Saturday, 25 July, 2009

குற்றாலத்தில் கும்மாளம் போட்ட பிரபல பதிவர்

எனக்கு தெரிந்த அந்தப் பிரபல பதிவர் சென்னையில் குடியிருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் செல்லவில்லை என்றால் அவருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்பது போல் பேசுவார்.


கடந்த வாரம் அவரிடம் பேசும் போது " உங்க ஊருக்குத்தான் போறேன்".( ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு)
"எங்க ஊர்ல உங்களுக்கு என்ன வேலை அண்ணே...அதற்கு அவர் "உங்க ஊர்னா உங்க ஊர் கிடையாது குற்றாலம்பா" என்றார்
"அண்ணே குடும்பத்தோடவா போறீங்க?".... இந்த கேள்விக்கு காதுல ரத்தம் வர்ற மாதிரி பதில் வந்தது.... " நாங்க எல்லாம் யூத்துப்பா"( அவர் வீட்டில் இருக்கும் வரைதான் குடும்ப இஸ்திரி ...... வெளிய வந்தா யூத்து போல...அன்னியன் மாதிரி)

"குற்றாலத்துல எந்த பரோட்டா கடை நல்லாயிருக்கும்?"( எங்க போனாலும் ஓட்டலை தேடும் பழக்கத்தை விடமாட்டாரோ)
"அண்ணே குற்றாலத்துல ஒரு ஓட்டலும் நல்லாயிருக்காது...பிரானூர் பார்டர்ல ஏகப்பட்ட பரோட்டா கடை இருக்குது...அங்க போங்கண்ணே....
"சரி அங்க எந்த கடை நல்லாயிருக்கும்"( விடவே மாட்டாரோ)
"தெரியல அண்ணே அங்க எல்லாம் போய் வருசக்கணக்காவுது...."
"பக்கத்து ஊரை பற்றி ஒன்னுமே தெரியல உன்ன்னையெல்லாம்".( ஆஹா மறுபடியுமா)

சென்னையில நாலு சுவத்துக்குள்ள பக்கெட்ல தண்ணிய மொண்டு குளிச்சவரு குற்றால அருவிய நேர்ல பார்த்ததும் காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாஞ்ச மாதிரி ஓவர் குஷி ஆகிட்டார்.... கூட வந்தவங்கதான் யோவ் கொஞ்சம் அடக்கி வாசின்னதும்..கொஞ்சம் அமைதி ஆனார்.....அருவியில் குளிப்பதற்கு கியூவில் நிற்கும் போது புலம்பிக்கொண்டே இருந்ததால் அவருக்கு முன்னாடி இருந்தவர் "அண்ணாச்சி சென்னையில இருந்தா வர்றீக"...... ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?.......... நீங்க புலம்புறத வச்சிதான்....


"சென்னையிலதான் எதுக்கு எடுத்தாலும் வரிசைனா இங்கயுமா?....."
 "சரி முன்னாடி போங்க நல்லா குளிச்சிட்டு வாங்க என்று வழி விட்டார்............ "

நம்ம பதிவர் குளிக்க ஆரம்பித்ததும் அருவியிலே டிராபிக் ஜாம் ஆயிடிச்சி.....அவருக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் குளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்......நம்ம பதிவர் நாலு பேர் குளிக்கிற இடத்தை இவருடைய தொப்பை மறைத்ததால் வந்த விளைவுதான் இந்த டிராபிக் ஜாம்........ இதை அறியாத நம்ம பதிவர் வாழ்க்கையிலே முதல் முறையா அருவியில குளிச்ச சந்தோசத்தில் இருந்தார்.... அதற்குள் ஒரு காவலர் வந்து நம்ம பதிவரிடம் வந்து" சார் குளிச்சது போதும். பாருங்க எவ்ளோ பேர் வெயிட் பண்றாங்கன்னு" என்றார்...நம்ம பதிவர்" சார் இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் முடிச்சிட்டு வந்திடுறேன்.யோவ் சொன்ன கேக்க மாட்டியா... ஆமா எங்க இருந்து வர்ற...... சென்னையில் இருந்து...

"சென்னையில என்ன பண்ற"....
"நான் பதிவர்ங்க"......
என்னது பதிவரா... பத்திரமெல்லாம் பதிவு பண்றவரா?........."
இல்ல சார் அது வந்து இன்டெர் நெட்ல எழுதி எல்லோருக்கும் மொக்கை போடுவோம்.........".
"ஓ நீங்க அந்த கோஷ்டியா...."


எந்த கோஷ்டி சார்?...... கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து ஆட்களை நேராக பாக்காம நெட் மூலமா திட்டி ஒரு பெரும் கலவரத்தையே உண்டாக்குவீங்களே அந்த கோஷ்டியா????" அப்படினு கேட்டதுதான் தாமதம்................. அடுத்த செகண்டுல நம்ம பதிவர் எஸ்கேப்.

அடுத்ததா பிரானூர் பார்டர்ல என்ன கலாட்டா பண்ணினாரோ.......விசாரிச்சி சொல்றேன்.


அந்த பிரபல பதிவர் இவர்தான்

Friday, 24 July, 2009

சூப்பர் ஹிட் திரைப்படம்னா என்ன அர்த்தம்.????

ஒரு திரைப்படம் 100நாட்கள் ஓடினால் ஹிட் படம் என்றுசொல்லலாம்.........100நாட்களுக்கு மேல் ஓடினால் சூப்பர் ஹிட், சில்வர் ஜூப்ளி படம் என்று சொல்லலாம்..( ஸ்டார் வேல்யூவிற்காக 100நாள் ஓட்டப்படும் படங்கள் கணக்கில் கிடையாது...)

இந்த சேட்டலைட் யுகத்தில் ஒரு படம் 10நாள் ஓடினாலே சூப்பர் ஹிட்டுனு சொல்லிடுவாங்க போல.......அதுவும் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் இக்காலக்கட்டத்தில் அது மொக்கை படமோ சூப்பர் படமோ அதை வாங்குவதில் சேனல்களுக்கிடையில் போட்டி கடுமை.....இதனால் பெரிய ஹீரோகள் நடித்து பிளாப் ஆன படங்களுக்கு கூட விலை அதிகம்........அதனால்தான் என்னவோ ஒரு படம் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்போது செய்யப்படும் விளம்பரங்கள் கேலிக்குறியதாக இருக்கிறது.


10நாள் கூட ஓடாமல் பிளாப் ஆன படங்களுக்கு தொலைக்காட்சியில் செய்யப்படும் விலம்பரம்" சூப்பர் ஹிட் அதிரடி திரைப்படம்".................அப்போ நிஜமாவே 100நாட்கள் அல்லது அதற்கு மேல் ஓடி வசூலை குவிக்கும் படங்களை என்னன்னு சொல்லலாம்?

தொலைக்காட்சிகளின் இந்த மாதிரியான விளம்பரங்கள் நகைப்புக்குறியட்தாகவே இருக்குதுப்பா.............. ஒவ்வொரு வாரமும் சூப்பர் ஹிட் அதிரடி திரைப்பங்களை கண்டுகளித்து எஞ்சாய் பண்ணுங்க தமிழ்மக்களே

Sunday, 19 July, 2009

குடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சி

இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சிகள் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது...காலையில் 10மணிக்கு ஆரம்பிக்கும் நெடுந்தொடர்கள் இரவு 10மணி வரைக்கும் தொடர்ந்து பல குடும்பங்களில் கலகத்தை உண்டாக்க கூடியதாக மாறிவிட்டது... பெண்களின் சீரியல் ஆர்வத்தை பற்றி வரும் ஜோக்குகள் ஆரம்பத்தில் வெறும் நகைச்சுவையாக இருந்தாலும்....... கொஞ்ச நாளுக்கப்புறம் அதுதான் உண்மை என்ற நிலைமை..

நம்ம மேட்டருக்கு வருவோம்...சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி வழக்கம் போல் காலையில் இருந்து இரவு வரைக்கும் முண்ணனி சேனலுக்கு போட்டியாக தொடர்களை ஆரம்பித்தது... ஆரம்பத்தில் ஒரளவுக்கு போட்டியைக்கொடுத்த இந்த தொலைக்காட்சியின் தொடர்கள் ஒரு கட்டத்தில் போணியாகாமல் போக என்ன செய்வது என்று கையை பிசைந்த தொலைக்காட்சி நிறுவனம் ....தன்னுடைய நெடுந்தொடர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு அதற்கு பதில் நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது...தொடர்கள் எல்லாம் நிறுத்தப்பட்டதால் அந்த தொலைக்காட்சியை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்தது....மண்டையை பிய்த்த அந்த தொலைக்காட்சி பிரைம் டைம் என சொல்லப்படும் முக்கிய நேரத்தில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது...சென்ற ஆண்டு வெளி வந்த முக்கால் வாசி திரைப்படங்களின் உரிமையை பெற்றிருந்ததும் ஒரு காரணம்..........


இந்த புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டதும் நம்ம தமிழ்நாட்டு குடும்பங்களில் கலகம் உண்டாக காரணமாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அதுவரைக்கும் புகைச்சலாய் இருந்த தங்கமணி--ரங்கமணிகள் சண்டை பற்றி எறிய ஆரம்பித்துள்ளதாக தங்கமணி உளவுத்துறை தலைவர் ஆதி ரகசிய அறிக்கை அளித்துள்ளார்... அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று ரங்கமணிகள் சொல்ல வழக்கம் போல் தங்கமணிகள் சீரியல்தான் என்று சொல்லி முட்டி மோத அறிவிக்கப்படாத இந்திய-பாகிஸ்தான் போர் நடைபெற்றுவருவதாக ரகசிய தகவல்கள் கூறுகின்றன...

இதை அறியாத அந்த தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் புதிய மொக்கை திரைப்படங்களை அறிவித்து வருகிறது................. யாராவது இந்த மேட்டரை எடுத்து சொல்லுங்கப்பா......

Sunday, 12 July, 2009

இன்னைக்கு யாரை/ எதை பற்றி திட்டி பதிவு போடலாம்>>>>>>>>>>>>>>>>>

முதலில் சொல்லிவிடுகிறேன்....இது முழுக்க முழுக்க சீரியஸ் பதிவு....காமெடியே கிடையாது.சொல்லிப்புட்டேன் ஆமா சொந்த வேலை காரணமாக பத்து நாள பதிவுகள் பக்கம் வர முடியல..இப்ப ஒரு மூனு நாளா வந்து பாத்தா ரத்த பூமியா மாறிட்டு இருந்தது... என்னடா இது...சரி எப்படியும் இந்த ரணகளம் குறைஞ்சது ஒருவாரமாவது ஓடும்னு எதிர்பார்த்தேன்....அதுக்குள்ள எல்லோரும் சமாதானம் ஆயிட்டாங்களாம்.........இவங்க போதைக்கு பின்னூட்டம் போட்ட என்ன மாதிரி பதிவருங்கதான் பாவம்.......... அதனால இந்த மேட்டரை விடமாட்டேன்....


இந்த விளையாட்டு உண்மையிலே ரொம்ப நல்லாயிருக்கு...முதல்ல ஒருத்தர் காமெடியா பதிவு போடுவாராம்....அதுல பின்னூட்டத்துல எல்லாரையும் கலாய்ப்பாராம்..அதுக்கு ஒருத்தர் கண்டன பதிவு போடுவாராம்.....அந்த பதிவையும் இவரு பயங்கரமா விமர்சிப்பாராம்....ஆளாளுக்கு ஒரு குரூப்பா உக்காந்து திட்டுவாங்களாம்..கடேசில முதல்ல ஆரம்பிச்சவரு மன்னிப்பு கேப்பாராம்.....உடனே எல்லா பிரச்சினையும் முடிஞ்சிருமாம்.........நல்லாயிருக்குப்பா இந்த விளையாட்டு.......அரசியல்லதான் இந்த மாதிரி நடக்கும்......ஆனா அரசியலையும் மிஞ்சிட்டாங்க..எப்படினா அரசியவாதிங்க குறைந்த பட்சம் 4வருசம் ஒருத்தரை ஒருத்தர் திட்டிப்பாங்க 5வது வருசம் கொஞ்சம் அடக்கிவாசிப்பாங்க..ஏன்னா தேர்தல் வரும்....ஆனா இங்க அதையெல்லாம் மிஞ்சிட்டாங்க......

அதனால இந்த வாரம் பிரபல பதிவர் யாரையாவது திட்டலாம்னு இருக்கேன்.ரெண்டு மூனு நாள் பயங்கரமா திட்டி பதிவு எழுதிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டு பதிவு எழுதினா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்.....ஆனா யாரை திட்டுறதுன்னே தெரியலை.......ஏன்னா பதிவரை திட்டுவதற்கு முன்னால் அவரோட குருப்ப பற்றி நல்லா தெரிஞ்சிக்கனும்..பதிலுக்கு எல்லோரும் சேர்ந்து எனக்கு டின் கட்டிடக்கூடாது...அதனால் அந்த பதிவர் கொஞ்சம் பிரபலமா இருக்கனும்..ஆனா மற்ற பதிவருங்க சப்போர்ட் இருக்கக்கூடாது... அரசியல்லதான் வாரிசு அரசியல் இருக்குதுனா இங்கயும் அத கொண்டுவந்துட்டாங்க....அதை பற்றியும் கொஞ்சம் யோசிக்கனும்...

அண்ணன் கேபிள் சங்கரை ஏற்கனவே திட்டியாச்சு...ஏதாவது மேட்டரில் மாட்டும்போது மறுபடியும் ஆரம்பிக்கலாம்.


கார்க்கிய திட்டலாம்.ஆனால் பின்னாடியே அதிஷா,முரளிக்கண்ணன்,
தாமிரா அப்படின்னு எல்லோரும் என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க..

அனுஜன்யா அண்ணாச்சிய திட்டலாம்னு பாத்தா அவரு என்னை ஒன்னும் அறியாத குழந்தைன்னு சொல்லிட்டார்...

தராசு அண்ணாச்சிய திட்டலாம்னா ஏற்கனவே அவரு வீட்டுல தினசரி வாங்கிட்டு இருக்காரு..பாவம்..

ஜ்யோவ்ராம் சுந்தர் அண்ணாச்சிய திட்டலாம்...ஆனா அவரு பின்னாடி ஏகப்பட்ட பின் நவீனத்துவ கூட்டமும் எலக்கியவாதி கூட்டமும் இருக்கு....சும்மாவே அவரு பதிவ ஒரு பத்துவாட்டி படிச்சாத்தான் என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரியும்...அதனால வேணாம்...

வேற எதைப்பற்றி திட்டலாம் அப்படினு யோசிக்கையில் கலைஞரும்,அவருடைய தொலைக்காட்சியும் ஞாபகத்துக்கு வந்தது...ஆனா லக்கியும் உடன்பிறப்பும் என்ன உண்டு இல்லைனு பண்ணிடுவாங்களே............

அதனால ..


அதனால...


ஊருக்கு இளைச்சவன் ஆண்டி அப்படின்ற பழமொழி படி சன்டிவிய திட்டலாம்னு இருக்கேன் ( சன்டிவி யாருக்கும் இளைச்சது கிடையாது).....நல்லா யோசிச்சு பாத்ததுல இதுக்கு அமோக ஆதரவு இருக்கும்......எதிர்ப்பே இருக்காது ஹிஹிஹிஹிஹிஹி...........


எப்பூடி நம்ம ஐடியா......................