சியில் கொண்டு வந்து வைத்த சில மணி நேரங்களில், கண்காட்சி தீப்பிடித்துக் கொண்டு விட்டது. ஒவ்வொரு வருடமும் சென்னைக் கண்காட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நூல்கள் விற்பனையாகின்றன. இந்திய புத்தகத்துறை வரலாற்றில் முதல்முறையாக இப்போதெல்லாம் சில தமிழ் எழுத்தாளர்கள் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து நூல்களை வெளியிடும் அதிசயம் நடக்கிறது.ஆனாலும் அதிகமாக விற்கும் புத்தகங்கள் சமையல், ஜோதிடம், வாஸ்து, சுய முன்னேற்றம் மட்டும்தான் என்பது ஆரோக்கியமான நிலை அல்ல.
நமக்கு வரலாறு தெரிய வேண்டும். அப்போதுதான் நிகழ்காலம் புரியும். போரில் சிக்கித் துயரத்தின் உச்சத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழருக்காக இங்கே உணர்ச்சிவசப்படும் ஏராளமானவர்களுக்கு அந்தத் துயரத்தின் 60 வருட கால அரசியல் வரலாறு தெரியாது. இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று கல்வியும் வேலையும் அடைய முடிந்த லட்சக் கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு, பெரியாரின் முழு வாழ்க்கைக் கதையே தெரியாது. அரசியல், சமூக நீதி மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் அசல் வரலாறு கூட தெரியாததால்தான், எதையெதையோ காவியம் என்று இன்று எழுதுகிறவர்கள் கூட சொல்லிவிடுகிறார்கள்.நம் இன்றைய வாழ்க்கையின் அரசியல், சினிமா, பொருளாதாரம் அவ்வளவு ஏன் நம் குடும்ப வாழ்க்கையைக் கூடப் புரிந்துகொள்ள, நாம் ஏராளமாகப் படிக்க வேண்டும். படிக்கப் படிக்கத் தீராத பக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.
மரணத்தை நோக்கி அவரை அழைத்துச் சென்ற புற்று நோய்க்காக அறுவை சிகிச்சைக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைக்கப்பட்டபோது கூட, அண்ணா தன் கையில் இருந்த பாதி படித்த புத்தகத்தை முழுக்கப் படித்து முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று டாக்டரிடம் அனுமதி கேட்டார். அதுதான் வாசிப்பின் ரசனை.துப்பாக்கி பொம்மைகள் ஒருபோதும் அதை ஈடு செய்ய முடியாது. நம் குழந்தைகள் கையில் எதைக் கொடுக்கப் போகிறோம்?
நன்றி குமுதம்.
ராமாபுரத்திலிருந்து பள்ளிக்கரணை வந்து 6 மாதம் ஆகிறது. ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் மளிகை சாமான் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அங்க திருவள்ளுவர் சாலையில் உள்ள அய்யனார் சூப்பர் மார்க்கெட்டில் எல்லா சாமான்களும் முக்கியமா மளிகை சாமான்கள் நல்ல குறைந்த விலையிலும் தரமானதாவும் இருக்கும். ஒன்னும் பிரச்சினையில்லாம இருந்தது. இன்னும் பள்ளிக்கரணையில ஒரு கடை கூட செட் ஆகல... எல்லா கடையிலுமே விலை ஜாஸ்தியா இருக்கு. மேடவாக்கம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள முருகன் ஸ்டோரில் இரண்டு மாதங்கள் மளிகை வாங்கினேன். அதுலயும் பிரச்சினை வந்தது. லிஸ்ட் கொடுத்திட்டு வந்திடனும் டோர் டெலிவரி பண்ணிடுவாங்க. ஆனா ஒரு சில பொருட்கள் நாம கேட்ட கம்பெனி அயிட்டம் இருக்காது. பக்கத்துல புட் வேல்டு சூப்பர் மார்க்கெட் இருக்குதுன்னு ஒரு நாள் தெரியாத்தனமா உள்ள நுழைஞ்சிட்டேன்.உள்ள போனா மளிகை சாமான்களைவிட மற்ற பொருட்கள் தான் அதிகம் இருந்தது. சரி அப்படியே வாங்கலாம்னு பொருட்களை பாத்தா விலை இரண்டு மடங்கு ஜாஸ்தி.. அப்படியே ஒன் ஸ்டெப் பேக்..........
தி.நகர் சரவனாஸ்டோரில் மளிகை பொருட்கள் வாங்கலாம்னு போனால் அங்கேயும் புட் வேல்டு கதைதான்... ஆனா சரியான விலை. பொருட்கள் கம்மி. எதுக்கு தி.நகர் அலையனும் எங்க தெருவில் உள்ள கடையில் 1 மாதம் சாமான் வாங்கினேன். அந்த மாசம் எனக்கு செலவு கிட்டதட்ட 500 ரூபாய் அதிகமாகியது... உதாரணத்துக்கு பள்ளிக்கரணை மெயின் ரோட்டில் உள்ள கடையில் ஒரு பினாயில் பாட்டில் விலை 15ரூபாய் என்றால் எங்க தெருவில் உள்ள கடையில் அதே பினாயில் விலை 25ரூபாய்....இந்த ஒரு சாமானே இப்படினா மத்த விலையெல்லாம்!!!!!!!!!!!!!!
மீண்டும் தி.நகர் இந்த வாட்டி சரவணா மளிகை ஸ்டோரில் கடந்த 3 மாதங்களாக வாங்கிகொண்டிருக்கிறேன். இதுக்காக தி.நகர் போகும்பொழுது பிளஸ்டிக் சாமான் எடுக்கனும், அது எடுக்கனும், இது எடுக்கனும்னு சொல்லி என்னோட பட்ஜெட் மறுபடியும் எகிற ஆரம்பமாச்சு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை இருக்கு... என்னுடைய தம்பி சொன்னான்"ரிலையன்ஸ் பிரெஷில் எல்லாம் விலை கம்மியா இருக்குடான்னு.... என் வீட்டுலயும் ரிலையன்ஸ் பிரெஷ்க்கு போகனும் அப்படினு.....
கடந்த ஞாயிறு காலை ரிலையன்ஸ்க்கு போனேன்.. உள்ள நுழைவதற்கு முன்னால் தங்கமணியிடம் எல்லா பொருட்களின் விலையை பாத்துட்டுதான் வாங்கனும் சொல்லித்தான் உள்ள போனேன். காய்கறிகலையெல்லாம் நல்லாவே பேக் பண்ணி வச்சிருந்தாங்க. கூட்டத்துக்கும் குறைவில்லை...ஒரு ஆள் 2000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினார் அப்படி என்ன வாங்கினார்னு பாத்தா கெலாக்ஸ்,லேய்ஸ், ஓட்ச் அப்படின்னு வாயில நுழையா பெயர் கொண்ட எல்லாத்தையும் வாங்கி போட்டிருந்தார்...... அங்க ஆப்பிள் மட்டும்தான் நல்லா இருந்திச்சி.. மத்ததெல்லாம்
உதாரணத்திற்கு 1லிட்டர் கோல்டுவின்னர் விலை ரூபாய் 71
இதே கோல்டுவின்னர் விலை சரவணா மளிகை ஸ்டோரில் விலை ரூபாய் 65..
நீங்களே சொல்லுங்க...............????????????????
டிஸ்கி: நான் பக்கா மிடில் கிளாஸ்ங்க......
ஒவ்வொரு புது வருடத்தின்போதும் தீர்மானங்கள் எடுப்பதும் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதும் நம் வழக்கம்.வயதுக்கேற்ப தீர்மானங்கள் மாறும். இந்த வருடம் தவறாமல் டைரி எழுதவேண்டும்; இந்த வருடத்திலிருந்து குடிப்பதை விட்டு விட வேண்டும். இனிமேல் அசைவம் சாப்பிடுவதில்லை. இனிமேல் வீட்டில் எரிந்து விழுவதில்லை... இப்படி ஒவ்வொரு நபரிடமும் தீர்மானங்களைத் திரட்டினால், அது பெரும் ஆராய்ச்சிக்குரிய சுவையான தொகுப்பாகக் கூட அமையும்.
இந்தத் தீர்மானங்கள் அத்தனைக்கும் பின்னால் ஓர் எளிமையான உண்மை இருக்கிறது. அது என்ன? ஒவ்வொரு மனிதனும் இந்த வருடம் தனக்கு தீங்காக இருந்த பழக்கங்களை விட்டுவிட்டு, நல்ல பழக்கங்களை அடுத்த வருடத்தில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறான்.அதாவது சாதாரண மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டு மேம்பட விரும்புகிறான். தன்னைத்தானே ஏதோ ஒரு வடிவத்தில் சுயவிமர்சனம் செய்து கொள்கிறான்.
ஆனால் நினைத்தபடி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள முடியாமற் போய்விடுகிறது. பைபிளில் எனக்குப் பிடித்த ஒரு வாசகம், இதைப்பற்றிச் சொல்கிறது. The spirit is willing but the flesh is weak. மறு தினம் தான் காட்டிக் கொடுக்கப்பட்டு கைதாகி சித்ரவதைக்குள்ளாவோம் என்பது ஏசுவுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த நிலையில் முன்னிரவு முழுவதும் இறைவனைத் தொழுவோம் என்று சீடர்களை அழைத்துக் கொண்டு கெத்சமனே தோட்டத்துக்கு செல்கிறார். இரவு வளர, வளர, ஒவ்வொரு சீடராக தூங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு விழித்திருந்து தொழ மனதில் விருப்பம்தான்; ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்ற பொருளில் ஏசு சொன்னதாக இந்த வாக்கியம் விளக்கப்படுகிறது. எனக்கென்னவோ ஏசு அதைத் தன்னைப் பற்றியே சொல்லிக் கொண்டதாகத்தான் தோன்றுகிறது. மறு நாள் சந்திக்கப்போகும் சிலுவை சித்ரவதைக்கு அவர் சித்தம் தயாராக இருக்கிறது. உடல் இன்னமும் அஞ்சுகிறது. தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவே அவர் அன்றிரவு முழுவதும் இறைவனுடன் பிரார்த்தனை வழியே உரையாடுகிறார்
தான் சரி என்று நம்பும் உண்மைக்காக எந்த துன்பத்தையும் சந்திக்க ஒருவர் மனதில் தயாராக இருக்கலாம். அவர் உடலும் தயாராக இருக்க வேண்டும் என்பது அடுத்த கட்ட சுய தயாரிப்பு. கொள்கையில் பிடிப்பு இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் சந்திக்கும் சவால் இது. பெரும்பாலான மக்கள் இதற்குத் தயாராக இல்லாத நிலையில் தான் வாழ்க்கையில் சமரசங்களைச் செய்கிறார்கள். ரயிலில், தெருவில், ஓட்டலில், டீக்கடையில் என்னை சந்திக்கும் பல வாசகர்கள் `எப்பிடி தைரியமா எழுதறீங்க ?' என்று ரகசியக் குரலில் கேட்கும்போது, அதன் பின்னே இருப்பது, விமர்சனங்களின் விளைவாக ஏற்படக்கூடிய துன்பங்களை எப்படி சந்திப்பது என்பது பற்றிய பொதுக் கவலைதான். அந்தக் கவலை இல்லையென்றால் அவர்களும் விமர்சிக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். The spirit is willing but the flesh is weak.
ஒவ்வொரு புது வருடத்திலும் தசையின் பலவீனத்தைக் கடக்கும் முயற்சியில், சாமான்ய மக்கள் இந்த வருடம் இதைச் செய்வேன் என்று சுயத் தீர்மானங்கள் போடுகிறர்கள்.
ஆனால் நம் சமூகத்தின் மிக பலமான சக்திகளாக இருக்கிற அரசியல், அரசாங்கம், சினிமா, ஊடகங்கள், பத்திரிகைகள், தொழில்கள் இவற்றில் இருக்கிற முக்கியமான புள்ளிகள் யாரும் இப்படி புது வருடத் தீர்மானம் போடுவதே இல்லை. போன வருடம் ரொம்ப அராஜகம் செய்துவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் குறைத்துக் கொள்வேன்; போன வருடம் ஓவராக லஞ்சம் வாங்கினேன். இந்த வருடம் கம்மியாக வாங்குவேன்; போன வருடம் ஆபாசமாகவும் அபத்தமாகவும் படங்கள் செய்தேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல படங்கள் செய்வேன்; போன வருடம் நம் பத்திரிகை முழுக்க ஆபாசக் களஞ்சியமாக இருந்தது; இந்த வருடம் கொஞ்சம் அடக்கி வாசிப்பேன்; போன வருடம் அபத்தமான சீரியலும் குலுக்கல் டான்சுமாக சேனலை ஓட்டிவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல ப்ரொகிராம் செய்வேன்.......என்றெல்லாம் துளிக் கூட சுயவிமர்சனப் புது வருடத் தீர்மானங்கள் இந்த அயோக்கியர்கள் செய்வதே இல்லை.
இரண்டு வருடங்களாக நானும் ஒவ்வொரு புத்தாண்டின்போதும் ஒரு தீர்மானத்தை யோசிக்கிறேன். இது என்னைத் திருத்திக் கொண்டு மேம்படுவது சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க விரக்தியால் எடுக்கும் தீர்மானம். இனி அரசியல் விமர்சனமே எழுதுவதில்லை என்று சென்ற டிசம்பரில் யோசிக்கத் தொடங்கினேன். அதற்குக் காரணம் என் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காக, முந்தைய நான்கு வருடக் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்ததுதான். அவற்றைப் படிக்கப் படிக்க, தமிழகத்தின் பிரதான அரசியல்வாதிகளைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் மீதியில்லை என்று தோன்றியது. இவர்களுடைய அயோக்கியத்தனங்களின் அந்தந்த வாரத்து நிகழ்ச்சிகளின் பரிமாணங்களை மட்டுமே தொடர்ந்து எழுத முடியுமே தவிர, அடிப்படையாக இவர்களைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் இல்லை.
விரக்தியை அதிகப்படுத்திய இன்னொரு காரணம், இப்படி தொடர்ந்து எழுதியும், இவர்கள் எதையும் திருத்திக் கொள்வதாக இல்லை என்பதும் என் கட்டுரைகளிலிருந்தே தெரிய வருகிறது. பழைய தவறுகளையே இன்னும் பெரிசு பெரிசாக தொடர்ந்து செய்கிறார்களே ஒழிய துளியும் வெட்கம், கூச்சம், சூடு, சுரணை போன்ற அடிப்படை மனிதப் பண்புகள் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் நாம் தள்ளப்படுகிறோம். உடனடி உதாரணங்களாகவே சிலவற்றைச் சொல்லலாம். மின்வெட்டால் சிறு தொழில்கள் எல்லாம் மூடப்படும் வேளையில் திருச்சி உறையூரில் ஸ்டாலின் கூட்டத்துக்காக பல கிலோமீட்டர் தூரத்துக்கு அருவருப்பாக மின் அலங்காரங்கள் செய்திருந்ததைக் குறிப்பிட்டு திருந்தவே மாட்டிங்களா என்று ஒரு வாரம் முன்னால் ஓ பக்கங்களில் கேட்டிருந்தேன். இந்த வாரம் சென்னை வேளச்சேரியில், முதலமைச்சர் அடுத்த வாரம் வரப்போகும் நிகழ்ச்சிக்காக சாலைகளில் செய்துவரும் வரவேற்பு ஏற்பாடுகள் போக்குவரத்தையே நிலைகுலைய வைத்து, அந்தப் பகுதி மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? திருந்த மாட்டோம், போங்கடா என்பதுதானே?
முதலமைச்சரின் புது வருடக் கனவு, கூவத்தின் பளிங்கு போன்ற நீரில் அவர் வீட்டுப் பிள்ளைகள் குளிப்பது என்று மேம்பாலத் திறப்பு விழாவில் சொல்லியிருக்கிறார். இதே கனவை அவர் 1972ல் நான் கல்லூரியில் படிக்கும்போதும் சொன்னார். அப்போது அவருடைய ஆட்சியில் அதற்கு பணம் ஒதுக்கிச் செலவும் செய்தார்கள். இப்போது என் மகனும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான். முதலமைச்சர் கலைஞரும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து சாதனை செய்துவிட்டார். கூவம் இன்னும் நாறிக் கொண்டிருக்கிறது. 37 வருடங்களுக்கு முன்னால் கூவம் சீரமைப்பு திட்டத்தைப் போட்டவர் ஏன் அதை அப்போதே சரியாக நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை, இப்போது இன்னொரு திட்டம் போடும்போது சொல்ல வேண்டாமா? சொல்ல மாட்டார். நம் மக்களின் மறதி, அலட்சியம், விமர்சிப்பதற்கான பயம் இவையெல்லாம்தான் அரசியல்வாதிகளின் முதலீடுகள்.
கலைஞருக்கு மாற்றாக தன்னை முன் நிறுத்தும் எதிர்க் கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் உச்சகட்ட அரசியல் சாணக்யத்தனம் என்ன தெரியுமா? திருமங்கலம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரின் மாமியார், மாமனார், கொழுந்தன் எல்லாரையும் அ.தி.மு.க.வில் சேரச் செய்வதுதான். இதுவா அரசியல்?தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி நடத்தி வந்திருப்பதே இந்தக் குடும்ப அரசியல்தான். அரசியலில் இருக்கும் பல குடும்பங்களில் சிலர் தி.மு.க.விலும் சிலர் அ.தி.மு.க.விலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குடும்பத்துக்கு லாபம். இரு கட்சிகளும் மேல் மட்டத்திலிருந்து கீழ் வரை, குடும்பங்களின் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.
ஒரு ஆர்.டி.ஓ. லஞ்ச வழக்கில் கைதானால் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்து, பிடிபடுகிற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கோடிக்கணக்கில் சொத்து. அரசாங்கத்தின் கீழ்மட்ட, நடுமட்ட ஊழியர்களிடமே இவ்வளவு சொத்து குவிகிறதென்றால், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று யூகிக்கலாம்.
இன்று தமிழ்நாட்டின் எந்தப் பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வேராக இருப்பது லஞ்சம் ஊழல் அராஜகம்தான். நில ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, ஆற்று நீர் மாசுபடுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது லஞ்சம் ஊழல் அராஜக அரசியல். இதை 1969 முதல் 2009 வரை செய்துவந்திருப்பவர்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரு கட்சிகளும்தான். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும்தான் இதற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். புதிதாக உருவாகி வந்த கட்சிகள் இயக்கங்கள் எதுவுமே தங்களுக்கு மாற்றாக உருவாகாதபடி, அவற்றையும் தங்கள் வழியில் அழைத்துச் சென்ற குற்றமும் இவர்களுடையதே.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக நான் தொடர்ந்து அரசியல் விமர்சனம் எழுத வேண்டும் என்ற விரக்தியில் சென்ற ஜனவரியில் எழுதுவதை நிறுத்த முடிவு செய்தேன். அப்போதுதான், எனக்கெதிரான அவதூறுப் பிரசாரங்கள். கண்டனக் கூட்டங்கள். அரசியல் நிர்ப்பந்தங்கள் எல்லாம் நிகழ்ந்தன. விகடனில் என் தொடர் நிறுத்தப்பட்டது. நானாக நிறுத்துவேனே தவிர, இன்னொருவர் நிர்ப்பந்தத்தால் என் குரல் ஒலிப்பது நிற்காது என்று நிரூபிப்பதற்காகவே தொடர்ந்து குமுதத்தில் எழுதத் தொடங்கினேன். ஆனால் என் விரக்திக்கான காரணங்கள் அப்படியே உள்ளன.2009_ல் தமிழக அரசியலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் திருக்குவளை குடும்பமும் மன்னார்குடி குடும்பமும் பலவீனப்படுத்தப்பட்டு அவற்றை அண்டிப் பிழைக்கும் அரசியல் கட்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டு, முற்றிலும் புதிய நேர்மையான அரசியல் சக்திகள் இளைய தலைமுறையிலிருந்து முகிழ்த்தெழ வேண்டும் என்பதுதான் என் கனவு. இதை நிறைவேற்றப் போகிற பொதுமக்கள், வாசகர்கள், இளைஞர்கள் எங்கே இருக்கிறீர்கள்? தயவுசெய்து வெளியே வந்து என் மனச் சோர்வை நீக்குங்கள். அதுவே நீங்கள் எனக்குத் தரும் புத்தாண்டுப் பரிசு. The spirit must be willing and the flesh should not be weak..
இந்த வருட பூச்செண்டு
மும்பையில் பயங்கரவாதி கசாபை, தன்வசம் எந்த ஆயுதமும் இல்லாதபோதும் துணிச்சலாகப் பிடித்து தன் உயிரையே கடமைக்காகக் கொடுத்த காவலர் துக்காராமுக்கு இந்த வருடப் பூச்செண்டு.
இந்த வருட குட்டு.
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எதுவுமே செய்யாமல் அரசியல் நடத்திய ஜெயலலிதாவுக்கு இந்த வருடக் குட்டு.
இந்த வருட பரிதாப விருது.
சன் டி.வி.யிலிருந்து கலைஞர் டி.வி.க்கு சென்ற ஊழியர்கள் அனைவருக்கும் இ.வ.பரிதாப விருது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி குமுதம்..காம்
ஒவ்வொரு முறை மும்பை செல்லும்போதும் மூன்று காரணங்களுக்காக மும்பையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் ஆசை வந்து போகும்.
ஒரு காரணம் சினிமா. இரண்டாவது காரணம் நாடகம். மூன்றாவது ஆட்டோ. சென்னையில் 200 ரூபாய் கொடுக்கும் தொலைவுகளுக்கு மும்பையில் 70 ரூபாய்தான் ஆட்டோ கட்டணம். சென்னையில் 20 ரூபாய் வாங்கும் இடத்துக்கு அங்கே ஒன்பது ரூபாய். நானும் எனக்குத் தெரிந்த பல ஆட்டோ டிரைவர் தோழர்களையும் யூனியன் நண்பர்களையும் என் செலவில் மும்பை வந்து, இங்கே மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது, சென்னையில் இது சாத்தியமாக விடாமல் தடுக்கும் அம்சங்கள் என்ன என்பதை ஆராயும்படி கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டேன்.
ஹிந்தி சினிமாவில் அரிவாள், துப்பாக்கி, வெட்டு குத்து, பழி வாங்கல் ஃபார்முலாவுக்கு டாப் ஹீரோக்கள் விடை கொடுத்துவிட்டார்கள். தமிழ் இயக்குநர் முருகதாசும் தெலுங்குத் தயாரிப்பாளர்களும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் ஹிந்திப் படமான `கஜினி' ஒரு விதிவிலக்கு.
அதில் கூட ஹீரோ அமீர்கான், இது என் பாணிப் படமல்ல என்று பேட்டிகளில் எச்சரிக்கையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். படத்தின் கடைசிக் காட்சி தமிழைப் போல வன்முறையில் முடியக்கூடாது என்று மாற்றியமைத்திருக்கிறார். வன்முறையில்லாத கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள் என்று அக்ஷய் குமார் குரல் கொடுத்திருக்கும் அனிமேஷன் படமான ஜம்போ விளம்பரத்தில் கஜினியை மறைமுகமாக கிண்டலடித்திருக்கிறார்கள்.
அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான், சஞ்சய் தத், அக்ஷய், அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம் என்று அத்தனை ஹீரோக்களும் ரொமான்ஸ், காமெடி, திக்கான கதைப்படங்கள், வன்முறையில்லாத த்ரில்லர்கள் என்று இறங்கி ஏழெட்டு வருடங்களாகின்றன. தமிழிலோ பிரசன்னா, நரேன், ஷ்ரீகாந்த் போன்றவர்கள் கூட அரை டிராயர், லுங்கி, அரிவாளுடன் கதை சொல்லும்படி புது இயக்குநர்களை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்களாம்.தஸ்விதான்யா என்று ஒரு படம் பார்த்தேன். லோ பட்ஜெட் படம். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் இதுவும் லாபகரமாகவே ஓடியிருக்கிறது. கதாநாயகன் வினய் பதக், பெரிய படங்களில் ஹீரோவின் நண்பன் வேடங்களில் வரக்கூடிய குணச்சித்திர நடிகர்.
தனியார் அலுவலக ஊழியர் பாத்திரம். 35 வயதாகியும் திருமணம் செய்யாமல், காது கேட்காத அம்மாவைப் பார்த்துக் கொண்டு விஸ்வாசமாக ஆபீஸுக்கு உழைக்கும் பாத்திரம். குடல் புற்று நோயால் இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்துவிடுவோம் என்பது தெரிந்ததும், பத்து ஆசைகளைப் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொள்வதுதான் கதை. சிவப்பு கார் வாங்குவது, வெளி நாடு செல்வது, பள்ளியில் தனக்குப் பிடித்த வகுப்புத் தோழியை தேடிப் பிடித்து சந்திப்பது போன்ற பத்து ஆசைகள். நகைச்சுவையும் மெல்லிய சோகமும் கலந்து இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் படம்.
பார்த்த இன்னொரு படம் மகாரதி. குஜராத்தி மொழியில் 21 வருடங்களாக மேடை நாடகமாக நடிகர் பரேஷ் ரவால் நடத்தி வந்த நாடகம் படமாகியிருக்கிறது. தன் சொத்துக்கு ஆசைப்படும் இளம் மனைவியை எரிச்சலூட்டுவதற்காக குடிகார பணக்காரக் கணவன், தான் தற்கொலை செய்துகொண்டால் அவளுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று மிரட்டுகிறான். தன் தற்கொலையை கொலை என்று நிரூபித்து பணத்தை அடையும்படி சொல்லிவிட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு செத்துப் போகிறான். பணத்துக்காக அவளும் ஒரு குட்டித் திருடனும், வக்கீலும் போடும் திட்டங்கள், முடிவில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற சஸ்பென்ஸ் எல்லாம்தான் படம். நசிரூதீன் ஷா, ஓம் பூரி, போமன் இரானி, பரேஷ் ரவால் என்று திறமையான நடிகர்களின் நடிப்புதான் படத்தின் சிறப்பு
ஹிந்தி சினிமாவில் இப்படி வித்தியாசமான முயற்சிகள் சிறிய பட்ஜெட்டில் சகஜமாக நடக்கின்றன. இன்னொரு பக்கம் அபிஷேக், ஜான் ஆப்ரஹாம் போன்ற ஹீரோக்கள் கூட தயக்கம் இல்லாமல் ஹோமோசெக்ஷுவல் பாத்திரங்களில் `தோஸ்தானா' போன்ற படங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட சூழலே இல்லை.
ஒரு வித்தியாசமான முயற்சி இங்கே எவ்வளவு கடினமானது என்பதற்கு சென்ற வருடம் இதே டிசம்பர் மாதம் நான் பிரமிட் சாய்மீரா நிறுவன உதவியுடன் ஆரம்பித்த ஒற்றை ரீல் இயக்க அனுபவமே ஓர் உதாரணம். நல்ல சிறுகதைகள், வித்தியாசமான முயற்சிகள், புதிய திறமைசாலிகள் ஆகியோரை அறிமுகப்படுத்தி வளர்ப்பதே இதன் நோக்கம். படத்தின் நீளம் ஒரே ரீல். அதாவது பத்து நிமிடம். மெயின் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு தியேட்டரில் இதை இலவசமாகப் போட்டுக் காண்பிப்பதே திட்டம்.
எழுத்தாளர் திலீப்குமாரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, இரண்டே பாத்திரங்கள் கொண்ட ஒரு படத்தை உருவாக்கினேன். நடிகை ரோஹிணியும் எங்கள் நாடகக்குழு நடிகர் நீல்சன்னும் நடித்த `திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்யவேண்டும்?' என்ற இந்த முதல் படத்தை கடந்த டிசம்பரில் 40 அரங்குகளில் பிரமிட் சாய்மீரா திரையிட்டது. லூமியர் பிரதர்ஸ் முதல் சினிமாவைக் காட்டிய அதே நாளில், 40 ஊர்களில் 40 தமிழ் எழுத்தாளர்கள் இதைத் தொடங்கி வைத்தார்கள். அஜீத் நடித்த `பில்லா' படத்துக்கு முன்பாக காட்டப்பட்ட படம் இரு மாதங்கள் அரங்குகளில் இருந்து பெருமளவு வரவேற்பு பெற்றது.
மொத்தமாக நான் ஆறு படங்கள் செய்வதாக திட்டம். புது திறமையாளர்கள் அனுப்பும் விண்ணப்பங்களிலிருந்து தேர்வு செய்து மேலும் ஆறு படங்களை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். சுமார் 80 பேர் விண்ணப்பித்தனர். அவற்றில் நடிகை ரோஹிணியின் ஸ்க்ரிப்ட் உட்பட 10 கதைகள் தயாரிப்புக்குத் தகுதியானவையாக இருந்தன.
முதல் பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் இப்படிப்பட்ட முயற்சிகளில் தான் இலவசமாகக் கூட நடித்துத் தரத் தயார் என்று அறிவித்தார். அடுத்த படத்துக்கே அவரைக் கேட்டேன். (இலவசமாக அல்ல. டோக்கன் சம்பளத்துக்குத்தான்.) எழுத்தாளர் அன்பாதவன் எழுதிய சிறுகதை. சத்யராஜுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடை அளவு எல்லாம் எடுத்தாகிவிட்டது. இன்னும் இரு தினங்களில் படப்பிடிப்பு. சத்யராஜ் விலகிக் கொண்டார். காரணம், அவருடைய அடுத்த இரு படத் தயாரிப்பாளர்கள், ஒற்றை ரீலில் அவர் நடித்தால் அவர் மார்க்கெட் அடிபடும் என்று பயப்படு(த்து)கிறார்களாம்.
நிச்சயித்த படப்பிடிப்பு தினத்தன்று, நண்பர் நடிகர் தலைவாசல் விஜய் அந்தப் பாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். `உள்ளேன் அய்யா' என்ற அந்தப் படம் முடிந்து தணிக்கையெல்லாம் ஆகி பத்து மாதங்களாகிவிட்டன. இன்னும் தியேட்டருக்கு வரவில்லை. காரணம், பிரமிட் சாய்மீராவின் மார்க்கெட்டிங் டிவிஷன் இன்னும் படத்துக்கு ஸ்பான்சர் தேடிக் கொண்டிருக்கிறது.ஒற்றை ரீல் இயக்கத்தை ஆரம்பிக்கும்போதே அவர்களிடம் சொன்னேன். படத் தயாரிப்புச் செலவு மூன்று லட்சம் ரூபாய். 40 பிரிண்ட், விநியோகச் செலவெல்லாம் இன்னொரு மூன்று லட்சம். மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் செலவுக்கு, படத்தின் ஆரம்பத்தில் 30 செகண்ட், முடிவில் 30 செகண்ட் விளம்பரதாரர் கிடைத்தால் போதும். லாபம் நஷ்டம் இல்லாத புராஜெக்ட்டாக இதைச் செய்யமுடியும்.
பல தொலைக்காட்சிகளில் பல தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்பும் நிறுவனத்துக்கு விளம்பரதாரர்கள் கிடைப்பது பெரிய சிக்கலாக இருக்கக்கூடாது. விளம்பரதாரர்கள் கிடைக்கவே இல்லையென்று வைத்துக் கொண்டாலும் கூட, வருடத்தில் 12 ஒற்றை ரீல் படங்களுக்கு ஆகப் போகும் மொத்தச் செலவு வெறும் 72 லட்சம் ரூபாய்கள்தான்.`குசேலன்' படத்தில் மட்டும் அவர்கள் அடைந்த நஷ்டம் 20 கோடி ரூபாய்க்கும் மேல். அதே சமயம் ஒற்றை ரீல் போன்ற முயற்சிகளில் ஒரு கம்பெனிக்குக் கிடைக்கும் நன் மதிப்பு விலைமதிப்பற்றது.
ஆனால் இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகள், எங்கேயும் எப்போதுமே வணிக முயற்சிகள் நகரும் வேகத்தில் நகர்வதில்லை. ஒரு நிறுவனத்தின் தலை முதல் வேர் வரை எல்லாருக்கும் ஈடுபாடு இருந்தாலொழிய இவை வெற்றி பெறமுடியாது. மேல் மட்டத்தில் மூன்று நான்கு பேர் மட்டும் காட்டும் அக்கறை போதுமானதல்ல. இதை நிர்வாக இயக்குநர் சாமிநாதனும் நானும் இந்த ஓராண்டில் பல விஷயங்களில் புரிந்துகொண்டோம்.இப்படிப்பட்ட சூழலில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் ஓரடி முன்னே போயிருந்தாலே ஆறுதல்தான் என்றே கருதவேண்டும். போன டிசம்பரில் என்வசம் இல்லாத இரு குறும்படங்கள் இந்த டிசம்பரில் உள்ளன. ஓரடி முன்னே ?!
ஒற்றை ரீல் இயக்கம் போன்ற வணிக சினிமாவுக்கு நேரடித் தொடர்பு இல்லாத முயற்சிகளே தமிழ்ச் சூழலில் சிரமமானவை என்கிறபோது, வணிக சினிமாவுக்குள் மாற்று முயற்சிகள் மேலும் கடினமானவை.
மும்பையில் என்னை ஈர்க்கும் இன்னொரு அம்சம் நாடகம். இரவு 9 மணிக் காட்சிக்கு ஜுஹு பிருதிவி அரங்கம் நிரம்பி வழிவது மனம் நிறைக்கும் காட்சி. பயங்கரவாதத் தாக்குதல் முடிந்த சில தினங்களிலேயே நாடக அரங்குகளுக்கு வழக்கம் போல மும்பைவாசிகள் வந்துவிட்டார்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் கொடூரமான போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி பாத்திரங்களில் பார்த்து `ரசிக்கும்` நடிகர் அஷீஷ் வித்யார்த்தியை பிருதிவி அரங்கில் முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் பார்த்தேன். நாடகத்தில் அவர் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான். 90 நிமிடம் இடைவெளி இல்லாமல் பேசி நடித்தார். நதீரா பாபர் இயக்கிய இந்த நாடகம் கிராமத்திலிருந்து சினிமா ஆசையுடன் மும்பைக்கு வந்து வாழ்க்கை அனுபவங்களில் அடிபட்டு மன நிலை சிதைந்து நடிகனாகாமலே இறந்து போகும் ஒரு இளைஞனைப் பற்றியது. அஷீஷ் வித்யார்த்தி போன்று தேசிய நாடகப் பள்ளியில் படித்துத் தேர்ந்த ஒரு திறமையான நடிகரையெல்லாம் தமிழ் சினிமா எப்படி வீண்படுத்துகிறது என்ற வருத்தம் ஏற்பட்டது. அதே சமயம் தெலுங்கு, தமிழ் என்று பிஸியான சினிமா வேலைக்கு நடுவில், இப்படி தாய்மொழியில் நாடகம் நடிப்பதற்கு அஷீஷ் போன்றவர்கள் காட்டும் அக்கறை அவர் மீது மதிப்பேற்படுத்தியது. ஒரு தமிழ் நடிகர் நாடகம் நடிப்பது பற்றி பத்து வருடமாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.
வஜினா மோனோலாக்ஸ் (யோனி பேசுகிறது) என்ற நாடகம் மும்பையில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அடிக்கடி நிகழ்த்தப்படுகிறது. இதே நாடகக் குழுவினர் சென்னையில் இதை ஆங்கிலத்தில் நடத்த கடந்த மூன்று வருடங்களில் இரு முறை வந்தபோது, ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடத்தில் சென்னைக் காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை கூட எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. மும்பையாக இருந்திருந்தால் அதுவே ஓ என்று சத்தம் போட்டிருக்கும். சென்னையில் இருக்கும்போது சென்னைவாசி போல நடந்துகொள்கிறது.ஒவ்வொரு முறை சென்னை திரும்பும்போதும் அடுத்த முறை மும்பைக்கு வரத் தேவை இருக்கக் கூடாது என்றே நினைத்துக் கொள்கிறேன். காரணம், தாய்மொழி மீது இருக்கும் அன்புதான். ஆனால் சென்னையின் ஆட்டோ,சினிமா, நாடகச் சூழல் என்னை அவ்வப்போது இளைப்பாற மும்பைக்குத் துரத்திவிடுகின்றன..
நன்றி. குமுதம்...
நேற்று எனக்கு வார விடுமுறை. சரியா 5மணிக்கு நடேசன் பார்க்குல இருக்கனும் அப்படின்னே நினைச்சுட்டே தூங்கிவிட்டேன். முழிச்சி பாத்தா மணி 4:15 க்கு மேல் ஆகிவிட்டது. ஆஹா பரபரன்னு கிளம்பி என் பையனிடம் அப்பா ஆபிஸ் போறேன்டான்னு சொல்லி எஸ்கேப்.தி.நகர் வந்தடையும்போது மணி 5:30 ஆகிவிட்டது. தாமிராவுக்கு மிஸ்டு கால் கொடுத்து பேசினேன். ஒன்னும் அவசரமில்லை மெதுவா வாங்க" என்றார். சரி நடேசன் பார்க்குக்கு தண்டபானி தெரு வழியா போனா பக்கமா இல்லை பர்கிட் ரோடு சிக்னல் வழியா போனா பக்கமானு ஒரு சந்தேகம். ஒரு பெருசு கிட்ட கேட்டு சரியான வழியில் வந்தடைந்தேன்.
சந்திப்பு ஆரம்பமாகியிருந்தது. அதிஷா தனியாக நின்று செல் பேசிக்கொண்டிருந்தார்.
வந்திருந்தவர்கள்
1. டோண்டு
2.ஜியோராம் சுந்தர்.
3.கேபிள் சங்கர்
4.காவேரி கணேஷ்
5.லக்கி லுக்
6.அதிஷா
7.தாமிரா
8.நர்சிம்
9.முரளிகண்ணன்.
10.அக்னி பார்வை
12.பாலபாரதி
14.கார்க்கி
15.இளவஞ்சி
16.பாபு ( தமிழ்கணிணி)
17.தராசு
18.ராஜராஜன்
19.ஊர்சுற்றி
20. ஜோசப் பால்ராஜ்
21.பாலு
22.புதுகை அப்துல்லா
23.குகன்
+ 3 வாசகர்கள் ( பெயர் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)
திருமணமானவர்களின் பிரச்சினை பற்றி ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்க. காமெடியா பேசவேண்டிய மேட்டர் எப்படித்தான் சீரியஸ் மேட்டரா ஆச்சோ?. டோண்டு சார் நேபாளிகளின் திருமணமுறை பற்றி தெரியாத மேட்டரையெல்லாம் சொன்னார். திடீர்னு பாலபாரதி திருமண வாழ்க்கையில் ஆண்களுடைய டாமினேஷன் தான் அதிகம்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டுட்டார். நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... நீங்களே ஒருநியாயத்தை சொல்லுங்க. அப்படியே பேச்சு ஒரின சேர்க்கை பற்றி திசைதிரும்பியது. அதிஷா இதுக்கு ஆதரவு கொடுத்ததால "அவனா நீ" அப்படி சொல்லிட்டு நகர்ந்து உட்கார்ந்தார். நம்ம தங்கமணித்தாமிரா " கல்யாணம் தேவையில்லை காதல் ஓகே" ( இருங்க ஊர்ல இருந்து அண்ணி வரட்டும்)என்றார். ஒருவேளை படிக்கும் போதும், திருமணத்திற்கு முன்னாலும் ஏகமா லவ்விக்கிட்டு இருந்திருப்பாரோ ?????!!!!!!
பேச்சு அரசியல் பக்கமும், மீடியாக்களின் செயல்பாடு பற்றியும் திரும்பியது.வருகிற மக்களவைத்தேர்தலில் திமுகவுக்கு எப்படியும் 20 சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னார். அப்படியே திருமங்கலம் தேர்தலில் அதிமுக ஜெயிக்கனும் என்றும். இப்படி நடந்தால் திமுக உஷாராகும்னு சொன்னார். அஞ்சா நெஞ்சன் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா???.. மீடியாக்களின் செய்தி வெளியிடும் முறை குறித்து பாலபாரதி குமுறிட்டார்.( மனுஷர் எதை பற்றி பேசினாலும் ஓவர் டென்சன் ஆகிறார்). இவ்வளவு கூத்தும் நடக்கும்போது கார்க்கியிடமும், தாமிராவிடமும் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றேன். கொசுக்கடி அதிகமானதால் அப்படியே டீக்கடைக்கு நகர்ந்துவிட்டோம். கடைசி நேரத்தில் ஜோசப் பால்ராஜ் இணைந்துகொண்டார்.வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் மன்றத்திலிருந்து என்ன பரிசு கொடுக்கபோகிறீர்கள் என்று அப்துல்லா அண்ணாச்சியிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிவிட்டு ராஜராஜனுடன் சைதாப்பேட்டை வந்து பின் பஸ் ஏறினேன். தமிழ் எழுதும் முறை குறித்து ராஜராஜன் பல யோசனைகள் சொன்னார்.
வீட்டை அடையும் போது மணி 8:45. சன் டீவியில் அதிரடி சிங்கர் ஓடிக்கொண்டிருந்தது.போட்டியாளர் " நீயா பேசியது என் அன்பே" என்றபாடலை நரம்பு புடைக்க பாடிக்கொண்டிருந்தார். பாடல் முடிந்ததும் ஈரோடு மகேஷ் உங்க தாடிக்குப் பின்னால் யாருங்க ?? என்று கலாய்த்தார். இந்தக் கேள்வி எனக்கு வந்தது. " வேற யாரு இதுக்கு பின்னாடி நீதான்" முடிப்பதற்குள் ணங்......அவ்வ்வ்வ்...........
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நம்ம தமிழ் திரைப்படங்களில் நல்ல படங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமான வேலை....!!!!!!!!!!. ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் மிகக்குறைந்த அளவு படங்களே நல்ல திரைப்படமாகவும், வெற்றிப்ப்டமாகவும் அமைகின்றன. ஆனால் வெளியாகும் திரைப்படங்களில் கிட்டதட்ட 90 சதவீதம் மொக்கைப்படங்களாக இருப்பதால் அவற்றுள் சிறந்ததை தேர்ந்தெடுப்பது ரொம்ப கடினம். இருந்தாலும் பல கடினமான சுற்றுகளையும் தாண்டி இறுதி சுற்றுக்கு வந்திருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்குள்.....!!!!!!!!!!!!!!!!! மூச்சு முட்டிருச்சி.
6. குசேலன்
கிளிய வளர்த்து பூனை கையில கொடுத்த மாதிரி, கதபறயும் போள் எனும் அருமையான கதையை டைரக்டர் வாசு கையில கொடுத்ததால இந்த படம் சிறந்த வரிசையில வர வேண்டியது, மொக்கையில வந்திடிச்சி. இந்த ஜென்மத்துல ரசினி காந்த் வாசு இருக்குற பக்கம் தல வச்சி கூட படுக்க மாட்டார். கிளைமாக்ஸை மட்டும் நம்பி திரைக்கதையை கொத்தி கூறு போட்டுட்டாரு நம்ம டைரக்டர்.ரசினி படம்னாலே பாட்டுதான் ஹிட்டாவும். ஆனா எல்லா பாட்டுமே....????/ நயந்தாரா குனிவது, சோனா வின் மேல் வச்ச நம்பிக்கையை கொஞ்சம் திரைக்கதை மேல் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பா ஹிட் ஆகியிருக்கும். சூப்பர் ஸ்டாருக்கு எந்திரனாவது எந்திச்சி நிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம்.
5.குருவி
என் தல விசய் படம் இந்த மொக்கையில வந்ததுக்கு என் மனசு அழுதுப்பா............அவ் அவ்வ்..என்ன பண்றது... கடப்பா மேட்டர் மட்டும் இல்லைனா படம் டப்பா ஆகியிருக்கும். படத்துல விசயின் பல சாகசங்களால் தான் இந்த இடத்துக்கு வந்திருக்கு. ஓட்டைக் காரை நல்லா ஓட்டி ஜெயிப்பது-- தலாஇக்கு ஆப்பு வச்சதா நினச்சி தனக்கே ஆப்பு வச்சிக்கிட்டார். ரெயில்வே பாலத்தை அசால்டா தாவுறதுன்னு சும்மா கில்லி மாதிரி சுத்தி சுத்தி அடிச்சாரு.. ஆனா என்ன பண்றது சரக்கு இல்லாம போச்சே.....பேசாம இந்தியா சார்பா ஒலிம்பிக்ல நீளம் தாண்டுவதில் கலந்திருந்தா கூட ஒரு பதக்கம் கிடைச்சிருக்கும்.. இல்ல பார்முலா 1 ரேஸ் ல கலந்துகிட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கலாம். இந்தியா ஒரு விளையாட்டு வீரனை மிஸ் பண்ணிடுச்சிப்பா.... வில்லு சும்மா விர்ர்ருனு வருமா??
4.சத்யம்
இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னால இன்னா பில்டப் கொடுத்தாங்கோ..வசூல்ல அப்படியே பிச்சிக்கிட்டு போகனும்னு பாத்தாங்க.. ஆனா தியேட்ட்ர வுட்டே பிச்சிக்கிட்டு போயிடுச்சி.. அண்ணன் விசாலு உடம்பை ஏத்துறேன்னு சொல்லி சும்மா சோனி பையன் மாதிரி வந்து நின்னாரு பாருங்க ... முடியல.. அதுவும் கிளைமாக்ஸ்ல ரெண்டு டுப்பாக்கிய வச்சிக்கிட்டு சும்மா டமார் டம்மர் நு சுட்டுக்கிட்டே மொட்டை தலையோட வில்லன ரணகளம் பண்றதுதான் உச்சகட்ட காமெடி. இந்த படத்துக்கு இசை ஹாரிஸ்னா யாராவது நம்புவாங்களா?.... டைரக்டருக்கு இதுதான் முதல் படமாம். அவரோட எதிர்காலத்துல விசாலு விளையாடிட்டாரு.
3.ஏகன்
அட தலயோட படம் சிரிப்பு சிரிப்பா வருதுப்பா.. மொத்தத்துல இந்த படமே சிரிப்பு படம் தான். பின்ன தல காலேஜ் பையனா வருவாரு பாருங்க... !!!!! முடியலைங்க....அவ் அவ்... ராஜூ சுந்தரம் பேசாம தன்க்கு தெரிஞ்ச வேலையவே பாத்துருக்கலாம். தலயோட டான்ஸ் தான் ஹைலைட்.. ஷாலா ஷாலான்னு தொப்பய வச்சிக்கிட்டு ஆடுற ஆட்டம்............. தாங்காது இந்த பூமி?????. தலைக்கு அடுத்தப்படமாவது நல்லா களையா வருமானு பாக்கலாம்.
2.பழனி
மசாலா படம் எடுக்கிறேன்னு சொல்லிட்டு காமெடிப்படமா எடுத்து தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் பணியை நல்லாவே செய்றார் பேரரசு. நம்ம பரத்து இதுல அடிக்கிற பன்ச் டயலாக்கால தான் இது ரெண்டாவது இடத்துக்கு வந்திருக்கு. போதாக்குறைக்கு டைரக்டர் பேரரசு இன்சுபெக்டரா வந்து டெரரா நடிப்புல பின்னி எடுப்பார்.நம்ம குசுபு அக்கா சென்டிமென்டுல பின்னியிருப்பார். இந்த படம் சன் டிவியில டாப் டெனல முதல் இடத்துல இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை....
1.
....
...
....
....
....
....
....
.....
.....
நாயகன்
நம்ம பதிவுலகம் எதிர்பார்த்த மாதிரியே ரொம்பக் கஷ்டப்பட்டு முதல் இடத்துக்கு வந்திருக்கு.. நம்ம வரிசையில் உள்ள படங்களை விட 0.00001 மதிப்பெண் அதிகம் பெற்று முதல் இடத்தை பிடிச்சிருக்கு. இந்த படத்த பற்றி என்ன சொல்ல நம்ம பதிவுலக மக்கள் ஏற்கனவே வீரத்தளபதி பேர்ல பிளாக் ஆரம்பிச்சி கலக்குறாங்க. இந்தபடம் முதல் இடத்துக்கு வருவதற்கு முழுமுதற்காரணம் சிங்கம் ஜேகே ரித்தீஸ்தான். இருந்தாக்கா அள்ளிக்கொடு இல்லனா சொல்லிக்கொடு பாடல் காட்சி ஒன்றே போதும்..... கிராபிக்ஸ்னா என்ன என்பதை இந்த பாடல் காட்சி மூலம் தான் கத்துக்கனும்.. நிலா நிலா ஓடி வா பாடல் காட்சியில் நம்ம சிங்கம் எல்லா எக்ஸசைசையும் செஞ்சு முடிச்சிருவார். அவர் ஆடும் போதும், டயலாக் பேசும் போதும் அவர் கண்ணில் தெரியும் தன்னம்பிக்கைதான் படத்துக்கு மிகப்பெரிய பலம். ரவுடிய ஊஞ்சல் கட்டி அடிக்கிற மேட்டர்தான் நம்ம தமிழ்நாடு காவல்துறையில ஹைலைட்டான பேச்சாம்.
முதலிடத்துக்கு வந்த வெற்றியை வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்ற போர்ப்படைத்தளபதி கார்க்கிக்கு அர்ப்பணிக்கிறேன்.( ஏதோ பரிசு கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க... அதான் ஐஸ் )
டிஸ்கி: உங்க ஓட்டை நல்லா குத்துங்கடே...
இந்த வருடத்தில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெற்றியடைந்த படங்கள் மிகக்குறைவே. ஒரு சில படங்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சக்கை போடு போட்டன.அப்படி வெற்றியடைந்த படங்களில் சிலவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்
சுப்ரமணியபுரம்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியடைந்தப்படம். டைரக்-ஷன், இசை, நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், தெளிவான திரைக்கதையின் மூலம் வெற்றிக்கொடியை நாட்டிய படம். 1980களில் இருந்த கிராமத்து சம்பவங்களை அப்படியே கொண்டுவந்து நம் கண் முன்னால் நிறுத்தியவிதம் அருமை. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசியல் செல்வாக்குக்கு ஆசைப்படும் வில்லன் சொல் கேட்டு பாதை மாறுவது தான் கதை. ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக அழகாக செதுக்கி இருந்தார் டைரக்டர் சசிகுமார்.ஜேம்ஸ் வசந்தனின் இசையில் கண்கள் இரண்டால் பாடலும் சரி, அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.
அஞ்சாதே
மிஷ்கின் டைரக்ஷனில் இரண்டாவது படம். எதிர்ப்பார்ப்போடு வந்து வெற்றியடைந்த படம்.இரு நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை தன்னுடைய திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருந்தார் மிஷ்கின். அஜ்மல்,நரேன்,பிரசன்னா,பாண்டிய ராஜன் கதாப்பாத்திரங்கள் படத்துக்கு கூடுதல் பலம். காவல்துறையின் தெரியாத சில பக்கங்களை நன்கு காட்டியிருந்தார்கள். கத்தாழைக்கண்ணால குத்தாத,கண்ணதாசன் காரைக்குடி பாடல்கள் தாளம் போடவைத்தன.
தசாவதாரம்
நம்ம பதிவுலக மக்களால் அதிகம் பேசப்பட்ட திரைப்படம். படத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டும் கமலஹாசன் தான்.கதையை இரண்டு வரியில் சொல்லிவிடலாம்.ஆனால் கதை சொல்லிய விதத்தில் அசத்தியிருந்தார்கள். நம்பி, பல்ராம் கதாப்பாத்திரங்கள் மூலம் படம் தப்பியது. இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் ஆரம்பக்காட்சிகளும், இறுதிக்காட்சிகளும்.கமலின் நடிப்பு கிரீடத்தில் இந்தப்படம் ஒரு வைரக்கல்.
சந்தோஷ் சுப்ரமணியம்
ரீமேக் நாயகன் டைரக்டர் ராஜாவுக்கு 4வது வெற்றி தந்த படம். அப்பா மகன் பாசத்துக்கிடையே காதலையும் சேர்த்து சொன்ன படம். படத்துக்கு ஹாசினி கேரக்டர் தான் பலம். நிஜத்துலையும் இந்த மாதிரி பொண்ணுங்க கெடைச்சா பசங்களுக்கு சந்தோசம்தான். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் கலக்கி இருப்பார். மொத்ததில் இளமையும்,குடும்ப சென்டிமென்டும் சேர்ந்து கலக்கிய படம்.
யாரடி நீ மோகினி
இதுவும் ரீமேக் படம்தான். வழக்கம் போல் அப்பாவை மதிக்காத தனுஷ்,வித்தியாசமான அப்பாவாக ரகுவரன், எப்போதும் டென்சனில் இருக்கும் நயந்தாரா இவர்களை சுற்றி வரும் கதை. முதல் பாதி நகைச்சுவையிலும், இரண்டாம் பாதி சென்டிமென்டிலும் போட்டுத்தாக்கி இருப்பாங்கோ. யுவனின் இசையில் அனைத்துப்பாடல்களும் அருமையாக இருந்தது.
இந்த மாதம் ரிலீசான படத்தையெல்லாம் கணக்கில் எடுக்கலை. இந்த சிறந்த படங்கள் வரிசையில் விடுபட்டிருக்கும் மற்றபடங்களை பற்றி அண்ணன் முரளி கண்ணன் எழுதுவார். ரொம்ப நாளா அவரைக்காணோம்.
டிஸ்கி: பதிவ படிக்கிற பயலுவ ஓட்டயும் குத்திட்டு போங்கப்பு... அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி
பல வருடங்கள் முன்பு ஹிந்து பேப்பரில் ஒரு நாள் முழுப் பக்கமும் ஒரு பெரிய புகைப்படத்துடன் வந்திருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என் மகன் அது என்ன என்று கேட்டான்.அப்போது அவனுக்கு பத்து வயது. அது, இறந்துவிட்ட ஒரு தொழிலதிபருக்கு மரண அஞ்சலி விளம்பரம் என்றும் அதற்கு எத்தனை லட்சம் ரூபாய்கள் செலவாகிறது என்றும் அவனுக்கு விளக்கினேன். ``அப்பா, நீ செத்துப் போகும்போது நானும் உனக்காக இப்படி ஒரு முழுப் பக்கம் விளம்பரம் கொடுப்பேன்'' என்று வெள்ளந்தியாக தன் அன்பை வெளிப்படுத்தினான் அவன்.
பெரும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் மரண அஞ்சலி விளம்பரங்கள், கொஞ்சம் அன்பையும் நிறைய பணபலத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துபவை. அண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், நட்சத்திர ஓட்டல்களில் கொல்லப்பட்ட வர்த்தகத்துறைப் பிரமுகர்களுக்கான அஞ்சலி விளம்பரங்கள் பல நாட்கள் மும்பை ஆங்கில ஏடுகளை ஆக்கிரமித்தன. ரயிலடியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி விளம்பரம் தரும் வசதியுள்ள உறவினர்கள், நண்பர்கள் குறைவு. அநேகமாக அவரவர் பகுதிகளில் 30க்கு 20 கறுப்பு சுவரொட்டிகள் சிலருக்குக் கிட்டியிருக்கலாம்.
பயங்கரவாதிகளுடன் மோதி இறந்த கமாண்டோ வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், கீழ் நிலைக் காவலர்கள் ஆகியோரின் உயிர்த் தியாகத்தைப் போற்றி எந்த நட்சத்திர ஓட்டலும், எந்த பெரும் தொழில் நிறுவனமும் பெரிய அஞ்சலி விளம்பரங்களை வெளியிடவில்லை. அவர்களுக்கெல்லாம் மும்பை நகரில் அஞ்சலிப் பலகைகளை வைத்தது, மீடியாவால் கடுமையாக திட்டப்பட்ட அரசியல்வாதிகள்தான். சரத்பவாரின் காங்கிரஸ், சிவசேனை, ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ் ஆகியவை பல சாலைச் சந்திப்புகளில் இறந்த போலீஸாரின் படங்களுடன் அஞ்சலிப் பலகைகள் வைத்தன. அவற்றிலும், பிடிபட்டிருக்கும் ஒரே ஒரு தீவிரவாதியைப் பிடிக்க உதவியாக, அவனுடைய துப்பாக்கிக் குழலையே கையில் பிடித்து குண்டுகளைத் தன் மார்பில் வாங்கி இறந்த சப்இன்ஸ்பெக்டர் துக்காராமின் படம், மிகச் சிலவற்றில்தான் இடம் பெற்றது.
மரண விளம்பரங்கள் ஒருவரின் பணபலத்தை மட்டுமே பொறுத்தவை. அதனால்தான், மறைந்த நண்பர் தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் தன் பொறுப்பில் இதழ் வந்த சமயத்தில் யாருடைய மரணச் செய்தியையும் வெளியிடலாம் என்ற ஒரு நடைமுறையைச் செயல்படுத்தினார். இறந்தவர் பிரபலமாகவோ, பிரபலத்தின் உறவாகவோ நட்பாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எண்ணற்ற சாமான்யர்களின் மரணச் செய்திகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.மரணச் செய்தியை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு, பத்திரிகைகளுக்கு ஓர் அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வெளியிடுவது, வெளியிடாமலே இருப்பது, போகிற போக்கில் தெரிவிப்பது, விரிவாக பெரிய படங்களுடன் வெளியிடுவது, விமர்சனங்களுடன் வெளியிடுவது என்று பலவிதங்களில் பிரபலங்களின் மரணங்களை ஊடகங்கள் அணுகுகின்றன.
எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும் ஜாதி, மத, வர்க்க, வணிக அரசியல் சார்ந்துதான் பிறப்பு முதல் மரணம் வரை செய்தி வெளியிடுகின்றன.
இறந்த ஒரு பிரபலத்தைப் பற்றி மிக இழிவாக மரணச் செய்தி வெளியிடப்பட்டதை முதல்முறையாக இப்போதுதான் பார்த்தேன். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்த செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஏறத்தாழ இருட்டடிப்பே செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். என்ன செய்வது, மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் செத்துப் போனது அவருடைய தப்புதானே. அது கூட ஒரு சாக்குதான்.தாக்குதலுக்கு நடுவே கிரிக்கெட் செய்தி விரிவாகவே காட்டப்படத்தான் செய்தது.
இந்தியா டுடே இதழில் அதன் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பிரசன்னராஜன், வி.பி.சிங் பற்றி எழுதியது மிகவும் ரசக்குறைவானது. `இந்திய சமூகத்தையே சீர்குலைத்தவன் செத்து ஒழிந்தான், அப்பாடா!' என்பதுதான் அந்த சிறு கட்டுரையின் தொனி. வி.பி.சிங்கை இப்போது தகனம் செய்த தீ நமக்கு, அவர் கொண்டு வந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீக்குளித்த (போதும் செத்து தியாகியாக முடியாமற்போன) ராஜீவ் கோஸ்வாமியைச் சுட்ட தீயை நினைவுபடுத்த வேண்டும் என்று வலிந்து எழுதுகிறார் பிரசன்னராஜன். ஆங்கில மொழியின் நயங்களைப் பயன்படுத்தி வி.பி.சிங்கை பிரசன்னராஜன் செய்த நக்கல், நையாண்டியெல்லாம், அதே இதழின் தமிழ் மொழிபெயர்ப்பில் நயங்களையும் இழந்து, அப்பட்டமான குரோதமாகப் பல்லிளிக்கிறது. இந்திய சமூகத்தை வி.பி.சிங் பிளவுபடுத்தினார் என்பது எவ்வளவு பெரிய பொய். அவரா ஜாதிகளைக் கண்டுபிடித்தார்? வர்ணாசிரமத்தை உருவாக்கினார்? ஏற்கெனவே பிளவுபட்டும் ஏற்றத்தாழ்வுகளுடனும் இருக்கும் ஜாதீய சமூகத்தில், சம நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தவரா, பிளவுபடுத்துபவர்?ஜாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் இவற்றில் ஆழ்ந்த பிடிப்பு இருக்கும் எவரும் வி.பி.சிங் மீது வெறுப்பு காட்டுவதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர் எந்தப் பதவியை வகித்தபோதும் இவற்றுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்தார். நடவடிக்கைகள் எடுத்ததால், பதவி பறிபோகும் என்றால் அவர் அது பற்றிக் கவலைப்படாமல் பதவிகளை இழந்தார்.
அவர் உ.பி. முதலமைச்சராக இருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயண் வழிகாட்டுதலில் சம்பல் கொள்ளைக்காரர்களை சரண் அடையச் செய்ய முயற்சி எடுத்தார். அது பிடிக்காதவர்கள் அவர் சகோதரரையே கொன்றார்கள். அதற்காக அவர் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. ராஜீவ் அமைச்சரவையில் அவர் நிதி அமைச்சராக இருந்தபோது வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர்கள் கிர்லோஸ்கர், லலித் மோகன் தாப்பர் ஆகியோரை துணிச்சலாகக் கைது செய்தார். அதனால் துறை மாற்றப்பட்டு ராணுவ அமைச்சரானார். அங்கே நீர்மூழ்கிக் கப்பல் பேர ஊழல், பீரங்கி பேர ஊழல்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தார். அதனால் ஆட்சியை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று. பி.ஜே.பி., இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரித்ததில் அவர் பிரதமரானபின், அத்வானியின் மதவெறி ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தினார். தமிழ்நாட்டிலும் சில மாநிலங்களிலும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு இருந்தபோதிலும் சுதந்திரம் பெற்று 40 வருடங்களாகியும் மத்திய அரசில் அது இருக்கவில்லை. மண்டல் கமிஷன் அடிப்படையில் அதை அறிமுகப்படுத்தினார். இதனால் பி.ஜே.பி. ஆதரவை திரும்பப் பெற்றதில் பிரதமர் பதவி போயிற்று.
வி.பி.சிங் கவலைப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த கலவரங்களையடுத்து மத நல்லிணக்கத்துக்காக அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததில் அவர் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. ரத்தப் புற்று நோயும் இருந்தது. அன்றாட கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கி, மக்கள் இயக்க அரசியலில் இயங்கிவந்தார். மறுபடியும் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோதும் அவர் மறுத்ததால்தான் குஜ்ராலும் தேவ கவுடாவும் பிரதமராக முடிந்தது.பதவிகளைப் பொருட்படுத்தாமல் கொள்கை அடிப்படையில் மட்டுமே இயங்கிய அபூர்வமான மனிதர் அவர். அதனால்தான் அவர் தேசிய முன்னணி அமைத்து அதன் வழியே பிரதமரானபோது, தேசிய முன்னணியின் முக்கிய கட்சியான தி.மு.க.வுக்கு ஒரு லோக் சபா எம்.பி.கூட தேர்தலில் கிட்டாதபோதும், ஃபெடரலிசக் கொள்கை அடிப்படையில் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கினார்.
கவிஞராகவும் ஓவியராகவும் நுட்பமான உணர்வுகளுடன் இயங்கிய அவர், தனி வாழ்க்கையில் மிக எளிமையானவர் என்பதை அவருடைய மொழிபெயர்ப்பாளனாக தேசிய முன்னணி தொடக்க கால மேடைகளில் செயல்பட்டபோது நேரில் நான் அறிந்தேன். நண்பர் ஜெகவீரபாண்டியன் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தியதால் எனக்குக் கிட்டிய அனுபவங்கள் என் வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் முக்கியமானவை. மேடைகளில் அவர் சொன்ன குட்டிக்கதைகள் தொகுக்கப்பட்டால் அருமையான வாசிப்பு அனுபவமாக இருக்கும்.தமிழகத்தில் பெரியார் பணியாற்றி இட ஒதுக்கீட்டுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது போல வடக்கே யாரும் செய்யவில்லை என்பதால்தான் மண்டல் கமிஷன் அமலாக்கத்துக்கு எதிர்ப்பை வி.பி.சிங் சந்திக்க வேண்டி வந்தது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பெரியார் முழுமையாக மொழிபெயர்க்கப்படவே இல்லை என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பெரியார் பார்வையும் லோஹியா பார்வையும் கலந்த ஓர் சமூக அரசியலை வடக்கே பரப்ப அவர் முயற்சித்தார். அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது _ அவர் காலத்துக்குப் பின் இன்று பி.ஜே.பி உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிராகரித்து அரசியல் செய்யமுடியாது என்ற நிலையை அவர் ஏற்படுத்தியதுதான். ராஜீவ் கொலையும் உடல் நலிவும் நிகழ்ந்திராவிட்டால். வி.பி.சிங் 1991_ல் மீண்டும் பிரதமராகியிருப்பார். இந்திய அரசியல் மிக ஆரோக்கியமான வழியில் சென்றிருக்க முடியும்.வாரிசு அரசியல், குடும்ப நலன், ஊழல் செய்து சொத்துக் குவிப்பு எதையும் செய்யாத நேர்மையாளரான வி.பி.சிங்குக்கு இவற்றில் திளைக்கும் தி.மு.க.வும் பெரியாரை தனிச் சொத்தாக பாவிக்கும் தி.க.வும் வி.பி.சிங்கின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் செலுத்தும் அஞ்சலிகளை விட, அவருடைய எதிரிகளின் சார்பாக இந்தியா டுடே பிரசன்னராஜன் எழுதியிருக்கும் கண்டனம்தான், வி.பி.சிங் யார் என்பதைச் சரியாக அடையாளப்படுத்தும் மிகச் சிறந்த புகழுரையாக அமைகிறது..
இந்த வார பூச்செண்டு
வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு. மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் அமிர் கசாப் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி வரும் வேளையில், அப்படி மறுப்பது தொழில் தர்மத்துக்கு முரணானது என்றும் கசாப் கேட்டுக் கொண்டால் தான் ஆஜராவேன் என்றும் ராம் ஜெத்மலானி அறிவித்திருப்பதற்காக இ.வா.பூச்செண்டு. கசாப் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதால் தண்டனை நிச்சயம்; மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையை கோரிப் பெற தான் வாதாட இயலும் என்று ராம்ஜெத் மலானி தெரிவித்திருக்கிறார்.
இந்த வார கேள்வி
திருச்சி பகுதியில் சிறு தொழிற்சாலைகள் 55 சதவிகித மின்வெட்டில் திணறிக் கொண்டிருக்கையில், ஸ்டாலின் உறையூரில் பேசும் பொதுக் கூட்டத்துக்காக ஐந்து கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை நெடுக டியூப் லைட்டும் அலங்கார விளக்குகளுமாக செய்திருக்கும் அட்டகாசத்தை நேரில் கண்டேன். அருவருப்பாக இருக்கிறது. திருந்தவே மாட்டீங்களா?
நன்றி குமுதம்
தமிழக அரசியல் களம் வரும் ஜனவரி முதல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.. முக்கியமா திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தங்களுடைய பலம் என்ன என்பதை அரிய ஒரு வாய்ப்பாக இருப்பதை எண்ணுகின்றன..பிஜேபி போட்டி இடப்போவதில்லை என்று பெருந்தன்மையாக விலகிகொண்டது.?????. அதிமுக தங்களுடந்தான் கூட்டணி சேரும் என்ற எண்ணம் இலவு காத்த கிளி போல் ஆயிடிச்சி.இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவே இல்லை.
கேபடன் வழக்கம் போல தனியாக போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தல்தான் தேமுதிக தனியாக போட்டியிடும் தேர்தலாக இருக்கும்.. கண்டிப்பா நாடாளுமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கூட்டணியில் சேருவார். எவ்ளோ நாளுக்குத்தான் தனியா நிக்கிறேன்னு பிலிம் காட்டமுடியும்.
இரன்டு நாட்களுக்கு முன் சென்னை ராமாபுரத்தில் வெள்ள நிவாரணநிதி வழங்கப்பட்டது. முதல் நாள் கொஞ்சம் பிரச்சினை ஆச்சு. அன்று மதியமே கூட்டத்திற்கு தகுந்தவாறு கவுண்டர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கினார்கள்.ரேஷன் கார்டுகளுக்கு டோக்கன் நம்பர் கொடுப்பதிலிருந்து அனைத்து வேலைகளையும் உடன்பிறப்புகள் தான் செய்துகொண்டிருந்தனர்.மேலும் வெள்ள நிவாரண பட்டியலை வைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தனர்.அங்கிருந்த காவல்துறையினரும் சரி, அரசு அதிகாரிகளும் சரி மிக கச்சிதமாக த்ங்களுடைய வேலையை செய்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது மக்களவை தேர்தல் ஞாபகம் வந்தாலும்... இதை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்..
இது குறித்து லக்கி சொன்னதைப்பாருங்கள்.
///மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இம்மாத வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. பத்து கிலோ அரிசியும், இரண்டாயிரம் ரூபாய் பணமும் சாமானிய மக்களை மெகாசீரியலை கூட மறக்கச்செய்யும் என்பது கடந்தகாலம் உணர்த்திய பாடம். தமிழகமெங்கும் பாகுபாடின்றி வழங்கப்படும் வெள்ள நிவாரணம் திமுக பக்கமாக காற்றடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். . இன்றைய நிலவரப்படி 40ல் 25 தொகுதிகளை சிரமமின்றி திமுக கூட்டணி வெல்லமுடியும்.////
நடப்பதையெல்லாம் பார்த்தால் லக்கி சொல்லுவதில் நூற்றுக்கு நூறு உண்மை என்றே படுகிறது.தினசரி ஆர்ப்பாட்டம் நடத்தினால் போதும் என்ற அதிமுகவின் எண்ணம் மிகுந்த பரிதாபத்துக்குரியது.. அரசின் எதிர்ப்புகளை மிக கவனமாக கையாண்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த விசயத்தில் அவர்களாகவே முடிவெடுக்கிறார்கள். இதுவே ஆட்சியாளர்களுக்கு நிம்மதியை கொடுக்கும்...
இதப்பத்தி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். தங்களுடைய மேலான் கருத்தை பின்னூட்டத்தில் சொல்லவும்.மறக்காம ஓட்டு போட்டு சூடாக்கிருங்கப்பு.
உங்க தொகுதி எம் எல் ஏவை பாக்கனும்னா ஒரு வாரம் கழிச்சி திருமங்கலம் போங்க. அங்க கண்டிப்பா பாக்கலாம்..
நன்றி குமுதம்.com பாலா
அரசு கேபிளுக்கு சன் குழுமம் தனது சேனல்களை வழங்க ஒப்புக்கொண்டுவிட்டதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளிவந்துள்ளது.அரசு கேபிளின் இயக்குனர் திரு உமா சங்கர் "டிடிசாட் ஆணைப்படி சன் குழுமம் தனது சேனல்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சன் சேனல்கள் இல்லாமல் இவ்வளவு நாளும் அரசு கேபிள் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
வேலூரில் ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிளின் சிக்னலை எந்த கேபிள் ஆப்பரேட்டரும் வாங்க வில்லை என்பது 100 சதவீத உண்மை. இவ்வளவுக்கும் வேலூர் மாவட்டத்தில் செயல் படும் கேபிள் நிறுவனம் திமுக எம் எல் ஏவினுடையது... . நெல்லையில் ஒரு சில ஆப்பரேட்டர்கள் மட்டும் அரசு கேபிள் சிக்னலை பயன்படுத்துகின்றனர். அரசு கேபிளில் சன் குழும சேனல்கள் இல்லையென்ற ஒரே காரணத்திற்காகத்தான் ஆப்பரேட்டர்கள் வாங்க மறுத்துள்ளனர். இனிமேல் அரசு கேபிள் காட்டில் மழைதான்...
சென்னையில் ஜனவரி மாதம் தொடங்கப்போவதாக அரசு கேபிள் அறிவித்துள்ளது. இப்போது சென்னையில் கேபிள் சேவையை வழங்கி வரும் எஸ் சி வி மற்றும் ஹாத்வே நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றனவோ??
திமுக அரசின் சாதனைகளை நண்பர் செந்தழல் ரவி அவருடைய பதிவில் ஆதாரங்களோடு சொல்லியிருந்தார்..உண்மையிலே பலவித அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே இது கலைஞரின் சாதனைதான். ஆனனல் சென்ற வாரம் கலைஞர் தந்து பேட்டியில் மின்வெட்டை சமாளிக்க மத்திய அரசு மேலும் 1000மெகாவாட் மின்சாரத்தை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.மின்வெட்டு இன்னும் தமிழ்நாட்டில் அமலில் இருக்கு.. அன்னா இப்போதைக்கு அதை பத்தி யாரும் கண்டுக்கிறதில்லை..ஏன்னா அந்த விசயத்தை மூழ்கடிச்சி ஏகப்பட்ட விசயம் முன்னாடி நிக்குது.
செந்தழல் ரவி அவருடைய பதிவில் டாக்டர் புருனோ " நகர மக்களின் மத்தியில் தான் திமுக ஆட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும், கிராமங்களில் செல்வாக்கு அப்படியே உள்ளதாகவும்" கூறியுள்ளார். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எப்படினா நகர்ப்புறபகுதிகளில் மின் வெட்டு 2மணி நேரமாக இருக்கும்போது கிராமங்களில் 12மணி நேரத்திற்கும் அதிகமாக அமல்படுத்தப்பட்டது.நகர்புறத்தில் மின்வெட்டு என்று அலறிய மீடியாக்கள், கிராமங்களில் அமல்படுத்திய மின்வெட்டை ஒரு தலைபட்சமாகவே சொல்லி வந்தன..அதாவது மின்வெட்டின் காரணமா கிராம மக்கள் சாலை மறியல் மாதிரியான போராட்டம் நடத்திய உடன் தான் மீடியாக்கள் வேறு வழியில்லாமல் அந்த செய்திகளை வெளிக்கொண்டு வந்தன.
என்னுடைய பார்வையில் திமுக அரசின் சோதனைகள்
1.மின்வெட்டில் முதலிடம்
2.டாஸ்மாக் விற்பனையில் முதலிடம்.
3.மறைமுக பஸ் கட்டண உயர்வில் முதலிடம்
4.சிறு,குறு தொழில்களை கைவிடுவதில் முதலிடம்.
5.இலவசங்களை வாரி வழங்குவதில் முதலிடம்.
6.அமவுண்ட் ரவுண்டா வாங்குவதில் முதலிடம்.
7. தம்முடைய வாரிசுகளை திருப்திபடுத்துவதில் முதலிடம் ( ஸ்டாலின் தவிர)
சென்னை டெஸ்டில் இந்தியா அபார வெற்றி. சென்னை பிச்சில் 4வது இன்னிங்சில் நிலைத்து ஆடுவது சவாலான விசயம். ஆனால் அதை பொய்யாக்கி விட்டது டெண்டுல்கர்+ யுவ்ராஜ் கூட்டணி. டெண்டுல்கரின் வின்னிங் ஷாட் அவரது 41 வது சததை தந்தது.
உண்மையிலே டோனி அதிர்ஷ்டக்காரர்.ஷேவாக், கம்பீரின் ஆட்டமும் இந்தியாவுக்கு நிறைவை தந்தது.சேஸிங்கில் 4வது அதிகமான ஸ்கோர் ஆகும். சென்னையில் இது 4வதுஇன்னிங்க்ஸில் அதிகபட்ச ஸ்கோர்,
டெண்டுல்கர்-- 103 ரன்கள்
யுவ்ராஜ்-- 85 ரன்கள்
பீட்டர்சன் சரியான் ஸ்கோர்ல தான் டிக்ளேர் செய்தார். ஆனா இந்தவாட்டி நம்ம பக்கம் அதிர்ஷ்ட காத்து வீசிடிச்சிப்பா
நமது பயிற்சியாளர் சொன்னது போலே நடந்துவிட்டது.
ஆட்ட நயகன் விருது-- ஷேவாக்
பாவம் பீட்டர்சன்
தமிழ் தொலைக்காட்சிகளில் கஷ்டப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றிகரமா போய்க்கிட்டு இருக்கு நமது கலைஞர் தொலைக்காட்சி. கலைஞரும் மாறன் சகோதரர்களும் சேர்ந்தபிறகு அப்படியே சைலன்டா போவுது.
கலைஞர் தொலைக்காட்சியின் அலைவரிசையில் "R" டிவி எனும் தெலுங்கு சேனல் ஒளிபரப்பாகிறது. இந்த சேனல் கலைஞர் தொலைக்காட்சியை சேர்ந்ததா? இல்லை வேறு யாரோடதுனு தெரியல. இந்த தெலுங்கு சேனலை பற்றி கலைஞர் தொலைக்காட்சியின் வெப் சைட்டிலும் ஒரு தகவலும் இல்லை.
இந்த டிவி சேனல் யாருடையது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.........
"R" டிவி சேனல் RVML (Rayudu Vision Media Ltd) .கலைஞரோடது கிடையாதாம்பா.. தகவல் தந்த பெயரில்லாதவருக்கு நன்றி
http://www.rvml.co.in./
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள்.என்ன செய்யப் போகிறார்கள்? தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா? கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா? முப்படைகளையும் வழி நடத்துவார்களா?
ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும் சேனல்களால் செய்யவைக்க முடிந்தால் அதுவே பெரிய சாதனை தான். தாஜ், ஓபராய் ஓட்டல்கள் இருக்கும் தென் மும்பை மக்களவைத் தொகுதியில் சென்ற தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களைப் போல இரு மடங்கு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டே போடவில்லை!பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம்.
இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும்.ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள்.
ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா? காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும்.
பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது.ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன? உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா?இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.
காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது.காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம்.
பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான்.பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது.சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று நிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான்.
இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை.தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை.
பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இத்தகைய மோசமான சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல. ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள்.
இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும்.பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான்.
அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும்.
தன் மதவாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா?.
நன்றி குமுதம்
பதிவுலகுக்கு வந்து ஒரு 6 மாசம் ஆகிப்போச்சு. இந்த 6 மாசத்துல தமிழ்மணத்துல வாரத்துல ஒரு தடவையாவது நம்ம பதிவருங்க முகம் தெரியாத யாரோடவாவது சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி எழுதுற பதிவும் சில நிமிடங்களில் சூடான பகுதிக்கு போயிடும். ஒரு வேளை தங்களை எல்லோரும் கவனிக்கனும்னு சண்ட போடுறாங்களோ என்னவோ?
இப்படி வாரா வாரம் முகம் தெரியாதவங்களோட சண்ட போடுறவங்களுக்கு நேரடியா சண்ட போடுவதற்கு ஒரு அரிய வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதிஙக. தமிழனுக்கு அடுத்தவனோட மறைமுகமா சண்ட போடுறாதுன்னா ரொம்ப பிடிக்கும்.அதுவும் பதிவுலகில கேக்கவே வேணாம். எப்படினாலும் திட்டிக்கலாம். கண்டிப்பா நேர்ல வரமுடியாதுன்ற தைரியம்தான். எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்குறது.
அதனால இந்த அரிய வாய்ப்பை பதிவர்கள் முக்கியமா மாவீரன்னு பேரெடுக்க வெறியா இருக்கும் பதிவர்கள் இதை பயன்படுத்திக்கலாம்.
அதாவது வருகிற சென்னை பதிவர் சந்திப்புல இந்த வீரவிளையாட்டு அறிமுகப்படுத்தப்போறோம்.என்கிட்ட ஒரு நாலஞ்சு அருவா சும்மாத்தான் இருக்கு. அதை எடுத்துக்கிட்டு வர்றேன். ஒரே நேரத்தில் இருவர்தான் சண்டையிட முடியும். ஜெயிக்கிறவங்களுக்கு 5 அடி திருப்பாச்சி அருவாவும், 5 கிலோ அல்வாவும் பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் கலந்துக்கனும்னா போட்டி அமைப்பாளர் அதிஷாவை தொடர்பு கொள்ளவும்.
நடுவர்களா மாறவர்மன் நர்சிம்மும்,அக்னிபார்வையும் இருப்பாங்கோ.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி தாமிரா, முரளி கண்ணன்
பரிசுகள் வழங்வோர் : வீரத்தளபதி ஜே.கே. ரித்தீஸ் ரசிகர் மன்ற பொருளாளர் திரு. புதுகை அப்துலா அண்ணாச்சி
போட்டி நடைபெறும் இடம்: மெரினா பீச் காந்தி சிலைக்கு பின்னால்.
போட்டி நடைபெறும் நாள் : அதிஷா,லக்கி, முரளி கிட்ட கேளுங்க.
பின்குறிப்பு : அருவாளை கையில வச்சி தான் சண்ட போடனும்.
சன் டிவி--
(ஒன்னு கூடுவதற்கு முன்னால்)
தமிழகமெங்கும் மின்வெட்டு, ஆர்ப்பாட்டம், அமைச்சர்களின் ஊழல்
கலைஞரின் அறிக்கை 1நிமிடம்
அம்மாவின் அறிக்கை 4நிமிடங்கள்!!!!!
விசயகாந்த், சரத் அறிக்கை
தலைவர் கலைஞருக்கு கட்டுப்படுவேன்!!!!
அழகிரியின் அக்கிரமம்!!!
தளபதி ஸ்டாலின்
(ஒன்னு கூடியதற்கு பின்னால்)
மின்வெட்டை அரசு சமாளிக்கிறது.???
தாத்தா கலைஞர்,மாமா அழகிரி,மாமா ஸ்டாலின்??!!!
கலைஞரின் அறிக்கை 4நிமிடங்கள்
ஜெயாவின் அறிக்கை 1நிமிடம்???
விசயகாந்து, சரத்தை காணோம்
மதுரை தமிழ்நாட்டுல எங்க இருக்கு???
கலைஞர் டிவி-
(அமொவுன்ட் ரவுண்டா வருவதற்கு முன்னால்)
சன் டிவி,தினகரன் பொய் விஷம பிரச்சாரம்
மின்வெட்டா? கழக ஆட்சியில் தமிழகம் செழிக்கிறது.
காடுவெட்டி குரு கூட்டணி காண்டில் கைது.
வளர்த்த கடா மார்பில் பாயுது.
(அமொவுன்ட் ரவுண்டா வந்ததுக்கு அப்புறமா)
நெஞ்சம் இனித்தது, கண்கள் பணித்தன,கைகள் எண்ணியது.
அன்பு, புகழ்
சமுதாய செம்மல் குருவே வருக
ஜெயா டிவி--
மைனாரிட்டி திமுக அரசு, ஆர்ப்பாட்டம்,
கருணாநிதி ராஜிநாமா
இருண்ட தமிழகம் கருணாநிதி ஆட்சியில்
இந்தியாவுல பூகம்பமே வந்தாலும்
அம்மா அறிக்கை தான் முதலில்
புதுசா கம்யூனிஸ்ட் தோழர்கள்
மக்கள் டிவி--
( கூட்டணியில் இருக்கும் போது)
அய்யாவின் வழிகாட்டுதலில் தமிழகம் முன்னேறுது.
( கூட்டணியிலிருந்து தூக்கியெரிந்த பிறகு)
அய்யோ மின்வெட்டு, விலைவாசி, குடியில் தமிழகம் தடுமாறுது
சமூக நீதிக்காவலன் குரு கைது.
மாநில அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி
ராஜ் டிவி--
தங்கத்தலைவன் கலைஞரின் ஆட்சியில் தமிழகம் பூத்து குலுங்குது.
(இப்போது)
ஒன்னுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது,
மர்மமா இருக்குது,
இருந்தாலும் கலைஞர் ஆட்சி நல்லா இருக்கு.
இன்னும் ஏதாவது இருந்தா சொல்லுங்கடே சேத்துக்கிறேன்