Thursday, October 29, 2009

சமையல் குறிப்புகள்( கல்யாணம் ஆகியும் பேச்சிலராக இருப்பவர்களுக்கு மட்டும்)

பேச்சிலரா இருக்கும்போதே எனக்கும் ஓட்டல் சாப்பாடுக்கும் சுத்தமா ஆகாது..அதனால கஷ்டம் பாக்காம ருசி பாக்காம ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்கு சமைச்சே சப்பிட்டேன்..... என்ன வாரத்துல மூணு நாள் ரசம் அப்பளம்,மீதி நான்கு நாள் புளிசாதம்,லெமன் சாதம் அப்படியே போய்க்கிட்டு இருந்தது.........சைவ சமையலே அரைகுறை என்பதால் நோ அசைவம்.............



கல்யாணம் முடிந்த பிறகு சமையல் ரூமா? அது எங்க இருக்கு அப்படின்ற ரேஞ்சுக்கே போயாச்சு....... தங்கமணியின் சமையல் நல்லாயிருக்கோ இல்லையோ சாப்பிட்டுத்தான் ஆகனும்......... சாப்பாடு ருசி மறந்து போனதுமல்லாமல் சமையலும் மறந்து போயிடிச்சு எனக்கு....


தற்பொழுது மீண்டும் பேச்சிலராக இருப்பதால் நம்மளோட பழைய சமையல் அனுபவத்தை கொண்டுவருவதற்கே ஒரு வாரம் ஆகுது......ஓட்டலுக்கு போனா டாக்டர் கிட்ட போகவேண்டியிருக்கும் என்ற பயம் வேறு......சாம்பார் பொடி டப்பா எங்க இருக்குனு கேக்க ஆரம்பிச்சாலே காதுல ரத்தம் வந்துரும்.....அதனால குத்து மதிப்பா ஏதாவது பொடிய போட்டு கலக்க வேண்டியதுதான்.



மேட்டருக்கு வருவோம்...... என்னைப்போல் பல ரங்கமணிகளும் இந்த கஷ்டத்தை அனுபவிப்பதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்தே நிமிடத்தில் முடியக்கூடிய டிபன் வகைகளை தருகிறேன்...........முயற்சித்து பார்க்கவும்........

கோதுமை தோசை.

கோதுமைமாவில் பூரி சப்பாத்தி பண்ணுவதற்கு ரொம்ப நேரமாகும்.நம்ம எனர்ஜி வேஸ்ட்டாகும்... கோதுமைமாவைதேவையான அளவு தண்ணியில் கரைத்துகொள்ளவும்.தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும். முடிஞ்சா வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.....சுடச்சுட இந்த தோசையை சாப்பிட்டால் சைடிஷ் எதுவும் தேவையில்லை......ஆறிப்போச்சுன்னா...

சேமியா உப்புமா

கடலைபருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய்,கடுகு ஆகியவற்றை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்...தண்ணீர் ஊற்றி 5நிமிடங்கள் கொத்திக்க விடுங்கள்.பின் சேமியாவை போட்டு நன்றாக கிளறி விடுங்கள்..... இதற்கு சீனி நல்ல சைடிஷ்


ரவை உப்புமா


மேலே சொன்ன சேமியா உப்புமா செய்வது போல் சேமியாவுக்கு பதில் ரவையை சேர்த்து கிளறவும்..

எச்சரிக்கை


மேற்ச்சொன்னவைகளை உங்க தங்கமணிக்கு செஞ்சு கொடுத்து நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல..