Sunday, March 29, 2009

சென்னை எஸ்சிவி-- ஹாத்வே கேபிள் யுத்தம்--- ஒரு அலசல்....

கேபிள் டிவியின் அடுத்த கட்டமான டிடிஎச் வளர்ந்து வரும் இந்நிலையில் சென்னையில் தொழில் போட்டி காரணமாக எஸ்சிவியும் ஹாத்வேயும் அடித்துக்கொள்ளாத குறையாக களத்தில் இருக்கின்றன.. இவர்களுக்குள் ஏற்படும் இந்த மாதிரியான போட்டிக்காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவது கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மட்டுமே. இந்தியாவிற்கு டிடிஎச் டெக்னாலஜி வந்து 5 வருடங்கள் தான் ஆகிறது... அதற்கு முன்பு வரை கேபிள் டிவி ஆப்பரேட்டகள்தான் ஒன் மேன் ஆர்மி ஆக இருந்தனர்... எப்போது இந்த தொழிலில் அரசியல் குறுக்கிட ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து பாதிக்கப்படுது இந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தான்...


கொஞ்சம் ஒரு 10 வருசம் முன்னாடி போகலாம்.

10வருசம் முன்னாடி சென்னையில் ஒவ்வொரு ஏரியாவிலும் குறிப்பிட்ட ஆப்பரேட்டர்கள் எம் எஸ் ஓக்களாக செயல் பட்டுக் கொண்டிருந்தனர்... அப்போதைக்கு பெரிய எம் எஸ்ஓ என்று பார்த்தால் சிட்டி கேபிளும், ஹாத்வே மட்டுமே... இந்த சூழ்நிலையில் சூப்பர் டூப்பர் என்ற ஒரு கம்பெனி சென்னையில் உள்ள அனைத்து ஆப்பரேட்டர்களையும் தனக்கு கீழ் கொண்டுவர அஜால் குஜால் வேலையை செய்ய ஆரம்பித்தது.. அது வரை இந்த தொழிலை அமைதியாக நடத்திக்கொண்டிருந்த கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு ஆரம்பித்தது தலைவலி.. சூப்பர் டூப்பர் பின்னால் அதிமுக இருந்ததும் ஒரு காரணம்.. மேலும் சூப்பர் டூப்பர் அடாவடியாக செயல் பட்டதாலும் பல அரசியல் குறுக்கீடு அதிகமாக ஆப்பரேட்டர்களின் நிலை தடுமாறத் தொடங்கினர். அதுவரை வெறும் பார்வையாளராக கோலாச்சி கொண்டிருந்த சன் குழுமத்தினர் சில ஆப்பரேட்டர்களின் உதவியுடன் எஸ்சிவியை ஆரம்பித்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்களில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆப்பரேட்டர்கள் திமுகவினராக இருந்தது வசதியாக போய்விட்டது.. 1999ல் எஸ் சி வி சென்னையில் ஆரம்பிக்கும்போது ஹாட்வேயும், சிட்டி கேபிளும் எம் எஸ் ஓக்களாக இருந்தது... சிட்டி கேபிளின் சாம் ராஜ்யம் எஸ் சி வியினால் முடித்து வைக்கப்பட்டது... அந்த நேரத்தில் சென்னையில் சுமார் 60 சதவீத இணைப்புகள் ஹாத்வேயிடம் இருந்தது.



2003ஆம் ஆண்டு எஸ் சி விக்கும் ஹாத்வேக்கும் கே டிவியை வைத்து பிரச்சினை கிளம்பியது... அதை சாக்காக வைத்து சன் குழுமமம் கே டிவியை ஹாத்வேக்கு தராமல் இரண்டு நிறுவனங்களும் கோர்ட்டை நாடியது... கேடிவி இல்லாத காரணத்தால் ஹாத்வேயின் பல ஆப்பரேட்டர்கள் எஸ் சிவிக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்... இதனால் சென்னையின் கேபிள் இணைப்பில் சுமார் 80 சதவீதம் எஸ் சிவியின் கீழ் வந்தது... இதே நேரத்தில் ஹாத்வே நிறுவனத்திற்கு ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு இருந்தும் தமிழ் சேனல் இல்லாத காரணத்தால் ஹாத்வேயால் ஒன்றும் செய்ய இயலவில்லை..அதுவரை இலவசமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த சன் டிவியும் கட்டண சேனலாக மாறியதால் ஹாத்வேயின் நிலை மேலும் சிக்கலானது... இந்த பிரச்சினையும் கோர்ட் வரை சென்றது....

 இந்நிலையில் கோர்ட் தீர்ப்பின் மூலம் சன் நெட்வொர்க் ஹாத்வேக்கு தனது சேனல்களை தர சம்மதித்தது.. அப்புறம் 2007 ல் நடந்த பிரச்சினை உங்களுக்கே தெரியும் இந்த பிரச்சினைக்கு பிறகு ஆளும் திமுகவின் ஆதரவு ஹாத்வேக்கு கிடைக்க மீண்டும் கேபிள் யுத்தம் ஆரம்பமாகியது... சென்னையில் மட்டும் அல்லாது எஸ் சிவியின் கட்டு பாட்டில் உள்ள நகரங்களிலும் குறிப்பா மதுரையில் ராயல் கேபிள் விசன் ஆரம்பித்து மதுரையில் சன் நெட்வொர்க் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டது... சென்னையில் பழையபடி ஆப்பரேட்டர்கள் ஹாத்வேயில் இணைந்தனர்... இணைத்து வைக்கப்பட்டனர்.... சில புத்திசாலி ஆப்பரேட்டர்கள் இரண்டு நிறுவனத்தின் இணைப்புகளையும் வைத்திருந்தனர்.... நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று... இவ்வளவு நடந்தும் சன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இயலாத நிலையில் அரசு கேபிள் டிவி அவசரமாக ஆரம்பிக்கப்பட்டது.. அரசு கேபிளும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை காரணம் ஸ்டார் குழுமம் மற்றும் சன் நெட்வொர்க் தனது சேனல்களை வழங்கவில்லை...தமிழ்நட்டில் உள்ள பெரும்பான்மையான ஆப்பரேட்டர்கள் திமுகவினராக இருந்தும் அரசு கேபிள் செயல் படாததற்கு சன் நெட்வொர்க் சேனல்களும் ஒரு காரணம்.. சன் சேனல்களை புறக்கணித்து தங்கள் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும் ஒரு காரணம். இப்போது அரசு கேபிள் இருக்கிறதா என்பதே ஒரு சந்தேகம்.....



போன வருசம் கடேசியில் மீண்டும் கண்கள் பணித்து இதயம் இனித்ததும் பழைய ஆட்டங்கள் ஆரம்பித்து விட்டன.. கிட்டத்தட்ட 1மாதமாக நடக்கும் கேபிள் யுத்தம் இன்று வெளிவந்து விட்டது... எஸ் சிவி இணைப்புகள் உள்ள ஏரியாக்கள் அனைத்திலும் இன்று காலை முதல் படம் தெரியவில்லை... காரணம் கேட்டால் எதிர் நிறுவனத்தினர் சென்னையில் உள்ள எஸ் சிவிக்கு சொந்தமான அனைத்து கேபிள்களையும் துண்டித்து விட்டதாக தகவல்...



ஒட்டு மொத்தமாக இந்த ஆட்டத்தில் பாதிக்கப்படுவது


1. கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள்


2. மக்கள்


3. செட் டாப் பாக்ஸ்


இந்த இரு நிறுவனங்களும் அடித்து கொள்வதன் மூலம் டிடி எச் இணைப்பு அதிகமாவதற்கும் காரணமாகிறார்கள்..


இந்த இரண்டு பூனைகளுக்கும் மணி கட்ட போவது யார்???????????

Friday, March 27, 2009

கபடி ,கபடி,கபடி,கபடி (வெண்ணிலா கபடிக் குழு)

என்னடா இது படம் வந்து ரொம்ப நாளாச்சே இப்ப விமர்சனமா? அப்படியெல்லாம் கேட்கக்கூடாது.இன்றைக்குத்தான் வெண்ணிலா கபடி குழு படம் பார்த்தேன்.... பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் படங்களின் வரிசையில் கிரமத்து நிகழ்வுகளை கண் முன்னே கொண்டுவந்திருக்கும் படம் இந்த கபடி படம். முன்னிரண்டு படங்களும் கிராம வன்முறையையும், காதலையும் சொல்லிய படங்கள்.இவற்றிலிருந்து வேறுபட்டு முழுக்க முழுக்க கபடியை மையமாக வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.



இயக்குனர் சுசீந்திரன் காட்சியமைப்புகளுக்கும் வசனத்திற்கும் மெனக்கெடவில்லை. ஒரு கிராமத்தில் பொங்கல் பண்டிகை நடந்தால் என்ன நிகழ்வுகள் இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்திருப்பதில் அவரது சாமர்த்தியம் பலே.... புதுமுகம் விஷ்ணு கிராமத்து இளைஞனாக நடிப்பில் பாஸாகிவிட்டார்... கதாநாயகியிடம் பேசும் போது வெட்கப்படுவது முதற்கொண்டு எல்லாக்காட்சியிலும் அசத்துகிறார்...அவரின் தோழர்களாக வரும் அனைவரின் நடிப்பும் நம்மை கட்டிப்போடுகிறது.. அதுவும் பழனி மேட்சில் ஒரு பாயிண்டில் ஜெயித்ததாக குண்டு இளைஞன் கூறுமிடம்...அதற்கு அந்த தாத்தா நான் சாகிறதுக்குள்ள நீங்க கப்பு வாங்கிடுவீங்களா??? நக்கலாக கேட்பது.. உரியடி திருவிழாவில் மாமியாரின் ம்னண்டையை பிளக்கும் காட்சி, முக்கியமா பரோட்டா சாப்பிடும் போட்டி காட்சி என படம் முழுக்க கதையோடு ஒட்டிய நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலம்...

இந்த படத்திற்கு கதாநாயகி தேவையா?? என்ற கேள்வி எழுந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் சரண்யா...அந்த குட்டி கிராமத்தில் கேமரா சும்மா பூந்து விளையாடுது... பயிற்சியாளராக வரும் கிஷோர் இருகிய முகத்துடன் அருமையாக நடித்திருக்கிறார்... மதுரையில் போட்டி நட்க்கும் காட்சியில் ஆரம்பிக்கும் வேகம் கிளைமாக்ஸ் வரை பறக்கிறது... சாதி வெறிக்கு சவுக்கடி கொடுக்கும் இடங்களில் வட்டார மொழி பின்னி பெடலெடுக்குது.



சைக்கிளில் செல்லும் ஹீரோவுக்கு வழி கொடுக்கும் பஸ் டிரைவர்... தூரத்து சொந்தம் என சொல்லும் நடுத்தர வயதுக்காரர்... அவருடைய மகள் என ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கிறது... கபடி போட்டி காட்சிகள் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். ஒவ்வொரு போட்டிக்கும் சுவாரஸ்யம் கூடுகிறது... படத்தில் ஒட்டாதது கிளைமாக்ஸ் மட்டுமே.. இந்த படத்திற்கு இந்த கிளைமாக்ஸ் தேவையா என்ற கேள்வியும் எழுகிறாது.... ஒரு வேளை கிளைமாக்ஸ் மட்டும் பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் படங்களின் சென்டிமென்டோ என்னவோ??


மொத்தத்தில் விழுந்து கிடக்கும் கபடி விளையட்டுக்கு ஒரு ஆக்ஸிஜன் இந்தப் படம்....


டிஸ்கி: நான் எழுதும் முதல் திரைவிமர்சனம் இதுதான்... ஓட்டு போட்டு பதிவ சூடாக்கிருங்க...

Monday, March 23, 2009

தேர்தல்-- கூட்டணி குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பமாகுது.. ஆனால் பல மாநிலங்களில் கட்சிகல் தங்களுடைய கூட்டணி குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் இன்னும் தடுமாற்றத்துடன் இருக்கின்றன. மாநிலக் கட்சிகளின் ஆட்டத்தை காங்கிரசாலும், பிஜேபியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.. இதுல மூன்றாவது அணிய வேற ஆரம்பிச்சிட்டாங்க.... இந்த உச்சக்கட்ட குழப்பத்தில் அரங்கேற்ம் காமெடி காட்ட்சிகள் மக்களை சலிப்படைய செய்திருக்கிறது.


 காங்கிரசுக்கு நாமம் போட்ட லல்லு


பீகாரில் மொத்தமுள்ள தொகுதிகளில் 3 தொகுதியை மட்டுமே காங்கிரசுக்கு ரொம்ப பெரிய மனசு பண்ணி ஒதுக்கினார் லல்லு. ஆனா காங்கிரசு "ஐயா நாங்க நாட்டையே ஆளுறவங்க கொஞ்சம் மேல போட்டுக் கொடுங்க என காலில் விழாத குறையாக கெஞ்சி பார்த்தும் லல்லு மசியவில்லை... வேறு வழியில்லாமல் காங்கிரசு 37 தொகுதிகளில் தனித்து போட்டி என அறிவித்து விட்டது.இவ்ளோ நடந்த பிறகும் லல்லு தான் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய்ப்பொவதில்லை என்றும் இன்னும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருப்பதாகவும் கூறுகிறார்....

கம்யூனிஸ்ட்களின் உச்சக்கட்ட காமெடி அறிக்கை



சில மாதங்களுக்கு முன்பிருந்து காங்கிரசை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் தேர்தலுக்கு பிறகு மதச்சர்பற்ற அரசு அமைய காங்கிரஸ் தங்களுக்கு உதவ வேண்டும் என்று பிரகாஷ் கரத் அறிக்கை விட்டுள்ளார்... இதுதான் இந்த ஆண்டின் சிறந்த அரசியல் பல்டி.... வாழ்க கம்யூனிஸ்ட்களின் மதச்சார்பின்மை


தமிழகத்தில் கட்சிகளின் நிலை


இன்று வரை தமிழகத்தில் இன்னும் தெளிவான கூட்டணி அமையவில்லை..காரணம் தேமுதிக மற்றும் பாமக... மக்களுடந்தான் கூட்டணி என்று விசயகாந்த் அறிவித்தாலும் அவர் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரவில்லை...40 தொதிகளுக்கும் வேட்பாள்ரை அறிவித்தாலும் மதுரைக்கு தெற்கே தேமுதிகவின் நிலை பரிதாபம்தான்.. காரணம் போன சட்டமன்றதேர்தலில் மதுரை மற்றும் வடதமிழகத்தில் கணிசமான வாக்குகள் பெற்ற தேமுதிக திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் சொற்ப வாக்குகளே வாங்கியது. இருந்தாலும் ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி அப்படின்றாரோ கேப்டன்.


பாமகவின் வியாபாரக்கணக்கு இன்னும் முடியவில்லை போலும்...அதனாலதான் இன்னும் ஒரு தெளிவில்லாமல் இருக்காங்க போல. எப்பவுமே அய்யா சூப்பரா கணக்கு போட்டு கச்சிதமா முடிப்பார்.... இப்ப என்ன ஆச்சு???... இப்ப இருக்கிற அமைதியை பார்த்தால் அம்மாவுடன் ஐக்கியமாகிவிடுவார் என்பது போல் தெரிகிறது.


தமிழகத்தில் பிஜேபியின் நிலைதான் மிக பரிதபமாக இருக்கிறது.. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்த அம்மா இப்படி நட்டாத்துல விடுவாங்கன்னு கனவுல கூட நினைத்திருக்கமாட்டாங்க.... கவலையேப்படாதிங்க தேதல் முடிவு இந்திய அளவில் உங்களுக்கு சாதகமாச்சுன்னா அமமா உங்களுக்கு கண்டிப்பா கை கொடுப்பாங்க.


மொத்தத்தில் நாளுக்கு நாள் தேர்தலை முன்னிட்டு மிக சிறப்பான காமெடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன.. மக்களே உசாரா இருங்க........

Saturday, March 21, 2009

ரேஷன்-சீனி, கோதுமை அரிசி -ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....

அப்படி இப்படினு பள்ளிக்கரணை முகவரிக்கே ரேஷன் கார்டை மாற்றிவிட்டேன். இந்த மாதம் ரேஷனில் பொருள் வாங்கனும் என்பதால் போன புதன் கிழமை ரேஷன் கடைக்கு சென்றிருந்தேன்.. கூட்டம் சற்று அதிகமாவே இருந்தது. என்னன்னு கேட்டா இன்னைக்குத்தான் அரிசி போடுறாங்களாம்.. ஆண்கள் வரிசையைவிட பெண்கள் வரிசை நீண்டிருந்தது..கடைக்காரர் ரொம்ப டென்சனா பில் போட்டுக்கிட்டு இருந்தார். அவரின் உருவமும் உயரமும் நடிகர் செந்திலை போன்று இருந்ததாலோ என்னவோ பெண்கள் வரிசையில் இருந்து அவரை பற்றி ஒரே கமெண்ட். ஆண்கள் வரிசை மிக அமைதியாக பெண்கல் வரிசை தள்ளுமுள்ள்விலும், சண்டையிலும் கடைக்காரர் டென்சன் ஆகிட்டார்.

"ஏம்மா இப்படி சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா நான் பில் போடமாட்டேன்.."

"அது எப்படி நான் பக்கத்தில் வந்ததும் பில் போடாம இருக்கீங்க இவரு எப்பவுமே இப்படித்தான்.. "நமட்டு சிரிப்புடன் நடுத்தர வய்து பெண்மணி

'ஆம்பிளைங்க எவ்ளோ அமைதியா நிக்காங்க... ஏம்மா இப்படி"

"என் அருகில் நின்றவர் நாங்கெல்லாம் தண்ணி உள்ள போற வரைக்கும் தான் அமைதி... அதுக்கப்புறம்"

"நானும் ஒவ்வொரு மாசமும் கவனிக்கிறேன் நீ வேற பொருள் எதுவும் வாங்க மாட்டேங்குற.. அட்த்த மாசம் எப்படி பொருள் வாங்குறன்னு பாக்குரேன்.".. இது கடைக்காரர் ஒரு பெருசுவிடம் காட்டமாக சொன்னது.

என் முறை வந்தது "என்ன சார் வேணும்?"

"சீனி, கோதுமை அரிசி பாமாயில்"

"வேற ஏதும் ?"

"கடுகு இருக்கா?"

"இல்லை"

"மிளகு?"

"இல்லை"

"அப்ப எதுவும் வேணாம்."

"வேற ஏதாவது வாங்கனும் முதல் தடவ வாங்குறீங்க"

"அதான் பாமாயில் வாங்கிட்டேனே.."...

இல்ல சார் இந்தாங்க என்று கோல்கேட் பற்பசையை கையில் வலுக்கட்டாயமாக திணித்தார்

வலுக்கட்டாயமாக இதை வாங்கித்தான் ஆகனும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரையோ என்னவோ????.... வீட்ல வந்து வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம் பற்பசை வாங்கியதுக்காக..

-----------------------*--------------------------*-------------------------------------*-------------------
ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....


ஒவ்வொருவாட்டியும் ஊருக்கு போறதுக்கு டிக்கெட் ரிசர்வேசன் பண்ணுவதற்கு வரிசையில் நின்னு மண்டை காய்வதாலும், சர்டிபிகேட்ல அது சொத்தை இது சொத்தன்னு அது வேற டென்சன் படுத்துவதாலும் இந்த முறை ஆன்லைன் ரிசர்வேசன் பண்ணலாம் அப்படினு நெட் ஓப்பன் பண்ணி உள்ள போனா ஜெனரல் ,சீனியர் சிட்டிசன் கோட்டா இருந்தது.. ஆனா உடல் ஊனமுற்றோருக்கான கோட்டா எதுவும் அந்த ரிசர்வேசன் பக்கத்தில் இல்லை..... ரெயில்வே கால் சென்டருக்கு போன் பண்ணி கேட்டா சரியான பதில் இல்லை.


நீங்களே சொல்லுங்க அப்ப என்ன இதுக்கு ஆன் லைன் ரிசர்வேசன் இருக்கு? அது யாருக்காக...

Tuesday, March 17, 2009

சிவசைலம் -- கடனா நதி அணை--- படங்கள்

சிவசைலம் கடனா நதி அணை தென்காசி-அம்பசமுத்திரம் மெயின் ரோட்டில் ஆழ்வார்க்குறிச்சியில் இருந்து சுமார் 8கி.மீ தூரத்தில் இருக்கிறது... மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த அணை அமைந்துள்ளது... இந்த அணைக்கு தோணியாறு மற்றும் கல்லாறுகளில் இருந்து வரும் நீர்தான் கடனா அணையில் தேக்கப்படுகிறது. தோணியாறு அணையில் வந்து கலக்குமிடம் பனிஞ்சி என அழைக்கப்படும்.... இந்த இடம் மிக அருமையாக இருக்கும்.... அணையின் அடிவாரத்தில் உள்ள பூங்கா பரமரிப்பின்றி புதர்களாக மண்டி கிடக்கிறது.. மற்றபடி ஒரு அருமையான இயற்கை சூழல் நிறைந்த இடம் ...........ஒரு வாட்டி போய் பாருங்கடே...........



தூரத்தில் தெரிவதுதான் எங்க ஊரு
தோணியாறு




டிஸ்கி: புது கம்பெனியில் ஆணி புடுங்குற வேலை அதிகமா இருப்பதால் நான் ரொம்ப பிசி.மேலும் எனது பாலோயர்ஸ் லிஸ்ட் காணாம போயிடிச்சி..யாராவது கம்பியூட்டர் புலிகள் இருந்தா சொல்லுங்க.... நம்ம ஜமால் சொன்ன முறையிலும் வரல......... படங்கள் தந்து உதவிய தம்பி மீரான் அன்வர்க்கு ஒரு ஸ்பெசல் டேங்சு..http://www.meerananwar.blogspot.com/

Tuesday, March 10, 2009

தேர்தல் லவ்வுகளும்-- மேரேஜ்களும்-- டைவர்ஸ்களும்...

மக்களவைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தங்களுடைய வேலையை ஆரம்பித்துவிட்டன... இதில் பல டைவர்ஸ்களும்,மேரேஜ்களும்,லவ்வுகளும் வரும் தேர்தல் தேதிக்குள் நடக்கலாம். இந்திய அளவில் 10 ஆண்டு காலமாக கொஞ்சி குலாவிய பிஜேபியும்,பிஜேடியும் டைவர்ஸ் பண்ணிக்கொண்டன.இதில் புது ஜோடியாக பிஜேடியுடன் கம்யூனிஸ்ட்கள் இணைந்து கொண்டது. மிகப்பெரிய காமெடி... அதேப்போல் காங்கிரசுக்கும்,எஸ்பிக்கும் இடையே புகைச்சல் வெளியே வந்துக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு கட்சிகளோட தேர்தல் லவ்,மேரேஜ், டைவர்ஸ் எப்படினு சொல்றேன்.. யாரும் சீரியஸா எடுக்க கூடாது.. ஒன்லி காமெடியா எடுத்துக்கணும்.... சொல்லிட்டேன்



திமுக-- காங்கிரசு ( கணவன் --மனைவி)


2004ல் புதுமணத் தம்பதிகளான திமுகவும் காங்கிரசும் இப்பவும் சோடியா இருக்குறது பல பேர் கண்ணை உறுத்துகிறது... இடைப்பட்ட காலங்களில் பல புகைச்சல் ஏற்பட்டாலும் தற்போது ஒருவரை ஒருவர் தாங்கிப்பிடித்து உறுதியாக நிற்பதை பார்த்தால் கண்ணுல தண்ணிதான் வருது. திமுகவுக்கு இது பாதுகாப்பாக தெரிந்தாலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதால் காங்கிரசுக்கு இளம் பெண்ணான தேமுதிக மேல் ஒரு கண்.. ஆனா இளம்பெண் தங்கள் குடும்பத்தில் வருவது திமுகவுக்கு கொஞ்சம் பயம்... ரெண்டு பெண்களும் சேந்து நமக்கு ஏதாவது வச்சிட்டாங்கன்னா.... இது போக காங்கிரசுக்குளே ரெண்டு அணி இருக்கு திமுக காங்கிரசு--அதிமுக காங்கிரசு... இந்த ரெண்டையும் சாமாளிப்பதற்கு திமுக தண்ணி குடிக்கனும் போல... அதனால் குடும்பத்துக்குள்ள என்னதான் உள்குத்து வேலை நடந்தாலும் வெளியே எப்பவுமே ஒற்றுமைதான்.. வேற வழியில்ல ... இப்போதைக்கு திமுகவுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருந்தாலும் 5 ஆண்டுகால மத்திய அரசின் சாதனைகளையும், மூன்றாண்டுகால திமுக அரசின் சாதனைகளையும் ஒழுங்காக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2004ல் பிடித்த இடங்களில் பாதியையாவது தக்க வைக்கலாம்.. அதை விட்டு நாங்க 1975ல் இதை செய்தோம் அப்படினு ஆரம்பிச்சா கஷ்டம்தான்..


அதிமுக- மதிமுக- கம்யூனிஸ்ட் ( சர்வாதிகாரி-அல்லக்கை- புதுத்தொடுப்பு)
 

அம்மா 2004ல் வாங்கிய பூஜ்ஜியத்தை அவ்ளோ எளிதில் மறக்க மாட்டார்கள்..அதனால் இந்த வாட்டி எடுக்கிற ஒவ்வொருஅடியையும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் எடுத்து வைக்கிறாங்க.. அதிமுக-மதிமுக இருவருக்குமே கொள்கை அளவில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தாலும் ஏதோ ஒன்னு ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வைக்குது... இப்ப கம்யூனிஸ்ட்டும் ஒன்னா சேர்திருப்பதால் அம்மா கூட்டணி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருப்பதா தெரியுது... எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு... அனா அம்மாவோட பிரச்சாரம் தான் கொஞ்சம் அவங்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி... உதாரணம் திருமங்கலம் இடைத்தேர்தல்... இந்த இடைத்தேர்தலின் போது ஆளும் திமுகவின் மேல ஏகப்பட்ட பிரச்சினை...அம்மா ஒழுங்கா அதைப் பற்றி பேசியிருந்தா திருமங்கலத்துல ஒரு கடும் போட்டியை கொடுத்திருக்கலாம்... ஆனா என்ன செஞ்சாங்க.. தனிநபர் தாக்குதாலில் தேவையில்லாம பேசி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டாங்க... இதை தவிர்த்து மத்திய மாநில அரசின் மேலுள்ள புகார்கள்,பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்த்தால் அம்மாவுக்கு ஜெயம்..........


பாமக ( ஒரிஜினல் அரசியல் கம்பெனி )



எந்த தேர்தல் அய்யாவோட கட்சி மதில் மேல் பூனை அப்படின்ற அளவுக்கு வந்திடும்.சரியான நேரத்தில யாருடனாவது ஒட்டிக்கொண்டு ஆட்சிக்கு ஆட்சி பவரில் இருப்பதுதான் அய்யாவோட கொள்கை... இந்த வாட்டி யாரோட அக்ரிமெண்ட் போடப்போறாங்களோ? மாநிலத்தில் ஒரு கொள்கை, மத்தியில் ஒரு கொள்கை இதுதான் பாமகவின் தாரகமந்திரம்... உதாரணம் இலங்கைப்பிரச்சினை



தேமுதிக ( இளம் கன்னி)


திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பு வரைக்கும் இந்த இளம் பெண் மேல் எல்லோருக்கும் ஒரு கண்... கடைகண் பார்வை கிடைக்காதா என்று. வெளியில் ஆயிரம்தாம் திட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள் எல்லா கட்சிகளுக்குமே இதன் மேல் ஒரு இது... ஆனா இடைத்தேர்தலுக்கப்புறம் இந்த இளம் பெண்ணின் நிலை தான் பாவம்... திமுகவா அதிமுகவான்னு குழம்பி போய் மண்ட காஞ்சிட்டு இருக்கு.... இருந்தாலும் கேப்டன் அசரமாட்டார்.. இவங்களுக்குன்னே ஒரு டயலாக் இருக்கு அரசியல்ல நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது...... பார்க்கலம் இந்த கன்னிப்பெண் யாரோட லவ்வுதுன்னு..


இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க...


விசிக வின் நிலை????

Sunday, March 8, 2009

தங்கமணியும் ---- தலைவலியும்-- பகுதி-2

மகளிர் தின வாழ்த்துக்கள்

தங்கமணி ஊருக்கு போன பிறகு என்னோட பேச்சிலர் ஆடடம் தானாக அதிகமாயிடிச்சி மறுபடியும் .. ஊருக்கு கூப்பிட போனும் அதுக்காக ஆபிஸ்ல ரெண்டு நாள் பர்மிசன் போட்டு வீட்டை நன்றாக சுத்தம் செய்வதே வேலையாபோச்சு. ஊருக்கு பஸ் ஏறின பிறகும் ஒரு சந்தேகம் எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டோமா அப்படின்னு.... 4 பாட்டில் இருந்திச்சி எல்லாத்தையும் வெளியில கடாசிட்டமா அப்படினு ஒரு மிகப்பெரிய சந்தேகம் ...ஆஹா மாட்டினா கஞ்சி முதற்கொண்டு எதுவுமே கிடைக்காதே...((((( சண்டை போடுறதுக்கு உடம்புல தெம்பு கிடையாது அவ்வ்வ்வ்!!!

!தங்கமணியும் சென்னைக்கு வந்தாச்சி....வீட்டைத் திறந்தவுடன்..

"ஸ்மெல் இப்படி அடிக்குது" ( ஆஹா வீட்டை கிளீன் பண்ணினதுக்கப்புறம் ரெண்டு கம்பியூட்டர் சாம்பிராணி, 4 சைக்கிள் அகர் பத்திய கொளுத்தி வச்சேனே அவ்ளோதானா!!!)

"இல்லமா வீடு மூனு நாளா பூட்டியே இருந்திச்சில்ல அதான்..."( அவ்வ்வ்வ்வ்)

"வீட்டுல போட்டது போட்ட படியே கெடக்கு என்னதான் பண்ணினீங்க....."

"எப்ப போன் பண்ணினாலும் துணி துவச்சிட்டிருக்கேன் அப்படினீங்களே இது என்ன இவ்ளோ அழுக்கு துணி......"

"என்னமா பண்றது ஒரு மாசமா நைட் டூட்டி,12 மணிநேர டூட்டின்னு வேலைக்கே நேரம் போயிடிச்சி.... ( தப்பிச்சேன்)"

"ஃபிரிட்ஜ் கிளீன் பண்ணல.. கிட்சன் அப்படியே இருக்கு... எப்பவாவது நான் ஊருக்கு போய்ட்டு வரும்போது ஒழுங்கா வீட்டை வச்சிருக்கீங்களா??????////////"

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா....... இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட வேண்டியதுதான்......... இருந்தாலும் இப்படி பயப்படுறதுக்கு............. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையே...............இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் ரொம்ப நல்ல பையன்பா................

Monday, March 2, 2009

நண்பன் பதிவர் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று 02.03.09 நண்பன் கடையம் ஆனந்துக்கு பிறந்த நாள்... வாழ்த்துக்கள் நண்பா.... பதிவெழுத ஆரம்பித்த நாளில் இருந்து நம்ம ஊர் ஆளுங்க பதிவெழுதுறாங்களான்னு ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன்... முதலில் அறிமுகமாகியவர் தங்கமணி தாமிரா...... அடுத்து கடையம் ஆனந்த்... எங்க ஊருக்கு ரொம்ப பக்கத்து ஊர்க்காரர் ஆச்சே.... எந்த விசயத்தை பற்றி எழுதினாலும் மென்மையாகவே எழுதுவார் .. தன் பதிவை படிக்கும் யார் மனதும் புண்படக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருப்பவர்... தற்போது வர் ஊரில் நடந்த திருவிழா பற்றி அழகாக எழுதி வருகிறர்...



கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.........நண்பா இந்த இனிய பிறந்த நாளில் நீ நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்... அப்படியே இந்த வருசத்துக்குள் பேச்சிலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்......


அப்புறம் இன்றைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்...பொதுவா நான் பதிவு போட்டாலே என் கட காத்து வாங்கும்.. இப்ப மூன்று நாள் விடுமுறை... அதனால சொல்லவே வேண்டாம்.....


இதனால் பதிவர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.... இந்த மூன்று நாளும் என் கடையை காத்து வாங்காம்ல் காப்பாற்றுபவருக்கு 1 கிலோ திருநெல்வேலி அல்வா இலவசமாக வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..




மீண்டும் என் நண்பன் கடையம் ஆனந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......

Sunday, March 1, 2009

தங்கமணியும்--- தலைவலியும்

"என்னங்க நான் ஊர்ல இல்லன்னு சொல்லிட்டு வெளியில சாப்பிடாதிங்க சமைச்சே சாப்பிடுங்க. அப்புறம் வீடை சுத்தமா வச்சிருங்க... ரொம்ப செலவு பண்ணிடாதிங்க"


"நீ ஊருக்கு கிளம்பினாலே என் கையில காசு இருக்காது அப்புறம் எப்படி வெளிய சாப்பிடமுடியும்..."


"உங்க தம்பி வீடு, மச்சான் வீட்டுக்கு போறது பிரச்சினையில்ல வேற ஏதாவது கேள்விப்பட்டேனா அவ்ளோதான்..... சொல்லிட்டேன்."


"செலவுக்கே காசு கம்மியா இருக்கும்போது நான் எங்க போக முடியும்.....வீட்டை விட்டா ஆபிஸ் ....வேற வழியில்ல.."

"என்னங்க ஊருக்கு போனதுக்கப்புறம் போன்ல கூட பேச நேரமில்லையோ."


"அதான் காலையில பேசினேனே... நைட் கால் பண்ணலாம்னு இருந்தேன்."


'முன்னாடியெல்லம் அடிக்கடி போன் பண்ணுவீங்களே...'


"அதுக்காக பொழுதன்னைக்கும் உன் கூட பேசிக்கிட்டேவா இருக்க முடியும் .. ஏம்பா இப்படி இருக்க....'


"உங்க பையன் பண்ற சேட்டை தாங்க முடியல சொன்ன பேச்சை கேக்கமாட்டேங்குறான்..'


"வீட்டுல யாராவது ஒருத்தர் தான் அடங்கிப்போவாங்க அவனும் உனக்கு அடங்கனும்னா எப்படி.".


"ஏம்மா சாம்பார் பொடி, கடலை பருப்பு டப்பா எங்கப்பா வச்சிருக்க... எல்லாமே ஒரே மாதிரி தெரியுது"


"சிவப்பு டப்பா மூடி சாம்பார் பொடி கடலைபருப்பு மஞ்ச கலர் டப்பாவுல இருக்கு..சரி இனிமே போன் பண்ணாதிங்க எங்க அக்க வீட்டுக்கு போறேன்.. "


"செல்லை எடுத்திட்டு போக வேண்டியதுதான.. எதுக்கு அத வாங்கி கொடுத்திருக்கேன்.மிளகாய் பொடி டப்பா எங்க இருக்கு"


"இத கேக்குறதுக்குத்தான் போன் வாங்கி கொடுத்தீங்களா?"


"மச்சி இன்னைக்கு சனிக்கிழமைடா...!!!!!!

"என்ன மாமா வீட்ல ஆள் இல்லையா?", ஆமாடா..


"என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.."


"சமையல் பண்ண போறேம்பா" ( கையில் சரக்குடன்)


"அப்படியா தொசை சுடுறதுக்கே 10 வாட்டி போன் பண்ணுவீங்க எல்லாத்தையும் கேட்டிருங்க"!!!.....


'இல்லமா எல்லாத்தையும் பாத்து வச்சிடேன்'........


இன்னைக்கு தலைவலியுடன் இந்த பதிவை எழுதுகிறேன்... தலைவலி போறதுக்கு வழி சொல்லுங்கப்பா..........

டிஸ்கி : நாளைக்கு ஊருக்கு செல்ல இருக்கிறேன்......ஆங்