Thursday, April 30, 2009

2011தேர்தல் வருது-தமிழக அரசு அதிரடி சலுகை--மக்களுக்கு

இப்படி நடக்குமா என்றால் நடக்கும்.... ஆட்சியில் இருப்பவர்கள் மனது வைத்தால்....யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்துவிட்டது... இது தேர்தல் கால சலுகையா?? தெரியவில்லை... மக்களுக்கு நல்லது நடந்தா சரி..... ஆனால் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் மக்கள் பிரச்சினை ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டும் மர்மம் என்னவோ?.. மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சினையா??.அப்படினா என்ன என்ற கேள்விதான் கிலோ கணக்கில் கேட்கப்படும்.


கடந்த மூன்று வருடங்களாக மக்களின் முக்கிய பிரச்சினையாக இருந்தது மறைமுக பஸ் கட்டண உயர்வு...ஆட்சியாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பேருந்துகளின் வர்ணத்தை மட்டும் மாறி விட்டு தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு கட்டணத்தை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களை பிழிந்தெடுத்துவிட்டார்கள்... நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த பிரச்சினையை தற்போது இந்த அரசு தேர்தலை மனதில்வைத்துக்கொண்டு கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள். மாநகரப்பேருந்துகளில் சாதாரண பேருந்துகளில் M என்று எழுதிவிட்டு மினிமம் கட்டணமாக 3ரூபாய் என்பது இன்றிலிருந்து 2ரூபாயாக குறைத்திருக்கிறது
தமிழகஅரசு.விரைவுப்பேருந்துகளுக்கும் இதே மினிமம் கட்டணம் தான்.... சொகுசுப்பேருந்துகளில் எப்படி என்று தெரியவில்லை.....

தொலைதூரப்பேருந்துகளில் கட்டணத்தை குறைத்தார்களா? என்பது தெரியவில்லை//// தெரிஞ்சா யாராவது சொல்லுங்கப்பா..... கட்டணத்தை குறைத்ததுபோல் சொகுசுப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்தால் மக்கள் இன்னும் சந்தோசப்படுவார்கள்...... தேர்தல் வரும்போதாவது அரசுக்கு மக்களின் ஞாபகம் வருகிறதே....... கலைஞர் ஐயா.. இதேபோல் இன்னும் ஏகப்பட்ட அன்றாட மக்கள் பிரச்சினையெல்லாம் இருக்குது...........

ஆனாலும் ஒருவிசயம் புரியவில்லை... கடந்த மூன்று வருடங்களாக கட்டணக்கொள்ளை அடித்துவிட்டு இப்போது வரும் தேர்தலுக்கு மட்டும் அல்லாமல் 2011 சட்டமன்றத்தேர்தலையும் மனதில் வைத்துக்கொண்டு கட்டணத்தை குறைத்த கலைஞர் அரசின் ராஜதந்திரம்......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......பெட்ரோல் டீசல் விலை குறையும்போதும் கலைஞருக்கு இந்த பிரச்சினை பெரிதாக தெரியல... இப்பதான் தெரிஞ்சிருக்கு

இதுக்காகவே தேர்தல் அடிக்கடி வரவேண்டும்..மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீரவேண்டும் கடவுளே...