Tuesday, 10 March, 2009

தேர்தல் லவ்வுகளும்-- மேரேஜ்களும்-- டைவர்ஸ்களும்...

மக்களவைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தங்களுடைய வேலையை ஆரம்பித்துவிட்டன... இதில் பல டைவர்ஸ்களும்,மேரேஜ்களும்,லவ்வுகளும் வரும் தேர்தல் தேதிக்குள் நடக்கலாம். இந்திய அளவில் 10 ஆண்டு காலமாக கொஞ்சி குலாவிய பிஜேபியும்,பிஜேடியும் டைவர்ஸ் பண்ணிக்கொண்டன.இதில் புது ஜோடியாக பிஜேடியுடன் கம்யூனிஸ்ட்கள் இணைந்து கொண்டது. மிகப்பெரிய காமெடி... அதேப்போல் காங்கிரசுக்கும்,எஸ்பிக்கும் இடையே புகைச்சல் வெளியே வந்துக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு கட்சிகளோட தேர்தல் லவ்,மேரேஜ், டைவர்ஸ் எப்படினு சொல்றேன்.. யாரும் சீரியஸா எடுக்க கூடாது.. ஒன்லி காமெடியா எடுத்துக்கணும்.... சொல்லிட்டேன்திமுக-- காங்கிரசு ( கணவன் --மனைவி)


2004ல் புதுமணத் தம்பதிகளான திமுகவும் காங்கிரசும் இப்பவும் சோடியா இருக்குறது பல பேர் கண்ணை உறுத்துகிறது... இடைப்பட்ட காலங்களில் பல புகைச்சல் ஏற்பட்டாலும் தற்போது ஒருவரை ஒருவர் தாங்கிப்பிடித்து உறுதியாக நிற்பதை பார்த்தால் கண்ணுல தண்ணிதான் வருது. திமுகவுக்கு இது பாதுகாப்பாக தெரிந்தாலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதால் காங்கிரசுக்கு இளம் பெண்ணான தேமுதிக மேல் ஒரு கண்.. ஆனா இளம்பெண் தங்கள் குடும்பத்தில் வருவது திமுகவுக்கு கொஞ்சம் பயம்... ரெண்டு பெண்களும் சேந்து நமக்கு ஏதாவது வச்சிட்டாங்கன்னா.... இது போக காங்கிரசுக்குளே ரெண்டு அணி இருக்கு திமுக காங்கிரசு--அதிமுக காங்கிரசு... இந்த ரெண்டையும் சாமாளிப்பதற்கு திமுக தண்ணி குடிக்கனும் போல... அதனால் குடும்பத்துக்குள்ள என்னதான் உள்குத்து வேலை நடந்தாலும் வெளியே எப்பவுமே ஒற்றுமைதான்.. வேற வழியில்ல ... இப்போதைக்கு திமுகவுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருந்தாலும் 5 ஆண்டுகால மத்திய அரசின் சாதனைகளையும், மூன்றாண்டுகால திமுக அரசின் சாதனைகளையும் ஒழுங்காக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2004ல் பிடித்த இடங்களில் பாதியையாவது தக்க வைக்கலாம்.. அதை விட்டு நாங்க 1975ல் இதை செய்தோம் அப்படினு ஆரம்பிச்சா கஷ்டம்தான்..


அதிமுக- மதிமுக- கம்யூனிஸ்ட் ( சர்வாதிகாரி-அல்லக்கை- புதுத்தொடுப்பு)
 

அம்மா 2004ல் வாங்கிய பூஜ்ஜியத்தை அவ்ளோ எளிதில் மறக்க மாட்டார்கள்..அதனால் இந்த வாட்டி எடுக்கிற ஒவ்வொருஅடியையும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் எடுத்து வைக்கிறாங்க.. அதிமுக-மதிமுக இருவருக்குமே கொள்கை அளவில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தாலும் ஏதோ ஒன்னு ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வைக்குது... இப்ப கம்யூனிஸ்ட்டும் ஒன்னா சேர்திருப்பதால் அம்மா கூட்டணி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருப்பதா தெரியுது... எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு... அனா அம்மாவோட பிரச்சாரம் தான் கொஞ்சம் அவங்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி... உதாரணம் திருமங்கலம் இடைத்தேர்தல்... இந்த இடைத்தேர்தலின் போது ஆளும் திமுகவின் மேல ஏகப்பட்ட பிரச்சினை...அம்மா ஒழுங்கா அதைப் பற்றி பேசியிருந்தா திருமங்கலத்துல ஒரு கடும் போட்டியை கொடுத்திருக்கலாம்... ஆனா என்ன செஞ்சாங்க.. தனிநபர் தாக்குதாலில் தேவையில்லாம பேசி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டாங்க... இதை தவிர்த்து மத்திய மாநில அரசின் மேலுள்ள புகார்கள்,பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்த்தால் அம்மாவுக்கு ஜெயம்..........


பாமக ( ஒரிஜினல் அரசியல் கம்பெனி )எந்த தேர்தல் அய்யாவோட கட்சி மதில் மேல் பூனை அப்படின்ற அளவுக்கு வந்திடும்.சரியான நேரத்தில யாருடனாவது ஒட்டிக்கொண்டு ஆட்சிக்கு ஆட்சி பவரில் இருப்பதுதான் அய்யாவோட கொள்கை... இந்த வாட்டி யாரோட அக்ரிமெண்ட் போடப்போறாங்களோ? மாநிலத்தில் ஒரு கொள்கை, மத்தியில் ஒரு கொள்கை இதுதான் பாமகவின் தாரகமந்திரம்... உதாரணம் இலங்கைப்பிரச்சினைதேமுதிக ( இளம் கன்னி)


திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பு வரைக்கும் இந்த இளம் பெண் மேல் எல்லோருக்கும் ஒரு கண்... கடைகண் பார்வை கிடைக்காதா என்று. வெளியில் ஆயிரம்தாம் திட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள் எல்லா கட்சிகளுக்குமே இதன் மேல் ஒரு இது... ஆனா இடைத்தேர்தலுக்கப்புறம் இந்த இளம் பெண்ணின் நிலை தான் பாவம்... திமுகவா அதிமுகவான்னு குழம்பி போய் மண்ட காஞ்சிட்டு இருக்கு.... இருந்தாலும் கேப்டன் அசரமாட்டார்.. இவங்களுக்குன்னே ஒரு டயலாக் இருக்கு அரசியல்ல நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது...... பார்க்கலம் இந்த கன்னிப்பெண் யாரோட லவ்வுதுன்னு..


இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க...


விசிக வின் நிலை????