Sunday, 22 February, 2009

பூவே உனக்காக--- காதல் கோட்டை--- சென்னை பதிவர் சந்திப்பு???

கடந்த வெள்ளியன்று கே டிவியில் பூவே உனக்காக படம் போட்டிருந்தார்கள்... ம்ம்ம் படம் நல்லாவே இருந்தது.... பூவே உனக்காக படம் பார்க்கும் போதெல்லாம் காதல் கோட்டை படமும் ஞாபகத்திற்கு வரும்... காரணம் இரண்டு படங்களும் கிட்டதட்ட ஒரே நேரத்தில் வெளியாகி சளைக்காமல் சக்கை போடு போட்ட படம்.... என்னுடைய டிப்ளமா படிப்பின் கடைசி செமஸ்டரின் போது இரு படங்களும் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களிலும் டாக்டரும், தலயும் இயல்பான நடிப்பை வெளிக்கொண்டுவந்திருப்பார்கள்.


இரண்டு படங்களின் மையக்கரு காதல் என்றாலும் டாக்டரின் படம் காதல் தோல்வியையும், தலயின் படம்  காதலுக்கு புது வழியையும் ஏற்படுத்தியது... டாகடர் செந்தூரப்பாண்டி, ரசிகன்,தேவா அப்படின்னு கில்மா படங்களில் நடித்தாலும், அனைத்து ரசிகர்களை கவர்கிற மாதிரி படங்கள் அவருக்கு அதுவரை அமையவில்லை.. அதே போல தலயும் ஒரு பிரேக் கிடைக்காமல் தடுமாறி வந்தார்...இந்தக் கட்டத்தில்தான் இருவருக்குமே இந்தப்படங்கள் இவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது....மொத்தத்தில் இந்தபடங்களை இருவருமே அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.. இதுக்கப்புறமா இவர்களின் படங்கள் ஒரே நேத்தில் வெளியாகினாலும் ஏதாவது ஒரு படம் தான் வெற்றியை தொட்டது


குஷி -- உன்னைக்கொடு என்னைத்தருவேன்
பகவதி -- வில்லன்
திருமலை -- ஆஞ்சனேயா
ப்ரெண்ட்ஸ் -- தீனா
போக்கிரி -- ஆழ்வார்

வேற ஏதாவது படங்கள் இப்படி வெளியாகி இருந்தால் சொல்லுங்கப்பு ( டாக்டரும், தலயும்) சரி இப்ப இருவரும் எந்த அளவில் படங்களை தேந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வேறச் சொல்லனுமா... அதிரடி ஓப்பனிங் பாடல், பஞ்ச் டயலாக், அயிட்டம் பாடல், ஒரே மாதிரியான நடிப்பு கேட்டா எங்க ரசிகனுங்க இப்படித்தான் எதிர் பாக்குறாங்க அப்படினு ஒரு டயலாக்.... அப்படியா கார்க்கி.... தலயாவது பரவயில்லை ஒரு சில படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்கிறார்... ஆனால் டாக்டர்???!!!!!!!!!!!!!!!!..

சென்னை பதிவர் சந்திப்பு இந்த மாதம் ஆரம்பத்தில் நடந்தது... அதுக்கப்புறம் அதுபற்றி பேச்சேயில்லை... நேற்று சகா நர்சிம்மிடம் பேசினேன் மும்பையில் இருந்து அனுஜன்யா வந்திருப்பதாக சொன்னார்... அதனால சென்னை பதிவர்களே உங்க முகமெல்லாம் மறந்துகொண்டு வருகிறது... அதுக்காகவாது ஒரு சந்திப்பை வைங்கப்பா.நர்சிம்,அதிஷா,முரளி கண்ணன் கவனிக்க..... தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை பிரச்சினையில் பதிவுலகமே சூடாக இருந்தது.. இப்பதான் ரெண்டு நாளா பத்து கேள்விகள் அப்படின்னு கொஞ்சம் ரிலாக்ஸா ஆகியிருக்கு........ அதனால சந்திப்பை வைங்கப்பா..........

ஒரு எச்சரிக்கை


ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா?. அக்பர்பாய் கறிக்கடையில் முஸ்லிம்கள் மட்டும் தான் கறி வாங்குவாங்களா?? என்ற அதி நவீன வசனங்களுடன் அடுத்தவாரம் ரிலீஸ் ஆவுது..................தீ திரைப்படம்

Wednesday, 18 February, 2009

முந்துவது சன்டிவியா? கலைஞர் டிவியா?--- ஒரு பார்வை

சன் தொலைக்காட்சியும்,கலைஞர் தொலைக்காட்சியும் பாடல் ஒளிபரப்புவதில் இருந்து சேனல் துவங்குவது வரை எல்லா நிலையிலும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன்.. மேலோட்டமாகப் பார்த்தல் சபாஷ் சரியான போட்டி என்றே தோன்றும். கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும். கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்பு வரை சன் கொஞ்சமாக போட்டிப்போட்டுகொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை பரவவிட்டது... முதலிடத்தை தக்கவைத்துகொண்டது... கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பித்ததற்கு அப்புறம் தொய்வு கொஞ்சம் அதிகமாகியது. எல்லா நிலையில் இருந்தும் கடும் போட்டி உருவானது.நம்ம பதிவர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு சன்னை முந்துகிறது கலைஞர் பயங்கரமா எழுத ஆரம்பிச்சாங்க....ஆனால் மக்கள் பார்வையில் இருந்து எப்படியாவது சன்னை முந்தி முதலிடத்துக்கு வர கலைஞர் தொலைக்காட்சி ரொம்பவே பகீரத முயற்சி எடுத்தது..அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்கள். குடும்ப சண்டைக்கு பிறகு சன் நடுநிலைமை எனும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு எந்த அளவுக்கு ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளிக்கொணர முடியுமோ அந்த அளவுக்கு திறமையா செயல்பட்டது. சன்னின் நடுநிலைமையால் ஜெயாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டது... முக்கியமா மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினைகளில் எந்த அளவுக்கு விளையாமுடியுமோ அந்த அளவுக்கு புகுந்து விளையாடுனாங்கோ..இதுக்கு விளக்கம் சொல்லி முடியல கலைஞர் தொலைக்காட்சிக்கு. இந்த கூத்தெல்லாம் கண்கள் பணித்தது இதயம் இனிக்கும் வரைக்கும்தான் இருந்தது...


இதுக்கு அப்புறம் மின்வெட்டு கிலோ எவ்ளோ? ஸ்பெக்ட்ரம் எந்த ஊர்ல இருக்கு அப்படின்ற ரேஞ்சில தான் சன்னின் நடுநிலைமை இருந்திச்சி... கலைஞர் தொலைக்காட்சியை தன் வழிக்கு கொண்டு வரவே சன் தொலைக்காட்சி நடுநிலைமை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருந்தது... இப்போதைக்கு தமிழக மக்கள் சன் தொலைக்காட்சி இல்லைனா கலைஞர் தொலைக்காட்சிதான் பாக்கனும் என்பதில் மிக முனைப்போடு போட்டிப்போடுக்கொண்டு சேனல்களை ஆரம்பித்து வருகிறார்கள். தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களில் பெரும்பான்மையோர் திமுக அனுதாபிகள் மற்றும் திமுக பிரமுகர்களாக இருப்பது இரு நிறுவங்களுக்கும் ஆதாயமே.


இப்படி எல்லா நிலையிலும் போட்டி போடும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகள் ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுதான் வேதனைக்குறிய விசயம். அது என்னன்னு உங்களுக்கே தெரியும். ஈழப்பிரச்சினை சன்னாவது பரவாயில்லை மேம்போக்கா ஏதோ சொல்றாங்க.. ஆனா கலைஞர் தொலைக்காட்சி இந்த விசயத்தில் மவுனமாக இருப்பது வேதனைக்குறிய வெட்கப்படவேண்டிய விசயம். இதுக்கு உதாரணம் இலங்கை சுதந்திர தினத்தன்று ராஜபக்ஷே பேசியதை தலைப்பு செய்தியிலும் முதலாவதா சொல்லி காங்கிரசு கட்சியின் மானத்தை காப்பாற்றி விட்டது கலைஞர் தொலைக்காட்சி. இன்று நக்கீரன் குழுமத்திற்கு இலங்கை தூதுவர் கொடுத்த மிரட்டல்,மக்கள்,தமிழன் தொலைக்காட்சிகள் இலங்கையில் ஒளிபரப்ப தடை போன்ற விசயத்திலும் மவுனத்தை சாதிப்பது கொடுமையிலும் கொடுமை......


இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் ஈழப்பிரச்சினையை இன்னும் முனைப்போடு சொல்லி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும்..... செய்வார்களா?

(தென்) தமிழகத்திற்கு ஏமாற்றம் தரும் ரெயில்வே பட்ஜெட்

மத்திய அமைச்சர் லல்லு தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் வழக்கம் போல் தமிழகத்திற்கு ஒரு பட்டை நாமம் சாத்திவிட்டார். குறிப்பா தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு. தமிழகத்துக்கென இந்த ரெயில்வே பட்ஜெட்டில் 5 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலாஸ்பூர் - நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் (திருவனந்தபுரம் வழி)
செங்கோட்டை - ஈரோடு தினசரி பாசஞ்சர்.
திருச்சி - மதுரை தினசரி எக்ஸ்பிரஸ்.
மும்பை - நெல்லை சூப்பர்பாஸ்ட். திருவனந்தபுரம் வழி. (வாரம் இருமுறை)
கோவை - தூத்துக்குடி இணைப்பு ரயில் (தினசரி)

இதில் திருநெல்வேலியிலிருந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ரெயில்களும் திருவனந்தபுரம் வழியாக செல்லும். பேசாம இந்த இரண்டு ரெயில்களையும் திருவனந்தபுரத்திலிருந்தே இயக்கிவிடலாம். ஒரு மாநிலத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் அந்த மாநில மக்களுக்கே அதிகம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்.என்னகணக்கில்
இதைஅறிவிச்சாங்கன்னேதெரியலை.
மும்பையில்நெல்லை,கன்னியாகுமரி,விருதுநகர்,மதுரை மாவட்ட மக்களே அதிகம் உள்ளனர். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் மும்பை.நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வருடம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிஞ்சிதான் ஓடிக்கிட்டு இருக்கு.. இதே வழித்தடத்தில் இன்னொருவழித்தடத்தைஅறிமுகப்படுத்தினால் மக்களுக்கு பயன் தரும் வகையில்இருக்கும்...


அதேபோல்சென்னையிலிருந்து ,நெல்லைக்கோ,கன்னியாகுமரிக்கோ ரெயிலை அறிமுகப்படுத்தியிருக்கலாம்... ஆனால் அதை பற்றி ஒன்னையும் கானோம்..இத்தனைக்கும் தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் ரெயில்களில் முன்பதிவு வேண்டும் என்றால் 3மாதத்திற்கு முன்னாலே முன்பதிவு செய்தால்தான் உண்டு... இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வரைக்கும் பண்டிகை காலங்களில் மட்டுமே முன்பதிவில் சிக்கல் இருக்கும். ஆனால் தற்போது எல்லா காலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.தென்மாவட்டங்களுக்கு பஸ்ஸில் செல்வதற்கு மனதளவில் மிகுந்த தைரியம் வேண்டும்... ஆம் இதைப்பற்றி உண்மைத்தமிழன் நேற்றுதான் பதிவில் எழுதியிருந்தார்.. சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப்பேருந்தில் செல்ல 13 மணி நேரம் ஆகியதாம்... கின்னஸில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்களோ என்னவோ?.என்னோட அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன். திருச்சிக்கே 13மணி நேரம் என்றால் இன்னும் மதுரை,தென்காசி,நெல்லை,கன்னியாகுமரிக்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுகொள்ளுங்கள். நேரம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தென் மாவட்ட ரெயிலகள் நிரம்பி வழிகின்றன....

மொத்தத்தில் மெஜாரிட்டியான அளுங்கட்சி எம்பிக்கள், ஒரு ரெயில்வே துறை இணை அமைச்சர் இருந்தும் தமிழகத்திற்கு பட்டை நாமம் போடாத குறைதான்..லல்லுவின் சொந்த மநிலமான பீகாருக்கு 12 புதிய ரெயில்களாம்..............

Tuesday, 17 February, 2009

100வது பதிவும்--பட்டாம்பூச்சி விருதும்--- சில விசயங்களும்


அப்படி, இப்படினு ஒரு வழியா 100வது பதிவை எழுதியாச்சு..... இந்த நேரத்துல நண்பர் கடையம் ஆனந்த் பட்டாம் பூச்சி விருதை வேறு கொடுத்துவிட்டார்... அந்தபட்டாம்பூச்சி விருதை 3 பேருக்கு கொடுக்கனுமாம்/.......கொடுத்திடலாம்,,,..காசா..பணமா?........... என்னையும் நம்பி என் பதிவை பாலோ செய்யும் சக பதிவர்களுகு நன்றி.....என்ன பதிவு போட்டாலும் படிச்சி பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் தாமிரா, கடையம் ஆனந்த்,கார்க்கி, பாபு,கேபிள் சங்கர், முரளி கண்ணன்,கமல்,ஜமால்,செய்யது,ரம்யா,வனம் ராஜராஜன்,அதிஷா,நசரேயன்,வடகரை அண்ணாச்சி, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.....கடந்த ஒரு மாதமாக பதிவு எழுதமுடியவில்லை.... சில எதிர்பார்த்த விசயங்களில் ஏமாற்றம் அடைந்ததால்....... மறுபடியும் முயற்சிக்கிறேன்..... அடுத்த மாதம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்...............
பட்டாம் பூச்சி விருதை எனது தலைங்களுக்கும் சகாகளுக்கும் கொடுக்கிறேன்.
1. கேபிள் சங்கர் ( அண்ணே இப்ப ஏ ஜோக் மேலயும், தமன்னா மேலயும் ரொம்ப இதுவா இருக்கார்... இவருடைய சிறுகதைகளுக்கு நான் அடிமை)2. நர்சிம் ( சகா வழி தனி வழி....... மாற வர்மன் என்ன ஆச்சு)
3. முரளி கண்ணன்( நடமாடும் சினிமா நூலகம்)
4. கார்க்கி( சகாவுக்கு மாசத்துல ஒரு தடவ காதல் சோகக்கதை பதிவிடலனா தூக்கம் வராது)
5.பாபு( ஒன்னுமே புரியல)

அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள்
ஒரு சில அனுபவங்கள் அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் மேல் கோபம் கொள்ள வைக்கிறது...
அனுபவம் 1
இடம் தாம்பரம் மண்டல அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் ரேஷன் கார்டு விலாசம் மாற்றம் தொடர்பாக தாம்பரம் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். விண்ணப்பம் கொடுப்பதற்கு ஒரு கவுன்டர் மட்டும் தான். வரிசை அலுவலகத்திற்கு வெளியே ரோடு வரைக்கும் இருந்தாது.. வரிசையில் உள்ளோரில் ஒரு சிலரை தவிர மீதி அனைவருமே 50 வயதை தாண்டியவர்களாக தெரிந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிஉருந்தது.. பாடாவதி இன்னும் பழைய மெத்தடுல தான் இன்னும் எழுதிக்கிட்டு இருக்காங்க... ஒரு வயதான பெண்மணி தான் கொண்டு வந்திருந்த விண்ணப்பத்தை கவுன்டரில் இருந்த பெண் ஊழியரிடம் கொடுத்தார்.

விண்ணப்பத்தை பார்த்த பெண் ஊழியர் " என்னம்மா உன் மகன் பெயருக்கு கார்டு கேட்டிருக்க சரி, ஆனா உன் மருமகள் பெயர் நீக்குன சான்றிதழ் இதுல இல்லையே.. அதை வாங்கிட்டு வா." என்று சொல்லி அந்த விண்ணப்பத்தை கையில் கூட கொடுக்காமல் அப்படியே கீழே போட்டார் அந்த பெண் ஊழியர். வயதான பெண்மணி " கொஞ்சம் வெவரமா சொன்னா நல்லாயிருக்கும்.. நானும் 10நாளா அலையுறேன்". என்னத்த வெவரமா சொல்ல சொல்லுற... போயி அந்த சர்டிபிகேட்டை வாங்கிட்டு வா... என உச்சஸ்தியில் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டார் அந்த பெண் ஊழியர்... ஏன் அந்த பெண் ஊழியர் கோபப்பட வேண்டும்?.பெரும்பாலும் இந்த மாதிரி ரேசன் கார்டு சம்பந்தப்பட்ட சந்தேகங்கங்களை நிவர்த்தி செய்ய தனி அதிகாரியை நியமிக்கலாம்... செய்வார்களா?...

அனுபவம் 2

இடம் மாம்பலம் ரிசர்வேசன் கவுன்டர். எனக்கு ரெயில் பயண கட்டண சலுகை உண்டென்பதால் அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பத்தைக்கொடுத்தேன்... ( இங்கேயும் பெண் ஊழியர்தான்) "டாக்டர் சான்றிதழில் சீல் சரியாத் தெரியல"( டாக்டர் சீல் பச்சை கலரில் இருந்ததால் ஜெராக்ஸில் சரியாக தெரியவில்லை) இல்ல மேடம் 1 மணி நேரமா வரிசையில நிக்கிறேன்" அப்ப சூப்பர்வைசர் உள்ள இருக்கார் அவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வாங்க" சூப்பர்வைசரை பார்க்க ஒரு அரை மணி நேரம் .... ஒரு வழியா டிக்கெட் வாங்கிட்டேன்.. " அடுத்த வாட்டி இந்த சர்டிபிகேட் கொண்டு வந்தீங்கன்னா டிக்கெட் தரமாட்டேன்"

அடுத்த வாட்டி போகும் பொழுது புது சர்டிபிகேட்டுடன் சென்றேன். சர்டிபிகேட்டை சரி பார்த்த பெண் ஊழியர் " வயசு சரியா எழுதலியே.. மேலே ஒரு கோடு மாதிரி இருக்கு எந்த டாக்டர் கிட்ட வாங்கினீங்களோ அவர் கையெழுத்தை இதுக்கு பக்கத்துல வாங்கிட்டு வாங்க" என்று மிக அலட்சியமாக சர்டிபிகேட்டை என்னைடம் கொடுத்தார்.. நானும் அப்போதுதான் கவனித்தேன்.. வயது 31 என்பதில் 3க்கு மேல் லைட்டா ஒரு கோடு .." மேடம் டாக்டருங்க கையெழுத்து அப்படித்தான் இருக்கும் உங்களுக்கே தெரியும்"." அதெல்லாம் முடியாது வேணும்னா நார்மல் டிக்கெட் வாங்கிக்கிடுங்க".. கோபமாக சொல்லிவிட்டார்... கொஞ்ச நேரம் காத்திருந்து பிறகு ஆண் ஊழியரிடம் சர்டிபிகேடை காண்பித்தேன்... டிக்கெட் கிடைத்தது...

ஒரு பெண் ஊழியருக்கு தவறு எனப்பட்ட சர்டிபிகேட் ஆண் ஊழியருக்கு எப்படி சரியென்று பட்டது...?ஏன் இப்படி கோபப்படுகிறார்கள் பெண் ஊழியர்கள்.......... என்ன காரணமாக இருக்கும்... சொல்லுங்க மக்கா