Thursday, December 4, 2008

அப்போ இனிமே ஸ்பெக்ட்ரம், சன் டிவியின் நடுநிலைமை--முகமூடி


இப்போதைக்கு பதிவுலகில் கலைஞர்--மாறன் சேர்ந்ததை பற்றி பின்னி பெடலெடுக்கிறார்கள். இதையெல்லம் அவுங்க படிச்சாங்கன்னா??


இவர்கள் சேர்ந்ததால் பல விசயங்கள் மூழ்கிப்போகலாம். அதில் முக்கியமானது.
1. அரசு கேபிள் கார்ப்பரேசன்.
2. ஹாத்வே கேபிள்
3. சன்னின் நடுநிலையான செய்திகள்.?????
4. ஸ்பெக்ட்ரம், மின்வெட்டு
5. தினகரன் சம்பவம்.

அரசு கேபிள் மாறன் சகோதரர்களின் கேபிள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. கோடிக்கணக்கில் மக்க்ளின் வரிப்பணம் இதில் செலவிடப்பட்டுள்ளது. இதன் நிலைமை????????
தினகரன் சம்பவத்திற்கு பிறகு சென்னையில் திமுகவின் ஆதரவுடன் ஹாத்வே நிறுவனம் இரவோடு இரவாக எஸ்சிவி லைனை துண்டித்துவிட்டு அவர்கள் லைனை மாற்றினார்கள். இப்போது மாறிய ஆப்பரேட்டர்களின் நிலை. தற்போது பெரம்பூர் முழுவதும் மறுபடியும் எஸ்சிவி லைன் கொடுக்கப்போவதாக நியூஸ் வருது.

கடந்த ஒருவருடத்திற்கு மேல் சன் டிவி தாங்கள் நடுனிலைமையுடன் செய்திகளை வெளியிடுவதாக சொல்லி எல்லோருக்கும் திமுகவை தவிர அனைவருக்கும் தோள் கொடுத்தார்கள்!!!!!. இப்பவே ரெண்டு நாளா நமுத்து போன அப்பளம் மாதிரி ஆயிற்று சன் செய்திகள்.
இனிமே அமைச்சர்கள் ஆற்காட்டார், ராசா போன்றவர்கள் நிம்மதியா இருப்பாங்கோ....
இவ்வளவு நடந்தும் சிலபதிவர்கள் தினகரன் சம்பவத்துக்கும் அஞ்சா நெஞ்சனுக்கும் தொடர்பில்லை எனக் கூறுவது மனசாட்சியோடு எழுதுகிறார்களா எப்படின்னே தெரியல.
எல்லா கட்சிக்காரவுகளுக்கும் அவங்க தலைவரோ, அல்லது அவர்களது அடிவருடிகளோ செய்யும் கொலைகளுக்கு அவங்க சொல்லும் காரணம் அவங்க ஆட்சில நடக்கலையா/இவங்க ஆட்சில நடக்கலையான்னு எதிர் கேள்வி கேக்குறாங்கோ?
அடப்பாவி மக்கா உன் குண்டியிலே பீ.................. யேண்டா மத்தவங்களை குறை சொல்றீங்கோ?
முதல்ல அடுத்தவனை குறை சொல்லுவதைவிட்டு உங்கிட்ட என்னனு பாரு..