Sunday, November 8, 2009

பதிவர் சந்திப்பு தள்ளிப்போக காரணம்............??????

நேற்று சென்னையில் நடபெறவிருந்த பதிவர் சந்திப்பு மழையை காரணம் காட்டி தள்ளி வைப்பதாக கேபிள் அண்ணனும், சகாவும் சொல்லியிருந்தார்கள். இதில் சகா பதிவை படித்தீர்களானால் மழை மட்டும் காரணமல்ல என்பது உங்களுக்கு புரியும். கேபிள் அண்ணே உங்க பேச்சு வீட்டுக்கு வெளிய மட்டும்தான் போல......ஹும்

வழக்கம் போல் தங்கமணி பதிவுகள் சூடாகியிருக்கின்றன.ஆதி அண்ணன் எழுதிய இந்த பதிவில் ஆணாதிக்கமே அதிகம் இருப்பதாக கூறி வேலன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்கார்..ஆனா இதுல பெண்ணாதிக்கம் கொஞ்சம் அதிகமா இருக்கு...கல்யாணம் செஞ்சுக்க போற யூத்துகளே ரெண்டு பதிவையும் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.என்னை கேட்டா நாணல் மாதிரி இருக்கனும். பிரச்சினை எனும் வெள்ளம் வரும்போது நாணல் எப்படி வளையுதோ அதே மாதிரி வளைஞ்சு கொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..

நேற்று அலுவலகத்தில் என் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அவன் அதிதீவிர விஜய் ரசிகன்..2012 எனும் ஆங்கில படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்...இன்னும் மூணு வருசத்துல உலகம் அழியப்போவுதாம்..நாசாவுல ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டிருந்தான்..... நான் அதற்கு டேய் உலகம் இன்னும் மூனு வருசத்துல அழிய போவுது..ஆனா தமிழ்நாடு அடுத்த மாசம் அழிஞ்சிடும் போல டிசெம்பர் 18ஆம் தேதி என்று சொன்னவுடன் பையன் அப்படியே டெரர் ஆகிட்டான்........(விஜய் கொடுத்த ஷாஜகான் அடி இன்னும் மறக்கலை.அவ்வ்வ்வ்வ்வ்வ்.)

Saturday, November 7, 2009

பேச்சிலர் தீபாவளி--2009

அடுத்த தீபாவளி வருவதற்குள் இந்த தொடர் பதிவ எழுதிடுங்கப்பா என்று நம்ம புரொபசர் கேட்டுக்கொண்டதால் ஐயோ பாவம் எழுதிடுறேன்.......

1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
என்னப்பா இது பரீட்சை கேள்வி மாதிரி இருக்கு???....... என்னத்த சொல்ல......பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நெல்லைவாசி. இப்ப சென்னைவாசி.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?
ஊர் தூங்கும் நேரத்தில் பஸ்ஸே போகாத மெயின் ரோட்டில் நடு இரவு 12மணிக்கு ஆட்டம் பாம் போட்டு எல்லோரையும் எழுப்புவது ( தீபவளிக்கு முந்தின நாள்).....இதேலாம் சென்னை வருவதற்கு முன்னாடி...............இப்ப ஒன்னும் இல்லை சொல்வதற்கு...

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சென்னையில் தான்......

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
என்னதான் விலைவாசி ஏறினாலும் இந்த கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவில்லை..... காலையில 7மணிக்கு கூட பத்தடிக்கு முன்னாடி போறவன் முகம் கூட தெரியல அந்த அளவுக்கு புகை மூட்டம்

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
ரெடிமேடும் உண்டு..தைத்து போடுவதும் உண்டு....... ஆனா தீபாவளி பர்சேஸ் எனக்கு ஆடிக்கழிவிலே முடிந்துவிடும்...( கிரேட் சரவணா ஸ்டோர்ஸில்)

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

இந்த வருடம் பேச்சிலராக இருந்து தனியாக தீபாவளி கொண்டாடியதால் பதில் கிடையாது.(ஓசியில் கிடைத்த B.L தான் இந்த வருச ஸ்பெசல் தீபாவளியா போச்சு)


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
முடிந்த அளவுக்கு அலைபேசியில்(பேலன்ஸை பொறுத்து).... இல்லைனா எஸ் எம் எஸ்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

தீபாவளிக்கு விடுமுறை கிடைப்பதே பெரிய விசயம்........ போன வருடம் கிடைத்தது........இந்த வருடம் என்னை ஆடாக்கிட்டாங்க......வழக்கம் போல் ஆபிஸில் முடிந்தது


9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இதுவரைக்கும் அந்த பழக்கம் கிடையாது.வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு...

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
எதுக்கு நான்கு பேர்..இருவர் போதும்.
1.கடையத்து இளவல் புதுமாப்பிள்ளை கடையம் ஆனந்த்--மனம்

2.புளியங்குடி அண்ணாச்சி நசரேயன்--என் கனவில் தென்பட்டது

Friday, November 6, 2009

பதுங்கிய கலைஞர் & பொய் சொன்ன ஸ்டாலின்

ரொம்ப வருசத்துக்கு அப்புறம் நம்ம கலைஞர் ஐயாவுக்கு எப்படித்தான் இநத அளவுக்கு தைரியம் வந்ததோ??.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசும் மத்திய அரசும் அங்கு வரவிருக்கும் சட்டமன்றதேர்தலை மனதில் வைத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன..... கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் தேர்தலுக்காகத்தான் முல்லைப்பெரியாறு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.. எங்கே இந்த விவகாரத்தில் தமிழகத்து பக்கம் சாஞ்சா கேரளாவில் மறுபடியும் ஆட்சியை பிடிக்க முடியாதே என்ற கணக்கில் மத்திய காங்கிரசு அரசும் கேரள அரசும் கூட்டு செர்ந்து கொண்டன.

தமிழகத்துக்கு முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துரோகம் இழைத்துவிட்டதாக கூறி மதுரையில் அவருக்கு எதிராக கணடன கூட்டம் போடப்போவதாக நம்ம முதல்வர் வேங்கையாக சீறினார். ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம கலைஞர் இப்பவாவது பாய்கிறாரேன்னு பாத்தா.... திடீர்னு இந்த விசயத்துல பதுங்க ஆரம்பிச்சி மதுரை கூட்டத்தையே நிறுத்திவைத்துவிட்டார். காரணம் மறுபடியும் ஸ்பெக்ட்ரம் பூதம் கிளம்பிடிச்சி.


நீ எனக்கு எதிரா கூட்டம் போடுறியா....இருஇதுக்கு பதிலடியா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிபிஐ மூலமா மறுபடியும் ஒரு ஸ்டண்ட் ஷோவை காட்டிடிச்சு மத்திய அரசு. நம்ம கலைஞரும் மத்திய அமைச்சர் பதவியா??? தமிழக மக்கள் நலனா?? வழக்கம் போல் தமிழக நலனுக்கு ஒரு நாமம்......... கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஒகேனெக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் அப்படினார்..இப்ப அங்க ஆட்சியே கவிழ்கிறமாதிரி இருக்கு..அப்ப ஒகேனெக்கல்...............???

போன வாரம் அரசு விழா ஒன்றில் பொருளாதார மந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார் துணைமுதல்வர். நேரடியாக உயர்த்தவில்லை என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.ஒரு வேளை அவர் தனியார் பேருந்துகளை மனதில் வைத்து சொல்லி இருப்பாரோ?....... அரசுப்பேருந்துகளில்தான் எம் சர்வீஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், SFS,TSS,நான் ஸ்டாப்..அப்படினு வெறும் போர்டை மற்றும் மாட்டிட்டு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடிப்பது துணை முதல்வருக்கு தெரியாதோ?

Saturday, October 31, 2009

வேட்டைக்காரனை டரியலாக்கும் குறுஞ்செய்திகள்

விஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்...... அப்படி என்னதான் சந்தோசமோ வேட்டைக்காரனை பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு... இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். என்பதும் அவர்களுக்கு தெரியும்............... இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........

விஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்


2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்


5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
-
-
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)


6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா?


7.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்


8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.


9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.


10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......


11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.

Thursday, October 29, 2009

சமையல் குறிப்புகள்( கல்யாணம் ஆகியும் பேச்சிலராக இருப்பவர்களுக்கு மட்டும்)

பேச்சிலரா இருக்கும்போதே எனக்கும் ஓட்டல் சாப்பாடுக்கும் சுத்தமா ஆகாது..அதனால கஷ்டம் பாக்காம ருசி பாக்காம ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்கு சமைச்சே சப்பிட்டேன்..... என்ன வாரத்துல மூணு நாள் ரசம் அப்பளம்,மீதி நான்கு நாள் புளிசாதம்,லெமன் சாதம் அப்படியே போய்க்கிட்டு இருந்தது.........சைவ சமையலே அரைகுறை என்பதால் நோ அசைவம்.............



கல்யாணம் முடிந்த பிறகு சமையல் ரூமா? அது எங்க இருக்கு அப்படின்ற ரேஞ்சுக்கே போயாச்சு....... தங்கமணியின் சமையல் நல்லாயிருக்கோ இல்லையோ சாப்பிட்டுத்தான் ஆகனும்......... சாப்பாடு ருசி மறந்து போனதுமல்லாமல் சமையலும் மறந்து போயிடிச்சு எனக்கு....


தற்பொழுது மீண்டும் பேச்சிலராக இருப்பதால் நம்மளோட பழைய சமையல் அனுபவத்தை கொண்டுவருவதற்கே ஒரு வாரம் ஆகுது......ஓட்டலுக்கு போனா டாக்டர் கிட்ட போகவேண்டியிருக்கும் என்ற பயம் வேறு......சாம்பார் பொடி டப்பா எங்க இருக்குனு கேக்க ஆரம்பிச்சாலே காதுல ரத்தம் வந்துரும்.....அதனால குத்து மதிப்பா ஏதாவது பொடிய போட்டு கலக்க வேண்டியதுதான்.



மேட்டருக்கு வருவோம்...... என்னைப்போல் பல ரங்கமணிகளும் இந்த கஷ்டத்தை அனுபவிப்பதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்தே நிமிடத்தில் முடியக்கூடிய டிபன் வகைகளை தருகிறேன்...........முயற்சித்து பார்க்கவும்........

கோதுமை தோசை.

கோதுமைமாவில் பூரி சப்பாத்தி பண்ணுவதற்கு ரொம்ப நேரமாகும்.நம்ம எனர்ஜி வேஸ்ட்டாகும்... கோதுமைமாவைதேவையான அளவு தண்ணியில் கரைத்துகொள்ளவும்.தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும். முடிஞ்சா வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.....சுடச்சுட இந்த தோசையை சாப்பிட்டால் சைடிஷ் எதுவும் தேவையில்லை......ஆறிப்போச்சுன்னா...

சேமியா உப்புமா

கடலைபருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய்,கடுகு ஆகியவற்றை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்...தண்ணீர் ஊற்றி 5நிமிடங்கள் கொத்திக்க விடுங்கள்.பின் சேமியாவை போட்டு நன்றாக கிளறி விடுங்கள்..... இதற்கு சீனி நல்ல சைடிஷ்


ரவை உப்புமா


மேலே சொன்ன சேமியா உப்புமா செய்வது போல் சேமியாவுக்கு பதில் ரவையை சேர்த்து கிளறவும்..

எச்சரிக்கை


மேற்ச்சொன்னவைகளை உங்க தங்கமணிக்கு செஞ்சு கொடுத்து நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல..

Sunday, October 25, 2009

ஒரு COMMON MAN செய்கிற வேலையா இது?

பொது ஜனம்னா இப்படித்தான் இருக்கனும் ஏட்டில் எழுதப்படாத விதிகள் இந்தியாவில் தமிழ் நாட்டுல இருக்கு.... பொதுஜனம்னா எல்லாத்தையும் பாத்து சகிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கனும். இதுதான் நம்ம நாட்டு மக்களின் நிலை.......பொது ஜனம்னா அவருக்குன்னு ஒரு குறிப்பிட்ட கடமைகள் வேலைகள் தான் செய்யனும்னு ஒரு இது இருக்கு......ஆனா இப்படியெல்லாம் இருக்காதிங்க உங்களுக்கும் கோவம் வரனும் அப்படினு நம்ம உலக நாயகன் அருமையாவே சொல்லியிருக்கார்..... நல்லாத்தான்யா இருக்கு உன்னைப்போல் ஒருவன்.

கதையின் போக்கில் எல்லோரையும் ஒரு கை பார்க்கிறார் கமல்...முக்கியமா மீடியாக்களை பற்றி பேசும் போது.....போலீஸ் கமிசனராக வரும் மோகன்லாலுக்கும் லட்சுமிக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன லடாய்கள் நக்கலோடு இருக்கு..அதுவும் லட்சுமி தனது அலுவலகத்திற்கு வந்தவுடன் மோகன் லால் உக்காரச்சொன்னவுடன் பரவாயில்லை மரியாதை போதும்னு சொன்னவுடன் மோகன்லால் இல்ல எனக்கு அந்த மேப் மறைக்குது பாக்க முடியல அதான் உக்காரச்சொன்னேன் என்று ஆரம்பிக்கும் நக்கல் கடைசி வரைக்கும் அப்படியே போகுது.... மோகன்லாலின் உதவியாளராக வரும் இருவரின் நடிப்பும் அருமை..அப்படி ஒரு பாடி லேங்குவேஜ்.... யப்பா தளபதிங்களா,தலைங்களா கொஞ்சம் பாத்து கத்துக்கிடுங்க கொஞ்சமாவது நடிப்பை.

ரிப்போர்ட்டராக வரும் நடிகை பேர் என்னனு தெரியலப்பா ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் அழகாய் பூத்ததே பாடலில் வருமே அந்த பெண்தானே)..அசால்ட்டா நடிச்சிருக்குப்பா.........ஸ்ருதி ஹாசனின் இசை அறிமுகம் என்றாலும் அருமை.....


மொத்தத்தில் உன்னைப்போல் ஒருவன் ஒரு அக்னி ஏவுகணை

Wednesday, October 21, 2009

பதிவர் கடையம் ஆனந்த் எடுத்த இனிய அதிர்ச்சி முடிவு

பயபுள்ளைங்க சொன்ன பேச்சை கேக்குதா.......முரண்டு பிடிச்சு சங்கத்துல இணைஞ்சே ஆவேன்னு அடம்பிடிக்குதுங்க....என்ன பண்றது சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சி.......அண்ணன் தாமிராவின் பதிவ படிச்சத்துக்கப்புறமும் புத்தி ஏறலையே.மாப்ளே ஆனந்த் விதி வலியது........

இதனால எல்லோருக்கும் சொல்றது என்னன்னா கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த் இன்றைக்கு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்.... அவரையும் அன்புசகோதரியையும் மனமார வாழ்த்துவோம்.....

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....................

Thursday, October 15, 2009

ஹலோ மைக் டெஸ்டிங்.............ஹேப்பி தீவாளி

300 வருசத்துக்கு அப்புறம் இந்த தீபாவளிதான் புரட்டாசி மாசம் வருதாம்....அதனால எல்லோருக்கு ஒரு ஸ்பெசல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சின்ன ஆப்பரேசன் நடந்து முடிந்துள்ளது( சைனஸ்).. அதனால் தான் இரு வாரமாக பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை.



மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த தீபாவளி பேச்சிலர் தீபாவளியாக இருக்கும் என்று நானே எதிர்பாக்கலை..... ஆப்பரேசன் நடந்துள்ளதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிவேண்டியுள்ளது..படிப்பு காரணமாக் தங்கமணியும் பையனும் ஊரில் இருக்க வேண்டிய அவசியம் என்பதால்.எனக்கு இந்த வருசம் தனிமைதீபாவளிதான்........


ஓகே போதும் விசயத்துக்கு வருவோம்.....டப்பாசு... இந்த வார்த்தையை சென்னையில் மட்டுமே கேட்க முடியும்.. டப்பாசுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..???



பட்டுனு வெடிச்சா அது பட்டாசு
டப்புனு வெடிச்சா அது டப்பாசு........இது எப்படி இருக்கு


குறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து நண்பர்களும் வேட்டைக்காரனை பற்றியே அனுப்புகிறார்கள்..என்னதான் காண்டோ அப்படி விஜய் மேல்............


ஒரு கிசுகிசு


வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகாத காரணத்தால் அந்த இளம் பதிவர் ரொம்ப மனமுடைந்திருக்கிறாராம்...என்னைக்கு வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகுதோ அன்னைக்குதான் குளிக்க போவதாக சபதம் எடுத்துள்ளார்....வேணாம் சகா.........

ஒரு அரசியல்

இலங்கைக்கு சென்று திரும்பிவிட்டது நம் எம்பிக்கள் குழு....வழக்கம் போல் ஒரு அறிக்கை....ஏதாவது நல்லது நட்ந்தால் சரி.........ரெண்டு மணி நேரத்தில் போர் நிறுத்தம் செஞ்சது போல் ஆகிவிடக்கூடாது........


மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
 
நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது? இதுக்கு ஓட்டு போட்ட 132 அன்பு உள்ளங்களுக்கும் நன்றி



 
 

Friday, September 25, 2009

காத்திருந்தவன் பொண்டாட்டிய.......

தலைப்புல உள்ள் பழமொழி உங்களுக்கு நல்லாத்தெரியும்........அந்த மாதிரி ஆகிப்போச்சு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிலைமை......இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இந்தி தொலைக்காட்சி ஜீ நிறுவனம்...........DTH இந்தியாவில் முதன் முறையாக ஜீ நெட்வொர்க்கால் ஆரம்பிக்கப்பட்டது..... இப்படி பல முதல்களுக்கு சொந்தமான ஜீ நெட்வொர்க் போன வருசத்துல இருந்துதான் தமிழ்ல தொலைக்காட்சி ஆரம்பிச்சாங்க........



ஆரம்பிக்கும் போதே போன வருசத்தின் சூப்பர்ஹிட் படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் ரைட்ஸை வாங்கி முண்ணனி நிறுவனத்திற்கு போட்டியாக காட்டிக்கொண்டது.... புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பின் மூலம்தான் சன்னுக்கு அடித்தபடியாக கலைஞர் டிவியால் வரமுடிந்தது....இது எல்லோருக்கும் தெரியும்.


ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அவ்வப்போது சுப்ரமணியபுரம் படம் பற்றி விளம்பரம் கொடுத்து வந்தார்கள்...கடைசியாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து நாளை செப்டம்பர் 26ஆம் தேதி ஒளிபரப்பபோவதாக விளம்பரம் கொடுத்தார்கள்..........


ரெண்டு நாளா அந்த விளம்பரத்தை காணோம்..........நேற்று இரவில் இருந்து சுப்ரமணியபுரம் திரைப்படம் சன்னில் ஒளிபரப்பபடப்போவதாக விளம்பரம் வருகிறது........


இடையில் என்ன ஆச்சுன்னு தெரியல.எல்லாம் எம்பெருமான் திருச்செந்தூர் முருகனுக்கே வெளிச்சம்...........

பின் குறிப்பு:



ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் அதே செப்டெம்பர் 28ஆம் தேதி சுப்ரமணியபுரம் ஒளிபரப்பப்போறாங்களாம்

Monday, September 21, 2009

எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

ஏற்கனவே பலமுறை அனுபவப்பட்டதால் அந்த தப்பை பண்ணக்கூடாது என்று ஒரு கொள்கையோடிருந்தேன்..ஆனா இந்தவாட்டி மறுபடியும் அதே தப்பை பண்ணவேண்டியதா போச்சு....அய்யய்யோ நீங்க வேற மாதிரி நினைக்காதிங்க...நான் செஞ்ச தப்பு மறுபடியும் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த கொடுமை .அவ்வ்வ்வ்வ்..............

இந்த மாத ஆரம்பத்தில் ஊரில் திருவிழா இருந்ததால் ஊருக்கு சென்றிருந்தேன்..போகும்போது பேச்சிலராக போனதால் பிரச்சினையில்லை...... வரும்போது தங்கமணியும் கூட வந்ததால் பிரச்சினை ஆரம்பமாகியது..ரெயில்ல ரிசர்வேசன் கெடைச்சா மறுபடியும் சுனாமியே வந்திடும்.......தனியார் டிராவல்சிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது. சரி ஐந்தரைமணி அரசு விரைவுப்பேருந்தில் ரிசர்வேசன் பண்ணலாம்னா அதிலும் டிக்கெட் இல்லை ( ஹைவே ரைடராம்).நாலரைமணி அரசுப்பேருந்தில் தான் டிக்கெட் இருந்தது..மனதை கல்லாக்கி கொண்டு டிக்கெட் எடுத்தேன்...



தென்காசிக்கு 5 மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை..... அலுவலகத்தில் கேட்டால் 'வண்டில கொஞ்சம் பிராப்ளம் பாத்துட்டாங்க செங்கோட்டையில் இருந்து கிளம்பிடிச்சு' அப்படினாங்க.... 6 மணியாகியும் வண்டி வரலை...இடைப்பட்ட நேரத்தில் சென்னை போர்டு போட்டு ஒரு வண்டி வந்திச்சி ஏறலாம்னா அது வேளாங்கன்னி ஸ்பெசலாம்... என்ன சார் இது சென்னை வண்டிய ஸ்பெசலா வுட்டா எப்படி? .....என கோபமாக கேட்க ஆரம்பிக்க.....அந்த அலுவலர் எஸ்கேப்.ஒரு வழியா நாலரைக்கு வரவேண்டிய பேருந்து ஆறரைக்கு வந்தது......



பேருதான்  விரைவுப்பேருந்து...ராஜபாளையம்   வரவே 9:30 மணியாகியது.        ஆஹா திருச்சி போறதுக்கே காலை 5 மணியாகிடும்போல என்றே நினைத்தேன்....காலை 3மணிக்கே திருச்சிக்கு வந்துவிட்டது...இங்கே ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மாறுவார்கள்..ஏற்கனவே பலமுறை அனுபவம் என்பதால் நான் அமைதியாக இருந்தேன்...திருச்சி வந்தவுடன் ஒரு பயணி சற்று கோபத்துடன் அந்த ஓட்டுனரிடம் " என்ன சார் தென்காசியில் இருந்து இங்கு வர 9 மணிநேரம் ஆக்கிட்டீங்களே..ஒரு இடத்துல கூட நீங்க ப்ஸ்ஸை நிப்பாட்டலியே... ஏன் இப்படி ஸ்லோவா ஓட்டுறீங்கன்னு கேட்டார்"..அதற்கு ஓட்டுனர்" நீங்க சொல்றதெல்லாம் சரிதான் நாங்க என்னபண்றது ஒரு லிட்டர் டீசலுக்கு அஞ்சரை கிலோமீட்டர் மைலேஜ் கேக்குறாங்க...லாக் பண்ணிட்டாங்க..நான் முடிஞ்சவரைக்கும் வேகமாத்தான் வந்திருக்கேன்..இதுக்கே இப்படி சொன்னா எப்படி..அடுத்து வர்ற டிரைவர் ஓட்டும்போதுதான் தெரியும் உங்களுக்கு என்ன பத்தி" என்று ஒரு மரம் புன்னகையோடு இறங்கினார்....அவர் சொன்னது அந்த பயணிக்கு புரிந்ததோ இல்லையோ எனக்கு நன்றாக புரிந்தது...

திருச்சி ஓட்டுனரின் வேகம் 30-40கிலோமீட்டருக்குள்ளே இருந்தது......இப்படியே பேருந்து சென்றால் லிட்டருக்கு 8 கிலோமீட்டர் கிடைக்கும்போல... காலை7:30க்கு விழுப்புரம் வந்த பிறகுதான் கொஞ்சம் வேகம் எடுத்தார்............டவுன் பஸ்ஸைத்தவிர எல்லா வண்டிகளும் எங்கள் பேருந்தை முந்தி சென்றன....செங்கல்பட்டு தாண்டி நம்ம மாநகர பேருந்து கூட முந்திபோனதுதான் ஹைலைட்............ தமபரம் வந்தடையும் போது மணி காலை 10:30.......இதுக்கப்புறம் அந்த பேருந்து கோயம்பேடு போகவேண்டும்............நீங்களே கணக்கு போட்டுக்கிடுங்க பயணநேரம் எவ்வளவு என்று....

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு எல்லா பேருந்துகளூம் போன வருசம் வரைக்கும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளாக இருந்தது....நம்ம கலைஞர் ஆட்சியில தான் பேருந்து கட்டணம் உயர்த்தலையே ..அதானால் பயணிகளின் நலன் கருதி!!!!!!!! இப்பா எல்லா பேருந்துகளும் அல்ட்ரா டீலக்ஸா மாத்திட்டாங்க.......... சரி காசுதான் அதிகம் ஓகே...ஆனா வேகம்.........ம்ம்ம்ம்ஹும்..................மக்களே தயவு செய்து அரசு விரைவுப்பேருந்தில் பயணம் செஞ்சி என்னை போல் எஞ்சாய் பண்ணுங்க............



மதுரையில் இருந்து சென்னை வரைக்கும் உள்ள நெடுஞ்சாலை தற்போது அருமையாஇருக்கு ..ஆனா நம்ம பேருந்துகள்தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் யாரைத்தான் குற்றம் சொல்ல 12மணிநேர பயணத்தை 17மணிநேரமாக ஆக்கும் கொடுமையை......

Wednesday, September 16, 2009

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்.......

எனது வலைப்பூவை பெரிய மனது பண்ணி படிக்கும் அன்பு உள்ளங்களே...... நான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் என் கடை காலியாக உள்ளது என்று போனிலும் மெயிலிலும் தொல்லைக்கொடுத்த அன்பு உள்ளங்களுக்காக என் வலையில் எழுத முடியவில்லை என்பதை நினைக்கும்போது.அய்யகோநெஞ்சுபொறுக்குதில்லையே.........ஆங்..........
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராக இருப்பதால் உங்கள் பொன்னான ஆதரவை வலைச்சரத்தில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்........


வலைச்சரத்தில் நான்

பதிவு 1
பதிவு 2
பதிவு 3

Thursday, September 3, 2009

ப்ளாஸ் நியூஸ் :ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் பலி

இன்று காலை ருத்ர கோடுமலை உச்சியில் ஆந்திர முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது .. சம்பவ இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேர் பலியாகினர்..

ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு....

நேற்று காலை கர்னூலை அடுத்து மாயமான ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் நல்லமால்லா காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் 20 நிமிடங்களில் விமானப்படையினர் அந்த இடத்தை அடைந்துவிடுவார்கள். கர்னூலில் இருந்து 40 மைல் நாட்டிகல் கிழக்கே மலை உச்சியில் ஹெலிகாப்டர் இருப்பதாக தகவல்.
அது விபத்து என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறது விமானப்படை..அந்த இடத்தை விமானப்படை ஹெலிகாப்டர்கள் வட்டமடித்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது

Friday, August 28, 2009

வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இணையதளம்

நம்ம ஆளுக எழுதும் சினிமா பதிவுகளுக்கு எப்பவும் கிராக்கி இருக்கும்.கதை,கவிதை,நேர்த்தியான அரசியல் அலசல்கள் என யோசிச்சு எழுதும் பதிவுகளை விட ரெண்டு வரி சினிமா பதிவுகளுக்கு ஹிஸும் அதிகம் பின்னூட்டமும் அதிகம்...

நான் சொல்ல வருவது சினிமா விமர்சனம் பற்றி... முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்றால் ஆ.வி.தான்.அவர்கள் போடும் மார்க்கை வைத்தே படத்தின் தலைவிதியை தெரிந்து கொள்ளலாம்...ஆனால் தற்போது எந்த பத்திரிக்கையும் நடுநிலையான விமர்சனம் செய்வதில்லை......ஆனால் நம்ம வலைப்பதிவுகளில் சினிமாவிமர்சனம்னாலே எந்த படம் என்றாலும் பிடி கொடுக்காமல் விளாசித்தள்ளுகிறார்கள்.......இந்த விசயத்தை பற்றி தமிழ்சினிமா.காம் வேண்டுகொளை விடுத்துள்ளது....... கீழே படிக்கவும்.....

//பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்? அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...////

கொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே

Monday, August 17, 2009

ஓட்டுப் போட காசு வாங்கலையோ..........

அம்மா வாங்க, அய்யா வாங்க,பிரபல பதிவர்களே வாங்க,பிரபலமில்லா பதிவர்களே வாங்க, சின்ன பதிவர்களே வாங்க,பெரிய பதிவர்களே வாங்க, எல்லோரும் வாங்க வந்து ஓட்டு போடுங்க.........அப்படி இப்படினு எப்படி கத்தினாலும் கதறினாலும் நம்ம மக்களுக்கு ஓட்டு போடுறதுனாலே சோம்பேறித்தனம் தான்.


இந்தப்பதிவில் ஓட்டு போடுங்கன்னு சொல்லியிருந்தேன்.பதிவுக்கு கூட ஓட்டு போடவேண்டாம்..அந்த மேட்டர்ல குத்துங்கன்னு சொல்லியிருந்தேன்...அந்தப்பதிவுக்கு ரெண்டு நாள் சேர்த்து 1200 ஹிட்ஸ் வந்திருந்தது..ஆனால் ஓட்டு போட்டவங்களின் எண்ணிக்கையை பார்த்தால் 100க்கும் குறைவே...... இப்பதான் தெரியுது அரசியல்வாதிங்க எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு.பின்ன மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டு போடனும்றதுக்காக என்னவெல்லாம் செய்றாங்க...நீங்க அப்படி ஏதாவது செஞ்சத்தான் ஓட்டு போடுவாங்க அப்படினு ஒரு சில பேர் சொன்னாங்க....அதுக்காக ஒரு வோட்டுக்கு 100,200 குடுக்கனும்னு எதிர்பாத்தா எப்படினு கேட்ட பதில் இல்லை..

அதனால் யூத்து சங்க தலைவரின் ஆலோசனைப்படி ஒரு ஓட்டுக்கு அஞ்சு பைசா கொடுப்பதாக முடிவு பண்ணியுள்ளேன்..என் பதிவுக்கு தமிழிஷ்ல ஓட்டு போட்டிங்கன்னா அஞ்சு பைசா, தமிழ்மணத்தில் ஓட்டு போட்டா அஞ்சு பைசா, மொத்தமா உங்க கணக்கில் 100 ஓட்டு வந்ததும் அதற்கான தொகை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை சந்தோசமாக சொல்லிகொள்கிறேன்........

அதனால பதிவுலக மக்களே மறக்காம என் பதிவுக்கு ஓட்டு போடுங்க சொல்லிட்டேன்......

ஸ்பெசல் ஆபர்
1000 ஓட்டு போட்டா 1கிலோ ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா சுடச்சுட பார்சல் அனுப்பி வைக்கப்படும்

Friday, August 14, 2009

ஒரே தண்ணி பிரச்சனை-ப்பா.......பதிவர் சந்திப்பை வைங்க

பன்றி காய்ச்சல பீதில எல்லோரும் இருக்கும் போது இவன் மட்டும் என்ன தண்ணி பிரச்சினைனு கிளம்புறான்னு தப்பு கணக்கு போடாதிங்க.......நான் சொன்னது வால் பையன் பிரச்சினையில்ல...............ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் இந்த பிரச்சினை வரவே இல்லை..ரெண்டு நாளைக்கு ஒரு முறை தவறாமல் குடி தண்ணீர் குழாயிலே வந்துவிடும்... வீட்டு ஓனர் பக்கத்துல கிடையாது....தண்ணீர் விசய்த்தில் பிரச்சினையே கிடையாது....

எப்ப பள்ளிக்கரணைக்கு வந்தேனோ.......அப்ப ஆரம்பிச்சிதுப்பா.....இங்க வந்ததுக்கப்புறம் குடிக்கிறதுக்கு கேன் தண்ணீர் தான்....பஞ்சாயத்து குழாயில் வரும் தண்ணிய வாயில கூட வைக்க முடியாது....பக்கத்துலயே வீட்டு ஓனர்......காலையில் 6 மணிக்கு எந்திச்சா டேப்புல தண்ணி வரது.......ஓனரை எழுப்பனும்.......இதே ஒரு வேலையாப்போச்சி அப்படினு பக்கத்து தெருவுக்கு வீடு மாறினேன்.

'தனியா உங்களுக்கு டேங்க் வச்சித்தாரேன்'..... ஆஹா பரவாயில்லையே. தண்ணி பிரச்சினையில்லப்பான்னு நினைச்சி டேங்கை பாத்தா.....அது டேங்க இல்ல டேங்க மாதிரி!!!.... சரி பரவாயில்ல... அப்படினு பாத்தா மோட்டார் சுவிட்ச் அவங்க வீட்டுக்குள்ள இருந்தது .மறுபடியும் அதே மாதிரி மறுபடியும் காலையில் எழுந்து தண்ணிக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.......

நீங்க தண்ணி அதிகமா யூஸ் பண்றீங்க ஆபடினு வேற அட்வைஸ்( அந்த டேங்க் தண்ணி ரெண்டு பேர் குளிப்பதற்கே பத்தாது)..இந்த கொடுமையில பஞ்சாயத்து தண்ணிய வேற வாரத்துக்கு ஒரு முறைதான் விடுறாங்க.. வேற வீடு பாக்கனும் ஓனர் பக்கத்துல இல்லாத வீடாத்தான் பாக்கனும்............
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பூறம் பதிவர் சந்திப்பு வச்சி ரொம்ப நாளவுது ராசாக்களா....... உங்களை பாத்து ரொம்ப மாசமாச்சு கண்ணுகளா???..........அதனால பிரபல பதிவர்களே நீங்க அத்திரிய பாக்கனும்னா உடனே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க...எத்தன நாளைக்குத்தான் முகம் பாக்காம சண்டை போடுறது........தேதி விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லுங்கப்பா.....அப்பதான் எங்க மேனேஜர்ட்ட டேமேஜ் இல்லாம டுட்டி மாத்திட்டு வர முடியும்..புரிஞ்சிதா..........

Monday, August 10, 2009

தமிழின் நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது? + 150

தமிழில் முதல் மியூசிக் சேனல் என்றால் அது சன் மியூசிக் சேனல் தான்........ முதலில் சென்னையில் மட்டும் எஸ்சிவி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சேனல் கொஞ்ச நாட்களில் சேட்டலைட் சேனலாக மாறியது..அதுவரைக்கும் தமிழ் பெருங்குடி மக்கள் "ஹலோ பெப்சி உமாவான்னு" கேட்டுக்கிட்டு இருந்த காலம் போய் புதுப்புது பிகர்களிடம் கடலை போடுவதை சன் மியூசிக் சேனல் தான் ஆரம்பித்து வைத்தது. இந்த பார்முலாவை அனைத்து தமிழ் மியூசிக் சேனல்களும் சரியாப்புடிச்சி நம்மளை மண்ட காய வக்கிறாங்க.

சன் மியூசிக்கிற்கு அடுத்ததா எஸ் எஸ் மியூசிக் சேனல் தென் இந்திய மொழிகளுக்கென்று ஆரம்பித்ததாக சொன்னாலும் இதிலும் தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம்...அதுக்கு அடுத்து ஜெயாமேக்ஸ்,இசையருவி,ராஜ் மியூசிக் அப்படினு வரிசையா இந்த சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும்...அதற்கேற்றார்போல் தினம் தினம் கடலை போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது...

பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பாடல் ஒளிபரப்புறாங்களான்னு கேட்டா கண்டிப்பா இல்லைனு தான் சொல்லனும்......இதுதான் மக்கள் ரசனை இதைத்தான் அவங்க பார்ப்பார்கள் என்று அவர்களே ஒரு முடிவு பண்ணி...நம்ம ரசனையை ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க. புதுப்பாடல்கள் தான் மக்கள் பாப்பாங்கன்னு அவங்க ரைட்ஸ் வாங்கியிருக்கிற மொக்கையான புதுப்பாடல்களை தேஞ்ச ரெக்கார்டு மாதிரி திரும்ப திரும்ப போட்டு மக்களை பார்க்க வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க.

ஒரு மியூசிக் சேனல்னா எல்லா வகையான பாடல்களையும் ஒளிபரப்ப் வேண்டும்...... முக்கியமா மிடில் சாங்க்ஸ் என்று சொல்லப்படும் 1980-1990 வருட பாடல்களை பார்ப்பதே அரிதாகியுள்ளது..........

இதனால முடிவு உங்க கையில.........நீங்களே ஓட்டு போடுங்க எந்த சேனல் நல்ல ரசனையான பாடல்களை ஒளிபரப்பி உங்கள் மனதில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பதை நீங்களே தீமானியுங்கள்.. அப்படியே வலதுபுறம் பாத்து ஓட்டு பதிவிடுங்கள்...... என் பதிவுக்குத்தான் ஓட்டுப்போடமாட்டுக்கீங்க...இதையாவது செய்யுங்க

அப்புறம் இது என்னோட 150வது பதிவு...பதிவு எழுத வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.என்னை பொறுத்த வரைக்கும் நான் பதிவு எழுதுவதைவிட நல்ல வாசிப்பாளனாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும்........என்னுடைய 60பாலோயர்ஸ்க்கும் நன்றி........இதுநாள்வரைக்கும் பொறுமையா என் பதிவையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.....

உங்களுக்காக ஒரு ஸ்பெசல் பாட்டு........எஞ்சாய்....






Saturday, August 8, 2009

தொப்பை "யூத்தின்" அடையாளம்.......!!!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.நான் சொல்ல வருவது நம்ம யூத் பதிவர்களின் தொப்பை பிரச்சினை பற்றியது.

இந்த பதிவர் எப்போதும் தன்னுடைய பதிவில் தான் ஒரு யூத்து எனபதை மறக்காமல் எழுதிவிடுவார்... இவரை அங்கிள் என்று சொன்னால் போதும் இந்த பதிவர் நம்மை அடிக்கவே வந்து விடுவார்.காரணம் இவரும் அவரைப்போலவே யூத்துதான்..என்னதான் யூத்துன்னு வெளியில சொல்லிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள இவங்க தொப்பைய நினைச்சி இவங்களுக்கு பலநாள் தூக்கமே கிடையாதாம்....பதிவுலகில் ஒல்லியா இருந்தாலும் கில்லியா இருக்கும் இந்த பதிவரிடம் அதன் ரகசியத்த கேட்டு டார்ச்சர் பண்றாங்களாம்...கடேசியாக கிடைத்த தகவல் படி இந்த இரு பதிவர்களும் காசி தியேட்டர் பாலத்திலிருந்து கத்திப்பாரா ஜங்ஷன் வைக்கும் தினசரி ஜாக்கிங் என்ற பெயரில் அந்த பக்கம் வருகிற ஆன்டிகளை சைட் அடிப்பதாக கேள்விப்பட்டேன்.
 
  அடுத்த பதிவர் நிஜமாவே இவர் யூத்துதான்..ஆனா என்ன 25ஐ தாண்டியதன் விளைவு இளந்தொப்பைதான் இவருக்கு மெயின் தலைவலி....ஒவ்வொருவாட்டியும் ஊருக்கு வரும்போதும் போகும் போதும் பிகரை உஷார் பண்ணிடுவார்....அந்த வாரத்தில் பகலில் அந்த பிகரை வெளியில் கூட்டி செல்லும் போது"நீங்க பாக்க நல்லாத்தான் இருக்கீங்க ஆனா இந்த தொப்பை தான்ன்னு இழுக்கும் போது ரொம்ப டென்சன் ஆகி அவர் இருக்கிற ஊரில் உள்ள மிகப்பெரிய பஸ் ஸ்டாண்டை பத்து முறை சுற்றி ஓடுவதாக உளவுத்துறை தகவல் கூறுகிறது.....

இந்த பதிவர் அந்த சைடு யூத்தா இல்லை இந்த சைடு யூத்தான்னு தெரியல... இவருக்கும் இந்த தொப்பை பிரச்சினைதான்....சிட்டிக்கு உள்ள இருக்கும் வரைக்க்கும் வாக்கிங் போகக்கூட இடமில்லாமல் தவித்தார்....அதற்காகவே தன்னுடை வீட்டை சென்னை புறநகருக்கு மாறிவிட்டார்....இப்போது அவர் கிஷ்கிந்தாவை மூணு வாட்டி சுற்றி வருகிறாராம்.

சீக்கிரமே குடும்ப இஸ்திரியாக மாறப்போகும் இந்த இளம்பதிவருக்கும் இதே பிரச்சினைதான்..அதுக்காக தமுக்கம் மைதானத்தை காலையிலும் மாலையிலும் நேரம் காலம் பாக்காமல் சுற்றி வருகிறாராம்..

இவங்க எல்லாரும் ஜாக்கிங் வாக்கிங் தினசரி போனாலும் அவர்களால் வாயை கட்டவே முடியவில்லையாம்.... இவங்க படுற கஷ்டத்தை கேள்விப்பதும் என் கண்ணுல தண்ணி வந்திடிச்சிப்பா.........அதனால என் யோசனைய கேளுங்க...


தொப்பை குறையனும்னா முதல்ல உடம்புல உள்ள கொழுப்பு குறையனும். கொழுப்பு குறையனும்னா தினசரி அதிகாலையில 5 முதல் 10 டம்ளர் வெந்நீர் குடிச்சா உடம்புல உள்ள கொழுப்பு கரைஞ்சிடுமாம்.............. அதுக்கப்புறம் இஞ்சி சாறு, சுக்கு காப்பி இதையெல்லாம் அடிக்கடி குடிங்க..........

-------------
------------
-----------
-------------------
-------------

ஏன்னா இதையெல்லாம் நானும் செஞ்சிட்டு இருக்கேன்............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Sunday, August 2, 2009

எனக்கு பிடித்த பாடல்

சினிமா பாடல்களில் தமிழ் தவிர்த்து மற்ற மொழி பாடல்கள் என்றால் ஹிந்தி பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும்( அர்த்தம் புரியுமானு கேட்கக்கூடாது).......சென்னை வந்ததற்கு அப்புறம் இந்த லிஸ்டில் தெலுங்கு பாடல்களும் சேர்ந்து கொண்டன............ஊரில் இருக்கும் போது எப்போதாவது மலையாளப்பாடல்கள் கேட்டதுண்டு.... ஆனால் கன்ன்டம்.........தமிழ்நாட்டுக்கும் அதுக்கும் ஒத்தே வராதே....பெங்களூரில் கன்னடப்படங்களை விட தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் தான் அதிகம் ஓடுகின்றன...............

சமீபத்தில்தான் இந்த கன்னடப்பாடலை கேட்டேன்..............நல்ல லொக்கேசன், அருமையான ஒளிப்பதிவு.....பாட்டின் வேகத்துக்கேற்ற கேமரா மூவ்மென்ட் அருமையா இருக்கு.........பார்த்து ரசியுங்கள். முதல்ல பாக்கும் போது இது கன்னட பாடல்தானா? அப்படினு ஒரு சந்தேகம்......ஏன்னா நமக்கும் கன்னடத்துக்கும் ரொம்ப தூரமாச்சே.....

படம் : சினேக லோகா ( கண்ணெதிரே தோன்றினாள் ரீமேக்)
இசை : ஹம்சலேகா
பாடகர்கள் : ராஜேஷ்,சித்ரா

 
 
    

Saturday, July 25, 2009

குற்றாலத்தில் கும்மாளம் போட்ட பிரபல பதிவர்

எனக்கு தெரிந்த அந்தப் பிரபல பதிவர் சென்னையில் குடியிருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் செல்லவில்லை என்றால் அவருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்பது போல் பேசுவார்.


கடந்த வாரம் அவரிடம் பேசும் போது " உங்க ஊருக்குத்தான் போறேன்".( ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு)
"எங்க ஊர்ல உங்களுக்கு என்ன வேலை அண்ணே...அதற்கு அவர் "உங்க ஊர்னா உங்க ஊர் கிடையாது குற்றாலம்பா" என்றார்
"அண்ணே குடும்பத்தோடவா போறீங்க?".... இந்த கேள்விக்கு காதுல ரத்தம் வர்ற மாதிரி பதில் வந்தது.... " நாங்க எல்லாம் யூத்துப்பா"( அவர் வீட்டில் இருக்கும் வரைதான் குடும்ப இஸ்திரி ...... வெளிய வந்தா யூத்து போல...அன்னியன் மாதிரி)

"குற்றாலத்துல எந்த பரோட்டா கடை நல்லாயிருக்கும்?"( எங்க போனாலும் ஓட்டலை தேடும் பழக்கத்தை விடமாட்டாரோ)
"அண்ணே குற்றாலத்துல ஒரு ஓட்டலும் நல்லாயிருக்காது...பிரானூர் பார்டர்ல ஏகப்பட்ட பரோட்டா கடை இருக்குது...அங்க போங்கண்ணே....
"சரி அங்க எந்த கடை நல்லாயிருக்கும்"( விடவே மாட்டாரோ)
"தெரியல அண்ணே அங்க எல்லாம் போய் வருசக்கணக்காவுது...."
"பக்கத்து ஊரை பற்றி ஒன்னுமே தெரியல உன்ன்னையெல்லாம்".( ஆஹா மறுபடியுமா)

சென்னையில நாலு சுவத்துக்குள்ள பக்கெட்ல தண்ணிய மொண்டு குளிச்சவரு குற்றால அருவிய நேர்ல பார்த்ததும் காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாஞ்ச மாதிரி ஓவர் குஷி ஆகிட்டார்.... கூட வந்தவங்கதான் யோவ் கொஞ்சம் அடக்கி வாசின்னதும்..கொஞ்சம் அமைதி ஆனார்.....அருவியில் குளிப்பதற்கு கியூவில் நிற்கும் போது புலம்பிக்கொண்டே இருந்ததால் அவருக்கு முன்னாடி இருந்தவர் "அண்ணாச்சி சென்னையில இருந்தா வர்றீக"...... ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?.......... நீங்க புலம்புறத வச்சிதான்....


"சென்னையிலதான் எதுக்கு எடுத்தாலும் வரிசைனா இங்கயுமா?....."
 "சரி முன்னாடி போங்க நல்லா குளிச்சிட்டு வாங்க என்று வழி விட்டார்............ "

நம்ம பதிவர் குளிக்க ஆரம்பித்ததும் அருவியிலே டிராபிக் ஜாம் ஆயிடிச்சி.....அவருக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் குளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்......நம்ம பதிவர் நாலு பேர் குளிக்கிற இடத்தை இவருடைய தொப்பை மறைத்ததால் வந்த விளைவுதான் இந்த டிராபிக் ஜாம்........ இதை அறியாத நம்ம பதிவர் வாழ்க்கையிலே முதல் முறையா அருவியில குளிச்ச சந்தோசத்தில் இருந்தார்.... அதற்குள் ஒரு காவலர் வந்து நம்ம பதிவரிடம் வந்து" சார் குளிச்சது போதும். பாருங்க எவ்ளோ பேர் வெயிட் பண்றாங்கன்னு" என்றார்...நம்ம பதிவர்" சார் இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் முடிச்சிட்டு வந்திடுறேன்.யோவ் சொன்ன கேக்க மாட்டியா... ஆமா எங்க இருந்து வர்ற...... சென்னையில் இருந்து...

"சென்னையில என்ன பண்ற"....
"நான் பதிவர்ங்க"......
என்னது பதிவரா... பத்திரமெல்லாம் பதிவு பண்றவரா?........."
இல்ல சார் அது வந்து இன்டெர் நெட்ல எழுதி எல்லோருக்கும் மொக்கை போடுவோம்.........".
"ஓ நீங்க அந்த கோஷ்டியா...."


எந்த கோஷ்டி சார்?...... கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து ஆட்களை நேராக பாக்காம நெட் மூலமா திட்டி ஒரு பெரும் கலவரத்தையே உண்டாக்குவீங்களே அந்த கோஷ்டியா????" அப்படினு கேட்டதுதான் தாமதம்................. அடுத்த செகண்டுல நம்ம பதிவர் எஸ்கேப்.

அடுத்ததா பிரானூர் பார்டர்ல என்ன கலாட்டா பண்ணினாரோ.......விசாரிச்சி சொல்றேன்.


அந்த பிரபல பதிவர் இவர்தான்