Saturday, May 2, 2009

முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் அமைச்சர் நேருவின் அறிக்கை

பஸ் கட்டண குறைப்பு குறைப்பு பற்றி நம்ம அமைச்சர் நேரு கொடுத்த அறிக்கையை படிச்சா சிரிக்கவா அழவான்னு தெரியல... வழக்கம் போல் அம்மா ஆட்சியில இருந்த மாதிரிதான் இப்ப இருக்குறதாவும் திமுக ஆட்சியில் பஸ் கட்டண உயர்வே இல்லைனு அடிச்சி சொல்லியிருக்கார்...
.
அவரின் அறிக்கையும் எனது பதிலும்.

அமைச்சரின் அறிக்கை::திமுக ஆட்சி 2006ல் அமைந்த பிறகு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப் படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.

கலர் கலரா பேருந்துகளின் நிறத்தை மாற்றி சாதாரண பேருந்துகளில் M போர்டு போட்டு 2ரூபாய் டிக்கெட்டை 3 ரூபாயா உசத்துனது இந்த ஆட்சியில் தானே... இது கட்டண குறைவா இல்லை உயர்வா//

அமைச்சரின் அறிக்கை:1.5.2006  திமுக பொறுப்புக்கு வந்தபோது சென்னை மாநகரத்தில் மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் சாதாரணப் பேருந்துகள் 1095ம், எல்எஸ்எஸ் பேருந்துகள் 1043ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 169ம், டீலக்ஸ் பேருந்துகள் 11ம், எம் சர்வீஸ் பேருந்துகள் 235ம் ஓடிக் கொண்டிருந்தன. இதில் ஒவ்வொரு விதமான பேருந்துகளுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் அதிமுக ஆட்சியிலே விதிக்கப்பட்ட கட்டணங்கள் அப்படியே நடைமுறையில் இருந்து வந்தன.

அம்மையார் ஆட்சியில் மணிக்கொரு முறை வந்து கொண்டிருந்த M சர்வீஸை நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றியது எந்த அரசுங்கோ?..... அதே மாதிரி எல்.எஸ்.எஸ் சர்வீசை குறைத்து விரைவுப்பேருந்துகளையும், டீலக்ஸ் பேருந்துகளையும் அதிகமாக்கியது எந்த ஆட்சியில்... குறிப்பா நெரிசல் நேரங்களில் விரைவுப்பேருந்துகளையும், டீலக்ஸ் பேருதுகளின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களின் டவுசரை உருவியது எந்த ஆட்சி?

அம்மையார் போட்ட கோடுல நீங்க ரோடே போட்டுட்டீங்க,.


 அமைச்சரின் அறிக்கை:அவ்வப்போது எழுகின்ற கோரிக்கை களின் அடிப்படையில் பேருந்து களின் தரம்மாற்றப்படுவது உண்டே தவிர கட்டணங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்டது தான் இப்÷õதும் தொடருகிறதே தவிர, தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டண உயர்வோ, கட்டணக் குறைப்போ எதுவும் செய்யப்பட வில்லை என்பதுதான் உண்மை.

அம்மையார் ஆட்சியில் சாதாரணப்பேருந்துகளில் மினிமம் டிக்கெட் இரண்டு ரூபாய்... விரைவுப்பேருந்தில் மினிமம் டிக்கெட் மூன்று ரூபாய்.... எல்லாம் சரி ஆனா இப்ப விரைவுப்பேருந்திலயும் மினிமம் டிக்கெட் இரண்டு ரூபாயாக மாற்றியதற்கு என்ன அர்த்தம்......
.
மொத்தத்தில் மக்களின் விருப்பம் என்பது தேர்தல் வந்த பிறகுதான் நம்ம அமைச்சருக்கு ஞாபகம் வந்திருக்கு... இதை ஒரு ஆறு மாதம் முன்னாடி செஞ்சிருந்தீங்கன்னா சரியா இருந்திருக்கும்.... இன்னைக்கு மக்கள் நமட்டு சிரிப்புடன் டிக்கெட் வாங்குவதை பார்த்தால் ஒரு முடிவோடத்தான் இருக்காங்க.

  இந்த விசயத்தில் மூன்று ஆண்டுகளாக மக்களின் டவுசரை உருவிட்டு இப்ப போட சொல்றிங்க.......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போட்டுக்குறோம்

 மேலும் இதை பற்றி தேதல் ஆணையம் மவுனமாக இருப்பது ஏனோ??