Saturday, May 23, 2009

சேட்டர்டே --- ரெண்டு மேட்டர்

சனிக்கிழமை என்றாலே பலபேருக்கு சந்தோசம்தான்...ஏன்னா ஞாயிற்றுக்கிழமை லீவு... ஆனா என்ன மதிரி ஷிப்டுகளில் வொர்க் பண்றவங்களுக்கு வார விடுமுறை எப்போது என்றே தெரியாது..என்னுடைய டேமேஜர் ஒவ்வொருவாரமும் வெவ்வேறு கிழமைகளில் வார விடுமுறை தருகிறார்......... ஆனாலும் இந்த சனி ,ஞாயிறுகளில் வேலை செய்வது ரொம்ப பிடிக்கும்.. காரணம் இந்த நாட்களில் டேமேஜர்,மேலதிகாரி யாரும் இருக்க மாட்டார்கள்... இருக்குற வேலய செஞ்சிட்டு பொழுதை போக்க வேண்டியதுதான்....என்ன பண்றது இப்பவெல்லாம் ஞாயிறு விடுமுறை அப்படினாலே மண்டை காயிது.......... பழக்க தோசம்.......... சும்மாவா ஞாயிறு விடுமுறை எடுத்து பத்து வருசமாவுதே....................

சரி மேட்டருக்கு வருவோம். முதல் மேட்டர் தங்கமணி-ரங்கமணி விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொன்னது.



பொதுவா குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் புத்திமதி சொலவது வழக்கம். அதிலும் கணவனுக்கு புத்திமதிகள் கொஞ்சம் அதிகமா விழும்.அதே மாதிரிதான் நம்ம சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கு.


சண்டிகரில் விமானப்படை அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் புகார் கொடுத்து விவகாரம் ஹைகோர்ட் வரைக்கும் வந்துவிட்டது. ஹைகோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால் இந்த முடிவை எதிர்த்து அந்த அதிகாரியின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவன்மார்களுக்கு பல புத்திமதிகள் சொல்லியிருக்காங்க."உங்கள் மனைவி என்ன சொல்கிறாரோ அதையே செய்ங்க. அப்படி செய்யாமல் இருந்தீங்கன்னா அதனால் வரும் விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு....உங்க மனைவி இடது பக்கம் பாக்க சொன்னா இடது பக்கம் பாருங்க. வலது பக்கம் பாக்க சொன்ன வலது பக்கம் பாருங்க.... ஏனென்றால் நாமெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்...அதனால் மனைவி பேச்சை கேளுங்க" அப்படினு சொல்லியிருக்காங்க...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எவ்ளோதான் விட்டுக்கொடுப்பது......... அடப்போங்கப்பா.
 
ரெண்டாவது மேட்டர் நம்ம முதல்வரை பற்றிதான்.



அகில இந்திய அளவில் காங்கிரசே எதிர்பார்க்காத அளவில் சென்ற தேர்தலைவிட இப்ப அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்... அதனால இந்த வாட்டி கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி ஒதுக்குவதில் கொஞ்சம் கறாராக இருக்காங்க போல... என்னதான் இருந்தாலும் இந்த காங்கிரசுக்காரவுக கொஞ்சம் யோசிக்கனும்.... எவ்ளோ இடர்பாடுகள் வந்தாலும் நம்ம முதல்வர் போன அஞ்சு வருசமா காங்கிரசு கூடத்தான் இருந்தாரு. அதையெல்லாம் நெனைச்சி பாருங்கப்பா... எதுக்காக இப்படி அடம் பிடிச்சி சீட் கேட்கிறார்.... எல்லாம் தம் மக்களின் அய்யய்யோ எழுத்து பிழையாகிருச்சே. எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு தானே............. கொடுங்களேன்பா.