Friday, April 10, 2009

தயாநிதி மாறனின் வெற்றியை சுலபமாக்கிய அதிமுக

அதிமுகவில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய சென்னை வேட்பாளரின் பெயரை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தேன்... காரணம் கடந்த முறை மத்திய சென்னையில் அதிமுக சார்பில் திரு. பாலகங்கா நிறுத்தப்பட்டார்.... போட்டி கடுமையாக இருந்தது.. ஆளும்கட்சிக்கு எதிரான அலையால் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திரு.தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். கடந்த முறை போலவே இம்முறையும் அதிமுக சார்பில் பலமான வேட்பாளர் போட்டி யிடுவார் என்று எதிர்பார்த்தால் அம்மாவுக்கு என்ன ஆச்சு? எஸ்.எஸ். சந்திரனை நிறுத்தி தயாநிதி மாறனின் வெற்றியை சுலபமாக்கிவிட்டார்.



2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கோட்டையான தலைநகர் சென்னையிலுள்ள 14தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.அப்படி இருந்தும் அம்மா மத்திய சென்னையில் ஏன் எஸ்.எஸ். சந்திரனை நிறுத்தினார்/// ஒருவேளை கண்கள் பணித்து இதயம் இனிக்கும் முன் ஆளும் கட்சிக்கு எதிராக கிட்டத்தட்ட அதிமுகவுக்கு ஆதரவாக சன் குழுமம் செயல்பட்டதாலும், தேனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செஞ்சதாலும் அம்மா ஏதாவது செய்யனும்னு நினைச்சு இதை செஞ்சாரோ???



எது எப்படியோ மதுரையும், மத்திய சென்னையும் திமுகவுக்கு இரண்டு தொகுதிகள் உறுதி......