Sunday, October 12, 2008

எங்க ஊர்-- மின்வெட்டு--போக்குவரத்து

5 நாள் விடுமுறையில் சென்ற வாரம் ஊருக்கு சென்று வந்தேன். அந்த 5 நாட்களும் இரவில் தூக்கமே கிடையாது. காரணம் மின்வெட்டு. இந்த வாரம் தான் அரசு 6 மணி நேரம் மின்வெட்டு என அறிவித்து இருக்கிறது. ஆனால் பல மாதங்களாக குறைந்தது 8 மணி நேரம் என பாரபட்சம் பார்க்காமல் ( வடிவேலு பாணியில்) மக்களை நன்றாகவே தூங்க வைக்கிறார்கள்...!!! மின் வெட்டு நேரம் என்றால் அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை அல்லது அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை, காலை 6 மணி முதல் 9 மணி வரை அல்லது காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாலை 8 மணி முதல் 9 மணி வரை அல்லது 11 மணி முதல் 12 மணி வரை அட்டவணை போட்டு தாக்கிட்டு இருக்காங்க. அய்யா மீடியாக்களே சென்னையைத் தாண்டி கொஞ்சம் வந்து பாருங்க. சென்னையில் 2 மணி நேர மின்வெட்டுக்கே பயங்கரமாக அலறிய மீடியாக்களை இப்போது தேடவேண்டியிருக்குது


போக்குவரத்து

என்னுடைய பத்து வயதில் என்ன போக்குவரத்து வசதி இருந்ததோ அதேதான் இப்போதும் என்னுடைய கிராமத்தில். என்ன ஒரு வித்தியாசம் என்றால் பக்கத்து ஊர் வரைக்கும் மினி பஸ் வசதி. அவ்வளவுதான் ( பக்கத்து ஊருக்கு 2 கிலோமீட்டர் நடக்கனும்) சென்னை மநகர போக்குவரத்துக்கழகத்தின் M போர்டு வியாதி தற்போது தென் மாவட்டங்களிலும் அறிமுகமாகியிருக்கிறது. பேசாம பஸ் கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தலாம்.எதுக்கு மறைமுகமாக இந்த மாதிரி உயர்த்தனும்!!!!!

பங்குச்சந்தை & வைகோவின் நிலை குமுதம் கேலிச்சித்திரம்