Sunday, 28 February, 2010

எனக்கு பிடித்த பாடல்கள்---1

ஒரு சில திரைப்படப்பாடல்களை கேட்கும் போது நம் கவனத்தை எங்கேயோ கொண்டு செல்லும்....... அந்த வகையில் எனக்கு பிடித்த இரு பாடல்களை கீழே கொடுத்திருக்கிறேன். பார்த்து கேட்டுவிட்டு உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்க..ஒரு பாடல் 2011ல் முதல்வராகப்போகும் விஜயகாந்த் ஷோபாவுடன் சேர்ந்து நடித்த 1979ல் வெளிவந்த அகல்விளக்கு திரைப்படபாடல்..ஏதோ நினைவுகள் ஜேசுதாஸ், ஜானகி பாடிய பாடல்.....இன்னொரு பாடல் ஆனந்தக்கும்மி படத்திலிருந்து ஒரு கிளி உருகுது எனத்தொடங்கும் பாடல்.......
இந்த ரெண்டு பாட்டுமே நம்ம "யூத்துக்களுக்கு" ரொம்ப பிடிக்கும்..


Saturday, 27 February, 2010

எடுபடாமல் போன அஞ்சா நெஞ்சனின் கருத்து-- அவமானப்ப்படுத்திய மூவர் கூட்டணி

பாசத்தலைவன் எப்போதும் ஒன்று சொல்வார் மத்திய அமைச்சரவையில் எப்போதும் நம் குரல் தான் ஒலிக்கும்..தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று..... இதெல்லாம் 2009க்கு முந்தி என்றுதான் நினைக்கிறேன்..தற்போது அமைந்திருக்கும் காங்கிரசு அட்சியில் ஏற்கனவே தன்னுடைய துறைக்கு அதிக நிதி கேட்டு மம்தா பான்ர்ஜி பிரச்சினை எழுப்பியுள்ளார்..இன்னும் எழுப்புவார்....... தமிழக மத்திய அமைச்சர்கள் எப்பவும் ஆளும் காங்கிரஸு அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசமாட்டாங்க முக்கியமா திமுக மத்திய அமைச்சரகள்..
அஞ்சாநெஞ்சன் அழகிரி மத்திய அமைச்சராக பதவியேற்றதும் அதன் பிறகு அவரது துறையில் சரியாக கவனம் செலுத்தாமல் லோக்கல் பாலிடிக்சிலேயே குறியா அலைந்ததையும் டெல்லி பத்திரிக்கைகள் செயல்படாத ஒரே அமைச்சர் என்று எழுதின..அதன் பிறகும் அஞ்சாநெஞ்சன் அசரவில்லை..குறிப்பாக தன் துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பதில் சொல்ல அவர் அவைக்கு வரவில்லை.......இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறை சிக்கனமாக்க மூவர் கூட்டணி உர மான்யம் சம்பந்தமாகஒரு முடிவெடுத்து அது குறித்து பேச துறை அமைச்சரான அழகிரியுடன் விவாதித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக விவசாயிகளுக்கு உரமான்யம் 30ஆயிரம் கோடி என்றிருந்தது,தற்போது 50 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது..இதுதான் இந்த மூவர் கூட்டணிக்கு (அதாவது நம்ம தாத்தா மன்மோகன் சிங், மாமா பிரணாப், நம்ம பங்காளி சிதம்பரம்)கண்ணை உறுத்தியது. எதற்கு 50ஆயிரம் கோடி மான்யம் அதை குறைத்தால் நிதி பற்றாக்குறையை தவிர்க்கலாமே என்ற ஐடியா..... ஆனா இந்த முடிவுக்கு அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து நேரடி விவாதத்தில் ஈடுப்பட்டார்.. உரமான்யத்தை குறைப்பது என்பது அரசின் நிதி பற்றாக்குறை குறையும் என்றாலும் விலை உயர்வு எனப்து விவசாயிகளின் மேல விழும் எனபதால் கடும் வாக்குவாதத்தில் மோதினார் நம்ம அஞ்சா நெஞ்சன்.. அவருக்கு ஆதவாக சில காங்கிரசு அமைச்சர்களும் கைகோர்த்துகொண்டனர்........ஏற்கன்வே விலைவாசி உயர்வினால அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படும் வேளையில் மான்யத்தை ரத்து செய்தால் இன்னும் கடுமையாக விலைவாசி உயரும் என்று என்று சொன்னாராம் நம்ம அஞ்சா நெஞ்சன்.......... ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை அந்த மூவர் கூட்டணி..
கடைசியாக அஞ்சாநெஞ்சன்இன்னும் ஒருவருடத்திற்காவது இந்த முடிவை தள்ளிப்போடுங்கள்..தேவைக்கேற்ற இருப்பு கவசம் வைத்துக்கொண்டு அப்புறம் யோசிக்கலாம் என்றார்....... ஆனால் இதற்கு உர நிறுவங்கள் சம்மதிக்கவில்லை என்று கூரீ மூவர் கூட்டணி உர மான்யம் ரத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உறுதியக சொல்லியதால் கடும் கோபத்துடன் பாதியிலே வெளியே வந்துவிட்டார் அமைச்சர் அழகிரி..
...
உயர்வை பற்றி மத்திய அரசு துளீயூண்டு கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை..நேற்று அறிவித்த மத்திய பட்ஜெட்டிலும் அது பற்றி ஒன்றும் இல்லை....கச்சா எண்ணெயின் வரியை உயர்த்தி மறைமுக பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வழிகாட்டியுள்ளார் மத்திய நிதி அமைச்சர்.......... அது போல் வரி குறைக்கப்பட்ட பொருட்களைப்பார்த்தால் செல்போனாம், பலூனாம்...அடப்பாவிங்களா....காலை டிபனுக்கு பலூனையும், மதியம் சாப்பாடுக்கு செல்போனையுமா சாப்பிட முடியும்.......
...
பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு............ நம்மைப்போன்ற சாமன்ய மக்களுக்கு இல்லை

Friday, 26 February, 2010

மணத்தக்காளி கீரை பொரியல்---- பேச்சிலர் சமையல்

தினசரி கோதுமை தோசை,அரிசி மாவு தோசை, ஆம்லெட், சாம்பார்,அப்பளம் அப்படினு சப்பிட்டு ரொம்ப போரடிச்சிருச்சி......... வேற வழியில்லாம சாப்பிட வேண்டியதா போச்சு...... வித்தியாசமா ஏதாவது செய்து சாப்பிடனும்னு ஆசை...... சிக்கன் வைக்கலாம்னு பாத்தா சைவ சமையலில் ஏதாவது குறை என்றால் உப்போ காரமோ கொஞ்சம் அதிகம் சேர்த்து சமாளிச்சிடலாம்........ அசைவத்தில் குளறுபடி பண்ணிவிட்டால் கண்டிப்பா சாப்பிடமுடியாது...........இதனால கீரையை ஒரு கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்....... மணத்தக்காளி கீரை உடம்புக்கு நல்லதாமே........... ஒரு கட்டு கீரை வாங்கிட்டேன்.ஆனா எப்படி சமைப்பது என்று தெரியவில்லை.வழக்கம் போல் தங்கமணியிடம் வாங்கி கட்டிக்கொண்டு குறிப்பையும் கேட்டுக்கொண்டேன்.........

கீரையை நன்றாக உருவி அதை நறுக்கி கொள்ளவும்... கீரையை தண்ணியில் அலசிக்கொள்ளூங்கள்.சின்னவெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தேவைக்கேற்றார்போல் எடுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் ஒன்று போதும்....ஒரு துண்டு தேங்காயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்..... அடுப்பில் வானலி வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்....அதன் பிறகு அதனுடன் கீரையை சேர்த்து வதக்கவும்...குறைந்த பட்ச சூட்டில் வைத்து வதக்க வேண்டும்..அப்பதான் சட்டியின் அடியில் பிடிக்காது.. கொஞ்ச நேரம் மூடி வைத்து விட்டு மறுபடியும் கிளற வேண்டும்...... தோராயமாக பத்து நிமிடம் கழித்து தெவைக்கேற்றார் போல் உப்பும், அரைத்து வைத்த தேங்காயையும் சேர்த்து கிளறிவிடுங்கள்...மணத்தக்காளி கீரை பொறியல் ரெடி............. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அதன் ருசியே தனி........

டிஸ்கி:


கோதுமை தோசை நன்றக வர வேண்டுமா???..எவ்ளோதான் தண்ணியில் கோதுமையை நன்றாக கரைத்தாலும் தோசை வார்க்கும் பொழுது நன்றாக வராது....இதற்கு ஒரு முட்டையை உடைத்து கோதுமை கரைசலில் நன்றக கலக்கினால் கோதுமை தோசையும் நன்றாக வரும்..ருசியும் சூப்பரா இருக்கும்.... ஆறினாலும் சாப்பிடலாம்

Thursday, 25 February, 2010

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தென் தமிழகம்

எல்லா விசயங்களிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல..அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சில தொழில் வளர்ச்சி தவிர...... போன வருடம் ரெயிவே பட்ஜெட்டிலெயே தென் தமிழகத்துக்கு ஒன்னும் இல்லை.இந்த வருடமும் அதே நிலைமைதான்......இது குறித்து போன வருடம் நான் எழுதிய பதிவு.இந்த வருடமும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு புதிதாக ரயிலகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.......ஏற்கனவே தினசரி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலகள் அனைத்தும் வருடம் முழுவதும் பயனிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது...முன்ன எல்லாம் திருநெல்வேலி செல்லனும் என்றால் 15 நாட்களுக்கு முன்னதாக முன் பதிவு செய்தால் டிக்கெட் கிடைக்கும்..இப்ப ரெண்டு மாதத்திற்கு முன்னதாக முன் பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை.....இது பற்றி ரெயிவே அதிகாரிகளிடம் கேட்டால்..சென்னை-திருச்சி மார்க்கத்தில் இதற்கு மேல் ரயில்கள் விட முடியாது ஏன்னா தண்டவாளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு தேவை என்கிறார்கள்......... தாம்பரம் முதல் திருச்சி வரை இன்னொரு வழித்தடம் அமைக்கும் திட்டம் என்னவாயிற்று?????????? இது மில்லியன் டாலர் கேள்வி.....
அடுத்ததா திருநெல்வேலி- தென்காசி அகலரயில் பாதை திட்டம் ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாகியும் வேலை எதுவும் நடைபெற்ற மாதிரி தெரியலை........ அது பற்றி ஒரு அறிவிப்பும் இல்லை....... இதுல இன்னொரு காமெடி என்னன்னா ஏற்கனவே மீட்டர் கேஜில் ஓடிய திருநெல்வெலி- திருச்செந்தூர் பயனிகள் வண்டியை புதிய வழித்தடமாக அறிவித்திருப்பதுதான்.இதையும் நம்ம செய்கதி சேனல்கள் சொல்வது கொடுமைடா சாமி.......எனக்கு ஒரே ஆசைதான் நம்ம மத்திய ரெயில்வே மந்திரியையும், மாநில போக்குவரத்து அமைச்சரையும் ஒரு நாள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அல்லது தென்காசிக்கோ.. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் அதுவும் ஊதா நிற, ரோஸ் நிற மஞ்சள் நிற பேருந்தில் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்............ அப்பதான் தெரியும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Wednesday, 24 February, 2010

இரட்டை சதம் அடித்து சச்சின் சாதனை

குவாலியரில் நடைபெற்று வரும் ஒரு தினப்போட்டியில் சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்...... இந்த இரட்டை சதத்தை வெறும் 147 பந்துகளில் எடுத்து சாதனை......சச்சினின் இந்த உலக சாதனை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு வைர கிரீடம்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது இந்திய அணி.....

சச்சின் உலக சாதனை

குவாலியரில் நடக்கும் ஒரு நாள் போட்டியில் சச்சின் உலக சாதனை படைத்தார்முந்தைய சயீத் அன்வரின் 194 ரன்களை முறியடித்து சாதனை படைத்திருக்கிறார்............... சச்சின பேட்டிங்கிற்கு பதில் சொல்ல இயலாமல் தென் ஆப்ப்ரிக்கா திணறல்............... சச்சின் 197 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் உள்ளார்

Sunday, 21 February, 2010

கொலுசு கொஞ்சும் பாதம்

கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசுபோடும் தாளம்
அது பிடிபடாமல் ஓட
காற்றிலே காறிலே என் மனம் நீந்துதே
வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே
கண்களை நான் மூடினால்
தேன் மழை தினம் சிந்துதே
சோலை பனிப்பூவாய் சேலை மலராட
சிந்தும் மணிமாலை நெஞ்சில் விளையாட
மல்லிச்சரம் வாசம் பட்டு சூடானேன்
அள்ளித்தர ஆசைப்பட்டு ஆளானேன்
குளிருதே மாம்பனி கூந்தலில் மூடடி அழகே
வெள்ளை மனம் பார்த்தேன்
கொஞ்சம் இடம் கேட்டேன்
அன்பே உனைப் பார்த்தேன்
அன்பின் நிறம் பார்த்தேன்
கட்டில் சுகம் காணும் முன்னே
நான் வேர்ப்பேன்
மற்ற விழி ஜாடை சொன்னால்
கை சேர்ப்பேன்
நாளெல்லாம் பவுர்ணமி
சாய்வதே நிம்மதி உயிரே

டிஸ்கி: கண்டுபிடிங்க பார்க்கலாம்

Monday, 15 February, 2010

புத்தக வெளியீடும், பச்சை சட்டை பதிவரும்(யூத்தாம்)

நம்ம பயபுள்ளங்கள பாத்து மாசக்கணக்காயிட்டதால இந்த வாட்டி புத்த்க வெளியீடு விழாவை தவறவிடவில்லை..... மாலை 5மணிக்கு நானும் டிவிஆர்கே ஐயாவும் சொன்ன இடத்துக்கு வந்தாச்சு. என்னடா யாரையும் காணோம் என்றிருதபோது....அரங்கினுள் இருந்து உண்மைத்தமிழன் அண்ணன் சில பதிவர் புடை சூழ வெளியில் வந்தார்..... அதற்குள் மணி 5:30 ஆகியிருந்தது....... விழா நாயகர்களே இன்னும் வரவில்லை......அவர்களெல்லாம் வந்து விழா ஆரம்பிப்பதற்கு மணி6:15ஆகியது..... பரிசலும் கேபிளும் குடும்ப சகிதமா வந்திருந்தார்கள்.


AKANALIKAI,PIRAMID,AJAYAN BALA, YOUTH
விழாவை அட்டகாசமான டயலாக்குடன் ஆரம்பித்து வைத்தான் கேபிள் சங்கரின் இளைய வாரிசு....அப்பா எப்பவும் காமேடி பீசு சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.கேபிளின் புத்தகத்தை பிரமிட் நடராஜனும், பரிசலின் புத்த்கத்தை அஜயன் பாலவும் வெளியிட்டனர். பிரமிட் நடராஜன் பேசும்போது கேபிளின் விட தன்னை யூத்தாக காட்டிக்கொண்டார்...... தமிழ்ப்படம் இயக்குனர் அமுதன் பதிவர்கள் எல்லோருக்கும் தன் நன்றியை தெரிந்து கொண்டார்.......அஜயன் பாலாவிடம் மைக்கை கொடுத்ததுதான் தாமதம் பேசினார் பேசினார் பேசினார் பேசிக்கொண்டேயிருந்தார்..... ஏதாவது சுவாரஸ்யமாக பேசுகிறாரா என்றால் அதுவும் இல்லை.எப்படா பேச்சை முடிப்பார் என்றிருந்தது.... கேபிளும் பரிசலும் இறுதி வரை ஒருவித நெகிழ்ச்சி கலந்த டென்சனுடன் காணப்பட்டார்கள்................ சரி நம்ம மேட்டருக்கு வருவோம்


GUGAN,AKANALIKAI,PIRAMID,AJAYAN BALA,PARISAL
பதிவ்ர்களை ஞாபகப்படுத்தி எழுதுகிறேன் யார் பெயராவது விடுப்பட்டிருந்தால் மன்னிக்கவும்........ டிவிஆர்கே,உண்மைத்தமிழன்,ஷங்கர் ரோமியோ,ஜெய மார்த்தாண்டன்,சர்புதீன் (வெள்ளி நிலா)அதி பிரதாபன்,சங்கர், கார்க்கி, நர்சிம்,ஆதி,ஜியோவ்ராம் சுந்தர்,பட்டர்பிளை சூர்யா, தண்டோரா,தராசு,லக்கி, அதிஷா,ஜெட்லி,வடகரை வேலன், சொல்லரசன், வெயிலான், சஞ்சய் காந்தி, டோண்டு,அப்துல்லா, புலவன் புலிகேசி இன்னும் பலர் வந்திருந்தனர்....விழா ஆரம்பிக்கும்போது இரண்டு பேர் போட்டிப்போடுக்கொண்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தானர்.... அதில் நம்ம யூத்து கொஞ்ச நேரத்தில் களைப்படைந்துவிட்டார்..அவர் ஆதிஆண்ணன்........... இன்னொருவர் கடைசி வரைக்கும் அதே சுறுசுறுப்புடன் படம் எடுத்துக்கொண்டிருந்தாள் அவள் பரிசலின் இளைய வாரிசு மேகா.......SHANKAR, ME, TVRK, UNMAI TAMILAN, ROMEO
நேற்றுதான் காதலர் தினம் ஆயிற்றே யாரெல்லாம் பச்சை சட்டை போட்டிருந்தனர் எனப்பார்த்தால் இருவர் அந்த கலரில் வந்திருந்தனர். ஒருவர் கார்க்கி, இன்னொருவர் நம்ம ஆதி அண்ணன்...கார்க்கி பச்சை சட்டை போட்டதுல ஒரு அர்த்தம் இருக்கு..விட்டிடலாம்....ஆனால் ஆதி அண்ணன் ஏன் அந்த கலர்ல சட்டை போட்டார்......... ?????? கேடதற்கு அவர் யூத்தாம் அதானாம்........ அய்யய்யோ எப்ப அவர் இந்தச கேபிள், தண்டோரா, தராசோட சேர்ந்தார்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ அண்ணே நீங்க இன்னும் சின்னப்பையந்தாம்ணே........அப்புறம் நம்ம பெஸ்கி ஆளே மாறிட்டாப்ல. என்னனு கேட்டா அவரும் ஆயுள் கைதியா ஆகப்போறாராம்....புலவன் புலிகேசி இந்த பெயரை பார்த்ததும் கேபில் மாதிரி யூத்தான் ஆளா இருப்பர்னு பார்த்தால்.........சத்தியமா இல்ல பச்சபுள்ளயா இருக்கார்.......ஜெட்லிக்கும் எங்க ஊர்தான் எங்க ஊர்க்காரங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க போல...............நானும் புக் வாங்கியிருக்கேன். பஸ்ல வரும்போது பரிசல் புக்கில் ஒரே ஒரு கதை தான் படித்தேன்......... சிறுவயது பசங்களின் மனநிலையை அருமையா சொல்லியிருக்கார் இந்த கதையில்

மேலும் போட்டோக்களுக்கு மோகன் குமார்

Sunday, 14 February, 2010

காதலர் தின வாழ்த்துக்கள்

காதலித்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும், காதலிக்க போகும் அன்பு உள்ளங்களுக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.....

ஒரு சில யூத்து பதிவர்கள் இன்று பச்சை சட்டை அணிந்து சென்னையை வலம் வர் இருப்பதாக தகவல் ............அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்


காதல் உள்ளங்களுக்காக ஸ்பெசல் பாட்டு கேட்டு பார்த்து மகிழ்ச்சியோடு இருங்கள்...


Saturday, 13 February, 2010

இதுக்கு என்ன சொல்லப்போறீங்க கேபிள் & கார்க்கி????

தமிழில் எதிர்பார்த்த வெற்றியை தராத ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது..........வெளியாகி நான்கு நாட்களில் ரூ.2கோடி வசூல் செய்துள்ளது....ஆனால் படம் 2மணிநேரமாக குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கார்த்தியின் பருத்தி வீரன் படம் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறது.தமிழ் ரசிகர்கள் தராத வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.... நம்ம ஆளுங்களுக்கு புரியாத கதை அவங்களுக்கு புரிஞ்சிது போல..............