Saturday 5 December 2009

சிவசைலம் அகஸ்தியர் அருவி புளியங்குடி புகைப்படங்கள்


பனை மரக்கூட்டம்-- சிவசைலம் புதுக்குடியிருப்பு


பாபநாசம் செல்லும் வழி



பாபநாசம் சிவன் கோவில்


அழகாய் ஓடி வரும் தாமிரபரணி தூரத்தில் தெரிவது அகஸ்தியர் அருவி


அகஸ்தியர் அருவி




தாமிரபரணி


புளியங்குடி மாநகரம்


பாபநாசம் நீர்மின் தேக்கம்




Sunday 8 November 2009

பதிவர் சந்திப்பு தள்ளிப்போக காரணம்............??????

நேற்று சென்னையில் நடபெறவிருந்த பதிவர் சந்திப்பு மழையை காரணம் காட்டி தள்ளி வைப்பதாக கேபிள் அண்ணனும், சகாவும் சொல்லியிருந்தார்கள். இதில் சகா பதிவை படித்தீர்களானால் மழை மட்டும் காரணமல்ல என்பது உங்களுக்கு புரியும். கேபிள் அண்ணே உங்க பேச்சு வீட்டுக்கு வெளிய மட்டும்தான் போல......ஹும்

வழக்கம் போல் தங்கமணி பதிவுகள் சூடாகியிருக்கின்றன.ஆதி அண்ணன் எழுதிய இந்த பதிவில் ஆணாதிக்கமே அதிகம் இருப்பதாக கூறி வேலன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்கார்..ஆனா இதுல பெண்ணாதிக்கம் கொஞ்சம் அதிகமா இருக்கு...கல்யாணம் செஞ்சுக்க போற யூத்துகளே ரெண்டு பதிவையும் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.என்னை கேட்டா நாணல் மாதிரி இருக்கனும். பிரச்சினை எனும் வெள்ளம் வரும்போது நாணல் எப்படி வளையுதோ அதே மாதிரி வளைஞ்சு கொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..

நேற்று அலுவலகத்தில் என் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அவன் அதிதீவிர விஜய் ரசிகன்..2012 எனும் ஆங்கில படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்...இன்னும் மூணு வருசத்துல உலகம் அழியப்போவுதாம்..நாசாவுல ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டிருந்தான்..... நான் அதற்கு டேய் உலகம் இன்னும் மூனு வருசத்துல அழிய போவுது..ஆனா தமிழ்நாடு அடுத்த மாசம் அழிஞ்சிடும் போல டிசெம்பர் 18ஆம் தேதி என்று சொன்னவுடன் பையன் அப்படியே டெரர் ஆகிட்டான்........(விஜய் கொடுத்த ஷாஜகான் அடி இன்னும் மறக்கலை.அவ்வ்வ்வ்வ்வ்வ்.)

Saturday 7 November 2009

பேச்சிலர் தீபாவளி--2009

அடுத்த தீபாவளி வருவதற்குள் இந்த தொடர் பதிவ எழுதிடுங்கப்பா என்று நம்ம புரொபசர் கேட்டுக்கொண்டதால் ஐயோ பாவம் எழுதிடுறேன்.......

1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
என்னப்பா இது பரீட்சை கேள்வி மாதிரி இருக்கு???....... என்னத்த சொல்ல......பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நெல்லைவாசி. இப்ப சென்னைவாசி.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?
ஊர் தூங்கும் நேரத்தில் பஸ்ஸே போகாத மெயின் ரோட்டில் நடு இரவு 12மணிக்கு ஆட்டம் பாம் போட்டு எல்லோரையும் எழுப்புவது ( தீபவளிக்கு முந்தின நாள்).....இதேலாம் சென்னை வருவதற்கு முன்னாடி...............இப்ப ஒன்னும் இல்லை சொல்வதற்கு...

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சென்னையில் தான்......

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
என்னதான் விலைவாசி ஏறினாலும் இந்த கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவில்லை..... காலையில 7மணிக்கு கூட பத்தடிக்கு முன்னாடி போறவன் முகம் கூட தெரியல அந்த அளவுக்கு புகை மூட்டம்

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
ரெடிமேடும் உண்டு..தைத்து போடுவதும் உண்டு....... ஆனா தீபாவளி பர்சேஸ் எனக்கு ஆடிக்கழிவிலே முடிந்துவிடும்...( கிரேட் சரவணா ஸ்டோர்ஸில்)

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

இந்த வருடம் பேச்சிலராக இருந்து தனியாக தீபாவளி கொண்டாடியதால் பதில் கிடையாது.(ஓசியில் கிடைத்த B.L தான் இந்த வருச ஸ்பெசல் தீபாவளியா போச்சு)


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
முடிந்த அளவுக்கு அலைபேசியில்(பேலன்ஸை பொறுத்து).... இல்லைனா எஸ் எம் எஸ்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

தீபாவளிக்கு விடுமுறை கிடைப்பதே பெரிய விசயம்........ போன வருடம் கிடைத்தது........இந்த வருடம் என்னை ஆடாக்கிட்டாங்க......வழக்கம் போல் ஆபிஸில் முடிந்தது


9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இதுவரைக்கும் அந்த பழக்கம் கிடையாது.வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு...

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
எதுக்கு நான்கு பேர்..இருவர் போதும்.
1.கடையத்து இளவல் புதுமாப்பிள்ளை கடையம் ஆனந்த்--மனம்

2.புளியங்குடி அண்ணாச்சி நசரேயன்--என் கனவில் தென்பட்டது

Friday 6 November 2009

பதுங்கிய கலைஞர் & பொய் சொன்ன ஸ்டாலின்

ரொம்ப வருசத்துக்கு அப்புறம் நம்ம கலைஞர் ஐயாவுக்கு எப்படித்தான் இநத அளவுக்கு தைரியம் வந்ததோ??.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசும் மத்திய அரசும் அங்கு வரவிருக்கும் சட்டமன்றதேர்தலை மனதில் வைத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன..... கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் தேர்தலுக்காகத்தான் முல்லைப்பெரியாறு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.. எங்கே இந்த விவகாரத்தில் தமிழகத்து பக்கம் சாஞ்சா கேரளாவில் மறுபடியும் ஆட்சியை பிடிக்க முடியாதே என்ற கணக்கில் மத்திய காங்கிரசு அரசும் கேரள அரசும் கூட்டு செர்ந்து கொண்டன.

தமிழகத்துக்கு முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துரோகம் இழைத்துவிட்டதாக கூறி மதுரையில் அவருக்கு எதிராக கணடன கூட்டம் போடப்போவதாக நம்ம முதல்வர் வேங்கையாக சீறினார். ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம கலைஞர் இப்பவாவது பாய்கிறாரேன்னு பாத்தா.... திடீர்னு இந்த விசயத்துல பதுங்க ஆரம்பிச்சி மதுரை கூட்டத்தையே நிறுத்திவைத்துவிட்டார். காரணம் மறுபடியும் ஸ்பெக்ட்ரம் பூதம் கிளம்பிடிச்சி.


நீ எனக்கு எதிரா கூட்டம் போடுறியா....இருஇதுக்கு பதிலடியா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிபிஐ மூலமா மறுபடியும் ஒரு ஸ்டண்ட் ஷோவை காட்டிடிச்சு மத்திய அரசு. நம்ம கலைஞரும் மத்திய அமைச்சர் பதவியா??? தமிழக மக்கள் நலனா?? வழக்கம் போல் தமிழக நலனுக்கு ஒரு நாமம்......... கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஒகேனெக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் அப்படினார்..இப்ப அங்க ஆட்சியே கவிழ்கிறமாதிரி இருக்கு..அப்ப ஒகேனெக்கல்...............???

போன வாரம் அரசு விழா ஒன்றில் பொருளாதார மந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார் துணைமுதல்வர். நேரடியாக உயர்த்தவில்லை என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.ஒரு வேளை அவர் தனியார் பேருந்துகளை மனதில் வைத்து சொல்லி இருப்பாரோ?....... அரசுப்பேருந்துகளில்தான் எம் சர்வீஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், SFS,TSS,நான் ஸ்டாப்..அப்படினு வெறும் போர்டை மற்றும் மாட்டிட்டு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடிப்பது துணை முதல்வருக்கு தெரியாதோ?

Saturday 31 October 2009

வேட்டைக்காரனை டரியலாக்கும் குறுஞ்செய்திகள்

விஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்...... அப்படி என்னதான் சந்தோசமோ வேட்டைக்காரனை பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு... இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். என்பதும் அவர்களுக்கு தெரியும்............... இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........

விஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்


2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்


5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
-
-
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)


6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா?


7.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்


8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.


9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.


10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......


11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.

Thursday 29 October 2009

சமையல் குறிப்புகள்( கல்யாணம் ஆகியும் பேச்சிலராக இருப்பவர்களுக்கு மட்டும்)

பேச்சிலரா இருக்கும்போதே எனக்கும் ஓட்டல் சாப்பாடுக்கும் சுத்தமா ஆகாது..அதனால கஷ்டம் பாக்காம ருசி பாக்காம ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்கு சமைச்சே சப்பிட்டேன்..... என்ன வாரத்துல மூணு நாள் ரசம் அப்பளம்,மீதி நான்கு நாள் புளிசாதம்,லெமன் சாதம் அப்படியே போய்க்கிட்டு இருந்தது.........சைவ சமையலே அரைகுறை என்பதால் நோ அசைவம்.............



கல்யாணம் முடிந்த பிறகு சமையல் ரூமா? அது எங்க இருக்கு அப்படின்ற ரேஞ்சுக்கே போயாச்சு....... தங்கமணியின் சமையல் நல்லாயிருக்கோ இல்லையோ சாப்பிட்டுத்தான் ஆகனும்......... சாப்பாடு ருசி மறந்து போனதுமல்லாமல் சமையலும் மறந்து போயிடிச்சு எனக்கு....


தற்பொழுது மீண்டும் பேச்சிலராக இருப்பதால் நம்மளோட பழைய சமையல் அனுபவத்தை கொண்டுவருவதற்கே ஒரு வாரம் ஆகுது......ஓட்டலுக்கு போனா டாக்டர் கிட்ட போகவேண்டியிருக்கும் என்ற பயம் வேறு......சாம்பார் பொடி டப்பா எங்க இருக்குனு கேக்க ஆரம்பிச்சாலே காதுல ரத்தம் வந்துரும்.....அதனால குத்து மதிப்பா ஏதாவது பொடிய போட்டு கலக்க வேண்டியதுதான்.



மேட்டருக்கு வருவோம்...... என்னைப்போல் பல ரங்கமணிகளும் இந்த கஷ்டத்தை அனுபவிப்பதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்தே நிமிடத்தில் முடியக்கூடிய டிபன் வகைகளை தருகிறேன்...........முயற்சித்து பார்க்கவும்........

கோதுமை தோசை.

கோதுமைமாவில் பூரி சப்பாத்தி பண்ணுவதற்கு ரொம்ப நேரமாகும்.நம்ம எனர்ஜி வேஸ்ட்டாகும்... கோதுமைமாவைதேவையான அளவு தண்ணியில் கரைத்துகொள்ளவும்.தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும். முடிஞ்சா வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.....சுடச்சுட இந்த தோசையை சாப்பிட்டால் சைடிஷ் எதுவும் தேவையில்லை......ஆறிப்போச்சுன்னா...

சேமியா உப்புமா

கடலைபருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய்,கடுகு ஆகியவற்றை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்...தண்ணீர் ஊற்றி 5நிமிடங்கள் கொத்திக்க விடுங்கள்.பின் சேமியாவை போட்டு நன்றாக கிளறி விடுங்கள்..... இதற்கு சீனி நல்ல சைடிஷ்


ரவை உப்புமா


மேலே சொன்ன சேமியா உப்புமா செய்வது போல் சேமியாவுக்கு பதில் ரவையை சேர்த்து கிளறவும்..

எச்சரிக்கை


மேற்ச்சொன்னவைகளை உங்க தங்கமணிக்கு செஞ்சு கொடுத்து நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல..

Sunday 25 October 2009

ஒரு COMMON MAN செய்கிற வேலையா இது?

பொது ஜனம்னா இப்படித்தான் இருக்கனும் ஏட்டில் எழுதப்படாத விதிகள் இந்தியாவில் தமிழ் நாட்டுல இருக்கு.... பொதுஜனம்னா எல்லாத்தையும் பாத்து சகிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கனும். இதுதான் நம்ம நாட்டு மக்களின் நிலை.......பொது ஜனம்னா அவருக்குன்னு ஒரு குறிப்பிட்ட கடமைகள் வேலைகள் தான் செய்யனும்னு ஒரு இது இருக்கு......ஆனா இப்படியெல்லாம் இருக்காதிங்க உங்களுக்கும் கோவம் வரனும் அப்படினு நம்ம உலக நாயகன் அருமையாவே சொல்லியிருக்கார்..... நல்லாத்தான்யா இருக்கு உன்னைப்போல் ஒருவன்.

கதையின் போக்கில் எல்லோரையும் ஒரு கை பார்க்கிறார் கமல்...முக்கியமா மீடியாக்களை பற்றி பேசும் போது.....போலீஸ் கமிசனராக வரும் மோகன்லாலுக்கும் லட்சுமிக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன லடாய்கள் நக்கலோடு இருக்கு..அதுவும் லட்சுமி தனது அலுவலகத்திற்கு வந்தவுடன் மோகன் லால் உக்காரச்சொன்னவுடன் பரவாயில்லை மரியாதை போதும்னு சொன்னவுடன் மோகன்லால் இல்ல எனக்கு அந்த மேப் மறைக்குது பாக்க முடியல அதான் உக்காரச்சொன்னேன் என்று ஆரம்பிக்கும் நக்கல் கடைசி வரைக்கும் அப்படியே போகுது.... மோகன்லாலின் உதவியாளராக வரும் இருவரின் நடிப்பும் அருமை..அப்படி ஒரு பாடி லேங்குவேஜ்.... யப்பா தளபதிங்களா,தலைங்களா கொஞ்சம் பாத்து கத்துக்கிடுங்க கொஞ்சமாவது நடிப்பை.

ரிப்போர்ட்டராக வரும் நடிகை பேர் என்னனு தெரியலப்பா ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் அழகாய் பூத்ததே பாடலில் வருமே அந்த பெண்தானே)..அசால்ட்டா நடிச்சிருக்குப்பா.........ஸ்ருதி ஹாசனின் இசை அறிமுகம் என்றாலும் அருமை.....


மொத்தத்தில் உன்னைப்போல் ஒருவன் ஒரு அக்னி ஏவுகணை