Saturday, October 4, 2008

சன் டிவியால் கோடம்பாக்கத்துக்கு பிரச்சினை?

காதலில் விழுந்தேன்' படத்தைப் பார்த்து கலங்கிப் போயிருக்கிறது, தமிழ்த் திரையுலகம். `சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்து, வெறும் விளம்பர ஜிகினாவை மட்டுமே வைத்து அதை பிரமாண்டமாய்க் காட்ட முடியும்' என்று சன் டி.வி. `புதுவழி' காட்டியிருப்பதால், சிறிய தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, பெரிய தயாரிப்பாளர்களும் பீதியில் மிரண்டு போயிருக்கிறார்கள்.




`காதலில் விழுந்தேன்' படத்தில் பிரபலமான ஹீரோ, ஹீரோயின் கிடையாது, பிரபல டைரக்டர், மியூசிக் டைரக்டர், கேமராமேன் என்று யாரும் கிடையாது. அதனால் அவர்களுக்குப் பெரிய சம்பளமும் கிடையாது. ஆனால் தொடர்ச்சியாக `சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்... காதலில் விழுந்தேன்' என்று அந்தப் படத்தின் விளம்பரத்தை சன் டி.வி.யில் திரும்பத் திரும்ப போட்டுப் போட்டு மக்களிடம் அதை ஏதோ பிரமாண்டமான படமாகச் சித்திரித்து விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.



``கைவசம் சேனல் இருப்பதால் இவர்கள் இந்தக் கலக்கு கலக்குகிறார்கள். சின்ன பட்ஜெட் படத்தை விளம்பர விளையாட்டால் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதுபோன்ற அதீத விளம்பரம் மற்ற படங்களின் வசூலை கண்டிப்பாக பாதிக்கும்'' என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் `உச்' கொட்டினாலும், பூனைக்கு மணி கட்ட யாரும் தயாரில்லை என்பதுதான் ஆச்சரியம்.இதுகுறித்து நாம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேச முயன்றபோது, `கருத்துச் சொல்கிறோம். ஆனால் பெயர் வேண்டாமே' என்று பயந்தனர் அவர்கள். இன்னொரு தரப்பினரோ `அப்படியா?' என்ற கேள்வியுடன் நம்மிடம் இருந்து நழுவிக் கொண்டனர்.



இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பில் இருந்து, தற்போது ஒதுங்கியிருக்கும் ஒரு தயாரிப்பாளர் இதுபற்றி நம்மிடம் வாயைத் திறந்தார்.

``விளம்பரங்களால் மட்டுமே ஒரு படம் ஓடி விடாது. கடந்த காலத்தில் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து தோல்வியடைந்த பெரிய படங்களும் உண்டு. உதாரணம் `ஆளவந்தான்', `பாபா' போன்ற படங்கள். என்றாலும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு `பெரிய' அளவில் விளம்பரம் தந்தால், அது மற்ற படங்களின் வசூலைக் கண்டிப்பாகப் பாதிக்கும்.`எத்தனை பெரிய படமாக இருந்தாலும் இவ்வளவுதான் விளம்பரம் செய்யலாம்' என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு விதிமுறையே இருக்கிறது. அந்த விதியை மீறுபவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுத்தால், எந்தத் தியேட்டரிலும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போகும். ஆனால் `காதலில் விழுந்தேன்' படத்துக்காக இப்போது அதீத விளம்பரங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒளிபரப்புகிறது. அதற்காக அந்தப் படத்தின் மீதோ, சன் பிக்சர்ஸ் மீதோ இங்கே நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

காரணம், கலைஞர் டி.வி.யுடன் உறவு வைத்திருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலருக்கு சன் டி.வி.யுடன் கள்ள உறவு உண்டு. அதை வைத்துக் கொண்டு அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்'' என்றார் அவர்.சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசினோம். ``ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் இருக்கு. ஆனால் அதை மீறி இந்தப் படம் அவர்களின் தயாரிப்பு என்பதால், ரசிகர்கள் இந்தப் படத்தை `ஆஹா ஓஹோ!' என்று கொண்டாடுவதாக சன் நியூஸிலும், தினகரன் பத்திரிகையிலும் செய்தி போடுகிறார்கள். `காதலில் விழுந்தேன்' படத்தைவிட அமர்க்களமாக எதிர்பார்க்கப்பட்டு முதல்நாள் நள்ளிரவிலேயே ரிலீஸ் செய்யப்பட்ட `சிவாஜி' படத்துக்கும், `தசாவதாரம்' படத்துக்கும் இவர்கள் இதே ஆர்வத்துடன் செய்தி போடவில்லையே? அது ஏன்?



ஆந்திராவில் இன்னும் சினிமாதான் பெரியண்ணன்; சின்னத்திரை அங்கே தம்பி. அங்கே சினிமாவின் கட்டுப்பாட்டில்தான் சின்னத்திரை இருக்கிறது. ஆனால் இங்கோ சின்னத்திரையின் கட்டுப்பாட்டுக்குள் சினிமா போய்விட்டது. ஆந்திராவில் சாட்டிலைட் டி.வி.க்கு தயாரிப்பாளர் சங்கம்தான் டிரெயிலர்களைக் கொடுக்கிறது. அந்த டிரெயிலர்களைக் கூட `டிரெயிலர் டைம்' என்று குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும்தான் ஒளிபரப்ப முடியும். அதில் சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம், சின்ன ஹீரோ படம், பெரிய ஹீரோ படம் என்றெல்லாம் இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரி வாய்ப்புதான். ஆரம்ப காலத்தில் பத்திரிகைகளில் போட்டி போட்டுக் கொண்டு சினிமா விளம்பரம் தந்தே தயாரிப்பாளர்கள் பலர் அழிந்து போனார்கள். `நீ கால் பக்கம் விளம்பரம் தருகிறாயா? நான் அரைப்பக்கம் தருவேன்; நீ அரைப் பக்கமா? நான் முழுப்பக்கம்' என்று முட்டிமோதி தயாரிப்பாளர்கள் பலர் வீணாய்ப் போனதை அடுத்து, இதற்கென இங்கேயும் சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு படம் ரிலீஸாவதற்கு முன் எந்த சைஸில் விளம்பரம் கொடுக்கலாம் என்றும், ரிலீஸானபின் எந்த சைஸுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் விதி உண்டு. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அது அந்தக் காலம்.



ஆனால் இப்போதோ டி.வி.சேனல்களில் அசுரத்தனமாக விளம்பரம் செய்யும் புதிய போக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் இங்கே யாருக்கும் இல்லை. காரணம், இங்கேயுள்ள டி.வி. சேனல்கள் அனைத்தும் அரசியல் சார்புடன் இயங்குகின்றன. அது மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் தங்களது அடுத்த படத்தை அதே சேனல்களிடம் விற்க வேண்டிய நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல. இங்குள்ள தயாரிப்பாளர்கள் சிலரும் `இப்படி சின்ன பட்ஜெட் படம் எடுத்து விளம்பரத்தை வைத்தே படத்தை ஓட்டி விடலாம்' என்ற கனவில் இருக்கிறார்கள்.உதாரணமாக, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் ராம நாராயணன், `ராஜநாகம்', `பச்சைமனிதன்' ஆகிய இரண்டு படங்களை சின்ன பட்ஜெட்டில் தயாரித்து, இதேபோல் விளம்பரத்தை நம்பி பிஸினஸ் செய்தார். அவர் எப்படி சன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?'' என்று நம்மிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டார்கள் அவர்கள்.இதுபற்றி ராம நாராயணனிடம் நாம் கருத்துக் கேட்டபோது அவர், ``இந்தப் பிரச்னை குறித்து இதுவரை தயாரிப்பாளர்கள் யாரும் என்னிடம் புகார் தரவில்லை. அப்படித் தந்தால் செயற்குழுவைக் கூட்டி பேசி முடிவெடுப்போம். தமிழ்த்திரையுலகுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள சீரியஸான பிரச்னை இது. உங்கள் செய்தி நிச்சயம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். அதோடு இதில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்றும் நம்புகிறேன்'' என்றார் சுருக்கமாக.



இதையடுத்து இந்தப் பிரச்னை குறித்து சன் நிர்வாகத்திடம் நாம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர்கள், ``இங்கே சினிமாப் படங்களுக்கு பத்திரிகைகளில் தரும் விளம்பரத்திற்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் உள்ளன. சேனல்களில் விளம்பரம் தருவது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவிதமான விதிமுறைகளையும் வகுக்கவில்லை. இருந்தும்கூட எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு சினிமாவுக்கு எங்கள் சேனல்களில் ஒரு குறிப்பிட்ட வரைமுறைகளைக் கடைப்பிடித்துத்தான் விளம்பரம் செய்கிறோம். மேலும், இதே படத்தைப் பற்றி மற்ற சேனல்களில் விளம்பரம் வராத நிலையில் எங்கள் சேனல்களில் வரும் விளம்பரம் சிலரது கண்ணுக்கு உறுத்தலைத் தந்தால் அது எங்கள் பொறுப்பல்ல'' என்றனர் அவர்கள்.நாய் வாலை ஆட்டிய காலம் போய், வால் இப்போது நாயை ஆட்ட ஆரம்பித்த கதையாக, சின்னத்திரை சினிமாத்திரை மீது குதிரையேறி விடக்கூடாது என்பதுதான் கோடம்பாக்கத்தினரின் இப்போதைய குமுறல். கூடவே பம்மாத்து விளம்பரங்களைக் காட்டி பலவீனமான படங்கைளக் கூட வெற்றிப்படங்களாகச் சித்திரித்து மற்ற படங்களை யாரும் மண் கவ்வ வைத்துவிடக் கூடாது' என்கிறார்கள் அவர்கள். நியாயம்தானே? ஸீ



தகிடுதத்த தரவரிசை!

அந்த `இரண்டெழுத்து' டி.வி. ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரு படத்தின் ஒளிபரப்பு உரிமை அந்த டி.வி. நிறுவனத்துக்குக் கிடைத்து விட்டால், அதன் தரவரிசைப் பட்டியலில் அந்தப்படம் தாறுமாறாக மேலேறி வந்துவிடும். படத்தின் ஒளிபரப்பு உரிமை கிடைக்கவில்லையா? அதலபாதாளத்துக்கு அந்தப் படம் போய்ச் சேர்ந்து விடும்.அண்மையில் `தாம் தூம்' படத்தை அந்த டி.வி.சேனல் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றது. பேரம் படியவில்லை. இடைப்பட்ட நேரத்தில் இன்னொரு டி.வி. `தாம் தூம்' படத்தைத் தட்டிச் சென்று விட்டது. எரிச்சலின் உச்சத்துக்குப்போன அந்த இரண்டெழுத்து டி.வி. அதன் தரவரிசைப் பட்டியலில் `தாம் தூமை' பின்னுக்குத் தள்ளியது. அந்தப் படத்தின் பாடல்களை தன் மியூசிக் சேனலில் போட மறுத்தது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? `நான் நினைத்தால் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒழித்துக் கட்டி விடுவேன். நான் குறைந்த விலைக்குப் படத்தைக் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்' என்பதுதான்! தயாரிப்பாளர்களுக்கு அந்த டி.வி.சேனல் இப்படியொரு மறைமுக மிரட்டல் விடுத்தும் கூட அதையெல்லாம் மீறி `தாம் தூம்' படம் பேசப்பட்டது ஓர் ஆச்சரியம்.
அதுபோல அந்த டி.வி.சேனல் எந்த அடிப்படையில் படங்கள் வரிசைப்படுத்தப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த விளக்கமும் தந்தது இல்லை. அதைப் பற்றிக் கேள்வி கேட்கவும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு `தில்' இல்லை. காரணம், தாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு `தரவரிசையில்' ஆப்பு வைத்துவிடுவார்கள் என்ற பயம்தான்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, October 3, 2008

மதுரை--- பயோடேட்டா&விஜயகாந்த் + பிஜேபியின் நிலைமை


நன்றி. குமுதம்.காம்

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- குமுதம்




மாறன் பிரதர்சுக்கு:


உங்க சன்.டி.வி. தயாரிச்ச நாக்கமூக்கா நான்சென்ஸை மதுரையில ரிலீசாக வுடாம, உங்க பங்காளி அழகிரி மிரட்டித் தடுத்துட்டாருன்னு புலம்பிகிட்டே இருக்கீங்களே. அவுரு அப்பிடி செஞ்சிருந்தார்னா அது எப்பிடி தப்பாவும்? குடும்பக் கலாசாரத்தைத்தானே அவரும் பின்பற்றினதா அர்த்தம்?உங்கப்பா சொன்னதைக் கேக்காம, எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு உங்க தாத்தா துரத்தினாரே, அந்த 1972 சமயத்துல, `உலகம் சுற்றும் வாலிபன்'னு ஒரு படத்தை எம்.ஜி. ஆர் எடுத்து வுட்டாரு. அப்பலாம் நீங்க ஸ்கூல்ல இருந்திருப்பீங்க. ஸ்டாலின் மாணவர் அணியில இருந்தார். அழகிரி என்ன பண்ணிகிட்டிருந்தார்னு தெரியல. உங்க தாத்தாவோட பல கைத்தடிகள்ல ஒருத்தர் மதுரை முத்து. அவுரு மதுரையில படம் ரிலீசானா நான் புடவை கட்டி வளையல் போட்டுக்கறேன்னு சவால்லாம் விட்டாரு. தமிழ்நாடு பூரா படத்துக்கு போஸ்டர் ஒட்ட விடல; பல தியேட்டர்காரங்களையும் விநியோகஸ்தர்களையும் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாதுன்னு உங்க தாத்தா ஆளுங்க மிரட்டிக் கெடுபிடிசெய்யறாங்கனு, அவரோட 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர் அப்ப குற்றஞ்சாட்டினாரு. ஆனா அவர் படம் ரிலீசாகி ஓஹோன்னு எல்லா ஊர்லயும் ஓடிச்சு.அழகிரியும் மதுரை முத்து இல்ல; நீங்களும் எம்.ஜி.ஆர்.இல்ல. அதான் இப்ப உங்க பிரச்னை. தம்பி தயாநிதி மத்திய மந்திரியா இருந்தப்ப, ராஜ் டி.வி.யில செய்தி ஒளிபரப்பக் கூடாதுன்னு அவர் இலாகாதானே நிறுத்திச்சு? காரணம் கேட்டப்ப, சில லட்ச ரூபா பெறுமானம் உடைய லைசன்ஸ் தொகையை அந்த டி.வி. தாமதமா கட்டினாங்க; அதனால் லைசன்சே ரத்துன்னு சொல்லிட்டீங்க. அதே சமயத்துல அரசாங்கத்தை 500 கோடி ரூபாய் ஏமாத்தி, அதுக்காக கோர்ட்டுல 150 கோடி ரூபாய் அபராதம் கட்டற தண்டனை வாங்கின ரிலையன்ஸ் கம்பெனியோட செல்போன் லைசன்ஸை ரத்து பண்ணுவீங்களான்னு நிருபர்கள் கேட்டாங்க. இதுக்கெல்லாம் போய் லைசன்ஸை ரத்து செய்ய முடியாதுன்னு தம்பி சொன்னது ஞாபகம் இருக்குங்களா ?தேர்தல் முடிஞ்சப்பறமும் விஜய் டி.வி.யில `மக்கள் யார் பக்கம்` நிகழ்ச்சி வெற்றிகரமா நடந்துகிட்டிருந்தப்ப, ஸ்டார் டி.வி. அதிகாரிகளைக் கூப்பிட்டு, `ஒண்ணு இதை ஸ்டாப் பண்ணுங்க; இல்லாட்டி மொத்தமா ஸ்டாரையே மூடிடுவோம்னு' தம்பியோட அமைச்சகத்துலருந்து சொன்னதுயார்ன்னு ஞாபகம் இருக்குங்களா? அரசியல்ல இதெல்லாம் சகஜம் இல்லீங்களா? அதுவும் குடும்ப அரசியல்ல? அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ஒரு யோசனை சொல்றேன். மத்தவங்க எடுக்கற படத்தைலாம் சன் டி.வி. வாங்குது இல்லே? சன் டி.வி. எடுக்கற படத்தை மட்டும் ஜெயா டி.வி.க்கு வித்துடுங்க. அவங்க அதை, மதுரைக்கு மட்டும், இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, திரைக்கு வரவே முடியாத படத்தை டி.வி.யில காட்டி சாதனை பண்ணிடுவாங்க. அழகிரியால அதை நிறுத்த முடியாது இல்லீங்களா?



தபால் மந்திரி ராஜாவுக்கு:

இந்தத் தபால் உங்களுக்குக் கிடைக்கும்னு நம்பறேன். ஏன்னா இதை தபால் பெட்டியில போடல. நீங்க தகவல் தொழில்நுட்ப மந்திரி மட்டும் இல்ல. தபால் மந்திரியும்தான்னு ஞாபகம் வெச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்.தபால் துறைக்கு புதுசா ஏதோ சின்னம் வரைஞ்சு இருக்காங்க போலிருக்கு. இப்பலாம் அரசியல் கட்சிக்கே சின்னம் சொந்தம் கெடையாதுன்னு தேர்தல் கமிஷனும் கோர்ட்டும் சொல்லிட்டாங்க. அந்த மாதிரி தபால் துறைக்கும் சொல்லிடப் போறாங்க. சட்டத் துறையிலே ஆலோசனை கேட்டு வெச்சுக்குங்க.ஏன்னா, இந்த சின்னம் மாத்தறதை பொது மக்களுக்குச் சொல்றதுக்காக கோடிக்கணக்கான ரூபா செலவு பண்ணியிருக்கீங்க போலிருக்குது. ஒருஇங்கிலிஷ் பேப்பர்ல பார்த்தேன். முதல்ல ஒரு அரைப் பக்கம். அப்பறம் இன்னொரு அரைப் பக்கம். அதுக்கப்பறம் ஒரு முழுப் பக்கம். எல்லாம் ஒரே நாள்ல. சின்னம் மாறிடுச்சுன்னு மட்டும் சொல்றதுக்கு இத்தினி வௌம்பரம். ஒரே பேப்பருக்கு லட்சக் கணக்கான ரூபாய் வருமானம். இத்தினி செலவு பண்ணதுல, அதுல கலைஞர் போட்டோவை சேத்து போட்டிருக்கலாம். கூட மன்மோகன், சோனியா போட்டோவையும் குட்டியா வெச்சுட்டா யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களே. தம்பிக்குக் கடிதம் எழுதறதுக்காக, உங்க டிபார்ட்மெண்ட்டை நம்பாம, தனியே அதுக்குன்னே ஒரு பத்திரிகையே நடத்தினவராச்சே தலைவரு. திரும்பியும் தபால் சின்னத்தை மாத்தணும்னா, அதை எங்களுக்கெல்லாம் சொல்லறதுக்கு மறுபடியும் கோடிக்கணக்குல செலவாகும். இப்பவே செலவு பண்ணின காசை திரும்ப எடுக்கறதுக்காக, எங்களை மாதிரி பதிப்பாளர்கள் தலையில கையை வெச்சுட்டீங்க.
இன்னிக்கு தமிழ் நாட்டுல நல்ல புத்தகம் போடறவங்கள்லாம் யாரை நம்பிப் போடறாங்க தெரியுமா? இங்கே இருக்கறவங்கள நம்பி இல்ல. இங்கே இருக்கறவங்க காசெல்லாம் டாஸ்மாக்குக்குத்தான் போவுது. வெளி நாட்டுல இருக்கற தமிழருங்க, குறிப்பா ஈழத்தமிழருங்கதான் நம்ம ஊர் புத்தகத்தைலாம் நிறைய வாங்கறாங்க. இனிமே அதுவும் கஷ்டம்தான்.`சுண்டைக்காய் கால் பணம். சுமைக்கூலி முக்கால் பணம்'னு நீங்க ஆக்கிட்டதுதான் காரணம். இதுவரைக்கும் விமானத் தபால்ல, அஞ்சு கிலோ எடைக்கு புக் பார்சல் அனுப்பினா 1175 ரூபா இருந்த கட்டணத்தை இப்ப 2360 ஆக்கீட்டீங்க. கப்பல் வழியா அனுப்பலாம். பாலு அண்ணன் சேதுக் கால்வாய் வெட்டிட்டார்னா, கப்பல் சார்ஜ்லாம் இன்னும் கொறையும்னு நம்பிகிட்டிருந்தோம். கப்பல் தபால் சார்ஜை, அஞ்சு கிலோ 175 ரூபாயிலருந்து 1100 ரூபாய் ஆக்கிட்டீங்க. இனிமே ஒரு தமிழ் புக்கும் வெளிநாட்டுலயும் விக்காது. கொஞ்சம் பாத்து ஏதாவது குறைங்க. இல்லாட்டி தலைவர் புக், கனிமொழி புக்,தமிழச்சி புக், சல்மா, இமயம் எழுதின புக்குலாம் கூட கடல் தாண்டாது. கட்சிக்காரங்க மடியிலயே கை வெச்சுடாதீங்க.



வடிவேலு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு:

வடிவேலு வீட்டுல தாக்குதல் செஞ்சவங்க விஜய்காந்த் ரசிகர்கள்னே வெச்சுகிட்டாலும், அதுக்காக விஜய்காந்த் மேல கொலை முயற்சி செஞ்சதா எப்பிடி எஃப்.ஐ.ஆர். போடமுடியும்னு கேட்டதுக்கு சூப்பரா ஒரு பதில் சொல்லியிருக்கீங்க.``தொண்டர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒரு தலைவருக்கு இருக்கிறது. இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.கொள்கையே இல்லாத கட்சிகள் என்று எதுவுமே கிடையாது என்கிற நிலையில், தன் கட்சித் தொண்டர்களின் நடவடிக்கைக்கு நான் பொறுப்பில்லை என்று எந்தக் கட்சித்தலைவரும் நழுவமுடியாது'' அப்பிடின்னு நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.நிலப்பிரச்னையில அமைச்சர் என்.கே.பி.சாமி தன்னை போன்ல மிரட்டினாருன்னு ஒருத்தர் கோர்ட்டுல சொல்றாரு. அமைச்சர் வீட்டு போன்லருந்து கால் போனது நிஜம்தான். ஆன அப்ப அமைச்சர் வாக்கிங் போயிருந்தாருன்னு போலீஸ்ல பதில் சொல்றாங்க. உங்க வாதப்படி, தன் வீட்டு போன்லருந்து ஒருத்தருக்கு கால் போனா, அதுக்கு அமைச்சர்தானே பொறுப்பு ? அவர் மேல எஃப்.ஐ.ஆர். போடணும் இல்லீங்களா?மதுரை தினகரன் ஆபீஸ் முன்னால் போய் மறியல், கலாட்டா பண்ணவங்க எல்லாரும் தி.மு.க காரங்கதான். மறியலை நடத்தினவரு மேயர். அப்ப அவங்க செஞ்ச கலாட்டாவுல மூணு பேர் செத்துப் போனதுக்கு, எஃப்.ஐ.ஆர்ல தி.மு.க. தலைவர் கலைஞர் பேரைச் சேர்க்கணும் இல்லீங்களா, செந்தூர் பாண்டியன்? எதிர்ப்பு தெரிவிச்சவங்க என்னத்தை எதிர்த்தாங்க ? அழகிரியை அவமானப்படுத்தற மாதிரி ஒரு கருத்துக் கணிப்பு பேப்பர்ல போட்டதைத்தானே? அவங்க எல்லாரும் அழகிரி ரசிகர்கள்தானே, சாரி, தொண்டர்கள்தானே? அப்ப, அவங்க செஞ்ச போராட்டத்துல என்ன நடந்திருந்தாலும், அந்த எஃப்.ஐ.ஆர்ல அழகிரி பேரையும் சேக்கணும் இல்லீங்களா?உங்களை மாதிரி நாலு வக்கீல், இல்லீங்க நீர் ஒருவரே போதும்.. இப்பிடிசேம் சைட் கோல் அடிக்கறதுக்கு... (தருமி நாகேஷ் குரல்ல வாசிச்சுக்குங்க..) என்ன சொல்றீங்க?



தோழர்கள் வரதராஜன், தா.பாண்டியன் ஆகியோருக்கு:

ஒரு வழியா தமிழ்நாட்டுலயும் மூன்றாவது அணி தேவைப்படுதுன்னு நீங்க ஏத்துகிட்டது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு........ன்னு சொல்லலாம்னு பார்த்தா, நீங்க சொல்ற மூணாவது அணி வேற ஏதோ போல இருக்குது.டெல்லியில காங்கிரஸ் ஒரு அணி. பி.ஜே.பி ஒரு அணி.ரெண்டு பேர் கொள்கையும் வேணாம்னு சொல்றவங்கள்லாம் சேர்ந்து மூணாவது அணின்னு சொல்றீங்க. அது புரியுது. தமிழ் நாட்டுல தி.மு.க. ஒரு அணி. அ.தி.மு.க. ஒரு அணி. ரெண்டு பேரும் ஒ.கு.ஊ.மட்டைன்னு சொல்றவங்கள்லாம் சேர்ந்து மூணாவது அணின்னு நான் நினைச்சுகிட்டிருந்தேன்.அதைத்தான் தாலாட்டி, சோறு ஊட்டி, வளர்த்து, ஆளாக்கற பெரும்பொறுப்பை இந்த வயசான காலத்துல நீங்க ரெண்டு பேரும் எடுத்துசுமக்கப் போறீங்கன்னு நினைச்சேன்.ஆனா, அப்பிடி இல்ல போலிருக்குதே. பா.ம.க., தே.மு.தி.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. எல்லாரும் உங்க கூட ஓரணியில வரணும்னு தா.பா. சொல்லியிருக்காரே. அதாவது காங்கிரஸ், பி.ஜே.பி.க்கு மட்டும் தாழ்ப்பா. மீதி பேர் திறந்த வூட்டுல யார் வேணாலும் நுழையலாம்கற மாதிரி அர்த்தம் இல்லீங்களா காம்ரேட்ஸ்?அதாவது டெல்லியில இருக்கற மாதிரியே இங்கேயும் மூன்றாவது அணி - காங்கிரஸ், பி.ஜே.பி. இல்லாத அணி. தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத அணின்னு நான்தான் தப்பா அர்த்தம் எடுத்துட்டேன் போல... அந்த அணியை தோழர் விஜய்காந்த்துதான் உருவாக்க முயற்சிக்கிறார் போல.. நீங்க இல்ல.அப்பிடியே இருக்கட்டும். எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.காங்கிரசை வுட்டு நீங்க ஏன் வந்தீங்க? அமெரிக்காகூட அணு ஒப்பந்தம் போட்டு தேசத்தையே அடகு வெக்கறாங்கன்னுதானே? அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கறவங்கதானே பா.ம.க.? விஜய்காந்த்.? அவங்க கூட மட்டும் எப்பிடி சேருவீங்க? அதுக்கு பேசாம காங்கிரஸ் கூடவே இருந்துட்டுப் போயிடலாமே? அணு ஒப்பந்தத்தை காங்கிரஸ் ஆதரிக்கறதும், அதைக் கொண்டு வர்ற காங்கிரஸ் ஆட்சி கவிழாம காங்கிரசை பா.ம.க. ஆதரிக்கறதும் வெவ்வேறான இயங்கியல் முரண் தன்மையுள்ளவைங்கறதைப் பத்தி மார்க்ஸ் ஏதாவது சொல்லியிருக்காரா?.


இந்த வாரப் பூச்செண்டு

தங்கள் துக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இறந்த உறவினரின் உடல் உறுப்புகளை உயிரோடு இருக்கும் பலருக்குப் பயன்படும் வகையில் அளித்த திருக்கழுக்குன்றம் ஹிதேந்திரனின் பெற்றோருக்கும், கார்ட்டூனிஸ்ட் மதனுடைய சகோதரர் முரளியின் குடும்பத்தினருக்கும், அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை விரைந்து சென்று அளிக்க உதவிய தமிழக காவல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் இ.வா.பூ.



இந்த வாரக் குட்டு

எனக்கும் வாசகர்களுக்கும். சென்ற இதழ் கட்டுரையில் டாலர்களை ரூபாய்க் கணக்கில் எழுதும்போது, மில்லியன் டாலர் கணக்கிலேயே பில்லியன்களையும் தவறாக மாற்றி எழுதியதற்காக எனக்கும், இந்தத் தவறைக் கண்டித்து எழுதத் தவறியதற்காக வாசகர்களுக்கும் இ.வா.குட்டு. மில்லியன் என்பது 10 லட்சம். பில்லியன் என்பது 1000 மில்லியன் அதாவது 100 கோடி.


இந்த வாரச் சிரிப்பு

"இந்திய மக்கள் எல்லாரும் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள்." - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.



குடும்பத்தினருக்கு அறிவுரை ?

"அளவுக்கு மிஞ்சி செல்வம் சேர்ப்பது அழிவைத்தான் ஏற்படுத்தும்." - கலைஞர் கருணாநிதி.

குடிமகன்களின் ஏக்கம்--குமுதம் கார்ட்டூன்





குமுதம் .காம்

Thursday, October 2, 2008

காந்தி ஜெயந்தி,கலைஞர்--,அரசு கேபிள்-- சூடான இடுகை,

காந்தி ஜெயந்தி


நேற்று முதல் 2.10.08 சிகரெட் விற்பனை குறைந்து விட்டதாக செய்திகள் வருகின்றன. எந்த அளவுக்கு உண்மையின்னு தெரியலை.டூட்டி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது பஸ் ஸ்டாப்பில் குறைந்தப் பட்சம் இருவராவது தம் அடித்துக்கொண்டிருப்பர். ஆனால் நேற்று முதல் மேற்சொன்ன காட்சியை காணமுடியவில்லை. அன்பு மணிக்கு வாழ்த்துக்கள். அப்படியே ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஏதாவது இதே மதிரியான சட்டங்களை கொண்டு வந்தா நல்லா இருக்கும். புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களில் சாலைகள்,பூங்காக்கள் இல்லையென்று தினமலர் செய்தியில் கூறப்ப்ட்டுள்ளது. அப்படின்னா மெற்சொன்ன இரு இடங்களிலும் தம் அடிக்கலாமா?



கலைஞர்-- அரசு கேபிள்

அரசு கேபிள் இயக்குநர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். காரணம் சன் நெட்வொர்க்கை பெற்று தருவதில் சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லையாம்.உண்மையில் மதுரை,வேலூர், நெல்லையில் உள்ள அரசுகேபிள் கண்ட்ரோல் ரூம் தூங்கிக்கொண்டிருக்கிறது. காரணம் சன் சேனல்கள்,ஸ்டார் சேனல்கள், டிஸ்கவரி சேனல்கள் . உண்மையில் கலைஞர் மாறன் சகோதரர்களுக்கு மறைமுகமாக உதவுகிறார். மதுரை மற்றும் அரசு கேபிள் உள்ள இடங்களில் சன் டைரக்ட் அமோகமாக விற்பனையாகிறது. இதற்காகவாவது மாறன் சகோதரர்கள் கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் தான் ஒரு சில திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் இருந்ததாக ஜுனியர் விகடன் கூறியுள்ளது.


தற்போது காதலில் விழுந்தேன்

இதற்கு முன்னால் முதல்வன் ( மதுரையில் உள்ள கேபிள் டிவியில் தினசரி 4காட்சிகள் என்ற கணக்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாம் காரணம் முதல்வன் படத்தைப்பார்த்தாலே தெரியும்.)


இதற்கும் முன்னால் உலகம் சுற்றும் வாலிபன் அரசியல் காரணங்களுக்காக இதே திமுக ஆட்சியில் பிரச்சினை ஆகியது. இதையெல்லாம் மீறி மேற்சொன்னதிரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியது.


எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கலைஞரின் வசனத்தில் வெளி வந்த நீதிக்குத்தண்டனை படத்தை வெளியிட கூடாது என சட்டமன்றத்திலே பிரச்சினை எழுந்ததாம். ஆனால் எம்ஜிஆர் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.






கலைஞர் உண்மையில் ரொம்ப நல்லவர் தான். எந்த விசயத்துலன்னு தெரியலை....


சூடான இடுகை
கீழ்க்கண்ட எனது பதிவு அதிசயமாக சூடான இடுகையில் இன்றைக்கு வந்தது. http://rajkanss.blogspot.com/2008/10/blog-post_01.html
எப்படினே தெரியலை. ஒன்னு மட்டும் புரிஞ்சிது. எனது பதிவை பார்க்கும் அன்பு கொண்ட உள்ளங்களே கொஞ்சம் பின்னூட்டமிடுங்கள். உங்கள் கருத்தை வைத்துத்தான் எனது பதிவை மென் மேலும் நன்றாக எழுதமுடியும்.

இன்று முதல் எங்கு புகை பிடிக்கலாம்? + குமுதம் கார்ட்டூன்

ஒரு நாளைக்கு ஒன்னோ,ரெண்டோ சிகரெட்தான். அதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்க. பேசாம திரிசூலம் மலைக்கோ இல்லை செங்கல்பட்டு மலைக்கோ போய்த்தான் தம் அடிக்கனும். அங்கேயும் வந்துருவாங்களோ?. யாராவது IDEA சொல்லுங்க.

Wednesday, October 1, 2008

தயாநிதிக்கு கட்டம் கட்டியாச்சு.

இன்னும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே அதிரடியான - நம்பமுடியாத திருப்பங்களைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது, தமிழக அரசியல்.இதில் முதல் இரண்டு அதிரடி அரசியல் திருப்பங்கள் குறித்த விஷயங்கள் தி.மு.க., தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பரவி, இப்போது பரபரப்புத் தீயைப் பற்ற வைத்திருக்கிறது.`நிச்சயமாக அந்த அதிரடித் திருப்பங்கள் அரங்கேறியே தீரும்' என்று தி.மு.க., தே.மு.தி.க.வினரால் உறுதியாகக் கூறப்படும் அந்த இரண்டு விஷயங்களுமே தயாநிதி மாறனைப் பற்றியதுதான்.முதல் அதிரடித் திருப்பமாக தி.மு.க.வினர் கூறுவது; ``வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் தயாநிதிமாறன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்'' என்பது.



இரண்டாவது அதிரடியாக தே.மு.தி.க.வினர் சொல்லுவது, ``வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஆதரவுடன் சென்னை மத்திய தொகுதியில் தயாநிதி மாறன் போட்டியிடுவார்'' என்பது.`நம்பமுடியாத இந்த இரண்டு விஷயங்களும் நடந்தே தீரும் என்பதை எதனை ஆதாரமாக வைத்து அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்?' என்று நாம் கேட்டபோது, அதற்கு அவர்கள் கூறிய பதிலும் அதிரடியாகத்தான் இருந்தது.வருகிற பதினெட்டாம் தேதி சென்னை தீவுத் திடலில் நடக்கப்போகும் தே.மு.தி.க.வின் மிகப் பிரமாண்டமான இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகுதி.மு.க.விலிருந்து தயாநிதி மாறன் அதிகாரபூர்வமாக நீக்கப்படுவாராம்.



`இதென்ன சுத்த அபத்தமாக இருக்கிறது? தே.மு.தி.க.வின் இளைஞர் அணி மாநாட்டுக்கும், தயாநிதி மாறனை தி.மு.க.விலிருந்து நீக்குவதற்கும்எப்படித் தொடர்பு இருக்க முடியும்?' என்ற நம் கேள்விக்கு, உடன்பிறப்புகள் உடனடியாகச் சொன்ன பதிலால் வாயடைத்துப் போனோம்.தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை முழுமையாக நேரடி ஒளிபரப்புச் செய்ய முடிவெடுத்து இருக்கிறதாம் சன் டி.வி. நிர்வாகம். இதற்கான ரூட்டை கிளியர் செய்து கொடுத்ததே தயாநிதிமாறன்தானாம். கேப்டனும் இதற்கான தனது சம்மதத்தை சன் டி.வி. நிர்வாகத்துக்குத் தெரிவித்துவிட்டாராம்.``அந்த நேரடி ஒளிபரப்பு மட்டும் திட்டமிட்டபடி நடந்தேறுமானால், தயாநிதிமாறன் தி.மு.க.விலிருந்து நீக்கப்படுவது உறுதி'' என்று அடித்துக் கூறிய அந்த உடன்பிறப்புகள், அதற்கான காரணத்தையும் நம்மிடம் விவரித்தார்கள்.



``சமீபகாலமாக சன் டி.வி. நிர்வாகம் நடுநிலை என்ற பெயரில் ஜெயலலிதா கலந்துகொண்ட தேனி பொதுக்கூட்டம், வைகோ மதுரையில் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழா மாநாடு போன்றவற்றை நேரடி ஒளிபரப்புச் செய்ததில் ரொம்பவே எரிச்சலடைந்திருக்கிறார் எங்கள் தலைவர் கலைஞர். `இத்தனை வருடங்களாக கடைப்பிடிக்கப்படாத நடுநிலை இப்போது மட்டும் எங்கிருந்து வந்து குதித்தது' என்று தன் சகாக்களிடம் கோபப்பட்டாராம் கலைஞர். இதாவது பரவாயில்லை. சமீபத்தில் வடிவேலு விவகாரம் சம்பந்தமாக விஜயகாந்த் சென்னையில் தந்த பிரஸ்மீட்டை நேரடி ஒளிபரப்புச் செய்த தன் பேரன்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் கலைஞர்.ஒரு சாதாரண பிரஸ்மீட்டை சன் டி.வி. நிர்வாகம் நேரடி ஒளிபரப்புச் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதில் விஜயகாந்த் தன்னையும் தன் அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதால்தானே'என்று தன் நெருக்கமான சகாக்களிடம் வேதனைப்பட்டாராம் கலைஞர்.இந்தச் சூழலில்தான் தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை சன் டி.வி. நேரடி ஒளிபரப்புச் செய்யப் போகிறது என்ற தகவல் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கலைஞரின் உச்சகட்ட கோபத்தையும் எரிச்சலையும் கிளறப்போகும் இந்த நேரடி ஒளிபரப்பு, தயாநிதி மாறனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கும் முடிவுக்கு கலைஞரைக் கொண்டு செல்லும்'' என்கிறார்கள், நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள்.



மேலும், ``தயாநிதி தானாகவே கட்சியை விட்டு வெளியேறட்டும் என்று தலைவரும்; தாத்தாவே தன்னைக் கட்சியை விட்டு வெளியேற்றட்டும் என்று தயாநிதி மாறனும் வைராக்கியத்தோடு இருக்கிறார்கள். தாத்தாவும் பேரனுமாக விடாக்கண்டன் கொடாக்கண்டனாக விளையாடி வரும் இந்த அரசியல் கண்ணாமூச்சி ஆட்டத்தை, தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாடு பற்றிய சன் டி.வி.யின் நேரடி ஒளிபரப்பே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். இதனை மாறன் சகோதரர்களும் எதிர்பார்க்கிறார்கள்!'' என்றும் சொல்கிறார்கள் அந்த உடன்பிறப்புகள்.தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை முழுமையாக நேரடி ஒளிபரப்புச் செய்வது என்ற முடிவை துணிச்சலாக சன் டி.வி. நிர்வாகம் எடுக்க முக்கியக் காரணமே, அவர்கள் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் `காதலில் விழுந்தேன்' திரைப்படத்தை மதுரையில் ரிலீஸ் செய்யாதபடி விடுத்த மிரட்டல்கள்தானாம்.



முதலில் சன் நெட்ஒர்க் சேனல்கள் மதுரையில் தெரியாதபடி செய்தார்கள். பிறகு மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினார்கள். போதாதென்று தங்களது சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக ராயல் கேபிள் விஷனை ஆரம்பித்தார்கள். இப்போது, தங்கள் தயாரிப்பில் உருவான திரைப்படங்களை மதுரை தியேட்டர்களில் திரையிடச் செய்யாமல் தகராறு செய்கிறார்கள். இதனை இப்படியே விட்டோம் என்றால் தங்களுக்குத்தான் ஆபத்தாக முடியும் என்று கருதியே, அதே மதுரைக்காரரான விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கலைஞர் குடும்பத்தையே எரிச்சல்படுத்த முடிவெடுத்து இருக்கிறார்களாம் மாறன் சகோதரர்கள்.



ஒருவேளை, தயாநிதிமாறன் எதிர்பார்த்தபடியே அக்டோபர் மாத இறுதிக்குள் அவர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டால் அவரது அடுத்த மூவ்என்னவாக இருக்கும்? தி.மு.க.வுக்குப் போட்டியாக தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என்று கேட்டால், அதற்கும் மிகத் தெளிவாக பதில் வருகிறது தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகளிடமிருந்து``நிச்சயமாக மாட்டார். தனிக்கட்சி ஆரம்பித்து காணாமல் போவதை விட, மாறாக, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் மிக வேகமாக வளர்ந்துவரும் எங்கள் கட்சியின் ஆதரவோடு சென்னை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தயாநிதி மாறன் நிச்சயம் வெற்றி பெறுவார். இது நிச்சயமாக நடக்கும்'' என்று உறுதியாகக் கூறும் அந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், அதற்கு ஆதாரமாக ஒரு விஷயத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.



``எங்கள் தலைவருக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை சமீபத்தில் தமிழ்ப் பத்திரிகைகள் உள்பட பல்வேறுதனியார் அமைப்புகளும் சர்வே எடுத்தன. அத்தனை சர்வே முடிவுகளுமே கேப்டனுக்கும் தே.மு.தி.க.வுக்கும் தனிப்பெரும் செல்வாக்கு இருப்பதையும், அது மேலும் வளர்ந்து வருவதையும் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அந்த சர்வேக்கள் அத்தனையும் மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. தொடர்ந்து தி.மு.க.வின் கோட்டையாகவே இருந்து வரும் சென்னையின் எல்லா நாடாளுமன்றத் தொகுதியிலும் எங்கள் கட்சி தி.மு.க.வுக்குப் பெரும் சவாலாக அமையும் என்று அந்த சர்வேக்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மேலும் அந்த சர்வேக்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னைத் தொகுதிகளில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடும் எந்த ஒரு மாற்றுக் கட்சி வேட்பாளரும் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கின்றன. இந்த சர்வே முடிவுகளை உள்வாங்கிக் கொண்ட தயாநிதி மாறன், எங்கள் கட்சியின் ஆதரவோடு சென்னை மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதும் உறுதி. இதற்காக அவர் எங்கள் கேப்டனை நோக்கி நெருங்கி வருகிறார். அதன் முதல் கிரீன் சிக்னல்தான் எங்கள் இளைஞரணி மாநாட்டை சன் டி.வி. நேரடி ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்து இருப்பது'' என்றார்கள் தலைமைக்கு நெருக்கமான அந்த மாவட்ட நிர்வாகிகள்.`உங்கள் இளைஞரணி மாநாட்டு நேரடி ஒளிபரப்புக்குப் பிறகுதான் தயாநிதி மாறனை தி.மு.க.விலிருந்து விலக்கப் போகிறார்களாமே... இது உங்களுக்கே அநியாயமாகப் படவில்லையா?' என்று கேட்டோம்.



அதற்கு அவர்கள், ``இதில் அநியாயமாக நினைக்க என்ன இருக்கிறது? எங்கள் கேப்டனோடு இணைவதென்றால் தி.மு.க.வை விட்டு அவர் வெளியே வந்துதானே ஆக வேண்டும். தவிர, தயாநிதி மாறனுக்கும் தி.மு.க.வில் பல்வேறு நெருக்கடிகள் இருப்பதும், அவர் அங்கிருந்து வெளியே வர இருப்பதும் நிஜம்தானே? அத்துடன் எங்கள் கேப்டனுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்குத்தானே தயாநிதி மாறனை எங்கள் பக்கமாக திரும்ப வைத்திருக்கிறது. எங்கள் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை நாங்கள் எம்.பி.யாக்கப் போகிறோம். அவரும் சன் நெட்ஒர்க் மூலம் எங்கள் கேப்டனுக்கு ஒத்தாசையாக இருக்கப் போகிறார். அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே!'' என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் நம்மிடம் பேசிய தே.மு.தி.க.வினர்கேப்டனும்கூட, தனக்கும் தயாநிதிக்குமான அரசியல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்று நம்புகிறாராம். தவிர, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தயாநிதி கூட்டணியோடு எதிர்கொள்வது தனது அரசியல் இமேஜை பாதிக்காது. மாறாக, தயாநிதியையே தி.மு.க.விலிருந்து பெயர்த்து எடுத்து வந்து விட்டாரே என்று மக்கள் மத்தியில் தன்னைக் குறித்த எதிர்பார்ப்பும், செல்வாக்கும் எகிறும் என்றும் நம்புகிறாராம்.



தயாநிதியைப் பொறுத்தவரை தி.மு.க.வில் இருந்தால் மட்டுமல்ல, வேறு எந்தக் கட்சியின் ஆதரவோடும் தன்னால் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதை கலைஞருக்கும், அழகிரிக்கும் நிரூபிக்க நினைக்கிறாராம்.இந்த அதிரடி அரசியல் ஹேஸ்யங்கள் நிஜமாகுமா? அல்லது வழக்கம் போல் கலைஞரின் ராஜதந்திர,சாணக்கியத்தனங்களால் புஸ்வாணமாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி ரிப்போர்ட்டர்

ஆட்சியில் பங்கு - காங்கிரசாரின் நிலைமை-

நன்றி குமுதம்.காம்

Tuesday, September 30, 2008

தமிழக அரசின் மற்றுமொரு வஞ்சகம்.

தமிழக அரசின் மற்றுமொரு வஞ்சகம்.


இப்போதெல்லாம் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் மின்வெட்டே இல்லை. ஆஹா ஆற்காட்டார் ரொம்ப வேலை செய்கிறார் போல என நினைத்தால் அது மாபெரும் தவறு. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின் வெட்டு இன்னும் தீரவில்லை. அங்கெல்லாம் மின்வெட்டு இருப்பதால்தான் சென்னையில் தடைஇன்றி மின்சாரம். அப்படியென்றால் சென்னையிலுள்ளவர்கள் மட்டும்தான் ஓட்டுப் போட்டு இந்த அரசை தேர்ந்தெடுத்தார்களா? என்ன"""". மற்ற மாவட்டத்து மக்கள் வேறு யாருக்குமா ஓட்டு போட்டார்கள். அரசை பொறுத்தவரைக்கும் சென்னை தான் தமிழ் நாடு தமிழ்நாடுதான் சென்னை. சென்னையில் மின்வெட்டு இருந்த சமயம் அலறிய பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் தற்போது அமைதி காக்கிறார்கள்.இவர்களுக்கும் அதே பாலிசிதான் "சென்னை தான் தமிழ் நாடு தமிழ்நாடுதான் சென்னை". ஜனநாயகநாடு என்றால் இப்படித்தான் இருக்கும் போல.

Monday, September 29, 2008

பொது இடத்தில் புகைப்பிடித்தல் கார்ட்டூன் 2.

நன்றி குமுதம்.காம்

தமிழக காங்கிரசாரின் நிலைமை--வீட்டில் புகை பிடித்தால்- கார்ட்டூன்

நன்றி குமுதம்.காம்

Sunday, September 28, 2008

அணுசக்தி ஒப்பந்தம்- குண்டுவெடிப்பு- சன் பிக்சர்ஸ்-- தமிழக அரசின் மற்றுமொரு வஞ்சகம்.

அணுசக்தி ஒப்பந்தம்- குண்டுவெடிப்பு

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ஒகே ஆகிவிட்டதால் நம் பிரதமர் இனிமேலாவது மற்ற விசயங்களில் முக்கியமாக தொடர் குண்டு வெடிப்பு + உளவுத்துறை கவனம் செலுத்துவார் என நம்புவோமாக!!!.மத்திய உள்துறை அமைச்சர் ஆற்காட்டாரை மிஞ்சிவிடுவார் போலுள்ளது. இருவருமே தங்கள் துறைகளில் கவனம் செலுத்துவதைவிட வேறு மேட்டரில் தான் கவனமாக இருக்கின்றனர். இவர்கள் எப்படித்தான் பதவியில் சொரணை இல்லாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறார்களோ?. கட்சி தலைமைக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன ரகசிய ஒப்பந்தமோ!!!!!.


மீண்டும் மேட்டருக்கு வருவோம்.அணுசக்தி ஒப்பந்தம் என்பதற்காக விலை வாசி உயர்வு,பணவீக்கம்,உளவுத்துறையின் பலவீனம் என பல விசயங்களில் மத்திய அரசு மக்களை பாடய் படுத்துகிறது. தேர்தல் நெருங்கிவிட்டது. இனிமேலாவது மத்திய அரசு விழித்துகொள்ளுமா??
 
சன் பிக்சர்ஸ் vs தமிழக அரசு
 
மீண்டும் முதல்வர் குடும்பத்துக்குள் மோதல். இம்முறை மாட்டிகொண்டது திரை உலகம். காதலில் விழுந்தேன் படம் மதுரை,விருதுநகர்,தேனி,திண்டுக்கல்,ராமநாதபுரம் மவட்ட திரை அரங்குகளில் திரை இடப்படவில்லை. காரணம் ஒரே பெயர் அழகிரி.இம்முறை சன் நெட்வொர்க் ஏதோ ஸ்டண்ட் அடிக்கிறது என்று. மதுரையில் என் நண்பனிடம் கேட்டப்பொழுதுதான் இது உண்மை என்று நம்பினேன். இதற்கு த்மிழக அரசின் அலட்சியமான அறிக்கை " யாருமே புகார் கொடுக்கவில்லை" என்று. ஏன் புகார் கொக்கவில்லை என்று முதல்வர் முதல் சிறு குழந்தைக்குகூட தெரியும். புகார் கொடுத்தால் நடவடிக்கைஎடுப்பார்கள் கொடுத்தவர் மீதே. அந்த லட்சணத்தில் அரசு செயல் படுகிறது. புகார் கொடுப்பவர் கண்டிப்பாக தமிழ் நாட்டுக்குள் தொழில் செய்ய முடியாதபடி எல்லா உள்குத்து வேலைகளும் நடக்கும். திமுக துணை இல்லாமல் யாரும் தமிழ் நாட்டில் தொழில் செய்ய முடியாது என்பதை காண்பிப்பதற்காகவே இந்த மோதல். வாழ்க முதல் அமைச்சர் மற்றும் அவருடைய வாரிசுகள். அப்ப மற்றவர்களெல்லாம்!!!!!!!! என்னத்தைச் சொல்ல ஆண்டவா"""""
 
 
மக்களே ரொம்ப அமைதியாயிருக்கீங்க? ஏன் ஏன் ஏன்?????????

Saturday, September 27, 2008

ஆற்காடு வீராசாமி --- அதிமுக ஆதரவு கார்ட்டூன்

நன்றி குமுதம்

இவ்வாரம் குமுதம் ஞாநியின் பார்வையில்

எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்.



கடந்த 18 வருடங்களாக, இந்திய முதலாளிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் உலக முதலாளிகளின் டேப் ரிக்கார்டர்களாக இங்கே ஒப்பித்துக் கொண்டிருக்கும் வாசகங்கள் இவை. சோஷலிசத்தின் பெயரால் பொருளாதாரத்தை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்து, இந்தியாவைக் குட்டிச் சுவராக்கியவர் நேரு என்று அவரை ஓயாமல் இன்னமும் வசை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தத்துவங்களின் ஊற்றுக்கண்ணாகிய அமெரிக்காவில் இன்று புஷ் அரசாங்கம் தனியாரிடம் மார்க்கெட்டை விட்டது தப்பு; தன் மூக்கை நுழைத்தே ஆகவேண்டும் என்ற நிலையை எடுத்திருக்கிறது. காரணம், லெஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதுதான்.அமெரிக்க அரசாங்கம் தன் மக்கள் வரிப் பணமான சுமார் 900 பில்லியன் டாலர்களைக் (சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களை) கொடுத்து இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தேசத்தையும் உலகத்தையும் மீட்க முயற்சித்திருக்கிறது. இராக், ஆப்கன் யுத்த செலவு மட்டும் 300 பில்லியன் டாலர் (12 ஆயிரம் கோடி ரூபாய்). வருடந்தோறும் மொத்தமாக அமெரிக்காவில் மக்களிடம் வரி வசூல் தொகை: 3600 பில்லியன் டாலர் (144 ஆயிரம் கோடி ரூபாய்கள்)

லெஹ்மன் பிரதர்ஸ் மட்டுமல்ல, இதற்கு முன்பு ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் கம்பெனிகள். அடுத்து அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் (ஏஐஜி). எல்லாமே நிதி நிறுவனங்கள். பழைய தமிழில் லேவாதேவிகள். வட்டிக் கடைக்காரர்கள்.லெஹ்மன் பிரதர்ஸ் அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதி நிறுவனம். இதற்குத் திரும்பி வராத கடன் மட்டும் 60 பில்லியன் டாலர். (240 கோடி ரூபாய்.) மெரில் லிஞ்ச் கம்பெனியின் கடன் 40 பில்லியன் (160 கோடி ரூபாய்).

இவர்களெல்லாம் முழுகும்போது கூடவே இவற்றில் முதலீடு செய்தவர்கள், இவர்களுடன் வர்த்தகம் செய்தவர்கள் எல்லாரும் சேர்ந்து தர்ம அடி வாங்குகிறார்கள். இந்தியாவில் சத்யம், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் முதலிய ஐ.டி கம்பெனிகளும், ஐசிஐசிஐ போன்ற வங்கிகளும் ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் அடி வாங்குகிறார்கள்.ஏன் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாகின்றன என்பதை விவரித்தால் பொருளாதார வகுப்பு நடத்துவது போலாகிவிடும்; ஏனென்றால் ஒரு நிறுவனம் கடன் கொடுக்கும்; அப்படி கடன் கொடுத்ததையே தன் முதலீடாகவோ சொத்தாகவோ காட்டி இன்னொரு கம்பெனியிடம் கடன் வாங்கும். இந்தக் கடன்களையே தன் பங்குகளாகக் காட்டி அவற்றை விற்க முற்படும். இப்படி இடியாப்ப சிக்கலாக நிறைய வழிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

எளிமைப்படுத்திச் சுருக்கமாக சொல்வதானால், கடனைத் திருப்பித் தர முடியாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்ததால் திவாலானார்கள். இவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்கும்போது திவால் நோட்டீஸ் கொடுத்தார்கள்.இப்படி அடுத்தடுத்து நிதி நிறுவனங்கள் திவாலாகும்போது அதை அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், தொடர் சங்கிலியாக, பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாகிவிடும். எனவே அரசு தலையிட்டுக் காப்பாற்றியாகவேண்டும் என்று புஷ் அரசு அவசர அவசரமாக பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.

இந்தியாவில் பண வீக்கம் ஏற்பட்டால், விலைவாசி உயர்ந்தால், உடனே மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் வழக்கமாக சொல்லும் சாக்கு _ இது உலகளாவிய பிரச்சினை. அதனால் நாமும் பாதிக்கப்படுகிறோம். உலகப் பொருளாதாரத்துடன் இந்தியப் பொருளாதாரம் இணைக்கப்பட்டுவிட்டதால் நாம் படுவேகமாக வளர்ந்து வருகிறோம். அதே போல பாதிப்புகளும் தவிர்க்க முடியாதவை என்பார்கள்.

ஆனால், இப்போது லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சி நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை என்றும் இதே பொருளாதார மேதைகள் சொல்கிறார்கள். ஏன் பாதிக்கவில்லை? நம்முடைய ரிசர்வ் வங்கியின் மூலம் நாம் பின்பற்றி வரும் கட்டுப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என்பதால், நமது வங்கிகளுக்கு, கம்பெனிகளுக்கு பெரும் பாதிப்பு இல்லையாம். அரசின் ரிசர்வ் வங்கி மூலம் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது என்பது நேரு காலத்துக் கோட்பாடுதான் !இதற்கு முன்பு இங்கேயும் நிதி நிறுவனங்களும் சீட்டு கம்பெனிகளும் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படாமல் இயங்கியபோது எப்படி திவாலாகி பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனவோ, அதே போல மிகப்பெரிய அளவில் இப்போது அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.அமெரிக்க திவாலுக்கு அடிப்படை என்ன - கடன் வாங்கியவர்கள் கடனை ஒழுங்காகத் திருப்பிக் கட்டவில்லை என்பதுதான்.



யார் இவர்கள்? ஏன் கடனைத் திருப்பிக் கட்டவில்லை? அல்லது கட்ட முடியவில்லை?அமெரிக்காதான் பூலோக சொர்க்கமாயிற்றே. அங்கே எல்லாருமே பணக்காரர்கள்தானே. கடனே வாங்கத் தேவையில்லாதவர்கள் என்றுதானே இங்கே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? சரி. அப்படியே வாங்கினாலும் திரும்பச் செலுத்தும் சக்தி இல்லாதவர்கள் கூட அங்கே உண்டா என்ன? அல்லது சக்தி இருந்தும் வேண்டுமென்றே திருப்பித் தராமல் மோசடி செய்கிறார்களா? என்னதான் நடக்கிறது பூலோக சொர்க்கத்தில்?

இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென்று வந்தது அல்ல. ஐந்தாறு வருடங்களாகவே மெல்ல மெல்ல முற்றி வருகிறது. அடிப்படைக் காரணம் - வீடு வாங்கக் கடன் கொடுக்கும் திட்டம்தான். ஹவுசிங் லோன்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்டன. கடன் தவணையை ஒழுங்காகக் கட்டாதவர்கள், கட்டமுடியாதவர்கள் எல்லாருக்கும் கொடுத்ததால், வட்டிக்கடைக்காரர்கள் மட்டும் திவாலாகவில்லை. கடனில் வீட்டை வாங்கி அதில் குடியிருந்தவர்கள், வாடகைக்கு இருந்தவர்கள் எல்லாரும் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்.

இன்றைக்கு அமெரிக்காவிலேயே அமெரிக்கர்கள் பலர் அகதிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும், ஊருக்கு வெளியில் கூடாரக் குடியிருப்புகள் முளைக்கின்றன. சென்னையில் கூவம் ஓரமாகவும், பெரிய சாலைகளில் நடைபாதைகளில் பெரிய மதில் சுவர்களின் ஓரமாகவும் குடிசை போட்டு வசிப்பவர்களைப் போல, அமெரிக்காவிலும் ஊருக்கு வெளியே திறந்த வெளிகளில் டென்ட் போட்டு வசிப்போர் இப்போது அதிகரித்து வருகிறார்கள். சொந்த ஊரிலேயே அகதிகளானவர்கள் இவர்கள்.இரு அறை கொண்ட ஒரு வீட்டுக்கான வாடகை சுமார் 1120 டாலர். வருமானம் 45 ஆயிரம் டாலராவது இருந்தால்தான் இந்த அளவுக்கு வாடகை தரமுடியும். ஆனால், பல நகரங்களில் ஒருவரின் சராசரி வருமானம் 30, 35 ஆயிரம் டாலர்தான்.தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. அப்படி ஜகத்தினை அழிக்கும்போது, அதில் இருக்கும் அமெரிக்காவை மட்டும் பாவம் அழிக்கக்கூடாது என்றார் ஒரு நண்பர். ஏன் என்றேன். அங்கேதான் உணவில்லாத தனி ஒருவன் கூடக் கிடையாதே என்றார் நண்பர்.

குறைந்தது மூன்று கோடி 50 லட்சம் பேர் தினசரி உணவு சரியாகக் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள் என்று அவருக்குச் சொன்னேன். இவர்களுக்கு உணவு தருவதற்காக பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கும் கணக்கின்படி வருடத்துக்கு 2 கோடி பவுண்ட் உணவுப் பொருட்களை நன்கொடையாகத் திரட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பணக்கார அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 96 கோடி பவுண்ட் உணவுப்பொருட்களை வீணடிக்கிறார்கள் என்றும் தொண்டு அமைப்புகள் வருத்தப்படுகின்றன.வாரத்துக்கு 40 மணி நேர வேலை. மணிக்கு 10 டாலர் சம்பளம் என்ற குறைந்தபட்ச ஊதியமும் வேலையும் கிடைக்காத அமெரிக்கர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கடினமாக இருக்கின்றன.அதனால்தான் இந்தியாவுக்கு ஒரு அணு உலையை விற்றால் 3 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்க அரசு கணக்கிடுகிறது. உலகத்தில் எங்கேயாவது யுத்தம், சண்டை நடந்துகொண்டே இருந்தால்தான், அமெரிக்கப் பொருளாதாரம் பிழைக்க முடியும். இரு தரப்புக்கும் ஆயுதம் விற்கலாம்.

சிங்களவர்களும் ஈழத்தமிழர்களும் சமரசத்துக்கு வந்துவிட்டால் இழப்பு அமெரிக்காவுக்குத்தான். இரு தரப்பினரும் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளும் நேசமாகிவிட்டால், பேரிழப்பு அமெரிக்காவுக்குத்தான்.உலகத்தில் வருடந்தோறும் விற்கப்படும் துப்பாக்கிகள், கிரெனேடுகள், ராக்கெட் ஏவுகணைகள் முதலியவற்றால் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் சாகிறார்கள். விற்பனைத்தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் !
அமெரிக்க நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவே திவாலானால் கூட உலகத்துக்கு ஒரு இழப்பும் இல்லை. உலகம் திவாலாக திவாலாக அமெரிக்காவுக்குத்தான் லாபம். அதனால்தான் உலகெங்கும் அரசியலிலும் மீடியாவிலும் தன் ஏஜெண்ட்டுகளை நட்டு வைத்திருக்கிறது. அந்த ஏஜெண்ட்டுகள் உச்சரித்துக் கொண்டிருக்கும் மந்திரங்கள்தான்: எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்.அந்த வரிசையில் புஷ் உருவாக்கியிருக்கும் புதிய மந்திரம்: ஒவ்வொரு தொழிலிலும் லாபம் வரும்போது அது தனியாருக்கு; நஷ்டம் வரும்போது அது அரசுக்கு..

இந்த வாரப் பூச்செண்டு

மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜனுக்கு. கூட்டணி முயற்சியில் விஜய்காந்த்தை சென்று சந்தித்துப் பேசியதற்காக இ.வா.பூ. (தமிழ்நாட்டிலும் மூன்றாவது அணி முயற்சியை கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொண்டிருப்பதற்காக.)



இந்த வாரக் குட்டு

காவல் துறையின் சி.பி.சி.ஐ.டி பிரிவுகள், பொருளாதாரக் குற்றப் புலனாய்வு, திரைப்படப் பைரசிப் புலனாய்வு, க்யூ பிரிவு, போதைப்பொருள் புலனாய்வு பிரிவு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் துறை ஆகியவற்றுக்குத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்திலிருந்து விலக்கு அளித்து மக்களை தகவல் அறியவிடாமல் தடுத்து உத்தரவு போட்டிருக்கும் தமிழக அரசுக்கு இ.வா.குட்டு.



இந்த வார உளறல்

நடிகர் வடிவேலுவுடையது. அவருக்கும் விஜய்காந்த்துக்கும் தனிப்பட்ட தகராறு வந்தால், அதற்காக இவரும் தேர்தலில் குதித்து அவருக்கு எதிரா போட்டி போட்டு நம்மையெல்லாம் வம்புக்கு இழுப்பாராம். அய்யா, எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?

குமுதம் + தினமலர் கார்ட்டூன்

Friday, September 26, 2008

தமிழநாடு முதலிடம்--- குமுதம் கார்ட்டூன்

Thursday, September 25, 2008

லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு--திமுக ஆதரவு சரிவு

சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுக்கே பொதுமக்களிடம் அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.


தமிழக அரசியலில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதிமுகவுக்கு ஆதரவு:

இதில், "தற்போது தேர்தல் வந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, 38.3 சதவீதம் பேர் அதிமுகவுக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு வாக்களிப்போம் என்று 25.8 சதவீதம் பேரும், மேற்படி இரு கட்சிகளுக்கும் மாற்றாக தேமுதிகவுக்கு வாக்களிப்போம் என்று 19.5சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது மிக முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது மின்வெட்டுதான். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருதியை ஏற்படுத்தியுள்ளது.வரும் தேர்தலில் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று தெரிகிறது.தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்திற்கு மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இல்லை. இந்த திட்டம் ஏழை மக்களுக்கு பயன்படும் என்று 22 சதவீதம் பேரும், இது தேவையில்லாதது என்று 52 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.எனினும், தமிழக அரசு அறிவித்த இலவசத் திட்டங்களுக்கு 84 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போதுள்ள எம்.பிக்கள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த எம்பிக்கள் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டோம் என 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.


அரசு துறை அதிகாரிகள் மிக மோசமாக செயல்படுவதாக 87 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



நடிகர்களின் கட்சிகளின் நிலை:

நடிகர்களின் கட்சிகளை பொருத்தவரை, விஜயகாந்தின் தேமுதிகவுக்கு ஆதரவு பெருகி வருவது தெரியவந்துள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என 43.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஓரிரு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 32.8 சதவீதம் பேரும், எந்த தாக்கமும் ஏற்படாது என்று 23.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என 14.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியவர்கள் 82.7 சதவீதம் பேர்.

தேர்தலில் விஜய டி.ராஜேந்தின் லட்சிய திமுக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று 94.7 சதவீதம் பேரும், கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியால் எந்த தாக்கமும் இருக்காது என 96.2 சதவீதம் கூறியுள்ளனர்.



ரஜினிக்கு ஆதரவு இல்லை:

இந்த கருத்து கணிப்பில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாமா என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்பவில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்த கேள்விக்கு, ரஜினி அரசியலுக்கு வரலாம் என்று கூறியவர்கள் 4.3 சதவீதம் மட்டுமே. நடிப்பில் மட்டுமே ரஜினி கவனம் செலுத்தினால் போதும் என 45.8 சதவீதம் பேரும், அவர் இனி ஓய்வெடுக்கலாம் என்று 32.5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். ஆன்மீகத்தில் அவர் ஈடுபடலாம் என 10.7 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

புலிகள் கவர்ந்து சென்ற பொருள் என்ன??? --ரிப்போர்ட்டர்

ஹாட் டாபிக்

எங்கிருந்து வந்தார்கள்? எப்படி ஊடுருவினார்கள்? தாக்குதல் நடத்தினார்கள்?'' - வவுனியா விமானப்படை தளம் மீது கடந்த 9-ம்தேதி புலிகள் நடத்திய அந்த அதிர்ச்சித் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு. இதுபற்றி விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏழு டிவிஷன் ராணுவத்தினர், ஒரு விசேஷ படைப்பிரிவு, கமாண்டோ பிரிகேட் போன்றவை உள்ள கட்டுக்காவல் நிறைந்த இடம்தான் வவுனியா ராணுவ முகாம். அந்தப் பக்கம் விமானப்படைத் தளம். அங்கே 2 பட்டாலியன் அணிகள், ஒரு விசேஷ படைப்பிரிவு. இந்த 2 தளங்களுக்கும் இடையில் ஒரே ஒரு தெரு. இவ்வளவு கட்டுக்காவல் உள்ள இடத்துக்குள்தான் புகுந்து இலங்கை ராணுவத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள் புலிகள்.

இந்தத் தாக்குதல் எப்படி நடந்தேறியது என புலிகளின் ஆவணக் காப்பகத் தலைமையகம் தற்போது தகவல் வெளியிட்டிருக்கிறது. அந்தத் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.முன்பு கட்டுநாயகா விமானதளம், அனுராதபுரம் விமானதளங்கள் மீது புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல் தொடுக்கக் காரணமாக இருந்தவர் கர்னல் சார்லஸ். புலிகளின் புலனாய்வுப் பிரிவு தளபதியான இவர், பள்ளமடுவில் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்து விட மகிழ்ச்சிக் கூத்தாடியது இலங்கை ராணுவம். அந்த நேரத்தில் சார்லஸ் இடத்துக்கு வந்தார் ரத்தினம் மாஸ்டர். `சார்லஸ் போனால் என்ன? நாங்கள் இருக்கிறோமே?' என்று உணர்த்த அவர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்தான் வவுனியா விமானதளம் மீது விழுந்த அந்த பேயறை!

வவுனியா விமானதளத்திலுள்ள இரண்டு ரேடார்கள் புலிகளுக்கு பலவகையிலும் இடைஞ்சலாக இருந்ததால், அவற்றைத் `தூக்க' முடிவு செய்தார் ரத்தினம் மாஸ்டர். அதற்காகப் புலிகளின் தலைமையிடம் பேசி ஒப்புதல் வாங்கினார். அதையடுத்து 5 ஆண் கரும்புலிகளும், 5 பெண் கரும்புலிகளுமாக பத்துப் பேர் அவரிடம் வந்து சேர்ந்தார்கள். ரகசிய இடத்தில் நடந்த ஓர் ஒத்திகைக்குப் பின் அந்த பத்துப் பேர் படை இலங்கை ராணுவச் சீருடையுடன் வவுனியாவின் வடக்குப் பகுதிக்கு ஊடுருவியது. நெடுங்கேணி வெடிவைத்த கல்லு வழியாக, மணலாறு வந்து, அங்குள்ள சிங்கள கிராமங்களைக் கடந்து ஆசிக்குளம், சமனங்குளம் காட்டுப்பகுதிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தது.

இன்னொருபுறம் `கிட்டு பீரங்கிப் படையணியின்' ஒரு பிரிவு, வவுனியா விமானதளம் மீது குண்டுமழை பொழிய வசதியாக, ஆர்டிலரி பீரங்கிகள் சகிதம் புளியங்குளம் பகுதியில் நிலைகொண்டிருந்தது. `ம்' என்றால் போதும், விமானதளத்தை நீண்டதொலைவில் இருந்தே பொரித்துவிடத் தயாராக இருந்தார்கள் அவர்கள்.

8-ம்தேதி நள்ளிரவு தாண்டி நிலா மறைந்த நேரம், ரத்தினம் மாஸ்டரின் உத்தரவு, வானலை வழியே மிதந்து வர, லெப். கர்னல் வினோதன், லெப். கர்னல் மதியழகி ஆகியோர் தலைமையில் தற்கொலைப்படையினர் பத்துப் பேரும் வவுனியா விமானதளத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். அவர்கள் கையில் டி-56, ஆர்.பி,ஜி., எம்.பி.எம்.ஜி., கிரனேட், ராக்கெட் லாஞ்சர்கள். கூடவே டொபி டோக், சார்ஜர் எனப்படும் தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி.

இவர்களுடன் புலிகளின் சிறப்பு உளவுப்பிரிவைச் சேர்ந்த வழிகாட்டிகள், கண்ணிவெடி கண்டுபிடிப்பவர்கள் என நான்கு பேர். போதாக்குறைக்கு புலிகளின் வீடியோ படப்பிடிப்பாளர்கள் வேறு இவர்களுடன் சென்று கடைசிவரை அந்தத் தாக்குதலைப் படம் பிடித்திருக்கிறார்கள்(!).
விமானநிலையத்தைச் சுற்றியிருந்த முட்கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இவர்கள் உட்புகுந்தனர். இன்னும் 200 மீட்டா் தூரம் கடந்தால் விமானதளம். அந்த நேரம் பார்த்து எதிரே வந்த ஓர் இலங்கை ராணுவ வீரன் புலிகளின் அன்றைய சங்கேத வார்த்தையைக் கேட்டிருக்கிறான். ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட ராணுவ விமானப்படை முகாம்களில் வெளியாள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக தினமும் ஒரு சங்கேத வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம்.
சங்கேத வார்த்தை தெரியாத நிலையில் புலிகள் அந்த சிங்கள வீரனுக்கு துப்பாக்கிமூலம் பதில் சொல்லிவிட, அதிகாலை 3.05 மணியளவில் திட்டமிட்டதற்கு முன்பாகவே ஆரம்பமாகி விட்டது சண்டை. வழிமறித்த ஒரு தடையரண் மீது ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தினர் புலிகள். மறுபுறம் கட்டுப்பாட்டு கோபுரத்தைக் குறி வைத்தும் ராக்கெட்டுகள் பறந்தன. சிங்கள ராணுவம் சுற்றி வளைத்த நிலையில், தடையரணைத் தகர்ப்பதும் கடினமென்ற நிலையில் நவீன `ஐகாம்' வயர்லஸ் மூலம் தகவல் தந்தனர் புலிகள். அடுத்தநிமிடம் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த ஷெல்கள் படைத்தளத்தை அதிர வைத்தன.

புளியங்குளத்தில் இருந்த கிட்டு பீரங்கிப்படை தந்த பரிசளிப்பு அது. அதில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் முடங்கிக்கொள்ள, சிங்கள ராணுவமும் பதுங்கிக் கொண்டது.

விமானப்படை தளத்தின் உள்ளே ஒரு பாறை மீதிருந்த ரேடார்களைக் குறிவைத்து முன்னேறினர் புலிகள். இன்னும் 75 மீட்டர் தூரம்தான். இந்தநேரத்தில் ரேடார் திரையில் ஒரு மர்மப்புள்ளி தெரிவதைக் கண்டு அதிர்ந்து போனார்கள் இலங்கை அதிகாரிகள். அது புலிகளின் விமானம்! உடனே கட்டுநாயகா விமானதளத்தில் இருந்த விங் கமாண்டர் சஞ்சயாவுக்குத் தகவல் பறந்தது. ஏர் வைஸ் மார்ஷல் ஷெரான் குணதிலகாவின் உத்தரவின்பேரில் `முதலை மூக்கு' எனப்படும் மிக்-27 விமானம், இரண்டு எப்-7 விமானங்கள் கட்டுநாயகாவிலிருந்து வவுனியாவை நோக்கி விரைந்தன. அப்போது அதிகாலை 3.34.

இதற்குள் 3.26-க்கு வந்த புலிகளின் முதல் விமானம் 3.31-க்கு 2 குண்டுகளை வீசியது. அடுத்த 2-வது நிமிடம் புலிகளின் 2-வது விமானமும் வந்து இரண்டு குண்டுகளை வீசிவிட்டுப் பறந்தது. பிறகு மீண்டும் வட்டமடித்து வந்து குண்டுவீசியது. புலிகளின் விமானங்கள் வீசிய மொத்த குண்டுகள் எட்டு. அந்த குண்டுகளில் ஒன்று விசேஷ படைப்பிரிவின் தளபதி கர்னல் நிர்மல் தர்மரத்னாவின் தங்குமிடம் அருகில் விழுந்தது. அன்று அவர் விடுமுறையில் போயிருந்ததால் தப்பினார்.தாக்குதல் முடிந்து புலிகளின் ஒரு விமானம் இரணைமடுவை நோக்கித் திரும்ப, மற்றொரு விமானம் புதுக்குடியிருப்பு நோக்கிப் பறக்கத் தொடங்கியது. அந்த விமானத்தை இலங்கை விமானப்படையின் எப்-7ஜி விமானம் ஒன்று, ஒன்றரை கி.மீ. தொலைவில் பின் தொடர்ந்தது. `சுட்டுவீழ்த்தவா?' என்று இலங்கை விமானி அனுமதி கேட்க, `சுடு!' என்ற அனுமதி தளபதியிடம் இருந்து வந்தது. இதன்பிறகு புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அது முள்ளியவளை காட்டுப் பகுதியில் விழுந்ததாகவும் பீற்றிக் கொண்டது இலங்கை விமானப்படை.

ஆனால் நடந்ததோ வேறு. இலங்கைப் போர் விமானம் நெருங்குவதை உணர்ந்து கொண்டதும் புலிகளின் விமானம் ஆகாயத்தில் ஓர் அந்தர்பல்டி அடித்து பலநூறு அடிகள் கீழே இறங்கி, பிறகு அதே வேகத்தில் வேறு திசையில் மேலெழுந்து `சுடுஎல்லையில்' இருந்து தப்பிவிட்டது என்பதே நிஜம் என்கிறார்கள் புலிகள்.

வவுனியா தாக்குதலில் இன்னும் சில மர்மங்களும் இருக்கின்றன. பிரபாகரனோடு சேர்ந்து படமெடுத்துக் கொண்டது பத்து கரும்புலிகள் மட்டும்தான். ஆனால் விமானப்படை தளத்தில் பதினோராவதாக ஒரு போராளியின் சடலம் ஒன்றை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள். அவர் யார்? இந்தக் கேள்வி ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்த, மறுபக்கம், சண்டை நடந்த இடத்திலிருந்து ஒரு பிஸ்டலின் 16 ரவைகளை எடுத்திருக்கிறது ராணுவம். அந்த பிஸ்டலைப் பயன்படுத்திய போராளி, தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதன்மூலம் புலிகளின் குறி வவுனியா படைத்தள ரேடார்கள் மட்டுமல்ல ஏதோ ஒரு முக்கிய ஆவணம் அல்லது பொருள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதை வெற்றிகரமாகக் கவர்ந்து கொண்டு புலிகளில் சிலர் தப்பிவிட்டதும் தெரிகிறது. புலிகள் கவர்ந்து சென்ற அந்தப் `பொருள்' என்ன? புலிகளின் அடுத்த தாக்குதலின் போது அது தெரிய வரலாம்.


நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

Tuesday, September 23, 2008

திமுக சாதனை---ராமதாஸ் IDEA -- குமுதம் கார்ட்டூன்

நன்றி குமுதம்.காம்

Monday, September 22, 2008

திமுகவின் போலி முகம்- ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளிடம்

பதினெட்டு ஆண்டு சிறைவாசம். அதிலும், தனிமைச் சிறைச்சாலை. அதனினும் கொடியதாக எந்தவித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம். சாவின் நிழலில்தான் வாழ்வையே நகர்த்த வேண்டும் என்ற துன்பத்தின் எல்லை. நான் மொழி, இனப் பற்றாளன். ஈழத் தமிழரின் நிலைகண்டு நொந்தவன். இதுவே, என்னைக் கொலைக்களத்தில் நிறுத்தப் போதுமான காரணங்களாக இருந்தன. நான் செய்த தவறுதான் என்ன?' -தண்டனைக் குறைப்பு வேண்டி தமிழக முதல்வருக்கு தூக்குத் தண்டனைக் கைதி பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்தான் இவை.


முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு பதினெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவரது கொடூர மரணத்திற்குக் காரணமானவர்கள் என்று சி.பி.ஐ.யால் சுட்டிக் காட்டப்பட்டவர்கள் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர். இவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் கைதிகள். மற்றவர்கள் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தூக்குத் தண்டனைக் கைதிகளில் சாந்தன், முருகன் ஆகிய இருவரும் இலங்கைத் தமிழர்கள். பேரறிவாளன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர்தான் ராஜிவ் படுகொலைக்குக் காரணமான `பெல்ட் பாம்' தயாரித்தவர் என சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்டவர். உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசின் கருணைப் பார்வைக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் பேரறிவாளன் உள்ளிட்ட கைதிகள். அதிலும், கடந்த 15-ம் தேதி நடந்து முடிந்த அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு தண்டனையைக் குறைக்கும் என்ற நம்பிக்கையோடு, பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் பல பகுதிகள் மிக உருக்கமாக எழுதப்பட்டிருந்தன.

ஆனால், அவரது தண்டனைக் குறைப்பு பற்றிய எந்தவித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. பேரறிவாளனின் நிறைவேறாத அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் இதோ...

`நிலையற்ற இவ்வுலகில் தனது இருத்தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் ஒரு மனிதனின் விண்ணப்பம். அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன். கொலையாளன் அல்ல. `தடா' சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கை விரித்து வந்த கயவர்கள் எம்மைக் கொலையாளியாக்கிய உண்மையை உணராதவர் அல்ல தாங்கள். எனக்கு கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர, அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் செய்த `பெரும் பிழைகள்'. கடைசி நம்பிக்கைத் துளிகளும் அற்றுப் போன மனிதனாக, மெல்ல மெல்ல சாவை நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனாக இதனை எழுதுகிறேன்.

`நெஞ்சுக்கு நீதி'யின் நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள், `இருபது ஆண்டுகள் சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால், வனப்பும், வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்துவிடுகிறது. ஆயுள் தண்டனையைவிட, மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்' என எழுதியுள்ளீர்கள். ஆம். உள்ளபடியே, பிழைபட்டுப் போன நீதியின் விளைவால், 18 ஆண்டு வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன். உண்மைக்கு `கருணை' வேண்டி நான் எழுதவில்லை. `கனிவு' வேண்டி எழுதுகிறேன்.

அய்யா.. `யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம்' என்கிறீர்கள். மகிழ்ந்து போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது, `ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களைக் கிழித்துவிடாதீர்கள்' எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். `மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்குக் கூடாது' என்றீர்கள். வியந்திருக்கிறேன்.

ஆனால், அய்யா... வேதனையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், பிறகேன் எமது தூக்கினை மாற்றத் தயங்குகிறீர்கள்? `நால்வரையும் தூக்கிலிடுவதில் எனக்கோ, எனது புதல்வர்களுக்கோ விருப்பமில்லை' என திருமதி சோனியா அம்மையார் கூறிய பின்னர், நளினியின் தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள். மகிழ்ச்சி. அதேநேரம், அவருக்கு தூக்கினைக் குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால், அதைவிட கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏனெனில், இதேநிலை முடிவற்று நீடிப்பதால் தொலைந்துபோகும் எனது வாழ்வைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. மாறாக, கடந்த 18 ஆண்டுகளாகவே தமது வாழ்வே என்னை மீட்பதுதான் என சலிக்காது போராடிவரும் எனது பெற்றோரின் முதுமை தரும் அச்சம்தான் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக எனது கடமையைச் செய்யத் தவறியிருந்தாலும், எனது நிலையால் அவர்கள் இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வு காண ஆசை கொள்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டிருந்தால், எனது பெற்றோர் தமது பேரப்பிள்ளைகளோடு இனிமையைக் கண்டிருப்பர். என்னைப் பற்றிய துன்பம் எனது பெற்றோரையும், உற்றாரையும் ஆட்கொண்டிருக்காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை. எனது பெற்றோருக்கு அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை.

பிரியங்கா, நளினி சந்திப்பு அதற்கான வாய்ப்பினைத் தந்துள்ளது. திரு தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்கள் எமது துன்பத்தை எதிரொலிப்பதாக உள்ளன. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடுதலை கிட்டவில்லையானால், இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை. வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ தற்போதே இறுதி செய்யப்பட்டாக வேண்டும். அல்லது இன, மொழிப் பற்றுக்காக குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என்று வரலாறு குறிக்கட்டும். முடிவுரை எழுதி புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு கடிதத்தை நிறைவு செய்கிறேன்' என ஏழு பக்கங்களுக்கு தனது கோரிக்கையைப் பதிவு செய்திருக்கிறார் பேரறிவாளன்.



நாம் இந்தக் கோரிக்கை கடிதம் பற்றி பேரறிவாளனின் தாய் அற்புதத்திடம் பேசினோம். "அண்ணா நூற்றாண்டு விழாவில் கட்டாயம் அறிவிப்பு வரும் என நம்பிக்கையோடு என் மகன் முதல்வருக்குக் கடிதம் எழுதினான். எதுவும் நடக்கவில்லை'' என குமுறலோடு பேசியவர், சிறிது இடைவெளிக்குப் பிறகு, "எங்களுக்கு ஒரு பையன். இரண்டு பெண் குழந்தைகள். அறிவு சிறைக்குப் போகும்போது, அவனுக்கு 19 வயசு. அவன் அக்காவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இப்போது பேரன் ப்ளஸ்டூ படிக்கிறான். பேத்தி ஒன்பதாவது படிக்கிறாள். கடந்தமுறை சிறையில் அவனைச் சந்தித்துப் பேசும்போது, `செப்டம்பர் 15_ம் தேதிக்குள் அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால், `தயவு செய்து என்னைத் தூக்கில் போடுங்கள்' என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நான் கடிதம் எழுதப் போகிறேன்' என என்னிடம் அழுதான்'' என்றபடியே அழ ஆரம்பித்துவிட்டார் அற்புதம்.

`இன்றில்லாவிட்டாலும், நாளை, நாளை மறுநாள்.. என்றாவது ஒருநாள் தன் மகனின் விடுதலை தீர்மானிக்கப்படும்' என்ற நம்பிக்கைதான் அற்புதத்தின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

லீலாவதி கொலைக்குற்றவளிகளை வெளியிடுவதில் காட்டிய அக்கறையை இந்த விசயத்தில் கொஞ்சமாவது காட்டுவார்களா?. முடியாது ஏனெனில் காங்கிரஸ் அதரவை வாபஸ் வாங்கிவிட்டால் திமுகவின் நிலை?.

Sunday, September 21, 2008

லக்கி லுக்- உண்மைத்தமிழன் -விடுதலைப்புலிகள்-தேமுதிக--கம்யூனிஸ்ட்

லக்கிலுக்

லக்கிலுக் நேற்று ஊனமுற்றோர் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் ஊனமுற்றோர்க்கு அரசு அதிகாரிகள் இன்முகத்துடன் உதவுவதாக எழுதியிருந்தார். இரு வருடங்களுக்கு முன்னால் சுய தொழில் தொடங்குவதற்காக கிண்டியில் உள்ள ஊனமுற்றோர் நல அமைப்பை அணுகினேன். அங்குள்ள அறிவிப்பு பலகையில் வங்கி கடன் வாங்கி தர உதவப்படும் என்பதை நம்பி அங்குள்ள அதிகாரியை அணுகினேன். நான் கேட்ட உதவிக்கு அவருடைய பார்வையிலே பதில் தந்துவிட்டார். ஏதோ ஜந்துவை பார்ப்பது போல் வங்கி கடன் நீங்கள்தான் உங்கள் சுய முயற்சியில் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று கறாரக கூறி வெளியே அனுப்பிவிட்டார். மிஞ்சி போனால் இரு நிமிடம்தான் என்னிடம் பேசினார்.அதற்கு மேல் அவருக்கு நேரமில்லை போலும்.இந்த மாதிரியான அரசு அதிகாரிகள் இருந்தால் ஊனமுற்றோர் நல அமைப்புகள் மிக நன்றாகவேம் செயல்படும்!!!!!!!!. அரசே பல கோடி ரூபாய் செலவழித்தாலும் அதன் பயன் சிறு அளவே. லக்கிலுக் சொன்னது போல் உள்ள அரசு அதிகாரிகள் மிகவும் அபூர்வம்.


உண்மைத்தமிழன்


உண்மைத்தமிழனின் ராமன் தேடிய சீதை விமர்சனம் கல்யாண விருந்தை ரசித்து ருசித்து சாப்பிடுவதுபோல் அருமையாக இருந்தது. படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.


விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள்---- ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்பது தமிழ்நாட்டுக்கட்சிகளுக்கு அல்வா சாப்பிடுவதுபோல். வேண்டும் என்றால் சாப்பிடுவார்கள் இல்லையென்றால் தூக்கி எறிவார்கள்.


திமுகவின் நிலை

தற்போது காங்கிரசுடன் கூட்டணி என்பதால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு. இது என்ன விந்தை???????????????. தன் வாரிசுக்கு மந்திரி பதவி வேண்டும் என்றால் நேரடியாக டெல்லிக்கு காவடி தூக்கும் இவர்கள், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றால் வெறும் கடிதத்தோடு நின்று விடுவார்கள்.



அதிமுகவின் நிலை

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு. விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள்? தமிழ்நாட்டில் குண்டு வைத்தார்களா? இல்லை நாச வேலைகளில் ஈடுபட்டார்களா?.அவர்கள் செய்த ஒரே தவறு ராஜீவ் காந்தி விசயம் மட்டும் தான்.


அதையும் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மன்னித்துவிட்டனர்!!!!.
 
 
விடுதலைப்புலிகள் விசயத்தில் தெளிவாக முடிவெடுத்து தங்கள் நிலையில் மாறாமல் இருப்பவர்கள் நெடுமாறன் அவர்களும், வைகோ அவர்களும் மட்டுமே. மற்றவர்கள் இவ்விசயத்தில் காட்டுவது தங்களுடைய போலி முகத்தை மட்டும்தான்.

Saturday, September 20, 2008

கம்யூனிஸ்ட்களின் முகத்திரை--கேலிச்சித்திரம்

நன்றி குமுதம்.காம்

Friday, September 19, 2008

குமுதம் நச் கார்ட்டூன் 2

இந்த வாரம் ஞாநியின் பார்வையில்

கலைஞர் கருணாநிதியின் பெயரில் இருக்கும் கலை அவரிடம் இருக்கிறது; நிதி இருக்கிறது; கருணை?


அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே கையெழுத்தில் 1405 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தவர், கருணை இல்லாதவராக இருக்க முடியுமா?

ஆயுள் கைதிக்கு அறுபது வயதாகியிருந்தால் 5 வருடம் சிறைவாசமே போதுமானது. விடுதலை செய்யுங்கள்; அறுபதுக்குக் கீழே வயதா? 7 வருடம் சிறையில் இருந்திருந்தாலே போதும். விடுவியுங்கள்' என்று ஆயிரக் கணக்கானவர்களுக்குக் காட்டிய கருணையை ஏன் ஒரே ஒருவருக்கு மட்டும் காட்ட மறுக்கிறார்? அதுவும் 17 வருடங்களாகச் சிறையில் இருந்து வரும் நளினிக்கு?

ஆயுள் தண்டனை என்பது கொலைக் குற்றம் தொடர்பாக மட்டுமே தரப்படுவது. இந்த தண்டனை பெற்ற ஒரு கைதியை தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்க வேண்டுமானால், அதற்கான அதிகாரம் மாநில அரசிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் சட்டப்பிரிவுகள் இரு வகைப்பட்டவை.
அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலை அளிக்கலாம். குற்றவியல் சட்டம் எனப்படும் கிரி மினல் ப்ரொசீஜர் கோடின் 432, 433-ம் பிரிவுகளின் கீழும் செய்யலாம்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுவிப்பதில் பல நிபந்தனைகள் உள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவரானால், அவர் குறைந்தபட்சம் 14 வருடமாவது சிறையில் இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் போதைப் பொருள் தடுப்பு போன்ற சட்டங்கள் தொடர்பான குற்றம் செய்திருந்தால், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளின் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால், மத்திய அரசை ஆலோசிக்காமல் விடுவிக்கக் கூடாது என்பது இன்னொரு நிபந்தனை.

இந்த நிபந்தனைகளின்படி இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் 1405 கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்கவே முடியாது. அதனால்தான் குற்றவியல் சட்டத்தின் கீழ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்காமல், அதைவிட பெரிய சட்டமான அரசியல் சட்டத்தின் 161-ம் பிரிவின் கீழ் தனக்கு இருக்கும் தடையற்ற அதிகாரத்தின் கீழ் 1405 கைதிகளையும் தமிழக அரசு விடுவித்திருக்கிறது.

ஆனால் நளினியை மட்டும் விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. ஏன்? எந்த விதி அவருக்கு எதிராக இருக்கிறது? குற்றவியல் சட்டத்தின் நிபந்தனைகளின்படி மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதால் குறைந்தபட்சம் 14 வருடம் சிறையில் இருந்திருக்க வேண்டும். நளினி 17 வருடம் இருந்துவிட்டார்.

அவர் மீது வழக்குத் தொடுத்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இருக்கும் சி.பி.ஐ என்பதால், விடுதலை பற்றி மத்திய அரசை ஆலோசிக்க வேண்டும் என்பது இன்னொரு தேவை. ஆனால் இதுவரை தமிழக அரசு நளினியை விடுவிக்கலாமா என்பது பற்றி மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கவும் இல்லை. மத்திய அரசும் எந்த ஆலோசனையும் தரவும் இல்லை.

17 வருடங்கள் சிறையில் இருந்தபின்னர் இனியேனும் தன் மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காகத் தன்னை விடுவிக்கும்படி கோரிய நளினியின் மனுவை, பரிந்துரைக் குழு நிராகரித்தது. இந்தக் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்படுவது அல்ல. கருணாநிதியின் மாநில அரசு அமைக்கும் குழுதான். சிறையில் நன்னடத்தை உடையவர்கள் என்று இந்தக் குழு ஏற்றுக் கொள்ளும் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய ஆயுள் கைதிகளின் விடுதலை மனுவையும் குழு நிராகரித்துவிட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இன்னமும் போர் நடந்துகொண்டிருப்பதால் நளினியையும் இவர்களையும் விடுவிக்க முடியாது என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே தர்க்கப்படி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்த தி.மு.க ரவுடிகளையும் இப்போது விடுவித்திருக்கக்கூடாதே. தி.மு.க- மார்க்சிஸ்ட் கட்சிகளின் அரசியல் பகையால் அந்தக் கொலை நடந்தது என்றால், இப்போதும் இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டு பகைமையுடன் இருப்பதாகச் சொல்லலாமே. இன்னும் உயிரோடு இருக்கும் லீலாவதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து இருப்பதாக வாதிடமுடியுமே. இப்படிப்பட்ட வாதங்களை விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களும் முன்வைக்க முடியுமே.

நீதிமன்றத்தின் முன்பு தமிழக அரசு சொல்லும் காரணங்களில் ஒன்று, சிறையில் நான்கு முறை நளினி செய்த `குற்றங்கள்'. என்ன குற்றம் அது? இலங்கையில் இருக்கும் தன் மகள் தன்னைக் காண வருவதற்கு விசா மறுக்கப்படுவதை எதிர்த்து இருமுறை உண்ணாவிரதம் இருந்தார். இது இரண்டு குற்றங்கள். பின்னர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று விசா பெறப்பட்டது.

விதிகளின்படி தன்னை சந்தித்துப் பேச இன்னொரு தண்டனைக் கைதியான கணவர் முருகன் ஒருமுறை வந்தபோது, அவருடன் நளினி வாக்குவாதம் செய்து சண்டை போட்டார். இது குற்றம் எண் 3!
கருணாநிதியுடன் அவர் மனைவியோ துணைவியோ இது வரை வாக்குவாதம் செய்திருக்க மாட்டார்களா என்ன? இதையெல்லாம் ஒரு குற்றம் என்று சொல்லுவது நளினியை விடுதலை செய்யாமல் தடுக்கக் கண்டுபிடிக்கப்படும் சாக்குகளே தவிர வேறென்ன?

இதர சிறைக் கைதிகளை கலவரம் செய்யத் தூண்டினார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. எப்போது, எதற்கு, என்ன என்று எந்த சாட்சியமோ ஆதாரமோ அளிக்கப்படாத குற்றச்சாட்டு இது!

நளினியின் வழக்கைப் பொறுத்தமட்டில் அவரை ராஜீவைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவராகப் பார்க்கமுடியாது என்பதை உச்ச நீதிமன்ற மூவர் பெஞ்ச்சில் ஒருவரான நீதிபதி தாமஸ் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். கொலை செய்யப்போகிறார்கள், இன்னாரைக் கொலை செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் எதுவும் தெரியாமல் கொலைகார சதியாளர்களுக்கு உதவி செய்தவராகவும், கடைசி நிமிடத்தில் தெரிந்தபின்னரும் கூட கொலையைத் தடுக்கவோ, தப்பித்துச் செல்லவோ வழியற்றவராகவுமே அவரை தாமஸ் கருதுகிறார்.
இந்தச் சூழலில், இன்னாரைக் கொல்லுவது என்று முடிவு செய்து கொடூரமாக அரிவாள், குண்டுகளுடன் சென்று கொன்று குவித்த கூலிப்படையினரெல்லாம் ஏழு வருட சிறைவாசத்திலேயே அண்ணா பெயரால் மன்னிக்கப்படும்போது, நளினிக்கு மட்டும் வேறு நீதியை கருணாநிதி காட்டுவது ஏன்?
நளினியை விடுவிக்க மறுப்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்கள் எல்லாமே அர்த்தமற்றவை.

இந்த வாதங்களிலேயே உச்சமான அபத்தம் என்பது தமிழக அரசு நீதிமன்றத்தில் சொல்லியிருப்பதுதான் - ஆயுள் தண்டனை என்றால் ஆயுளுக்கும் தண்டனைதான். சாகும்வரை சிறையில் இருக்க வேண்டுமாம். 10, 14 ஆண்டு என்றெல்லாம் எதுவும் கிடையாதாம். இதை நளினி வழக்கில் சொல்லிவிட்டு அடுத்த வாரமே 1405 பேரை 5, 7 வருட தண்டனையோடு விடுவித்திருக்கிறது!

தமிழக வரலாற்றிலேயே கண்டிராத ஒரு புதுமையான நிகழ்வாக, தமிழகத்தின் பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனுவாகும். கவிஞர் தாமரையும் கவிஞர் கிருஷாங்கினியும் பா.செயப்பிரகாசமும் நெய்வேலி பாலுவும் இந்த அதிசயத்தை சாத்தியப்படுத்தினார்கள்.
தங்களுக்குள் கடும் முரண்பாடுகள் இருக்கக்கூடிய பல எழுத்தாளர்கள் - அசோகமித்திரன் முதல் அ.மார்க்ஸ் வரை, புஷ்பா தங்கதுரை முதல் நாஞ்சில் நாடன் வரை, சாரு நிவேதிதா முதல் பூமணி வரை, அம்பை முதல் இந்துமதி வரை, சுஜாதா முதல் தங்கர்பச்சான் வரை, ந.முத்துசாமி முதல் பெரியார்தாசன் வரை, வசந்தி தேவி முதல் சாலமன் பாப்பையா வரை, திருமாவளவன் முதல் தமிழருவி மணியன் வரை, வாலி முதல் ஞாநி வரை ஏறத்தாழ தமிழகத்தின் அத்தனை முக்கியமான பொது வாழ்க்கை மனிதர்களும் இந்த மனுவில் கையெழுத்திட்டார்கள்.

நளினியை விடுவித்தால், தமிழக அரசியலில் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தி.மு.க.வின் எதிர்காலக் கனவுகளைத் தரைமட்டமாக்கிவிடுவாரா? எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நின்று தன் மகளுடன் ஒரு அமைதியான வாழ்க்கையை எஞ்சிய காலத்தில் வாழும் கனவைத் தவிர அவருக்கு வேறென்ன இனி மீதியிருக்கிறது?

அதை கருணாநிதி மறுப்பது ஏன்? முழுக்க முழுக்க அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட இந்த முடிவை எடுக்க அவர் தயங்குவது ஏன்? கனிமொழியின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற எந்த தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் பாசமுள்ள தந்தையான அவர் ஏன் கனிமொழியும் கையெழுத்திட்டிருக்கும் இந்த மனுவை மட்டும் புறக்கணிக்கிறார்?அவரை பயப்படுத்துவது எது? யார்? நிச்சயம் சோனியா காந்தியாக இருக்க முடியாது. தன் கணவர் ராஜீவ் கொலைக்கு உடந்தையாக இருத்த நளினியின் சட்டபூர்வமான சாவைத் தடுத்து நிறுத்தியவர் சோனியா. நேரில் சந்தித்து மன்னித்தவர் சோனியாவின் மகள் பிரியங்கா. 1405 பேருடன் நளினியையும் கருணாநிதி விடுவித்திருந்தால், சோனியாவும் பிரியங்கவும் நிச்சயம் எதிர்த்திருக்கப் போவதில்லை.

அப்படியானால், கருணாநிதியைத் தடுப்பது எது? யார்? ஏன்?

1405 கைதிகள் விடுதலை பற்றி ஒரு நிருபர், பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் கருணாநிதியிடம் கேட்கிறார்: ``இந்த விடுதலையை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தலைமை நீதிபதியை சந்தித்து வழக்கு தொடுக்கப்போவதாக செய்தி வந்திருக்கிறதே?''

கலைஞர் பதில் : ``கருணை உள்ளத்தோடு நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்? ஏழு ஆண்டுகள் சிறையிலே இருந்தவர்களையெல்லாம் விடுவிப்பது சரியா, தவறா?''

கலைஞர் அவர்களே, கருணை உள்ளத்தோடு நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்? ஏழாண்டுகள் அல்ல, 17 ஆண்டுகள் சிறையில் இருந்தவரை விடுவியுங்கள் என்று தமிழகத்தின் பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் உங்களிடம் மனு கொடுத்தது சரியா? தவறா?

நன்றி. குமுதம்
 
 
கொஞ்சம் பின்னூட்டம் இடுங்கள்.

மாறன் பிரதஸின் புதிய பாதை

சுவாமி, தேனியில் ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தையும் பேச்சையும் `லைவ்'வாக சன் நியூஸ் சேனலில் பார்த்தீர்களா, இல்லையா?''


``சேனலை மாற்றிக் கொண்டிருந்தபோது தற்செயலாகத்தான் பார்த்தேன். நேரடி ஒளிபரப்பு. நம்பவே முடியவில்லை. ஏன் இந்த மாற்றம்? என்ன பின்னணியாம்?''

``விரிவாகவே சொல்கிறேன்... அறிவாலயத்தில் சன் டி.வி. இருந்தபோது, தமிழகத்தில் எந்த இடத்திலிருந்தும் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்காக 14 ஓ.பி. வேன்கள் வாங்கியிருந்தனர். இடமாற்றத்தின்போது இவையனைத்தும் மாவட்ட நிருபர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், குறிப்பிடும்படியாக எந்த ஒளிபரப்பும் இல்லை. உள்ளபடியே ஜெயலலிதாவின் தேனி கூட்டத்தை ஜெயா டி.வி.தான் நேரடியாக ஒளிபரப்பவுள்ளதாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். திடீரென்றுதான் `நாம் ஒளிபரப்பினால் என்ன?' என்ற யோசனை சன் நெட்வொர்க்கில் உதித்ததாம். உபயம் முரசொலி செல்வம்தானாம். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டு, உரிய வகையில் ஒப்புதல் பெற்றார்களாம்.''

``இது ஜெயலிதாவுக்குத் தெரியுமா?''

``அவருக்குத் தெரியாமல் அங்கே அணுவும் அசையுமா? ஆக, கலைஞரை வாங்கு வாங்கென வாங்கிய ஜெயலலிதாவின் உரை, சன் நியூஸ் உதவியுடன் உடனுக்குடன் ஒளிபரப்பானது. இரவே இது மிகப் பெரிய சர்ச்சையாக மாறிவிட்டிருக்கிறது. உடனடியாக, இதை ஈடு செய்யும் வகையில் திங்கள்கிழமை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைக் கலைஞர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும் சன் நியூஸ் நேரடியாக ஒளிபரப்பியது.''

``எதனால் இப்படியெல்லாம் நடக்கிறதாம் பெண்ணே?''

``இதுபற்றி விசாரித்தபோது, நாங்கள் தொழிலைத் தொழிலாக நடத்துகிறோம். எங்களுக்கு கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ எல்லாரும் ஒன்றுதான். சென்னையில் நடைபெறவுள்ள தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை ஒளிபரப்புவது பற்றிக்கூட பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல எதிர்க்கட்சிக்குரிய வகையில் செயல்படுவோம் என்று கூறுகிறதாம் சன் நெட்வொர்க் வட்டாரம்.''

``அப்புறம் ஏன் மதுரையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட வைகோவின் பேச்சு திடீரென்று நிறுத்தப்பட்டதாம்?''

``அது மிகவும் கடுமையாக இருந்த நிலையில், இந்த அளவுக்கு தி.மு.க.வை எதிர்க்க வேண்டுமா என்கிற தடுமாற்றம் வந்துவிட்டதாம். அதனால்தான் பாதியில் நிறுத்தப்பட்டதாம்.''

``இதனிடையே, தி.மு.க.விலிருந்து தயாநிதிமாறன் நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி பரவியதே?''

``ஆமாம் சுவாமி. `லைவ்' ஒளிபரப்பு `கட்'டான சிறிது நேரத்தில் தான் இந்த வதந்தி. எனினும் பின்னர் `இல்லை' என்று உறுதியானது. ஆனாலும் இதுபற்றிய சர்ச்சை தொடரும் என்றுதான் நினைக்கிறேன்...''

``ஆக, ஒரு புதிய பாதையில்தான் மாறன் பிரதர்ஸ் பயணிக்கிறார்களா?''

``ஆமாம். மேலும், அரசின் அலட்சியம், செயல்படாத் தன்மை, ஊழல் போன்ற செய்திகளைத் தருவதற்காக அவர்களுடைய நாளிதழில் தனி டீமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறதாம். சன் நெட்வொர்க்கிலும் இவ்வாறு உருவாக்கப்படுகிறதாம். வலுவான செய்தி தருவோருக்கு பரிசெல்லாம்கூட உண்டாம்.

``கலைஞர் மிகுந்த கோபத்தில் இருப்பாரே?''

``அப்படித்தான் சொல்கிறார்கள். அந்தத் தொலைக்காட்சியிலுள்ள மன்னரான நபர் மீதுதான் கலைஞருக்குக் கடுங்கோபமாம். ஏற்கெனவே, பத்தாண்டுகளுக்கு முன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கட்சித் தலைமை அலுவலகத்துக்கு ஜெயலலிதா வந்ததை விலாவாரியாக ஒளிபரப்பியதற்காக இவரைக் கலைஞர் கடிந்துகொண்டிருக்கிறாராம். தேர்தல் நேரத்தில் ராமதாஸ் செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கடிந்திருக்கிறாராம். உறவு சுமுகமாக இருந்தபோதே நிலைமை அவ்வாறெனில், இப்போது கேட்கவா வேண்டும்?''


``ஏற்கெனவே, இவர்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டிருந்ததே?'இதுதொடர்பாக, சன் டி.வி. நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக ஆசிரியர் என்ற முறையில் முரசொலி செல்வம் எழுதிய விளக்கக் கடிதமொன்றை காவல்துறையினரிடம் திங்கள்கிழமை அவர் சார்பில் வந்த சுமார் 30 வழக்கறிஞர்கள் ஒப்படைத்திருக்கின்றனர். இதனிடையே, இந்தப் பிரச்னைகள் பற்றியெல்லாம் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா மூலமாக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிவிக்கப்பட்டு, தொழில்ரீதியிலான உதவிகளைத் தவிர்க்குமாறு தி.மு.க. தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாம்.''

``என்ன சொன்னார்களாம்?''

`சோனியாவே முதல்வரிடம் பேசி, `உங்களை மீறி எதுவும் நடைபெறாது' என்று உறுதியளித்திருக்கிறாராம். இவற்றுக்கு நடுவே மற்றொன்றையும் தெரிந்துகொள்ளுங்கள். கலைஞர் டி.வி.யிலும் நேரடி ஒளிபரப்புக்கான ஓ.பி. வேன்கள் வாங்குவது பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்களாம்

நன்றி குமுத்ம் ரிப்போர்ட்டர்
 
இதே மாதிரி சன் நெட்வொர்க் நடுனிலையோடு செயல்பட்டால் கலைஞர் இனி அரசு டி.டி.எச்ஆரம்பித்து பொதுமக்களுக்கு சேவை செய்வார். மற்ற சேவையெல்லாவற்றையும் மறந்து விடுவார்

Tuesday, September 16, 2008

தி.மு.க. விலிருந்து மாறன் நீக்கம்?

திமுகவில் இருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதை அடுத்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு விரைவில் கூடி முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.


. முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கும், சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்குமிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, முதலமைச்சர் கருணாநிதியையும், அவரது குடும் பத்தினரையும் சமாதானப்படுத்த மாறன் சகோதரர்கள் முயன்றனர்.

கருணாநிதி குடும்பத்தில் அவரது மகள் செல்வி, அவரது கணவர் செல்வம், மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்த சமரசத்துக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், மு.க. அழகிரி பிடிவாதமாக இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, மாறன் சகோதரர்களின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.

கருணாநிதி குடும்பத்தினருடன் இனி ஒட்டமுடியாது என்ற நிலைமை ஏற்பட்ட பின்னர், மாறன் சகோதரர் களின் சன் டிவியில் திமுக அரசுக்கு எதிரான செய்திகள் அதிகம் இடம் பெற தொடங்கின.

மேலும் ஒரு காலத்தில் சன் டிவி ஓரங்கட்டி வைத்திருந்த வைகோ, விஜயகாந்த், சரத்குமார் போன்ற தலைவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப்படுகிறது.

அந்த தலைவர்களும் சன் டிவிக்கும், அழகிரிக்கும் இடையே நடக்கும் கேபிள் யுத்தத்தில் சன் டிவிக்கு ஆதரவாக அறிக்கைகள் கொடுத்து வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கைகள் தலைப்பு செய்திகளாக இடம் பெற்று வருகின்றன.

அதிமுகவின் ஜெயா டிவியை விட சன் டிவி அரசுக்கு எதிரான பிரச்சாரத் தை மேற் கொண்டிருப்பதால் ஆவேச மடைந்த திமுகவினர் தயாநிதி மாறனை விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். எனினும் கட்சி தலைமை இதுபற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தேனியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தை சன் டிவி நேரடியாக ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயா டிவியே அவரது பேச்சை நேரடியாக ஒளிபரப்பாத போது, ஒருகாலத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த சன் டிவி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் பேச்சில் கருணாநிதியின் குடும்பத்தினர் சிலரது பெயர்களை அவர் குறிப்பிட்ட போது அதனுடைய ஆடியோ தடை ஏற்பட்டது. அதே போல மாறன் சகோதரர்களை பற்றி அவர் சாட்டிய குற்றச்சாட்டுகளும் பேச்சில் இருந்து நீக்கப்பட்டன. எனினும் கருணாநிதியின் அரசு மீது ஜெயலலிதா தொடுத்த சரமாரியான குற்றச்சாட்டுகளை ஒன்றுவிடாமல் சன் டிவி ஒளிபரப்பியது.

திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நேற்று மாலை மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதையும் நேரடியாக சன் டிவி ஒளிபரப்பியது.

இடையில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தையும் அந்த டிவி ஒளிபரப்பியது.

இதுபற்றி விசாரித்தபோது அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களின் பேச்சுக்களையும் இனி ஒளிபரப்ப சன் டிவி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல, தினமலர் நிர்வாகம் தொடர் பான வழக்கில் கருணாநிதியின் மருமகன் செல்வம், சன்டிவியின் சார்பில் தாக்கல் செய்த பதிலும் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

சன் டிவி நடுநிலையாக செயல்படுவதாக கூறி கொண்ட போதிலும், அரசுக்கு எதிராகவே அது செயல்பட்டு வருவதாக சொல்லி தயாநிதி மாறனை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுகவினர் தலைமையை வற்புறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தயாநிதி மாறன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக நேற்று செய்திகள் பரவின. ஆனால் அந்த செய்திகள் வெறும் வதந்தி என பின்னர் தெரியவந்தது.

சன் டிவிக்கு எதிராக திமுகவினர் கடும் கோபத்தில் இருப்பதால், அவர் நீக்கப்படுவது உறுதி என தெரிகிறது. எனினும் எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவெடுக்காமல், விரைவில் கட்சியின் உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தை கூட்டி விவாதித்து இதுபற்றி முடிவெடுக்கப்படும் என நெருங்கிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி மாலைச்சுடர்

ஆர்.சி.வி--- எஸ்.சி.வி கேபிள் யுத்தம்

தி.மு.க பின்ணனியுடன் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.சி.வி 9 வருடங்களாக தனது ஆதிக்கத்தில் கொடி கட்டி பறந்தது.தினகரன் நிகழ்வுக்குப்பின் அதே தி.மு.க மூலம் எஸ்.சி.விக்கு ஆரம்பமாகியது தலைவலி.எஸ்.சி.வி-யை பற்றி பொய்யான தகவல்கள் ஆளும் கட்சியின் மீடியா மூலம் பரப்பப்பட்டது.உண்மையில் எஸ்.சி.வி நிருவனம் தமிழ் நாட்டில் 6 இடங்களில் செயல்படுகிறது. என்னவோ தமிழ் நாடு முழுவதும் உள்ள கேபிள் நிறுவனங்கள் எஸ்.சி.வி -யின் கட்டுப்பாட்டில் உள்ளது போன்ற பொய்யான தகவல் ஆளும் கட்சி மூலம் பரப்பப்பட்டது. சன் நெட்வொர்க்கிற்கு நெருக்கடி கொடுப்பத்ற்காகவே அரசு கேபிளும், ஆர்.சி .வியும் தொடங்கப்பட்டன. வேறு எந்த மக்கள் நலனும் இதில் கிடையாது. முழுக்க முழுக்க இவ்விசயத்தில் அரசியல் ஆதிக்கம் தாண்டவமாடுகிறது. இதில் முழுவதும் பாதிக்கப்படுவது கேபிள் ஆப்பரேட்டர்கள். ஆளும் கட்சியின் தொலைக்காட்சி ரேட்டிங்கில் இல்லாததும் ஒரு காரணம்.




தினகரன் நிகழ்வுக்குப்பின் சன் நெட்வொர்க் தனது நிலையை நடுநிலைமையாக காட்டிக் கொண்டது ஆளும் கட்சியின் கோபத்தை அதிகரித்தது. இதன் காரணமாகவே ஆர்.சி .வி மதுரையில் தொடங்கப்பட்டது.இதே போல் சென்னையில் தி.மு.க ஆதரவுடன் ஹாத்வே எஸ்.சி.விக்கு நெருக்கடி கொடுக்கிறது.



மொத்ததில் சன் நெட்வொர்க்கிற்கு நெருக்கடி என்ற பெயரில் அனைத்து மீடியாக்களையும் சன்னிற்கு எதிராக வைப்பதே ஆளும் கட்சியின் தற்போதைய முக்கியமான வேலை.

இவர்களின் மோதலில் அதிக லாபம் அடைந்தது சன் டைரக்ட் எனும் DTH.

லக்கி லுக்-- சன் டிவி VS கலைஞர் டிவி

கலைஞர் டிவி தொடங்கிய நாளில் இருந்து சன் நெட்வொர்க்கை பற்றிய தேவையில்லாத பல வதந்திகள் ப்ரப்படுகின்றன. சன் நெட்வொர்க் தனது ரேட்டிங்கை இழந்துவிட்டது,கலைஞர் தான் முதலில் ஏகப்பட்ட ரூமர்.




உண்மையில் சன் தொலைக்காட்சிக்கு சரியான போட்டி கலஞர் டிவி தான் என்பதை ம்றுப்பதற்கில்லை. ஆனால் கலைஞர் டிவி எப்படி இந்த போட்டியை சமாளிக்கிறது , ஒன்னெ ஒன்னுதான் ஆட்சி அதிகாரம். இது சன்னிடம் கிடையாது. புதுப்படங்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதை விட அதிகாரத்தை பயன்படுத்தி வாங்குகிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.



மதுரையில் ஆர்.சி.வி சன் டிவியை திருட்டுதனமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.டிராய் இடம் தனது சிக்னலை ஆர்.சி.வி க்கு கொடுப்பதாக உறுதியளித்தும் ஆர்.சி.வி உரிய தொகையை கட்டாமல் இழுத்தடிக்கிறது. போலீசில் புகார் கொடுத்தால் வாங்கமாட்டார்கள்.

எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.



தினசரி கே டிவியில் போடப்படும் சினிமாக்களை உரிமம் இல்லாமல் ஒளிபரப்புகிறது ஆர்.சி.வி. இதையும் யாரும் கேட்க முடியாது.மொத்ததில் எதேச்சதிகாரம் மூலம் இன்றைக்கு ஜெயிக்கிற மாதிரி தெரியும். இது நிரந்தமல்ல.

சன் டிவியை மட்டும் குறை சொல்லி எழுதாதீர்கள்.







உண்மையையும் கொஞ்சமாவது எழுதுங்கள்.

Sunday, September 14, 2008

தமிழகத்தின் உண்மை நிலை உலக வங்கியின் அறிக்கை

ஏழைகளுக்கு கிலோ அரிசி ரூபாய் ஒன்று.


இப்ப்டி வரிசையாக சலுகைகளை அறிவித்து

தமிழ் நாட்டில் எல்லோரும் வசதியாக இருக்கிறார்கள்

என்பது ஆட்சியில் இருப்பவர்களின் கூச்சல்.

குமுதம் ரிப்போர்ட்டரில் உலக வங்கி

சொன்னதை படிப்பார்களா ? இந்த அரசியல்வாதிகள்.
 
தமிழ்நாட்டில் ஏதோ பாலும், தேனும் ஓடுவதுபோல ஒரு நினைப்பில் நாம் இருக்கும் நிலையில் `தமிழகம் ஒரு பஞ்சைப் பராரி மாநிலம்' என்ற தகவலை வெளியிட்டு ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது உலக வங்கி.




உலக வங்கியால் எடுக்கப்பட்ட வறுமை குறித்த புள்ளிவிவரம், இந்திய அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள் என அதில் கூறியிருப்பது எதிர்காலம் குறித்த அச்சத்தை சாமானியர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.



இது தொடர்பாக நாம் கல்பாக்கம் மருத்துவர் டாக்டர் வீ.புகழேந்தியைச் சந்தித்தபோது இதுபற்றி புதுப்புதுத் தகவல்களைப் புட்டுப்புட்டு வைத்தார் அவர். குறிப்பாக, ``தமிழகத்தில் இரண்டு பேரில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழை. இங்கே அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் முழுமையாக மக்களைச் சென்று சேராததுதான் தமிழகத்தில் ஏழைகள் பெருக்கெடுக்கக் காரணம். தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் நாற்பதாயிரம் குழந்தைகள் சத்துக்குறைவால் இறக்கின்றன'' என்று உலக வங்கி சர்வே தகவல்களை முத்தாய்ப்பாகக் கூறிவிட்டுத் தொடர்ந்தார் அவர்.



``இந்தியர்களில் 82 கோடியே எண்பது லட்சம் பேரின் (அதாவது 75.6 சதவிகிதம் பேரின்) தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. நமது மக்கள் தொகையில் 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இவர்களது தினசரி வருமானம் ரூபாய் ஐம்பதுக்கும் கீழேதான்.



80_90_ம் ஆண்டுவரை வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மளமளவெனக் குறைந்து வந்தது. 1991_முதல் 2005 ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் `புதிய பொருளாதாரக் கொள்கைகள்' அறிவிக்கப்பட்ட பிறகுதான் வறுமை ஒழிப்பின் வேகம் குறைந்து போனது. முன்பெல்லாம், ஒருவர் நாளொன்றுக்கு 44 ரூபாய்க்குக் குறைவாகச் சம்பளம் வாங்கினால் அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார் என்றார்கள். இப்போது 55 ரூபாய் சம்பளம் வாங்கினால்தான் வறுமைக்கோடு என்கின்றனர். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் இரண்டு பேருக்கு ஒருவர் பரம ஏழையாக இருக்கிறார் என சர்வே விவரம் தெரிவிக்கிறது.



வறுமை காரணமாக தமிழகத்தில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வசதிகள் கூட கிடைப்பதில்லை. ஆனால், கட்சி வித்தியாசம் இல்லாமல், எல்லா அரசியல்வாதிகளும் வறுமை ஒழிப்பைப் பற்றிப் பேசி வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.



`இந்தியாவில் 60 சதவிகித குழந்தைகள் வறுமையின் வெளிப்பாடான சத்துக்குறைவால் இறப்பதாக' யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரி ஜார்ஜ் தாமஸ் என்பவர், தமிழகத்தில் வயதுக்கேற்ற எடை இல்லாமல் 33 சதவிகித குழந்தைகளும், மூன்று வயதிற்குட்பட்ட 73 சதவிகித குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அப்படியானால், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்துணவு, கர்ப்பிணிகளுக்கு சத்துணவுத் திட்டம், மகப்பேறு நிதியுதவி, குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைத் திட்டம், வாழைப்பழம் வழங்குதல் போன்ற பல ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களால் எந்தவித மாற்றமும் வரவில்லை என்றுதானே அர்த்தம்? பல வருடங்களாகக் குழந்தைகளின் சத்துக்குறைவைப் போக்க இவற்றைச் செய்வதாக அரசு கூறினாலும், ஆண்டுதோறும் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் இறப்பதற்கு என்ன காரணம்?



அண்மையில் தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் நாகநாதன் ஒரு பேட்டியில், `இந்தியாவில் 150 ரூபாய்க்கு வாங்கும் செருப்பு அமெரிக்காவில் 750 ரூபாய். அங்கே நாற்பத்து நான்கு ரூபாய்க்கு வாங்கப்படும் உணவுப் பொருட்களை இங்கே 17 ரூபாய்க்கு வாங்கலாம்' என்று கூறியிருக்கிறார். ஆனால், நிஜ நிலவரம் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரு கையளவு கோழிக்கறி இரண்டு டாலருக்கு விற்கப்படுகிறது. ஒரு கைப்பிடி வெண்டைக்காய் அங்கே நான்கு டாலர். ஆனால், நம்மூரில் வெண்டையின் விலைக்கும், கோழிக்கறியின் விலைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அமெரிக்காவில் சத்துள்ள ஆகாரங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இங்கோ விலைவாசி விஷம் போல் ஏறிக்கிடக்கிறது.



`தமிழகத்தில் விவசாயக் கடன் ஏழாயிரம் கோடியைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். விவசாயக் கடனுக்கான வட்டியை ஏழு சதவிகிதத்திலிருந்து நான்கு சதவிகிதமாகக் குறைத்திருக்கிறோம்' என்று திட்டக்குழு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கடன் தள்ளுபடி எல்லாம் பணக்கார விவசாயிகளுக்குத்தான் பலனளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஒரு ஹெக்டேருக்கு 13 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, தற்போது மூன்று டன்னாகக் குறைந்து விட்டது. நிலம் கெட்டுப்போய், விளைநிலங்களின் பரப்பு குறைந்ததே இதற்குக் காரணம். தமிழக, மத்திய பட்ஜெட்டுகளில் இயற்கை வேளாண்மையை அதிகரிப்பது பற்றி ஒரு வார்த்தைகூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.



1947_ம் ஆண்டில் 60 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் விவசாய உற்பத்தி, நடப்பு ஆண்டில் வெறும் 18 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஆக்கிரமிப்பு போன்றவையும்தான் இதற்குக் காரணம். இதற்கிடையே இதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் நாகநாதன் போன்றவர்கள் அமெரிக்காவில் செருப்பு நிலவரம் பற்றிப் பேசுகிறார்கள்.



90_ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த விவசாயம், இன்று ஐந்தாவது இடத்திற்குப் போய்விட்டது. பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், `நம் நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை அனைத்து மக்களுக்கும் கொடுத்துவிட முடியும். ஆனால், சமமான பங்கீடு என்பது இங்கில்லை' என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு உற்பத்தி, சந்தை வியாபாரிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. அரசின் திட்டங்கள் ஊழல், சுரண்டல் இல்லாமல் மக்களிடம் சென்று சேர்ந்தால் அறக்கட்டளைகள், இலவசங்கள் என்ற வார்த்தைகளே இல்லாமல் போய்விடும். இல்லாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வங்கி வெளியிடப் போகும் சர்வே விவரத்தில், உலக ஏழைகளில் நாம் கணிசமான அளவு இன்னும் முன்னேறியிருப்போம்'' என ஆதங்கத்தோடு கூறி முடித்தார் டாக்டர் புகழேந்தி.



இதுபற்றி திட்டக்குழு அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "உலக வங்கியின் இந்த சர்வே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட சர்வே. ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பின் வேகம்



அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அதேபோல், விவசாயத்திலும், ஐந்து மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி தற்போது பத்து மில்லியன் டன்னாக அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் 29 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வேலை உறுதித் திட்டத்தால் பெருமளவு பலன் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியும் ஆறு சதவிகிதத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை ஏழைகள் மாநிலம் என்றெல்லாம் சொல்வது தேவையற்றது'' என நீண்ட விளக்கம் கொடுத்தனர் அவர்கள்.



`சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் இறப்பு அதிகரித்திருக்கிறதாமே?' என்ற கேள்வியை சமூக நல வாரியத் தலைவி சல்மா முன்பு வைத்தோம். "சத்துணவில் மூன்று முட்டை உள்ளிட்ட திட்டங்கள் தற்போதுதான் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இதன் பலன் தெரிய கொஞ்சம் காலதாமதமாகும். அரசின் முட்டைத் திட்டத்தால் வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்கள் வாரியத்தின் மூலம் 1200 காப்பகங்கள் செயல்படுகின்றன. இதில் படிக்க வரும் மாணவர்களைவிட, மாநில அரசின் அங்கன்வாடிக்குச் செல்லும் சிறார்கள் அதிகம். காரணம், இலவசத் திட்டங்கள்தான். வெகு விரைவிலேயே, சத்துக்குறைபாடு என்ற நோயை விரட்ட அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம்'' என்றார் சல்மா தெளிவாக.



இப்போதைய தமிழகத்தின் உண்மை நிலை இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்கிறார்கள் நிபுணர்கள். தமிழகம் பற்றி ஓர் இனிப்பான செய்தி வர நாம் இன்னும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.


நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Saturday, September 13, 2008

கலைஞர் T.V ****** கே T.V

கலைஞர் டிவியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு செப்டம்பர் 15 அன்று பருத்திவீரன் சினிமா என அறிவிப்பு. என்னடா சன் தொலைக்காட்சியிலிருந்து எதையுமே கானோமே. வந்துவிட்டது அதே செப்டம்பர் 15 அன்று கே டிவியில் படையப்பா. சரியான போட்டியா? இல்லையா?. யாருக்குத்தெரியும்.?

ஞாநியின் இவ்வார விமர்சனம் அணுசக்தி

வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார் மன்மோகன் சிங். அவரோடு சேர்ந்து சோனியா, காங்கிரஸ், முலாயம், தி.மு.க, பா.ம.க எல்லாருக்கும் வரலாற்றில் இடம் கிடைத்துவிட்டது. அது என்ன இடம்? கடைசியில் சொல்வோம்.




அமெரிக்காவுடன் போடும் அணு ஒப்பந்தத்துக்குத் தேவையான அனுமதியை அணுசப்ளைக் குழு நாடுகள் கொடுத்துவிட்டன என்பது அவற்றுக்கும் அமெரிக்காவுக்கும்தான் சாதகமான செய்தி; இந்தியாவுக்கு அல்ல.



அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதவரை இந்தியாவை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஆறேழு நாடுகள் கடைசி வரை எதிர்ப்பு காட்டின. இந்தியா மறுபடியும் அணு ஆயுத சோதனை செய்யமுடியாமல் தடுக்க வேண்டும் என்பதே அவற்றின் நிபந்தனை.



அவர்களை மனம் மாற்றியது கடைசி நிமிடத்தில் வேண்டுமென்றே `வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் மூலம் அமெரிக்கா அம்பலமாக்கிய புஷ் அரசின் ரகசியக் கடிதம். இந்தியாவுக்கு சலுகை காட்டுகிறோமா என்ற கேள்விக்கு செனட்டர் பெர்மனுக்கு அமெரிக்க அரசு அனுப்பிய கடிதம் அது.



இந்தியா அணு குண்டு சோதனை செய்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும். எரிபொருள் நிறுத்தப்படும் என்பதை அந்தக் கடிதத்தில் அமெரிக்கா பகிரங்கமாக சொல்லிவிட்டது. 1973லும் அமெரிக்கா அப்படிச் செய்தது. இனிமேலும் இந்தியா குண்டு வெடித்தால் அமெரிக்கா கழுத்தறுத்துவிடும் என்பது நிச்சயமாகத் தெரிந்ததும் அணுசப்ளை குழுவின் 45 நாடுகளும் சம்மதம் கொடுத்தன.



ஆனால், மன்மோகன் வகையறாக்கள் தொடர்ந்து இங்கே பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துவிடவில்லை என்பது முதல் பொய். `நாங்களாகவே அணுகுண்டு சோதனை நடத்துவதை நிறுத்திவைத்துவிட்டோம். இனி நடத்தும் வாய்ப்பில்லை' என்ற வாக்குறுதியை சொல்லித்தான் அணு சப்ளைக் குழுவை இந்திய அதிகாரிகள் இணங்க வைத்திருக்கிறார்கள்.



இந்திய அணு சக்தித் துறைத் தலைவர் அனில் ககோட்கர் மறைமுகமாக சொல்லி விட்டார். குண்டு வெடிப்பதாக இருந்தால், அணு உலைகளுக்கு எரிபொருள் சப்ளை பாதிக்காமல் தொடர்வதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ள வேண்டுமென்றார். அதாவது குண்டு வெடித்தால் அமெரிக்காவும் இதர நாடுகளும் சப்ளையை நிறுத்திவிடுவார்கள் என்று இதற்கு அர்த்தம்.



`இனிமேல் குண்டு வெடிக்க மாட்டோம், அணு ஆயுதப் பரவலை தடுப்பதுதான் எங்கள் கொள்கையும் கூட' என்று இந்தியா சொல்வது இன்னொரு பொய். அப்படியானால் இந்தியாவில் இருக்கும் எல்லா அணு உலைகளையும் சர்வதேச அணுக்கழகக் கண்காணிப்புக்கு உட்படுத்த முன்வரலாமே ? சில உலைகளை பிரிப்பது ஏன் ?



சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளும் பொய் சொல்கின்றன. எல்லாருக்கும் இன்னொருவர் சொல்வது பொய் என்பதும் தெரியும். இருந்தும் ஒரு நாடகமாடுகிறார்கள். ஏன்? இந்த நாடகம் எல்லாம் அணு ஆயுத தடுப்புக்காக அல்ல. அவரவர் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளத்தான்.



அணு சப்ளைக் குழு என்ற அமைப்பு, பெட்ரோலிய எண்ணெய் தயாரிக்கும் நாடுகளின் கூட்டமைப்பு போல இன்னொரு வணிக அமைப்புதான். அது ஆயில் வியாபாரம். இது அணு வியாபாரம்.



இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு என்ன லாபம் என்பதை ரகசியக் கடிதம் சொல்கிறது. இந்தியா வாங்கப் போகும் எட்டு அணு உலைகளில் இரண்டை அமெரிக்காவிடம் வாங்கினால் கூட, அங்கே 3000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 15 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்குமாம். அணு சப்ளைக் குழு சம்மதம் கொடுத்துவிட்டதை வைத்துக் கொண்டு, இந்தியா இதர நாடுகளுடன் அணு வர்த்தகத்தை ஆரம்பித்துவிடக் கூடாது. 123 ஒப்பந்தம் எங்கள் செனட்டில் ஏற்கப்படும்வரை காத்திருந்து எங்களுடன்தான் முதலில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அமைச்சர் கான்டெலசா ரைஸ் பேச (புலம்ப) ஆரம்பித்துவிட்டார்.



இந்தியாவிலோ, ரிலையன்ஸ், ஜின்டால், வீடியோகான் முதலிய 40 தனியார் நிறுவனங்கள் வெளி நாட்டுக் கூட்டுடன் அணு உலை அமைக்க அரசிடம் மனு போடத் தொடங்கிவிட்டன. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு இறங்கப் போகும் துறை இது.



இதுதான் அடுத்த பெரிய ஆபத்து. ஏனென்றால், அணு உலை என்பது சோப்பு, செல்போன் தயாரிப்பு மாதிரி விஷயம் அல்ல. மின்சாரம், அணுகுண்டு கூடவே, பல தலைமுறைகளுக்கும் அழியாத கதிர்வீச்சு ஆபத்துள்ள கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழில் இது. கடுமையான கண்காணிப்பு, கடுமையாக விதிகளைப் பின்பற்றுதல் இல்லாமற் போனால் பெரும் ஆபத்து நமக்குக் காத்திருக்கிறது.



கடுமையாக விதிகளை அமல்படுத்துவதோ இந்தியாவில் நடக்காது என்பதுதான் கருணாநிதி, ஜெயலலிதா, ராஜீவ், லாலு வகையறாக்களிடம் நாம் அறிந்திருக்கும் பாடம். 25 ஆயிரம் வருடங்களில் உருவான ஆற்று மணலை 25 வருடங்களில் தமிழக ஆட்சிகள் காலி பண்ணிவிட்டன. தோல், சாயக்கழிவுகள் பெரிய ஆறுகளையே சாக்கடைகளாக்கிவிட்டன.



சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்பது இங்கே நடக்கும் ஊழல் ஆட்சிகளின் கீழ் ஒரு சட்டப்படியான மோசடி. தியாகராய நகரில் விதி மீறிக் கட்டிய வியாபாரிகளின் கட்டடங்களை இடிக்காமல் தடுக்க அவசரச் சட்டம் போட்டதில் தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாருக்கும் கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாக உள் விஷயங்கள் அறிந்த பல நிருபர்கள் சொல்கிறார்கள்.



`சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் சிறுமிகளை கொத்தடிமையாக வேலைக்கு வைத்துச் சுரண்டும் தொழிலதிபர்களில் ஒருவர் கூட இது வரை கைது செய்யப்படவில்லை. திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து இந்தச் சுரண்டல் பாலியல் கொடுமை உட்பட நடக்கிறது.



அது மட்டுமல்ல, மேலை நாடுகளில் சுற்றுச்சுழல் இயக்கங்கள் விழிப்பாக இருப்பதால், அங்கிருந்து குப்பைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். வாராவாரம் பிரிட்டனில் வீடு தோறும் திரட்டும் குப்பை இந்தியாவுக்கு வருகிறது. அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும், வந்தாரை வாழவைக்கும் நம் தமிழகத்துக்கு.



கோவை அருகே விவசாயக் கிணறுகளில் 180 டன் அமெரிக்கக் குப்பைகளை கொட்டியிருக்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 டன் இறக்குமதிக் குப்பை அழுகிக் கொண்டிருக்கிறது. சேது கால்வாய்த் திட்டம் தப்பித்தவறி நிறைவேறி, அதில் கப்பல்களும் ஓடினால், தமிழக அரசியல்வாதிகள், குப்பைக் கப்பல் கான்ட்ராக்ட் ஏலம் விட்டு இன்னும் கொள்ளையடிக்கதிட்டம் தீட்டலாம்.



`டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏடும், பிரிட்டிஷ் டி.வியும் இந்தக் குப்பை மோசடிகளை அம்பலப்படுத்தியிருக்கின்றன. வேஸ்ட் பேப்பர் மறு சுழற்சி என்ற பெயரில் எப்படி எல்லா விதமான கழிவுகளும் தமிழகத்துக்கு அனுப்பப்படுகின்றன என்பதைப் படித்தால், வயிறு எரிகிறது. குமாரபாைளையத்தில் ஒரு விவசாயக் கிணற்றில் வெளி நாட்டு மருத்துவமனைக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன.



இங்கே விதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எல்லாமே ஏட்டளவில்தான். இப்படிப்பட்ட ஊழல் தேசத்தில் அணு உலை போன்ற நெடுங்கால ஆபத்துள்ள தொழில்களை தனியாரிடம் கொடுத்தால், அரசியல்வாதிகளின் ரேட் உயரும் என்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. இப்போது இந்தியா உலகத்தின் குப்பைத்தொட்டி; அடுத்து விஷக் கிடங்கு !



அதனால்தான் சொல்கிறேன். அணு ஒப்பந்தத்தைத் திணித்த மன்மோகன் முதல் ஆதரித்த அத்தனை பேருக்கும் வரலாற்றில் இடம் நிச்சயம் உண்டு. தேசத் துரோகிகள் பட்டியலில். இதர ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாரும் அதே பட்டியலில்தான்.



இன்னும் பத்து வருடம் ஆனாலும் புதிய அணுமின்சாரம் வரப்போவதில்லை. 20 வருடம் ஆனாலும் மொத்த மின்சாரத் தேவையில் பத்து சதவிகிதம் கூட கிடைக்காது. அணுகுண்டு தயாரிப்பது நிச்சயம் நடக்கும்.



இதனால் மக்கள் வாழ்க்கையில் எந்த வளமும் வராது. கதிர்வீச்சு வரலாம். நம் சந்ததிகளுடன் சேர்ந்து தேசத் துரோகிகளின் சந்ததிகளும் அழிவார்கள் என்பதுதான் ஒரே ஆறுதல். ஏனென்றால், கதிர்வீச்சுக்கு லஞ்சம் கொடுத்து என் பேரன் பேத்திகளை மட்டும் விட்டுவிடு என்று சொல்ல முடியாது. ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்திய ஊழல் பெருச்சாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தால், அழிக்கப்பட்ட இயற்கையை - சுற்றுச் சூழலை ஒரு போதும் மீட்டுத் தரமுடியாது.


நன்றி. குமுதம்

Wednesday, September 10, 2008

ஒரு ரூபாய் காமெடி

Saturday, September 6, 2008

அமாவாசை அமைச்சரின் புதிய விளக்கம்

பருவ மழை முழுமையாக பெய்தால்தான் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் எ‌ன்று தமிழக மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌‌மி தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.




த‌மிழக‌த்‌‌தி‌ல் ‌த‌ற்போது ஏற்பட்டுள்ள மி‌ன் த‌ட்‌டு‌ப்பாட்டை சமா‌ளி‌ப்பத‌ற்காக, ம‌த்‌திய அர‌சிட‌‌ம் இரு‌ந்து ‌மி‌ன்சார‌ம் பெறுவதற்காக ஆ‌ற்காடு ‌வீராசா‌மி நே‌ற்று டெ‌ல்‌‌லி செ‌ன்றா‌ர்.



அ‌ங்கு அவ‌ர் மத்திய மின்சாரத் துறை அமை‌ச்ச‌ர் சுசில்குமார் ஷிண்டேயை சந்தித்தார்.அ‌‌‌ப்போது த‌மிழக‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌மி‌ன்த‌ட்டு‌ப்பாடு கு‌றி‌த்து‌ம் தேவைக‌ள் குற‌ி‌த்து‌ம் எடு‌த்துரை‌த்தா‌ர்.இதை‌த் தொ‌ட‌ர்‌ந்து த‌மிழக‌த்‌தி‌ற்கு 600 மெகாவா‌ட் ‌மி‌‌ன்சார‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌‌த்தது.



இந்நிலையில், இ‌ந்த பயண‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு இ‌ன்று செ‌ன்னை ‌திரு‌ம்‌பிய வீராசாமி, ச‌ெ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சுகையில்,பருவ மழை முழுமையாக பெய்தால் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்றார்.அவர் மேலும் கூறியதாவது :



600 மெகாவாட் மின்சாரத்தை ம‌த்‌திய அரசு கூடுதலாக வழங்குகிறது. உடனடியாக 100 மெகாவாட் வழங்கப்பட்டது.



300 மெகாவாட் ‌மி‌ன்சார‌த்தை இன்றும், 200 மெகாவாட் மின்சாரத்தை வரு‌ம் 10ஆ‌ம் தேதியும் வழங்கும். 600 மெகாவாட் மின்சாரத்தை வைத்து சமாளிக்க முடியாது. தமிழகத்திற்கு 1,500 மெகாவாட் தேவை.



மத்திய அரசு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் வழங்குவதால், கிராமப்புறங்களில் 5 மணி நேர மின் வெட்டை 4 மணி நேரமாக குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூ‌றினா‌ர்.



(மூலம் - வெப்துனியா)

Sunday, August 31, 2008

மின் வெட்டு ... பாவம் தமிழ் மக்கள்

மின் வெட்டு ... பாவம் தமிழ் மக்கள். நாளை 1.09.08 முதல் தினமும் 5 மணி நேரம் மின் வெட்டு என்று மின் வாரியம் அறிவிப்பு.உண்மையில் தமிழக மக்கள் ரொம்ம்ம்ப.......????? நல்லவர்கள். எதையுமே சீக்கிரமாக மறந்துவிடுவார்கள்.மின் துறை அமைச்சரின் செயல்பாடு என்னவாயிற்று?. விஜயகாந்த் சொன்னது போல் மின் வெட்டு என்று அரிவிக்க மட்டும் எதற்கு மின் துறை அமைச்சர்?.







மின் வெட்டு பற்றிக் கேட்டால் காசிக்கு போய் பார் என்கிறார். முதலில் நீங்கள் குஜராத் போய் பாருங்கள்.அமைச்சருக்கு எதிர்க்கட்சிகளை திட்டவும்,மாறன் சகோதரர்களுக்கு எந்த வடிவில் நெருக்கடி கொடுக்கலாம் போன்ற அதி முக்கியமான வேலைக்ளுக்கே நேரம் போதவில்லை. மின் வெட்டை பற்றி அவர் எதுக்கு கவலைப்படவேண்டும். அவர் வீட்டில் 24மணிநேரம் மின்சாரம் இருந்தால் தமிழ் நாடு முழுவதும் மின்சாரம் இருக்கிற மாதிரி நினைப்பு. ஒரே ஒரு நாள் எங்கள் ஊரில் தங்கவைத்தால் தெரியும் மக்களின் நிலைமை.






உண்மையில் ஓட்டுப் போட்ட மக்கள் இளிச்சவாயர்கள் தான்.................