Monday, August 10, 2009

தமிழின் நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது? + 150

தமிழில் முதல் மியூசிக் சேனல் என்றால் அது சன் மியூசிக் சேனல் தான்........ முதலில் சென்னையில் மட்டும் எஸ்சிவி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சேனல் கொஞ்ச நாட்களில் சேட்டலைட் சேனலாக மாறியது..அதுவரைக்கும் தமிழ் பெருங்குடி மக்கள் "ஹலோ பெப்சி உமாவான்னு" கேட்டுக்கிட்டு இருந்த காலம் போய் புதுப்புது பிகர்களிடம் கடலை போடுவதை சன் மியூசிக் சேனல் தான் ஆரம்பித்து வைத்தது. இந்த பார்முலாவை அனைத்து தமிழ் மியூசிக் சேனல்களும் சரியாப்புடிச்சி நம்மளை மண்ட காய வக்கிறாங்க.

சன் மியூசிக்கிற்கு அடுத்ததா எஸ் எஸ் மியூசிக் சேனல் தென் இந்திய மொழிகளுக்கென்று ஆரம்பித்ததாக சொன்னாலும் இதிலும் தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம்...அதுக்கு அடுத்து ஜெயாமேக்ஸ்,இசையருவி,ராஜ் மியூசிக் அப்படினு வரிசையா இந்த சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும்...அதற்கேற்றார்போல் தினம் தினம் கடலை போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது...

பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பாடல் ஒளிபரப்புறாங்களான்னு கேட்டா கண்டிப்பா இல்லைனு தான் சொல்லனும்......இதுதான் மக்கள் ரசனை இதைத்தான் அவங்க பார்ப்பார்கள் என்று அவர்களே ஒரு முடிவு பண்ணி...நம்ம ரசனையை ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க. புதுப்பாடல்கள் தான் மக்கள் பாப்பாங்கன்னு அவங்க ரைட்ஸ் வாங்கியிருக்கிற மொக்கையான புதுப்பாடல்களை தேஞ்ச ரெக்கார்டு மாதிரி திரும்ப திரும்ப போட்டு மக்களை பார்க்க வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க.

ஒரு மியூசிக் சேனல்னா எல்லா வகையான பாடல்களையும் ஒளிபரப்ப் வேண்டும்...... முக்கியமா மிடில் சாங்க்ஸ் என்று சொல்லப்படும் 1980-1990 வருட பாடல்களை பார்ப்பதே அரிதாகியுள்ளது..........

இதனால முடிவு உங்க கையில.........நீங்களே ஓட்டு போடுங்க எந்த சேனல் நல்ல ரசனையான பாடல்களை ஒளிபரப்பி உங்கள் மனதில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பதை நீங்களே தீமானியுங்கள்.. அப்படியே வலதுபுறம் பாத்து ஓட்டு பதிவிடுங்கள்...... என் பதிவுக்குத்தான் ஓட்டுப்போடமாட்டுக்கீங்க...இதையாவது செய்யுங்க

அப்புறம் இது என்னோட 150வது பதிவு...பதிவு எழுத வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.என்னை பொறுத்த வரைக்கும் நான் பதிவு எழுதுவதைவிட நல்ல வாசிப்பாளனாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும்........என்னுடைய 60பாலோயர்ஸ்க்கும் நன்றி........இதுநாள்வரைக்கும் பொறுமையா என் பதிவையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.....

உங்களுக்காக ஒரு ஸ்பெசல் பாட்டு........எஞ்சாய்....






47 comments:

Anonymous said...

முதல்ல...150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல. எந்த சேனல் என்றhலும் நல்ல மிலோடி சாங்ஸ் போட்ட தான் எனக்கு பிடிக்கும்.

இதுக்கு ஒட்டுபதிவா? இதை புறக்கணிக்கிறேன்(நாங்க அ.தி.மு.க. காரர்கள் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்) கள்ள ஒட்டு போடட்டா?
//
வலதுபுறம் பாத்து ஓட்டு பதிவிடுங்கள்...... என் பதிவுக்குத்தான் ஓட்டுப்போடமாட்டுக்கீங்க...இதையாவது செய்யுங்க
//

ஓ... இப்டி ஒண்ணு இருக்கா... போடுங்கய்யா ஓட்டு அத்திரி பதிவ பார்த்து... எப்டி நம்முடைய தேர்தல் பிரசாரம்.

Anonymous said...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு.

Anonymous said...

ஓராண்டு சாதனை பட்டியில் இட்டு கட்சி ஆரம்பிப்போமா? கட்சி பேரு ரெடி பண்ணுங்க... இப்போதான் யார் யாரோ கட்சி ஆரம்பிக்க போறhங்களே...ம்...ம்.. என்ன பேரு வைக்கலாம்... இருங்க அத்திரி யோசித்து விட்டு வாரேன்.

வந்தியத்தேவன் said...

சனி மியூசிக்குல் இப்போ அட்டுபிகர்களும் தங்கள் சன் பிக்சர்ஸ் பாடல்கள் தான் ஒளிபரப்புவார்கள். எஸ் எஸ் மியூசிக் பிகர்கள் ஒக்கே ஆனால் ஒரே பீட்டர். இசையருவிதான் இப்போ நம்பர் நிஷா, ரியா, திவ்யா, மகேஸ்வரி என கொஞ்சம் அழகான பிகர்களும் நல்ல பாடல்களும் போடுவார்கள். ராஜ்மியூசிக்கில் கூட கல்லு வியாபாரிகளும் சித்த மருத்துவர்களும் தொல்லை கொடுக்கிறார்கள்.

150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

kavi said...

//ஒரு மியூசிக் சேனல்னா எல்லா வகையான பாடல்களையும் ஒளிபரப்ப் வேண்டும்...... முக்கியமா மிடில் சாங்க்ஸ் என்று சொல்லப்படும் 1980-1990 வருட பாடல்களை பார்ப்பதே அரிதாகியுள்ளது..........//

இதிலிருந்தே தெரிகிறது நீங்களும் நம்மைப் போல் 40 வயதைத் தாண்டியவர் என்று.ஜெயா மேக்ஸ் லாம் நீங்கள் பார்ப்பதில்லையா,

SUBBU said...

150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல.

Anonymous said...

kavi said...
இதிலிருந்தே தெரிகிறது நீங்களும் நம்மைப் போல் 40 வயதைத் தாண்டியவர் என்று.
//

அட ... நம்ப தலயுடைய வயச அப்படியே கண்டு பிடிச்சிட்டீங்க...ஹி....ஹி..

உண்மைத்தமிழன் said...

தம்பீ..

150, 1500-ஆக மாறி சாதனை படைக்க வாழ்த்துகிறேன்..!

பதிவில் இட்டிருக்கும் பாடலுக்கு ஒரு சிறப்பு நன்றி..!

நையாண்டி நைனா said...

வாழ்த்துக்கள் மாப்பி வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

150 க்கு வாழ்த்துகள்.

அந்த ‘4’ஆவது வோட்டு நாந்தேன்

துபாய் ராஜா said...

150வது பதிவிற்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் டபுள் செஞ்சுரி அடிங்க.

//என்னை பொறுத்த வரைக்கும் நான் பதிவு எழுதுவதைவிட நல்ல வாசிப்பாளனாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும்........//

இதுவல்லவோ லட்சியம்.இந்த லட்சியத்தைதான் கடந்த 4 நாலு வருஷமா நான் கடைப்பிடிக்கிறேன்.
:))

Anbu said...

150-க்கு வாழ்த்துக்கள் அண்ணா

அத்திரி said...

// கடையம் ஆனந்த் said...
முதல்ல...150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல. எந்த சேனல் என்றhலும் நல்ல மிலோடி சாங்ஸ் போட்ட தான் எனக்கு பிடிக்கும்.//

வா மாப்ளே......


/இதுக்கு ஒட்டுபதிவா? இதை புறக்கணிக்கிறேன்(நாங்க அ.தி.மு.க. காரர்கள் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்) கள்ள ஒட்டு போடட்டா?//

இந்தப்பதிவிலும் அரசியலா.அடங்கவேமாட்டியா????

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
ஓராண்டு சாதனை பட்டியில் இட்டு கட்சி ஆரம்பிப்போமா? கட்சி பேரு ரெடி பண்ணுங்க... இப்போதான் யார் யாரோ கட்சி ஆரம்பிக்க போறhங்களே...ம்...ம்.. என்ன பேரு வைக்கலாம்... இருங்க அத்திரி யோசித்து விட்டு வாரேன்.//

டப்பு எவ்ளோ வச்சிருக்க மாப்ளே.......உங்க ஊர்ல பாதி சொத்து உனக்குத்தான்னு கேள்விப்பட்டேன்..........டப்பு நீ ரெடி பண்ணு கட்சிய நான் காப்பாத்துறேன்

அத்திரி said...

// வந்தியத்தேவன் said...
சனி மியூசிக்குல் இப்போ அட்டுபிகர்களும் தங்கள் சன் பிக்சர்ஸ் பாடல்கள் தான் ஒளிபரப்புவார்கள். எஸ் எஸ் மியூசிக் பிகர்கள் ஒக்கே ஆனால் ஒரே பீட்டர். இசையருவிதான் இப்போ நம்பர் நிஷா, ரியா, திவ்யா, மகேஸ்வரி என கொஞ்சம் அழகான பிகர்களும் நல்ல பாடல்களும் போடுவார்கள். ராஜ்மியூசிக்கில் கூட கல்லு வியாபாரிகளும் சித்த மருத்துவர்களும் தொல்லை கொடுக்கிறார்கள். //

சன்மியூசிக்கிலயும்,இசையருவிலையும் ஒரு பாட்டு போட்டா 10நிமிடம் விளம்பரம் போட்டு டென்சன் படுத்திடுவாங்க............ஜெயா மேக்ஸ்ல இந்த தொல்லையே கிடையாது....முக்கியமா காம்பியர் தொல்லை கிடையவே கிடையாது.......மதியம் 2மணி முதல் 5 மணி வரைக்கும் பாருங்க....

150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

நன்றி வந்தியத்தேவன்

அத்திரி said...

//kavi said...
இதிலிருந்தே தெரிகிறது நீங்களும் நம்மைப் போல் 40 வயதைத் தாண்டியவர் என்று.ஜெயா மேக்ஸ் லாம் நீங்கள் பார்ப்பதில்லையா,//

மிடில் சாங்ஸ் கேட்டா உடனே 40 வயசா..............முடியல... நன்றி கவி


//SUBBU said...
150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல.//

நன்றி சுப்பு

Thamira said...

150 வாத்துகள்.!

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
kavi said...
இதிலிருந்தே தெரிகிறது நீங்களும் நம்மைப் போல் 40 வயதைத் தாண்டியவர் என்று.
//அட ... நம்ப தலயுடைய வயச அப்படியே கண்டு பிடிச்சிட்டீங்க...ஹி....ஹி..//

பயபுள்ளைக்கு சந்தோசத்தை பாரு

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பீ..150, 1500-ஆக மாறி சாதனை படைக்க வாழ்த்துகிறேன்..!பதிவில் இட்டிருக்கும் பாடலுக்கு ஒரு சிறப்பு நன்றி..!//

நன்றி அண்ணே

சரவணகுமரன் said...

ஒட்டு என்ன, இதை பத்தி பதிவே போட்டு இருக்கேன்...

http://www.saravanakumaran.com/2009/07/blog-post_23.html

ஓட்டும் போட்டாச்சி...

அத்திரி said...

//நையாண்டி நைனா said...
வாழ்த்துக்கள் மாப்பி வாழ்த்துக்கள்.//

நன்றி நைனா அண்ணே

//நட்புடன் ஜமால் said...
150 க்கு வாழ்த்துகள்.அந்த ‘4’ஆவது வோட்டு நாந்தேன்//

நன்றி ஜமால் .........

அத்திரி said...

//துபாய் ராஜா said...
150வது பதிவிற்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் டபுள் செஞ்சுரி அடிங்க.
இதுவல்லவோ லட்சியம்.இந்த லட்சியத்தைதான் கடந்த 4 நாலு வருஷமா நான் கடைப்பிடிக்கிறேன்.
:))//

நன்றி துபாய் ராஜா.........

அத்திரி said...

// Anbu said...
150-க்கு வாழ்த்துக்கள் அண்ணா//

வா அன்பு...........நன்றி

அத்திரி said...

ஸ்பெசல் பாட்டு பற்றி யாருமே ஒன்னும் சொல்லலியே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

அத்திரி said...
டப்பு எவ்ளோ வச்சிருக்க மாப்ளே.......உங்க ஊர்ல பாதி சொத்து உனக்குத்தான்னு கேள்விப்பட்டேன்..........டப்பு நீ ரெடி பண்ணு கட்சிய நான் காப்பாத்துறேன்
//

யோ... இத ஊருக்காரன் கேட்டான் துரத்தி துரத்தி அடிப்பான்.வடிவேல் சொல்ற மாதிரி இது உங்க சொத்து... திருப்பி சொல்லு. இது உங்க சொத்து... காமெடி பார்த்திருப்பீங்களே... எதுக்கும் திரும்பி பார்த்து இருக்கிறேன் ஊருக்காரன் இருக்காரன்னு....

இப்பேவே அத்திரி அரசியலுக்கு வரணும்ன்னு... நிறைய பேரு அம்மனுக்கு கூழ் கூத்தாரங்களாம்....

Anonymous said...

மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

நன்றி
ஈழவன்

shortfilmindia.com said...

150வது பதிவுக்கு வாழ்த்துகள்
எனக்கு ஜெயா ப்ளஸ்
சன் மீசீக் ஒரு மொக்கை சேனல்
அட்டு பிகர்கள் உலாவும் சுடுகாடு

shortfilmindia.com said...

யூத்துகளுக்கு இந்த பாட்டு எந்த காலத்துல வந்தாலும் பிடிக்கும்

கார்க்கிபவா said...

என்ன பாட்டுங்க அது..

குளிக்குது ரோசா நாத்து..

இப்ப ஒரு பீட்டு வரும் கேளுங்க... ராஜா ராஜா...

மதிபாலா said...

150 க்கு வாழ்த்துக்கள்....


//வலதுபுறம் பாத்து ஓட்டு பதிவிடுங்கள்...... என் பதிவுக்குத்தான் ஓட்டுப்போடமாட்டுக்கீங்க...இதையாவது செய்யுங்க//

உங்களுக்குமா????

தராசு said...

150 க்கு வாழ்த்துக்கள்.

என்னது இது, எல்லாரும் பாட்டு பாட கிளம்பிட்டீங்க,

என்னய்யா நடக்குது இங்க.

மணிஜி said...

எனக்கு காது சரியா கேக்காது..150 க்கு வாழ்த்துக்கள்..

ஹேமா said...

அத்திரி,இனிய வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் நல்ல பதிவுகள் எழுத வேணும்.பாட்டு நல்லா இருக்கு.பிடித்தமான பாட்டுத்தான்.
வேற என்ன சொல்ல.

அத்திரி முந்தி நான் சூரியன் Fm, ஆஹா Fm இணையத்தினூடாக கேட்பது வழக்கம்.இப்போ இல்லாமல் போய்விட்டது.சரியான கவலை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி said...

இந்த இடுகையை வாசிச்சிட்டு யதேச்சையாகப் பார்த்தேன், நண்பன் 'சன் மியூசிக்' தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்புறம்,

150-க்கு வாழ்த்துக்கள். நம்ம குலத்தில் எல்லோரும் இப்படி பேரும் புகழும் எடுப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. :)))

அத்திரி said...
This comment has been removed by the author.
அத்திரி said...

//shortfilmindia.com said...
150வது பதிவுக்கு வாழ்த்துகள்
எனக்கு ஜெயா ப்ளஸ்
சன் மீசீக் ஒரு மொக்கை சேனல்
அட்டு பிகர்கள் உலாவும் சுடுகாடு//

அது ஜெயா ப்ளஸ் சேனல் இல்லை ஜெயா மேக்ஸ்........ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இதுக்குத்தான் மப்புல பிளாக் பக்கம் வராதிங்கன்னு சொன்னேன்........

அத்திரி said...

// கார்க்கி said...
என்ன பாட்டுங்க அது..
குளிக்குது ரோசா நாத்து..
இப்ப ஒரு பீட்டு வரும் கேளுங்க... ராஜா ராஜா...//

வா சகா...........ஓட்டு போட்டியா???

அத்திரி said...

மதிபாலா said...
150 க்கு வாழ்த்துக்கள்....

நன்றி மதிபாலா

//வலதுபுறம் பாத்து ஓட்டு பதிவிடுங்கள்...... என் பதிவுக்குத்தான் ஓட்டுப்போடமாட்டுக்கீங்க...இதையாவது செய்யுங்க//உங்களுக்குமா????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

// தராசு said...
150 க்கு வாழ்த்துக்கள்
.
நன்றி அண்ணே

//என்னது இது, எல்லாரும் பாட்டு பாட கிளம்பிட்டீங்க,
என்னய்யா நடக்குது இங்க//

பாட்டு நல்லாயிருக்கா அண்ணே

அத்திரி said...

//தண்டோரா இனி... மணிஜி.. said...
எனக்கு காது சரியா கேக்காது..150 க்கு வாழ்த்துக்கள்..
//

நன்றி தண்டோரா

அத்திரி said...

// ஹேமா said...
அத்திரி,இனிய வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் நல்ல பதிவுகள் எழுத வேணும்.பாட்டு நல்லா இருக்கு.பிடித்தமான பாட்டுத்தான்.
வேற என்ன சொல்ல.//

நன்றி ஹேமா

அத்திரி முந்தி நான் சூரியன் Fm, ஆஹா Fm இணையத்தினூடாக கேட்பது வழக்கம்.இப்போ இல்லாமல் போய்விட்டது.சரியான கவலை.//

இணையத்தில் ஏகப்பட்ட தமிழ் வானொலிகள் இருக்கிறதே............

அத்திரி said...

//T.V.Radhakrishnan said...
150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி ஐயா

அத்திரி said...

// ஊர்சுற்றி said...
இந்த இடுகையை வாசிச்சிட்டு யதேச்சையாகப் பார்த்தேன், நண்பன் 'சன் மியூசிக்' தான் பார்த்துக்கொண்டிருந்தான். //

சன் மியூசிக் இப்ப சரியில்ல ........பழைய மாதிரி இல்ல........மிடில் சாங்ஸை மறந்தே போய்ட்டாங்க.இசையருவியும் இதற்கு விதி விலக்கு கிடையாது

அப்புறம்,
150-க்கு வாழ்த்துக்கள். நம்ம குலத்தில் எல்லோரும் இப்படி பேரும் புகழும் எடுப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. :)))//

நன்றி ஊர்சுற்றி

நாஞ்சில் நாதம் said...

150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் தான் முதல் ஆளா வாழ்த்தி இருக்கணும்.. தாமதத்துக்கு மன்னியுங்க நண்பா.. 150 க்கு வாழ்த்துகள்.. நமக்கு புடிச்ச சானல்னா அது சன் ம்யூசிக்கும், இசையருவியும்தான்.. ஆமா, அதுக்கு எதுக்கையா பாவடை பாட்டெல்லாம் போட்டு இருக்கீங்க?

அத்திரி said...

//நாஞ்சில் நாதம் said...
150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி நாஞ்சில் நாதம் ........

அத்திரி said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
நான் தான் முதல் ஆளா வாழ்த்தி இருக்கணும்.. தாமதத்துக்கு மன்னியுங்க நண்பா.. 150 க்கு வாழ்த்துகள்.. நமக்கு புடிச்ச சானல்னா அது சன் ம்யூசிக்கும், இசையருவியும்தான்.//

நன்றி நண்பா.........ஜெயா மேக்ஸ் பாக்குறதில்லையா


//. ஆமா, அதுக்கு எதுக்கையா பாவடை பாட்டெல்லாம் போட்டு இருக்கீங்க?//

இது ஸ்பெசல் பாட்டு .......