சன் தொலைக்காட்சியும்,கலைஞர் தொலைக்காட்சியும் பாடல் ஒளிபரப்புவதில் இருந்து சேனல் துவங்குவது வரை எல்லா நிலையிலும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன்.. மேலோட்டமாகப் பார்த்தல் சபாஷ் சரியான போட்டி என்றே தோன்றும். கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும். கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்பு வரை சன் கொஞ்சமாக போட்டிப்போட்டுகொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை பரவவிட்டது... முதலிடத்தை தக்கவைத்துகொண்டது... கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பித்ததற்கு அப்புறம் தொய்வு கொஞ்சம் அதிகமாகியது. எல்லா நிலையில் இருந்தும் கடும் போட்டி உருவானது.நம்ம பதிவர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு சன்னை முந்துகிறது கலைஞர் பயங்கரமா எழுத ஆரம்பிச்சாங்க....
ஆனால் மக்கள் பார்வையில் இருந்து எப்படியாவது சன்னை முந்தி முதலிடத்துக்கு வர கலைஞர் தொலைக்காட்சி ரொம்பவே பகீரத முயற்சி எடுத்தது..அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்கள். குடும்ப சண்டைக்கு பிறகு சன் நடுநிலைமை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு எந்த அளவுக்கு ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளிக்கொணர முடியுமோ அந்த அளவுக்கு திறமையா செயல்பட்டது. சன்னின் நடுநிலைமையால் ஜெயாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டது... முக்கியமா மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினைகளில் எந்த அளவுக்கு விளையாமுடியுமோ அந்த அளவுக்கு புகுந்து விளையாடுனாங்கோ..இதுக்கு விளக்கம் சொல்லி முடியல கலைஞர் தொலைக்காட்சிக்கு. இந்த கூத்தெல்லாம் கண்கள் பணித்தது இதயம் இனிக்கும் வரைக்கும்தான் இருந்தது...
இதுக்கு அப்புறம் மின்வெட்டு கிலோ எவ்ளோ? ஸ்பெக்ட்ரம் எந்த ஊர்ல இருக்கு அப்படின்ற ரேஞ்சில தான் சன்னின் நடுநிலைமை இருந்திச்சி... கலைஞர் தொலைக்காட்சியை தன் வழிக்கு கொண்டு வரவே சன் தொலைக்காட்சி நடுநிலைமை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருந்தது... இப்போதைக்கு தமிழக மக்கள் சன் தொலைக்காட்சி இல்லைனா கலைஞர் தொலைக்காட்சிதான் பாக்கனும் என்பதில் மிக முனைப்போடு போட்டிப்போடுக்கொண்டு சேனல்களை ஆரம்பித்து வருகிறார்கள். தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களில் பெரும்பான்மையோர் திமுக அனுதாபிகள் மற்றும் திமுக பிரமுகர்களாக இருப்பது இரு நிறுவங்களுக்கும் ஆதாயமே.
இப்படி எல்லா நிலையிலும் போட்டி போடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுதான் வேதனைக்குறிய விசயம். அது என்னன்னு உங்களுக்கே தெரியும். ஈழப்பிரச்சினை சன்னாவது பரவாயில்லை மேம்போக்கா ஏதோ சொல்றாங்க.. ஆனா கலைஞர் தொலைக்காட்சி இந்த விசயத்தில் மவுனமாக இருப்பது வேதனைக்குறிய வெட்கப்படவேண்டிய விசயம். இதுக்கு உதாரணம் இலங்கை சுதந்திர தினத்தன்று ராஜபக்ஷே பேசியதை தலைப்பு செய்தியிலும் முதலாவதா சொல்லி காங்கிரசு கட்சியின் மானத்தை காப்பாற்றி விட்டது கலைஞர் தொலைக்காட்சி. இன்று நக்கீரன் குழுமத்திற்கு இலங்கை தூதுவர் கொடுத்த மிரட்டல்,மக்கள்,தமிழன் தொலைக்காட்சிகள் இலங்கையில் ஒளிபரப்ப தடை போன்ற விசயத்திலும் மவுனத்தை சாதிப்பது கொடுமையிலும் கொடுமை......
இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
33 comments:
//இந்த இரு தொலைக்காசி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?//
உணர்ச்சிவச பட்டு இன்னும் ஐம்பது பேர்தான் தீ குளித்து சாவார்கள்.
இந்த இரு தொலைக்காசி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?
//
ஒரு போதும் செய்ய மாட்டார்கள் நண்பா. வியாபாரம் மட்டுமே அவர்களின் குறிக்கோள். இலங்கையில் தமிழர்கள் உயிர் ஊசல் ஆடினாலும், நீங்கள் குறிப்பிட்ட டி.வி.களில் மானும் மயிலும் ஆடும். நம்பவர்களும் அதை உச்சு கொட்டாமல் ரசிக்க தான் செய்வார்கள்.
சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் போட்டால் எப்படி உலக நாடுகள் கவனத்தை ஈர்க்க முடியும்?
இங்கு வலைப்பூவில் எழுதுபவர்களும் இங்கே தமிழ் மணத்திலும் தமிழிஷிளும்தான் எழுதுகிறார்கள். தமிழனுக்கு சொல்வதை விட உலகலாவ சொல்லுங்கள். ஆங்கிலத்தில் எழுதி பிற மக்களுக்கு கொண்டு செல்லுங்கள். இணைய சுதந்திரத்தை உபயோகித்து அனைத்து இந்தியர்களும் , உலக மக்களும் இந்த கொடுமைகளை அறிய செய்யுங்கள்.
இங்கேயே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி பல முத்து குமார்களை கொல்லாதீர்கள்
பெயரில்லா கூறியது...
//இந்த இரு தொலைக்காசி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?//உணர்ச்சிவச பட்டு இன்னும் ஐம்பது பேர்தான் தீ குளித்து சாவார்கள்.//
நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீகள்.. இப்படியே அவர்கள் மவுனமாக இருப்பது நல்லதுதான் என்கிறீர்களா? இந்தியாவிலும், உலக தமிழர்களிடத்திலும் இன்னும் அதிகமான ஈர்ப்பை கொண்டு செல்லலாம் என்பதே என் கருத்து..... நன்றி பெயரில்லாதவரே
//இந்த இரு தொலைக்காசி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?
//ஒரு போதும் செய்ய மாட்டார்கள் நண்பா. வியாபாரம் மட்டுமே அவர்களின் குறிக்கோள். இலங்கையில் தமிழர்கள் உயிர் ஊசல் ஆடினாலும், நீங்கள் குறிப்பிட்ட டி.வி.களில் மானும் மயிலும் ஆடும். நம்பவர்களும் அதை உச்சு கொட்டாமல் ரசிக்க தான் செய்வார்கள்//
சரியாச்சொன்ன நண்பா........ நன்றி
//இங்கு வலைப்பூவில் எழுதுபவர்களும் இங்கே தமிழ் மணத்திலும் தமிழிஷிளும்தான் எழுதுகிறார்கள். தமிழனுக்கு சொல்வதை விட உலகலாவ சொல்லுங்கள். ஆங்கிலத்தில் எழுதி பிற மக்களுக்கு கொண்டு செல்லுங்கள். இணைய சுதந்திரத்தை உபயோகித்து அனைத்து இந்தியர்களும் , உலக மக்களும் இந்த கொடுமைகளை அறிய செய்யுங்கள்.
இங்கேயே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி பல முத்து குமார்களை கொல்லாதீர்கள்//
ஐயா எனக்கு ஆங்கிலத்தில் எழுதத்தெரியாது ஐயா..... அதாம்யா தமிழ்ல எழுதுறேன்.... ஆங்கிலம் தெரிஞ்ச நீங்க எழுதுங்களேன்........ நன்றி பெயரில்லாதவரே....... பெயரோடு வாங்கப்பா
//சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் போட்டால் எப்படி உலக நாடுகள் கவனத்தை ஈர்க்க முடியும்?//
உலக நாடுன்னா இந்தியாவ சொன்னேன் நன்றி பெயரில்லாதவரே
//நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீகள்.. இப்படியே அவர்கள் மவுனமாக இருப்பது நல்லதுதான் என்கிறீர்களா? //
மவுனமாக இருப்பது நல்லது என்று சொல்ல வில்லை. நீங்கள் சன் டிவ்யையும், கலைஞர் டிவ்யையும் தாக்கி எழுதுவதற்கு பதில் என்டிடிவி , சிஎன்என் ஐபிஎன் போன்ற இந்திய ஊடகங்கள் பற்றி எழுதுங்கள். அவர்கள் தான் கயவர்கள் . அவர்கள் தளத்தில் சென்று உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். மின் அஞ்சல் அனுப்புங்கள்.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
//நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீகள்.. இப்படியே அவர்கள் மவுனமாக இருப்பது நல்லதுதான் என்கிறீர்களா? //
//மவுனமாக இருப்பது நல்லது என்று சொல்ல வில்லை. நீங்கள் சன் டிவ்யையும், கலைஞர் டிவ்யையும் தாக்கி எழுதுவதற்கு பதில் என்டிடிவி , சிஎன்என் ஐபிஎன் போன்ற இந்திய ஊடகங்கள் பற்றி எழுதுங்கள். அவர்கள் தான் கயவர்கள் . அவர்கள் தளத்தில் சென்று உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். மின் அஞ்சல் அனுப்புங்கள்.//
முதல்ல நம்ம ஆளுங்க சரியாஇருந்தாத்தான் அடுத்தவனை கண்டிக்க முடியும் நம்ம ஆளுஙக சரியில்லையே.... முதல்ல இவஙக ஈழ செய்திகளை சரியாக சொல்லட்டும்.. அப்புறமா ஆங்கில செய்தி சேனல்களை பிரிச்சி மேயலாம்
தலைவரே.. ஆரம்பிச்சது ஒரு விஷயத்துல,, ஆனா முடிச்சது வேற விஷயமா போயிருச்சே..
ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். இவனுங்க.. சமயம் கிடைச்சா விடா கண்டன்ங்க, இன்னொரு சமயத்துல ரெண்டு பேருமே கூட்டு களவாணிங்களா திரிவாய்ங்க..
ஒரு விதத்துல கலைஞர் டிவியை ஒழிக்க முடியலைன்னு வருத்தமிருந்தாலும், இன்னொரு பக்கம் வேற எவனும் புதுசா பூத்துட முடியாத படி, மீண்டும் இவங்களே சம்பாதிக்கலாமில்ல.
நல்ல காலத்துலேயே இவங்களுக்கு எதுவும் பாதகமில்லைன்னா.. எதையுமே கண்டுக்க மாட்டாங்க... இத தெளிவா காட்டறதா வேணாமா..? ஒரு வேளை காட்டிபுட்டு மருக்கா தாத்தா வெளிய துரத்திட்டாருனா.. இன்னொரு 600 கோடிக்கு எங்க் போறதுன்னு யோசிச்சிக்கிட்டு ஈழ தமிழ்ர் பிரச்சனையை காட்டாம இருந்திருக்கலாம். கலைஞர் டிவிக்கு, தங்கள் நன்றி உணர்வை, இவ்வளவு நாள் ஆட்சியை காக்கும் காங்கிரஸின் மனம் குளிர ஏதாவது செய்தாகவேண்டும்.. வருகிற பாராளுமன்ற தேர்தல் வரைக்குமாவது..
அட போங்கப்பா..
//தலைவரே.. ஆரம்பிச்சது ஒரு விஷயத்துல,, ஆனா முடிச்சது வேற விஷயமா போயிருச்சே..//
உண்மையிலே டிஆர்பி ரேட்டிங்தான் போடனும்னு எழுத ஆரம்பித்தேன்... ஆனா இன்றைக்கு ஜூ.வி பாருங்க..... அந்த கோபத்துல எழுதிட்டேன்....... என்னத்த சொல்ல நன்றி தல
இதெல்லாம் அரசியலிலை சகஜமப்பா..
தொலைக் காட்சிக்குள்ளேயே அரசியல் புகுந்தால் இப்படித்தான்??
மக்களுக்கான தொலைக்காட்சியாக இருக்க வேண்டுமே தவிர அரசுக்கான தொலைக்காட்சியாக இருந்தால் பாதிக்கப்படுவது தொலைக்காட்சி நிலையங்களே!
இதனைத் தான் அவர்கள் காலம் பூராவும் செய்வார்கள்??? ஏமாற்றுவோர் இருக்கும் வரை ஏமாளிகளும்??? நல்லதொரு ஆய்வு நண்பா!
எங்களுக்காக அனுதாபப்படும் உங்களை நினைத்து உள்ளம் உருகிறோம்!
எம் மக்களை மயக்கும் சீரியல் பார்த்து தினமும் கண்ணீர் வடிக்கிறோம்?????????
காசு சம்பாதிக்க களத்துல இறங்கின அவங்களால என்ன வேணுமுனாலும் செய்வாங்க,ஆனா உருப்படியா இருக்காது
//இதெல்லாம் அரசியலிலை சகஜமப்பா..தொலைக் காட்சிக்குள்ளேயே அரசியல் புகுந்தால் இப்படித்தான்??
மக்களுக்கான தொலைக்காட்சியாக இருக்க வேண்டுமே தவிர அரசுக்கான தொலைக்காட்சியாக இருந்தால் பாதிக்கப்படுவது தொலைக்காட்சி நிலையங்களே! இதனைத் தான் அவர்கள் காலம் பூராவும் செய்வார்கள்??? ஏமாற்றுவோர் இருக்கும் வரை ஏமாளிகளும்??? நல்லதொரு ஆய்வு நண்பா!//
சரியாச்சொன்ன நண்பா.... இவங்களே இப்படி இருந்தா வட இந்தியா மீடியாக்களை நாம் ஒன்னும் சொல்ல முடியாது....
// கமல் கூறியது...
எங்களுக்காக அனுதாபப்படும் உங்களை நினைத்து உள்ளம் உருகிறோம்!
எம் மக்களை மயக்கும் சீரியல் பார்த்து தினமும் கண்ணீர் வடிக்கிறோம்?????????//
நன்றி கமல்.......
// நசரேயன் கூறியது...
காசு சம்பாதிக்க களத்துல இறங்கின அவங்களால என்ன வேணுமுனாலும் செய்வாங்க,ஆனா உருப்படியா இருக்காது//
நன்றி புளியங்குடியாரே
\\இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?\\
கனவுகளோடு ...
நட்புடன் ஜமால் சொன்னது…
\\இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?\\
கனவுகளோடு ...//
கனவுகளோடுதான் இருக்கனும் போல நன்றி ஜமால்
அண்ணாச்சி, வணக்கம், நமக்கு சிவசைலமா?
நல்லா எழுதறீங்க. நிறைய எழுதுங்க.
வாழ்த்துகள்
ஆடுமாடு
என்ன பண்றது . டிடிஎச் தொலைக்காட்சி ஒன்றை நாமளே ஆரம்பிக்கவேண்டியதுதான்.
மேலை நாடுகளில் ஒளிபரப்பாகும் இலங்கையை சேர்ந்தவர்களின்
டிவிக்களை டிடிஎச் மூலம் தமிழ் நாட்டில் கிடைக்குமாறு ஒளிபரப்பி
அதன்மூலம் மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
கழுதை விட்டையில முன்விட்டை வேற பின்விட்டை வேறயா
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
tamilblogger குழுவிநர்
நல்ல பதிவு நண்பரே.. எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போய்க்கிட்டு இருக்கு.. ஆகமொத்தத்தில் இந்த ரெண்டு டிவிகிட்டயும் மாட்டிக்கிட்டு முழிக்கிறது நாமதான்..
தலைவரே என்ன பிளாக் நேம் மாத்திட்டீங்களா?
//ஆடுமாடு சொன்னது…
அண்ணாச்சி, வணக்கம், நமக்கு சிவசைலமா?
நல்லா எழுதறீங்க. நிறைய எழுதுங்க.
வாழ்த்துகள்
ஆடுமாடு//
சிவசைலம்-புதுக்குடியிருப்பு தங்கள் முதல் வருகைக்கு நன்றி ஆடுமாடு..............
//என்ன பண்றது . டிடிஎச் தொலைக்காட்சி ஒன்றை நாமளே ஆரம்பிக்கவேண்டியதுதான்.
மேலை நாடுகளில் ஒளிபரப்பாகும் இலங்கையை சேர்ந்தவர்களின்
டிவிக்களை டிடிஎச் மூலம் தமிழ் நாட்டில் கிடைக்குமாறு ஒளிபரப்பி
அதன்மூலம் மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.//
நீங்க சொல்றது கனவுல கூட நடக்காது...தங்கள் முதல் வருகைக்கு நன்றி வாயப்பாடி குமார்
//மகேந்திரன் கூறியது...
கழுதை விட்டையில முன்விட்டை வேற பின்விட்டை வேறயா//
கரெக்ட்டு..தங்கள் முதல் வருகைக்கு நன்றி மகேந்திரன்
// கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
நல்ல பதிவு நண்பரே.. எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போய்க்கிட்டு இருக்கு.. ஆகமொத்தத்தில் இந்த ரெண்டு டிவிகிட்டயும் மாட்டிக்கிட்டு முழிக்கிறது நாமதான்..//
நன்றி கார்த்திகைப் பாண்டியன் ..
//தலைவரே என்ன பிளாக் நேம் மாத்திட்டீங்களா?
//
ஆமா தல.........நன்றி
தலைப்புக்கும், பதிவின் கருத்துக்கும் தொடர்பில்லை அத்திரி.. நீங்கள் சொல்லவந்த கருத்தைப்பொறுத்தவரை இந்த இரு டிவிக்கள் மட்டுமல்ல வேறு டிவிக்கள், பத்திரிகைகள், இதழ்கள் உட்பட அனைத்து மீடியாக்களுமே நிஜத்தை மக்களிடையே கொண்டு செல்ல தவறியவர்கள்தான்.. தொடர்ந்து தவறுபவர்கள்தான்.!
யார் முந்துறாங்களோ தெரியல. ஆனா தோற்றுக்கொண்டிருப்படு திருவாளர் பொதுஜனம்தான்.
//தாமிரா கூறியது...
தலைப்புக்கும், பதிவின் கருத்துக்கும் தொடர்பில்லை அத்திரி.. நீங்கள் சொல்லவந்த கருத்தைப்பொறுத்தவரை இந்த இரு டிவிக்கள் மட்டுமல்ல வேறு டிவிக்கள், பத்திரிகைகள், இதழ்கள் உட்பட அனைத்து மீடியாக்களுமே நிஜத்தை மக்களிடையே கொண்டு செல்ல தவறியவர்கள்தான்.. தொடர்ந்து தவறுபவர்கள்தான்.!//
நான் சொல்ல வந்தது ஈழத்து செய்திகளை மறைப்பதில் சன்னா? கலைஞரா?..... இதுதான் மேட்டர் அண்ணே.............. நன்றி
//ஊர் சுற்றி கூறியது...
யார் முந்துறாங்களோ தெரியல. ஆனா தோற்றுக்கொண்டிருப்படு திருவாளர் பொதுஜனம்தான்.//
சரியாச் சொன்னீங்க ஊர்சுற்றி....... நன்றி
Post a Comment