Saturday, March 21, 2009

ரேஷன்-சீனி, கோதுமை அரிசி -ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....

அப்படி இப்படினு பள்ளிக்கரணை முகவரிக்கே ரேஷன் கார்டை மாற்றிவிட்டேன். இந்த மாதம் ரேஷனில் பொருள் வாங்கனும் என்பதால் போன புதன் கிழமை ரேஷன் கடைக்கு சென்றிருந்தேன்.. கூட்டம் சற்று அதிகமாவே இருந்தது. என்னன்னு கேட்டா இன்னைக்குத்தான் அரிசி போடுறாங்களாம்.. ஆண்கள் வரிசையைவிட பெண்கள் வரிசை நீண்டிருந்தது..கடைக்காரர் ரொம்ப டென்சனா பில் போட்டுக்கிட்டு இருந்தார். அவரின் உருவமும் உயரமும் நடிகர் செந்திலை போன்று இருந்ததாலோ என்னவோ பெண்கள் வரிசையில் இருந்து அவரை பற்றி ஒரே கமெண்ட். ஆண்கள் வரிசை மிக அமைதியாக பெண்கல் வரிசை தள்ளுமுள்ள்விலும், சண்டையிலும் கடைக்காரர் டென்சன் ஆகிட்டார்.

"ஏம்மா இப்படி சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா நான் பில் போடமாட்டேன்.."

"அது எப்படி நான் பக்கத்தில் வந்ததும் பில் போடாம இருக்கீங்க இவரு எப்பவுமே இப்படித்தான்.. "நமட்டு சிரிப்புடன் நடுத்தர வய்து பெண்மணி

'ஆம்பிளைங்க எவ்ளோ அமைதியா நிக்காங்க... ஏம்மா இப்படி"

"என் அருகில் நின்றவர் நாங்கெல்லாம் தண்ணி உள்ள போற வரைக்கும் தான் அமைதி... அதுக்கப்புறம்"

"நானும் ஒவ்வொரு மாசமும் கவனிக்கிறேன் நீ வேற பொருள் எதுவும் வாங்க மாட்டேங்குற.. அட்த்த மாசம் எப்படி பொருள் வாங்குறன்னு பாக்குரேன்.".. இது கடைக்காரர் ஒரு பெருசுவிடம் காட்டமாக சொன்னது.

என் முறை வந்தது "என்ன சார் வேணும்?"

"சீனி, கோதுமை அரிசி பாமாயில்"

"வேற ஏதும் ?"

"கடுகு இருக்கா?"

"இல்லை"

"மிளகு?"

"இல்லை"

"அப்ப எதுவும் வேணாம்."

"வேற ஏதாவது வாங்கனும் முதல் தடவ வாங்குறீங்க"

"அதான் பாமாயில் வாங்கிட்டேனே.."...

இல்ல சார் இந்தாங்க என்று கோல்கேட் பற்பசையை கையில் வலுக்கட்டாயமாக திணித்தார்

வலுக்கட்டாயமாக இதை வாங்கித்தான் ஆகனும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரையோ என்னவோ????.... வீட்ல வந்து வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம் பற்பசை வாங்கியதுக்காக..

-----------------------*--------------------------*-------------------------------------*-------------------
ரெயில்வேயின் ஆன் லைன் ரிசர்வேசன் யாருக்காக....


ஒவ்வொருவாட்டியும் ஊருக்கு போறதுக்கு டிக்கெட் ரிசர்வேசன் பண்ணுவதற்கு வரிசையில் நின்னு மண்டை காய்வதாலும், சர்டிபிகேட்ல அது சொத்தை இது சொத்தன்னு அது வேற டென்சன் படுத்துவதாலும் இந்த முறை ஆன்லைன் ரிசர்வேசன் பண்ணலாம் அப்படினு நெட் ஓப்பன் பண்ணி உள்ள போனா ஜெனரல் ,சீனியர் சிட்டிசன் கோட்டா இருந்தது.. ஆனா உடல் ஊனமுற்றோருக்கான கோட்டா எதுவும் அந்த ரிசர்வேசன் பக்கத்தில் இல்லை..... ரெயில்வே கால் சென்டருக்கு போன் பண்ணி கேட்டா சரியான பதில் இல்லை.


நீங்களே சொல்லுங்க அப்ப என்ன இதுக்கு ஆன் லைன் ரிசர்வேசன் இருக்கு? அது யாருக்காக...